ஐயையோ, Slice கொண்டு வறாங்க, ஓடுங்கடா… Slice அலப்பறைகள்!

பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரண்ட்ஸ்ன்றதை பல வருஷமா யாராலயும் அடிச்சுக்க முடியலை. ஆனால், டான்ஸிங் ரோஸையே அடிச்சது சிலைஸ்தான். லவ்வர்ஸ்லாம் சிலைஸ் பெயரைக் கேட்டாலே அலறுறாங்க. கடைல போய்ட்டு, அண்ணே சிலைஸ் ஒண்ணு கொடுங்கனு கேட்டோம். அவர் 1 நிமிஷம் அப்படியே உறைஞ்சு போய் நின்னாரு. சிலைஸ் பத்தி என்னலாம் பேசிக்கிறாங்க? அந்த சிலைஸ் யாரோட கம்பெனி தெரியுமா? அதுக்கும் இன்ட்ரஸ்டிங்கான வரலாறு இருக்கு. அது என்ன? வாங்க பார்த்துடுவோம்.

சூர்யவம்சம்
சூர்யவம்சம்

கேரளால பாறாசலையை சேர்ந்தவங்கதான் கிரீஷ்மா, கன்னியாகுமரில களியக்காவிளையைச் சேர்ந்தவர், ஷாரோன். ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருந்துருக்காங்க. திடீர்னு ஒருநாள் சிலைஸ்ல விஷயம் கலந்து கொடுத்து ஷாரோனை, கிரீஷ்மா கொலை பண்ணிருக்காங்க. அதுவும் உடனே சாகுற மாதிரி இல்லை. ஸ்லோ பாய்ஸனா, அவரை கொஞ்சம் கொஞ்சமா கொன்றுக்கு. இந்த வழக்கு சம்பந்தமா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியை கொடுத்துட்டே இருக்கு. கிரீஷ்மாவுக்கும் குடும்பத்துக்கும் அதிகளவில் ஜாதகம் மேல நம்பிக்கை. திருமணம் பண்ணா முதல் கணவர் இறந்துடுவாருனு சொல்லிருக்காங்க. உடனே, ஷாரோனை திருமணம் பண்ணி அவரை கொலை பண்ணிட்டு வீட்டுல பாக்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண பிளான் பண்ணதா தகவல்கள் வெளியாகியிருக்கு. அதேமாதிரி, பத்து தடவைக்கிட்ட ஷாரோனை கொலை செய்ய முயன்றதாகவும் சொல்லியிருக்காங்க. கிரீஷ்மாவின் பெற்றோர், உறவினர்கள் இந்த சம்பவத்துல உதவி பண்ணியிருக்காங்க. காதல், ஜாதகம்லாம் சேர்ந்து ஒரு உயிரை சுலபமா எடுத்துருச்சு, இந்தக் காலத்து பசங்க எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துக்குறாங்கனுலாம் பல விமர்சனங்களும் விவாதங்களும் ஒருபக்கம் சீரியஸா நடந்துட்டு இருக்கு. கண்டிப்பா சீரியஸா பார்க்க வேண்டிய விஷயம்தான் இது. இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த செய்தி ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. காரணம், டிலைஸ்தான்.

