நா.த.க முன்னாள் நிர்வாகி சிவராமன்

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை … நா.த.க முன்னாள் நிர்வாகி சிவராமனின் அதிர்ச்சிப் பிண்ணனி!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த என்சிசி முகாமுக்கு 8-ம் வகுப்பு மாணவி பயிற்சிக்கு வந்திருக்கிறார். அந்த முகாமில் டிரெய்னர் என்று கூறிக்கொண்டு வந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், அந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் அவரை போலீஸார் கடந்த 19-ம் தேதி கைது செய்தனர்.

போலி பயிற்சியாளர்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக இருந்த சிவராமன், என்சிசி தொடர்பான எந்தவொரு பயிற்சியும் பெறாமலேயே தன்னை டிரெய்னராக போலி ஆவணங்கள் மூலமாகக் காட்டிக் கொண்டது தெரியவந்தது. அந்தப் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளில் என்சிசி முகாம்கள் நடத்தி வந்திருக்கிறார்.

கிருஷ்ணகிரி காந்திக்குப்பத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடந்த என்சிசி முகாமில் 8-ம் வகுப்புப் பயிலும் 13 வயது மாணவி உள்பட 17 மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், அந்த மாணவியை சிவராமன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகப் புகார் எழுந்தது. மேலும், 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் புகாரில் சிவராமன் உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தற்கொலை முயற்சி

தான் கைது செய்யப்படப் போவதை முன்கூட்டியே அறிந்த சிவராமன், கடந்த 16 மற்றும் 18-ம் தேதிகளில் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீஸிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிருஷ்ணகிரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு விசாரணையைத் தொடங்கியது.

கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகையில் இன்று ஆய்வு மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியது. மேலும், சிவராமனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகையில் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதேபோல், மற்றொரு மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சிவராமன் மீது இன்னொரு வழக்கும் பதியப்பட்டிருக்கிறது. சிவராமன் பாலியல் புகாரில் சிக்கிய நிலையில், அவரை கட்சியை விட்டு நாம் தமிழர் கட்சி நீக்கியிருந்தது.

Also Read – ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை.. பின்னணி என்ன?

10 thoughts on “கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை … நா.த.க முன்னாள் நிர்வாகி சிவராமனின் அதிர்ச்சிப் பிண்ணனி!”

  1. Estou navegando on-line há mais de três horas hoje, mas nunca encontrei nenhum artigo interessante como o seu. Vale bastante para mim. Na minha opinião, se todos os proprietários de sites e blogueiros criassem um bom conteúdo como você, a Internet seria muito mais útil do que sempre antes

  2. I have been surfing online more than 3 hours today yet I never found any interesting article like yours It is pretty worth enough for me In my opinion if all web owners and bloggers made good content as you did the web will be much more useful than ever before

  3. I believe that is among the most significant info for
    me. And i’m glad reading your article. But wanna observation on some normal
    things, The site taste is perfect, the articles is in point of fact great :
    D. Excellent task, cheers

  4. obviously like your web site however you need to take a look at the spelling on quite a few of your posts.
    Several of them are rife with spelling problems and
    I in finding it very troublesome to tell the reality however I will
    definitely come again again.

  5. Hi, Neat post. There is an issue along with your web
    site in internet explorer, would test this?
    IE nonetheless is the market chief and a good portion of folks will
    omit your magnificent writing due to this problem.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top