ஹிஸ்டரி புக்ல இடம்பிடிச்சிருக்க முல்தான் டெஸ்ட் அது. டிராவிட்டுக்குப் பிறகு களமிறங்குன சேவாக், 120 அடிச்சிருக்கப்ப சக்லைன் முஷ்டாக் ஓவர்ல லாங் ஆன்ல சிக்ஸ் பறக்க விடுறார். அப்போ பவுண்டரி லைன்ல இருந்த ஃபீல்டர் அதைப் பிடிக்க டிரைப் பண்ணி, முடியாமல் போயிருக்கு. அப்போ எதிர்முனைல இருந்த சச்சின், பேட்டைத் தூக்கிப் பிடிச்சபடியே வந்து, நீ இன்னொரு சிக்ஸ் அடிக்க டிரை பண்ண..உன்னை பேட்டாலேயே அடிச்சுப் போடுவேன்’னு செல்லமா மிரட்டிட்டுப் போயிருக்கார். அதேமாதிரி, 295 ரன் இருக்கப்போ சச்சின்கிட்ட சேவாக் சொல்லிருக்கார். அடுத்த ஓவர் சக்லைன் முஷ்டாக் போட வந்தா முதல் பால்லயே சிக்ஸ் அடிக்க டிரை பண்ணுவேன்’னு...
என்னடா உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு. நிதானமா ஆடு. நீதான் 300 அடிக்குற முதல் இந்திய பேட்ஸ்மேன் ஆவேன்’னு சச்சின் சொல்ல, அதுக்கு நம்மாளோட ரிப்ளை என்னன்னு தெரியுமா… `அவுட் ஆனாலுமே 295 அடிச்ச முதல் ஆள் நான்தானே’னு சொல்லிருக்கார். சொல்லிவைச்சது மாதிரியே சக்லைன் முஷ்டாக் ஓவர் போட வரவே, முதல் பால்லயே இறங்கி சிக்ஸர் அடிச்சு 300 ரன் மைல்ஸ்டோனை எட்டுவார் சேவாக். சுல்தான் ஆஃப் முல்தான்னு பேர் வரக் காரணம் அந்த இன்னிங்ஸ்தான். ஆன்ஃபீல்டுல மட்டுமில்ல ஆஃப் ஃபீல்டுலயும் இப்படி பல தக்லைஃப் சம்பவங்களைப் பண்ணிருக்கார் சேவாக். அப்படியான முக்கியமான தக்லைஃப் சம்பவங்களைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப் போறோம்.

சோசியல் மீடியா கில்லி
கிரிக்கெட்ல இருந்து ரிட்டையர்டு ஆனதுக்குப் பிறகு சோசியல் மீடியாலயும் ஒவ்வொரு போஸ்ட் மூலமாவும் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டுட்டு இருக்கார் சேவாக். அவரோட ஒவ்வொரு ட்வீட்டும் ஒரு Atom Bombதான். சேவாக் ட்வீட் போட்டா, அது வைரல் ரகம்தான்னு இருக்கும். சமீபத்திய உதாரணம்தான் ஆதிபுருஷ் விமர்சனம். அந்தப் படத்தைப் பார்த்துட்டு ஹீரோவான் பிரபாஸை வம்பிழுக்கும் வகையில், ஆதிபுருஷ் பார்த்தபிறகுதான் தெரிகிறது.. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றிருப்பார்னு..’னு சர்காஸ்டிக்கா ஒரு ட்வீட்டைத் தட்டியிருந்தார். அதேமாதிரி வேர்ல்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்ல சந்தேகத்துக்கிடமான கேட்சுக்கு சுப்மன் கில்லுக்கு அம்பயர் அவுட் கொடுத்திருப்பார். அப்போ, கண்ணைக் கட்டிக்கிட்டு ஒருத்தர் நிக்குற மாதிரியான ஃபோட்டோவைப் போட்டு கலாய்ச்சுவிட்டிருந்தார். அவரோட ட்விட்டர் லொள்ளுகளைப் பட்டியல் போட்டா இந்த வீடியோவே முடிஞ்சு போய்டும்.