Greeshma - Sharon
Greeshma – Sharon

சிம்பு நடிச்ச அச்சம் என்பது மடமையடா படத்துல பைக் டிராவல் போவாங்க. அப்போ, பின்னாடி இருக்குற மஞ்சிமா மோகன், சிம்புவுக்கு சிலைஸ் பாட்டில் எடுத்து கொடுப்பாங்க. அப்போ, சிம்பு அதை வேண்டாம்னு சொல்லுவாரு. இந்த வீடியோவைப் போட்டு, “அன்றே கணித்தார் சிம்பு”னு போட்ருந்தாங்க. “அம்மா டெய்லி என்னை ஒருத்தன் ஃபாலோ பண்றாமா”னு பொண்ணு சொல்ல, அதுக்கு அம்மா, “ஒரு சிலைஸ் ஜூஸ் வாங்கி கைல வைச்சுக்கிட்டு தைரியமா போ”னு சொல்ற மாதிரி மீம்ஸ் போட்ருந்தாங்க. உங்களின் கிரியேட்டிவிட்டி வியக்க வைக்குதுடா. சந்திரமுகி படத்துல பிரபுவுக்கு நயன்தாரா காபி கொடுக்கும்போது ரஜினி பறந்து போய் தட்டு விடுவாருல. அதை அப்படி கட் பண்ணி போட்டு, காபிக்கு பதில் சிலைஸ் எடிட் பண்ணி ஷேர் பண்ணிருந்தாங்க. காதலைக் கடந்து இந்த சிலைஸ விஷம் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்றாங்க. இனிமேல் ஸ்லைஸ் குடிக்கும்போதுலாம் அந்த நியாபகம் தானடா வரும். “எப்ப கல்யாண சோறு போடுவ என்று தொடர்ந்து கேட்ட நண்பர்களை வரவழைத்து கூண்டோடு விஷம் வைத்துக்கொன்ற நண்பன்”னு மீம் ஒண்ணு இருக்குல, அதை ஷேர் பண்ணி சிலைஸ்னு சொல்லு மேன்னு போட்ருக்காங்க. பாவம்டா அந்த சிலைஸ் கம்பெனிகாரன். அல்ட்டி மேட்டான மீம் என்னனா, “டீ போட்டு தாடி”னு கணவன், மனைவிகிட்ட கேட்க, சிலைஸ்தான் இருக்குனு மனைவி சொல்ற மாதிரி ஒரு மீம். அதுக்கு இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா டெம்ப்ளேட் எடுத்துப்போட்டு, “என்னக் குமுதா பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு”னு ஷேர் பண்ணிருந்தாங்க அடேய்.

Greeshma – Sharon

அடி அடி அடி பொலி, என்ட ஸ்டேட்டு கேரளமானு, என்ட சி.எம் விஜயன் ஆனுலாம் சொல்லிட்டு சுத்துனாங்க, அவங்கள காணோம். எல்லாரும் கன்னியாகுமரிகாரங்கள கலாய்க்கிறீங்களே. பார்த்தீங்களா, எவ்வளவு வெள்ளந்தியான மனசுக்காரங்க இந்த குமரியன்ஸ்னு. ஜூஸ்ல விஷம் கலந்துருக்குறது தெரியாமல் அதை குடிச்சு, காதலி கையாலயே செத்தும் போய்ருக்காரு. காதல் வேல எவ்வளவு நம்பிக்கையா இருந்துருக்காரு பாருங்க. சரி, இந்த சிலைஸோட ஹிஸ்டரி பத்தி தெரியுமா? ஆக்சுவலா, இந்த சிலைஸ் பெப்சி கோ கம்பெனியோடதுதான். அதான் பெப்சிலாம் தயாரிக்கிறாங்கள்ல அவங்களோடதுதான். 90’ஸ் கிட்ஸுக்கு ஃபேவரைட்டான சீட்டோஸ், மௌண்டெயின் டியூ, லேஸ், மிரண்டா, 7 அப் எல்லாமே இவங்களோடதுதான். பெப்சிகோ கம்பெனியோட வரலாறு ரொம்பவே பெருசு. அதனால, அதை அலேக்கா தள்ளி வைச்சிருவோம். 1984-ல அமெரிக்காலதான் ஃப்ரூட் ஃபிளேவர் ஜூஸை முதல்ல இவங்க அறிமுகப்படுத்துனாங்க. அப்புறம் ஒவ்வொரு நாடுகளா பிரபலம் அடைய தொடங்கிச்சு. 1993-ல இந்தியால அறிமுகப்படுத்துனாங்க. மேங்கோ ஃபிளேவர் சிலைஸ் பிரபலமடைய பயன்படுத்தின பல யுக்திகள்ல பாட்டில் டிசைனும் ஒண்ணு. அப்போ வந்த ஜுஸ் பாட்டில்ல இருந்து சிலைஸ் பாட்டில் ரொம்ப வித்தியாசமா இருந்துச்சுனே சொல்லலாம். கொகொ கோலாவோட மினட் மெய்ட், ஃப்ரூட்டி, மாஸாக்குலாம் செம டஃப் கொடுத்து சிலைஸ் விக்க ஆரம்பிச்சுது.

