Protest

#Nirbhaya2 நீதிகேட்டு வலுக்கும் போராட்டம்… கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் என்ன நடந்தது?

பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.ஆர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தின் கருத்தரங்கு கூடத்தில் மருத்துவ மாணவி ஒருவர் உடலில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்த தகவலில் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் முதுகலை இரண்டாமாண்டு மாணவி என்பது தெரியவந்தது. மேலும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

கடந்த 8-ம் தேதி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர். #Nirbhaya2 என்கிற ஹாஷ்டேக்கிலும் சமூக வலைதளங்களில் நீதிகேட்டும் குரல்கள் வலுக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவோம் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்தநிலையில், உயிரிழந்த மருத்துவ மாணவி கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. `பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது’ என்று நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.

6 thoughts on “#Nirbhaya2 நீதிகேட்டு வலுக்கும் போராட்டம்… கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் என்ன நடந்தது?”

  1. I do not even know how I ended up here but I thought this post was great I do not know who you are but certainly youre going to a famous blogger if you are not already Cheers

  2. Internet Chicks You’re so awesome! I don’t believe I have read a single thing like that before. So great to find someone with some original thoughts on this topic. Really.. thank you for starting this up. This website is something that is needed on the internet, someone with a little originality!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top