2028 லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்கில் 128 ஆண்டுகளுக்குப் பின் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இல்லாமல் போனது ஏன்?
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில்தான் கடைசியாக கிரிக்கெட் போட்டி இருந்தது. அந்த ஒலிம்பிக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தங்கப்பதக்கம் வென்றது.
அன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் பிரிவில் போட்டியிட்டது இந்த இரண்டே இரண்டு அணிகள்தான். அதிலும், பிரான்ஸ் அணிக்காக விளையாடிய பலர் ஏற்கனவே இங்கிலாந்து அணிக்காக விளையாடி, அங்கிருந்து வெளியேறியவர்களாகவே இருந்தார்கள். அந்த வீரர்கள் பலரும் கிளப் கிரிக்கெட் விளையாடியவர்கள். அவர்கள் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல.
இப்படியான சூழலில் இரண்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் கலந்துகொள்ளாததாலும், அதிகாரப்பூர்வமாக ஒவ்வொரு நாடும் ஒலிம்பிக்குக்கு என கிரிக்கெட் அணியைத் தயார் செய்து அனுப்பாததாலுமே இந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
2028 லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்
இந்தநிலையில், 2028-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க மும்பையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக் நிறைவடைந்துள்ள நிலையில், லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்குக்காக கவுன்டவுன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியிருக்கிறது.
லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து பேசியிருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், `கடந்த 15-20 ஆண்டுகளாக நான் கலந்துகொண்ட பல ஆலோசனைக் கூட்டங்களின் முக்கியமான குறிக்கோளே எப்படி கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பது என்பதாகத்தான் இருந்தது. இதற்காக நீண்டநாட்களாகக் காத்துக் கொண்டிருந்த நிலையில், இறுதியாக அது நடந்தே விட்டது. நிச்சயம் கிரிக்கெட்டுக்கு இது வலு சேர்ப்பதாகவே இருக்கும்’ என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
Also Read – இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் ஏன் ஸ்பெஷல்… முதல் மேட்சில் என்ன நடந்தது?
Your writing has a way of making even the most complex topics accessible and engaging. I’m constantly impressed by your ability to distill complicated concepts into easy-to-understand language.