ஸ்மைலியை யூஸ் பண்ணாதீங்க. அதுக்கு பதிலா இவர் போட்டோவை யூஸ் பண்ணுங்க’னு ஜார்ஜ் பெய்லிக்கு பர்த்டே விஷ் பண்ணது. நியூசிலாந்தின் ராஸ் டெய்லரை, துணி தைக்கக் கூப்பிட்டது, மலிங்காவை யார்க்கர் பாபானு ஹேஷ்டேக்கோட வாழ்த்துனது, இங்கிலாந்து டிவி பெர்சானலிட்டி பியர்ஸ் மோர்கனை அப்போப்போ காலாய்க்கிறதுனு ட்விட்டர் உலகம் சேவாக்கால் எப்போதும் மகிழ்ந்திருக்கும் மக்களே.
ஆஃப் ஃபீல்டு மாஸ்!
பொதுவா பிரஸ்மீட்ல சேவாக் பதில் சொல்ற விதமே Awsome-ஆ இருக்கும். விவரம் தெரிஞ்சவங்க அவர்கிட்ட கொஞ்சம் சூதானமாத்தான் கேள்வி கேப்பாங்க. சச்சினுக்கும் சேவாக்குக்கும் என்ன டிஃபரன்ஸ்ங்குற கேள்விக்கு அவர் சொன்ன பதில், பேங்க் பேலன்ஸ்தான்’. அதேமாதிரி இன்னொரு இடத்துல அவர்கிட்ட,
நீங்க இனிமேல் இந்தியாவுக்காக விளையாட முடியாம போகலாமே’னு கேக்கவே, அப்படினா அது யாருக்கு லாஸ்’னு எதிர்க்கேள்வி கேட்டு வாயடைக்க வைச்சிருப்பார். ரிட்டையர்ட்மெண்ட் பத்தி கேட்டப்போ, இது என்ன கவர்மெண்ட் ஜாப்பா... ரிட்டையர்ட்மெண்ட் ஏஜ் 60-னு ஃபிக்ஸ் பண்றதுக்கு. ஒரு கிரிக்கெட்டர் 30 வயசுலயோ, இல்ல 60 வயசுலயோ ரிட்டையர்டு ஆகலாம். அது ஒவ்வொரு பிளேயர்ஸைப் பொறுத்தது. ஜெயசூர்யா 42 வயசு வரைக்கும் விளையாடினார்னு பதில் சொல்லிருப்பார். அதேமாதிரி ஜெஃப்ரி பாய்காட்,
சேவாக் மூளையே இல்லாத வீரர். ஆனாலும் நல்லா விளையாடினார்’னு விமர்சனம் பண்ணிருப்பார். அதுக்கு சேவாக் கொடுத்த பதிலடி அல்டிமேட்டா இருக்கும். `பாய்காட் என்ன வேணாலும் சொல்லலாம். அவர் ஒருமுறை ஒரு நாள் முழுக்க விளையாடி ஒரே ஒரு பவுண்டரிதான் அடிச்சிருந்தாரு’னு சொல்லி வாயடைக்க வைச்சிருப்பாரு.