சிலைஸ் விக்கிறதுக்கு முக்கியமான இன்னொரு காரணம் அவங்களோட ஃபன் / ரொமான்ஸ் டோன்ல இருக்குற நிறைய விளம்பரங்கள்தான். டிஜிட்டல் வளர்ந்து வந்தப்போ அதுகூடவே சேர்ந்து வளர்ந்து வந்தாங்க. கத்ரின கைஃப் தான் பிராண்டிங் அம்பாசிடரா இருக்காங்க. விளம்பரங்கள் எல்லாமே கத்ரினா கைஃப்தான் நிரம்பியிருப்பாங்க. நம்ம ஊருக்கு பாட்டிலை கடிச்சு சாப்பிடுற விளம்பரம்லாம் ரொம்பவே புதுசா இருந்துச்சு. அதேமாதிரி, ஒருபொருளை அவ்வளவு ரொமாண்டிஸைஸ் பண்ணி விளம்பரம் பண்ணதும் சிலைஸ்க்கு தான். இதனால, டக்னு சிலைஸ் வியாபாரம் பிக்கப் ஆயிடுச்சுனு சொல்லலாம். இந்தியால கிடைக்கிற மேங்கோ ஜூஸ்ல ரொம்ப திக்கான ஜூஸ் இதுதான்னும் சொன்னாங்க. இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா, 7 அப், பெப்ஸி, மவுண்டன் டியூ எல்லாமே கேஸ் நிரம்பினது. அது உடல்நலத்துக்கு ஆரோக்கியம் இல்லை. ஃப்ரஷ் ஜூஸ் குடிங்கனுலாம் நிறைய பேர் சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போ, கேஸ் இல்லாதை சிலைஸ் கொண்டு வந்து, “நீங்க எந்த ஆப்ஷனுக்கு போனாலும் எங்க கம்பெனிலதான் வந்து வாங்கணும்”னு சொல்லப்படாத ஸ்ட்ரேட்டஜியை வைச்சாங்க. எல்லாம் சரிதான், சிலைஸ் மட்டும் உடம்புக்கு நல்லதான்னு சண்டைக்கு வருவீங்க. அது தனி டாப்பிக். எப்படியும் இனி சிலைஸ் பார்த்து உங்களுக்கு வயிறு கலக்கதான் செய்யும்.

Also Read – 50 ரூபாய் வருமானம் to 3000 கோடி Turnover… போத்தீஸின் 100 வருட வரலாறு!

பெங்களூர் டேஸ் படத்துலலாம் சிலைஸ் வைச்சுதான் நஸ்ரியாவை ஃபகத் இம்ப்ரஸே பண்ணுவாரு. அதைப் பார்த்துட்டு, பொண்ணுங்களுக்கு சிலைஸ்தான் புடிக்கும்னுலாம் நினைச்சிருக்கோம். படம் வந்த புதுசுல சிலைஸோட கிரஷ்லாம் சந்திக்க போய்ருப்போம். சிலைஸ் வைச்சு காதல் பண்ண சொல்லிக்கொடுத்த ஊர்யா அது. இன்னைக்கு அதே சிலைஸ வைச்சு ஒட்டு மொத்த பசங்களையும் நடுங்க வைச்சிருக்காங்க. என்னத்த சொல்ல. பார்த்து கவனமா இருங்க. வினை எந்த வடிவத்துலயும் வரலாம்.

1 thought on “ஐயையோ, Slice கொண்டு வறாங்க, ஓடுங்கடா… Slice அலப்பறைகள்!”

  1. Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top