திருக்குறள் புத்தகம் முதல் ஈமு கோழி வரை… தமிழகத்தை உலுக்கிய மோசடிகள்!

சர்தார் படத்தோட டைரக்டர் மித்ரன் ஓ.டி.பி ஸ்கேம், ஃபேக் ஐ.பி.எல் ஸ்கேம், ஃபேக் ஐடி ஸ்கேம் பத்திலாம் பேசுனதும் செம வைரல் ஆச்சு. அப்போ, இந்த மாதிரி வேற என்ன ஸ்கேம்லாம் நடந்துருக்குனு கொஞ்சம் தேடிப் பார்த்தா, அதிர வைக்கிற அளவுக்கு சம்பவங்கள் நடந்துருக்கு. ஈமு கோழி ஸ்கேம், காந்தப் படுகை ஸ்கேம், மண்ணுள்ளி பாம்பு ஸ்கேம், லில்லி பூட் ஸ்கேம், திமிங்கலம் எச்சில்னு ஸ்கேம் சம்பவங்கள் எக்கச்சக்கமா நடந்துருக்கு. திருக்குறள் புக் வைச்சுலாம் ஸ்கேம் பண்ணிருக்காங்க. இந்த வீடியோல எப்படி இந்த ஸ்கேம்லாம் நடந்துச்சுனுதான் பார்க்கப்போறோம்.

திருக்குறள் புத்தகம் ஸ்கேம்தான் எல்லாருக்கும் செம ஷாக்கா இருக்கும். எப்படி புத்தகத்தை வைச்சு ஸ்கேம் பண்ணிருப்பாங்கனு தேடி பார்த்தா பெரிய கதையே இருக்கு. மதுரையைச் சேர்ந்த ஷேக் மைதீன், கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு முன்னாடி பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேசன்னு நிறுவனம் ஒண்ணை தொடங்குனாரு. அதுல அவருக்கு நெருக்கமானவங்களை பார்ட்னராவும் சேர்த்துக்கிட்டாரு. அந்த நிறுவனம் கொடுத்த அறிவிப்புதான் ஹைலைட். 10,000 ரூபாய் கொடுத்து 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்கனும். 37 மாதம் கழிச்சு, அதாவது சுமார் 3 வருஷம் கழிச்சு 46,900 ரூபாய் தருவதாகவும் அறிவிச்சாரு. இதை என்ன லாஜிக்ல நம்புனாங்கனு தெரியலை. அவர் பேச்சைக் கேட்டு, கிட்டத்தட்ட 45,000 பேர் பணம் கட்டிருக்காங்க. மொத்தமா கணக்குப்போட்டா ரூ.65 கோடி மனுஷன் சுருட்டிருக்காரு. ஆடம்பரமா வாழ ஆரம்பிச்சிருக்காரு. ஆனால், மூணு வருஷம் கழிச்சு யாருக்கும் காசு கொடுக்கலை. மக்கள் போய் கேட்டதுக்கு மிரட்டலாம் செய்துருக்காரு. 2010-ல இந்த சம்பவம் தொடர்பா வழக்குப் பதிவு பண்ணிருக்காங்க. மக்கள் பறிகொடுத்த பணம் கிடைக்குமானு எதிர்பார்க்குறாங்க. சோகம் என்னனா, கேஸ் இன்னும் நடந்துட்டுதான் இருக்கு.

Thirukural Book
Thirukural Book

காந்தப் படுக்கை மோசடியும் தமிழகத்தை ரொம்பவே பரபரப்பாக்கிச்சு. காரணம், அதுல சம்பந்தப்பட்ட தலைகள் எல்லாம் பெரிய தலைகள். மல்டி லெவல் மார்கெட்டிங்ன்ற ஒண்ணு சுமார் 20 வருஷத்துக்கு முன்பு செம டிரெண்டா இருந்துச்சு. இப்பவும் இதுலாம் இருக்கத்தான் செய்யுது. இந்த மார்க்கெட்டிங் யுக்தில முதல்ல சேர்ரவரு மூணு பேரை சேர்த்து விடணும். அப்போ, அவங்களுக்கு கமிஷன் கிடைக்கும். அப்புறம், சேர்ந்த மூணு பேரும் இன்னும் மூணு பேரை சேர்த்து விடணும். இப்படி அந்தக் கிளை பெருசா போய்கிட்டே இருக்கும். அதுக்கு கமிஷனும் வரும். அப்போ, அது ஆரம்பிச்ச காலம்னு சொல்லலாம். ஒண்ணுமே இல்லாமல் வந்தேன். இப்போ, என் பி.எம்.டபிள்யூ வெளிய நிக்குதுனு பேசுற குரூப்புக்கு முன்னோடி இவங்கதான். இந்த விஷயத்துல விக்கிறவங்களுக்குதான் அதிகமான பிளஸ். ஏன்னா, கடை கிடையாது, அட்ரெஸ் கிடையாது, யாரு முதலாளினுகூட தெரியாது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு ஜப்பான் லைஃப் இந்தியானு பெயர் இருக்கு. அப்போதான், காந்தப் படுக்கை மோசடி நடந்துச்சு. உடல்ல இருக்குற பல பிரச்னைகளுக்கும் இந்த காந்தப் படுக்கை தீர்வா இருக்கும்னு சொல்லி விற்பனையை ஆரம்பிச்சாங்க. நிறைய பேர் முந்தியடிச்சுட்டு வந்து இதை வாங்குனாங்க. ஆனால், சாதாரண படுக்கைகளை விற்பனை பண்ணாங்க. நிறைய பேருக்கு இந்த படுக்கை போய் சேரக்கூட இல்லையாம். கிட்டத்தட்ட இந்த மோசடில 30 கோடி சுருட்டிருக்காங்க. விஷயம் வெளிய வந்ததும் 84 பேரை கைது பண்ணாங்க. சென்னைலதான் சம்பவம் அதிகமா நடந்துச்சு.