பொதுவா பாகிஸ்தான் மக்கள்னாலே இந்தியர்களை வெறுக்கிறவங்களாத்தான் இருப்பாங்கனு ஒரு பார்வை இருக்கு. ஆனா, சேவாக் அதற்கு நேர்மாறா ஒரு சில சம்பவங்களைக் குறிப்பிட்டிருப்பார். 17 வருஷங்களுக்குப் பிறகு 2003ல இந்தியன் டீம் பாகிஸ்தான் டூர் போயிருப்பாங்க. அது பத்தி பேசுன சேவாக், அந்த டூர்ல நாங்க போற இடத்துல எல்லாம் பாகிஸ்தான் மக்கள் எங்கள் மேல அவ்ளோ அன்பு காட்டுனாங்க. நீங்க இந்தியால எந்த இடம்னு கேட்டு, டெல்லினு சொன்னதும். அங்கலாம் எங்க சொந்தக்காரங்க இருக்காங்கனு ரொம்ப எமோஷனலான ஸ்டோரீஸ் சொன்னாங்க. லாகூர்ல நடந்த செகண்ட் டெஸ்டுக்குப் பிறகு மார்கெட்ல போய் என் சொந்தக்காரங்க எல்லாருக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 30 பேருக்கு டிரெஸ் எடுத்துட்டு பணம் கொடுக்கப் போனப்ப,
நீங்க எங்களோட கெஸ்ட். உங்ககிட்ட எப்படி பணம் வாங்குறது’னு கடைசி வரைக்கும் அவங்க பணம் வாங்கவே இல்லை’னு சொல்லியிருப்பார்.
Also Read – கோட்டையில்ல… கொடியுமில்ல… ஆனா, 64 கட்டத்துக்குள்ள ராஜா இந்த பிரக்ஞானந்தா!
சேவாக் – அக்தர் Banter
சேவாக்கோட தக்லைஃப் மொமண்ட்ஸ் பத்தி பேசுறப்போ பாகிஸ்தான் பௌலர் அக்தருடனான ஆன்ஃபீல்டு – ஆஃப் ஃபீல்டு Banters பத்தி பேசாம இருக்கவே முடியாது. 2003-04 தொடங்கியே இருவரும் நல்ல நட்பில் இருந்தாலும், மறுபுறம் மாறி மாறி கலாய்த்துக் கொள்வது வழக்கம். சேவாக்கின் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையை விட எண்ணிடம் அதிகமான பண நோட்டுகள் இருக்கின்றன’ என்று அக்தர் கலாய்க்கவே,
இப்போ அக்தர்கிட்ட நோட்டுகளை விட என் தலையில முடி அதிகமா இருக்கு’னு ரிப்ளை கொடுத்திருப்பார். அதேமாதிரி, அக்தரோட பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்துச் சொல்ற ஸ்டைலே வேற மாதிரி இருக்கும். அவரோட 41-வது பிறந்தநாளுக்கு சேவாக் 2 ட்வீட் போட்டிருந்தாரு. ரெண்டுமே வைரல் ரகம். நகரும் டைட்டானிக் ஷிப்பே... தயவு செஞ்சு மூழ்கிடாத’னு ட்வீட்டியிருந்தார். கேரளாவுல பட்டாசு வெடிக்குறப்போ சேட்டன் ஒருத்தர் ஓடுறப்போ தடுமாறிக்கிட்டே போய் குப்புற விழுற வீடியோவோட,
அக்தர் பிறந்தநாள் சேவாக்கோட பார்ட்டி, இப்படியான நிலைமைல அவரை பார்ட்டியை அட்டண்ட் பண்ண வைச்சிடாதீங்கனு கலாய்ச்சு விட்டிருப்பார். அதேமாதிரி 2019 வேர்ல்டு கப் முன்னோட்டத்துல அக்தரை லைவ்ல வைச்சிக்கிட்டே, இந்த தடவையும் இந்தியா ஜெயிச்சுடும். வழக்கம்போல் Heart Broke ஆன பாகிஸ்தான் ஃபேன்ஸ், தங்களோட டிவியையும் ரேடியோவையும் உடைக்கட்டும்னு ஓட்டிவிட்டிருப்பார். மறுபக்கம் என்ன சொல்றதுனு தெரியாம அக்தர் திணறியிருப்பார். இப்படி நிறைய இன்சிடெண்ட்ஸை நாம சொல்லிட்டே போலாம்.

