`கணவன் – மனைவிபோல் வாழ்ந்தோம்; ஏமாற்றிவிட்டார்!’ பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் பலமுறை கருவுற்றதாகவும் சொல்லும் சாந்தினி, அதை மணிகண்டன் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். 1 min


Former Minister Manikandan
Former Minister Manikandan

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் ஐ.டி துறை அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் படத்தில் நடித்த சாந்தினி தேவா பாலியல் புகார் கொடுத்திருக்கிறார்.

அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன். அ.தி.மு.க ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் ஓரங்கட்டப்பட்டு, அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்ட நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அவருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக துணை நடிகை சாந்தினி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

Former Minister Manikandan

மலேசியாவைச் சேர்ந்த சாந்தினி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணியாற்றியிருக்கிறார். அப்போது, அமைச்சராக இருந்தபோது மணிகண்டன் தன்னை சந்தித்ததாகவும், பின்னர் காதலிப்பதாகவும் கூறியதாக நடிகை சாந்தினி தெரிவித்தார். திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் பலமுறை கருவுற்றதாகவும் சொல்லும் சாந்தினி, அதை மணிகண்டன் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். திருமணம் குறித்து கேட்டால், தன்னுடைய தவறான படங்களை ஆன்லைனில் வெளியிட்டு விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மணிகண்டன் மீது புகார் தெரிவித்திருக்கிறார்.

புகாருடன் வாட்ஸப் சாட்கள், புகைப்பட ஆதாரங்களையும் கமிஷ்னர் அலுவலகத்தில் சாந்தினி கொடுத்திருக்கிறார். அந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்த பின்னர் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Also Read – `ஆன்லைன் கிளாஸுக்கு டவலோடு வந்தார்!’ பாலியல் தொல்லை புகாரில் சென்னை பள்ளி ஆசிரியர்


Like it? Share with your friends!

427

What's Your Reaction?

lol lol
13
lol
love love
9
love
omg omg
3
omg
hate hate
9
hate
Jo Stalin

Jo Stalin

0 Comments

Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format
ரம்யா கிருஷ்ணன் முதல் ரம்யா பாண்டியன் வரை… கோலிவுட்டில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள்! SHAMY SPOTU முதல் CRIME & CITY வரை… தமிழின் டாப் 7 கிரைம் யூ டியூப் சேனல்கள் நீலாம்பரி முதல் பிரியங்கா வரை… தமிழ் சினிமாவின் 16 வில்லிகள்! ரகுவரன் முதல் நாசர் வரை – 90-களில் கலக்கிய வில்லன்கள்! ‘சட்டம் ஒரு இருட்டறை’ முதல் ‘ரமணா’ வரை! – கேப்டன் விஜயகாந்தின் டாப் 10 மூவிஸ்