`பீர்பால்’ங்குற செல்லப்பேர்ல சேவாக்கைக் கூப்பிடுவாங்களாம். காரணம் ஆன்ஃபீல்ட்ல பீர்பால் மாதிரியே அறிவுப்பூர்வமா ஐடியாஸ் கொடுப்பாராம். குறிப்பா யங் ஸ்டர்ஸா இந்தியன் டீம் கப் அடிச்ச 2007 டி20 வேர்ல்டு கப்ல, பௌல் அவுட் தொடங்கி பல தருணங்கள்ல அவரோட இன்புட்ஸை தோனி அண்ட் கோ நிறையவே யூஸ் பண்ணிக்கிட்டாங்களாம். இன்னும் சொல்லப்போனா, காயம் காரணமா ஃபைனல்ல அவர் விளையாடாதபோதும், ஃபீல்டிங் டைம்ல எந்த ஈகோவும் பார்க்காம டிரிங்ஸ் கொடுத்திருக்கிறார் சேவாக்.
ஆன்ஃபீல்டு அட்ராசிட்டீஸ்
பாகிஸ்தான் இந்தியாவுக்கு டூர் வந்தப்போ நடந்த மேட்ச்ல நிகழ்ந்த சம்பவம் இது. சேவாக்கே ஒரு பேட்டில இதை பதிவு பண்ணிருப்பார். டேனிஷ் கனேரியா அரவுண்ட் த விக்கெட் பௌலிங் போட்டுட்டு இருந்திருக்கார். பேடை நோக்கியே எல்லா பால்ஸும் வரவே டிபன்ஸ் ஆடிட்டே இருந்திருக்கார் சேவாக். ஒரு கட்டத்துல பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிடம், எவ்வளவு நேரம்தான் டிஃபன்ஸ் ஆடுறது காலெல்லாம் வலிக்குது இன்சி பாய். லாங் ஆன் ஃபீல்டரை உள்ளே கூப்பிடுங்க’னு சொல்லிருக்கார். எதுக்குனு கேட்டதும். நான் சிக்ஸ் அடிக்கணும்னு சொல்லிருக்கார். நீ ஜோக்தானே அடிக்குறனு அவர் சொல்லவே, இல்ல நீங்க கூப்பிடுங்க. நான் சிக்ஸ் அடிக்கலாட்டி, நீங்க லாங் ஆனுக்கே அந்த ஃபீல்டரை போகச் சொல்லிடுங்கனு சொன்னாராம். இன்சமாமும் லாங் ஆன் ஃபீல்டரை உள்ளே கூப்பிட, கனேரியா வீசுன அடுத்த கூக்ளியை சிக்ஸராக்கி மிரட்டுனாராம் சேவாக். இந்த கான்வர்சேஷன் எதுவுமே தெரியாத கனேரியா டென்ஷனாக, அமைதியா இருனு இன்சமாம் அமைதிப்படுத்தினாராம். 2008ல மொகாலில நடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட்லயும் அப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கு. 90ஸ்ல பேட்டிங் பண்ணிட்டு இருந்த சேவாக், பேட் டிப்பாகி கீப்பர் கேட்ச் பிடிச்சிருக்கார். ஆனா, அம்பயர் ஆசாத் ரவுஃப் அவுட் கொடுக்கல. ஆஸி கேப்டன் பாண்டிங், உடனே சேவாக்கிட்ட வந்து பேட் டிப்தானேனு கேட்டிருக்கார். ஆமானு சேவாக் சொன்னதும், நீங்க ஏன் வெளியேறலைனு கேட்டிருக்கிறார். பதிலுக்கு சேவாக் கொடுத்த ரிப்ளை அல்டிமேட்.எந்தவொரு மேட்ச்லயும் நீங்க அப்படி தானா வெளியேறுனது இல்லையே.. அப்புறம் ஏன் என்னைப் போகச் சொல்றீங்க. அம்பயர்கிட்ட கேளுங்க’னு சொல்லிருக்கார். அம்பயரைக் கூட்டிட்டு வந்து கேட்டதும் இல்லை அவர் பொய் சொல்றாருனு சொல்லி சமாளிச்சாராம் சேவாக். 2003 ஆஸ்திரேலியா டெஸ்ட்ல 195 ரன்ல அவுட் ஆன சேவாக் கிட்ட, 200-க்கு இன்னும் 5 சிங்கிள்ஸ் போதுமே ஏன் இப்படி அவசரப்பட்டனு டிராவிட் கேக்க, சிக்ஸ் லைன்ல கேட்ச் கொடுத்து அவுட்டான சேவாக், நான் 3 யார்டைத்தான் மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லி மிரள வைச்சிருக்கார். இப்படி எத்தனையோ சம்பவங்களை ஆன்ஃபீல்டுல பண்ணிருக்கார்.

சிறுவயதில் வீட்டிலிருந்து பள்ளிக்குத் தினமும் காலை, மாலை என 5 மணி நேரம் பயணித்திருக்கிறார் சேவாக். இதைப் பார்த்து வேதனைப்பட்ட அவரது தந்தை, நீ பெரிய ஆளானா, குழந்தைகள் அங்கேயே தங்கி, படித்து, விளையாடுற வசதியோட ஒரு ஸ்கூல் கட்டணும். அப்படி வசதி இருந்தா கூடுதலா 5 மணி நேரம் நீ பிராக்டீஸ் பண்ணலாம்’லனு சொல்லிருக்கார். 2008ல சேவாக் இரண்டாவது டிரிபிள் செஞ்சுரி அடிச்சப்போ, நேரடியா போன் பண்ண ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா வாழ்த்துச் சொன்னதோட, நீங்க அகாடமி தொடங்குறதுக்காக அரசாங்கமே நிலம் ஒதுக்கிக் கொடுக்கும்னு சொல்லிருக்கார். சரி எல்லாரும் இப்படி வாக்குறுதிகள் கொடுக்குறது சகஜம்தானேனு அதை சேவாக் சீரியஸா எடுத்துக்கலையாம். ஆனா, சேவாக்கை ஹிஸாருக்கே வரவழைச்சு ஒரு பொது நிகழ்ச்சில இதைப் பெருசாவே அறிவிச்சு, நெகிழ வைச்சாராம் ஹரியானா சி.எம். அப்படித்தான் சேவாக் இன்டர்நேஷனல் ஸ்கூல் அண்ட் அகாடமி உருவாகியிருக்கு. சேவாக், தனது இரண்டாவது டிரிபிள் செஞ்சரியை (319) சௌத் ஆப்பிரிக்காவுக்கு எதிரா சென்னை சேப்பாக்கம் கிரவுண்ட்லதான் அடிச்சிருப்பாரு.
சேவாக்கோட தக்லைஃப் மொமண்ட்கள்லயே உங்க ஃபேவரைட் எது.. இந்த லிஸ்ட்ல விட்டுப்போன மொமண்டா இருந்தாலும் அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
The Best Premium IPTV Service WorldWide!
What i don’t realize is actually how you’re no longer actually much more well-appreciated than you might be now. You’re very intelligent. You realize thus considerably in relation to this matter, produced me for my part imagine it from a lot of numerous angles. Its like men and women are not fascinated unless it’s something to do with Girl gaga! Your personal stuffs nice. All the time take care of it up!
Thank you for the sensible critique. Me & my neighbor were just preparing to do some research on this. We got a grab a book from our area library but I think I learned more clear from this post. I am very glad to see such magnificent info being shared freely out there.
I’ve recently started a website, the information you offer on this web site has helped me tremendously. Thank you for all of your time & work. “The more sand that has escaped from the hourglass of our life, the clearer we should see through it.” by Jean Paul.
I got what you intend, thankyou for posting .Woh I am delighted to find this website through google. “Do not be too timid and squeamish about your actions. All life is an experiment.” by Ralph Waldo Emerson.
I’m not sure where you’re getting your information, but great topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for wonderful information I was looking for this info for my mission.