திமிங்கலத்தோட எச்சிலுக்கு இவங்க மாத்திக்கொடுத்தப் பொருளைக் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க. அது என்ன தெரியுமா?

Black Ink Scam
Black Ink Scam

கருப்பு மை மோசடி கொஞ்சம் வித்தியாசமானது. எப்படிலாம் யோசிக்கிறாங்கனு நம்மள யோசிக்க வைச்ச சம்பவங்கள்ல இதுவும் ஒண்ணுனு சொல்லலாம். இந்தியா முழுவதும் பல இடங்கள்ல கருப்பு மை சம்பவம் நடந்துச்சு. தமிழ்நாட்டுலயும் சில மாவட்டங்கள்ல நடந்துச்சு. திண்டுக்கல்ல, வத்தலகுண்டுல போலீஸ் ஒருநாள் வாகன சோதனைல ஈடுபட்ருக்காங்க. அப்போ, ஒரு வண்டில நிறைய கருப்புத்தாளும் ஒரு பேரல்ல கொஞ்சம் ரசாயன திரவத்தையும் புடிச்சிருக்காங்க. என்ன இதுனு விசாரிக்கும்போது, செம ஷாக் ஆகியிருக்காங்க. அதாவது 100 ரூபாய் கொடுத்தா 200 ரூபாயா மாத்திக் கொடுப்பாங்களாம். மாயம் இல்லை, மந்திரம் இல்லை. எல்லாம் தந்திரம்னு சொல்லுவாங்கள்ல. அதேதான். முதல்ல சில நோட்டுகளை உண்மையா கொடுத்து நம்ப வைச்சிட்டு, அப்புறம் லட்சக்கணக்குல மோசடி பண்ணுவாங்க. எவ்வளவு கொடுக்குறாங்களோ, அதை வாங்கிட்டு, அதுக்கு பதிலா கருப்பு நோட்டுகளைக் கொடுப்பாங்க. அதை வாங்கி 24 மணி நேரம் கழிச்சு, அவங்க கொடுத்த அந்த திரவத்தை தடவினா, ஒரிஜினல் நோட்டா மாறிடும் அப்டினு சொல்லிருக்காங்க. ஆனால், அந்த பேப்பர் பணமா மாறாது. அதுக்குள்ள அவங்க எஸ்கேப் ஆயிடுவாங்க. நிறைய இடத்துல வாகன சோதனைகள்லயெல்லாம் கருப்பு நோட்டை பறிமுதல் பண்ணி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்காங்க.

Whale Scam
Whale Scam

ஸ்பெர்ம் திமிங்கலத்தோட வாந்தியை கடல் தங்கம்னு சொல்லுவாங்க. அம்பர்கிரிஸ்னும் இதுக்கு பெயர் இருக்கு. நிறைய விஷயங்களுக்காக இதை பயன்படுத்துறதால இதோட மதிப்பும் அதிகம். நறுமணப் பொருள்கள்ல இருந்து மருத்துவப் பொருள்கள் வரைக்கும் இதுல இருந்து தயாரிக்கிறாங்களாம். அதனால, ஒரு கிலோ அம்பர்கிரீஸ் கிட்டத்தட்ட 1.5 கோடினு சொல்றாங்க. அரபு நாடுகள்ல இதுக்குனு தனி மதிப்பே இருக்குதாம். ஸ்பெர்ம் திமிங்கலத்தோட உறுப்புகளையும் அதிகளவில் விக்கிறாங்க. இதனால, நிறைய நாடுகள்ல இந்த திமிங்கலத்தை வேட்டையாடவும் செய்துருக்காங்க. சில நாடுகள்ல இதுக்கு கடுமையான தடை சட்டங்களும் இருக்கு. இந்தியாலயும் பல மாநிலங்கள்ல இதை கடத்துறாங்க. அப்போ, பிடிபடுற செய்திகள் எல்லாம் வருவதுண்டு. சமீபமாகவும் இதுதொடர்பான செய்திகள் அதிகரிக்க தொடங்கியிருக்கு. மிகவும் அரிதா இந்த பொருள் கிடைக்கிறதால, இதன் மதிப்பை அறிந்த சிலர் மெழுகு, கொழுப்பு, மரப்பசை இதெல்லாம் திமிங்கலத்தோட எச்சம்னு சொல்லி விக்கிறாங்க. போலியான திமிங்கலம் எச்சத்தையும் பல லட்சம் காசு கொடுத்து ஏமாறுறாங்க. கொங்கு மண்டலத்தை அதிர வைத்த இன்னொரு மோசடி ஈமு கோழி மோசடி. குறிப்பிட்ட தொகை கட்டணும். கோழிக்குஞ்சு தருவோம், மாதம் பணமும் தருவோம்னு சொல்லி, எதுவும் கொடுக்காமல் அபேஸ் பண்ணிடுவாங்க. இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஃபேமஸ் மோசடி.

Rice Pulling Scam
Rice Pulling Scam

இரிடியம் மோசடியும் மிகப்பெரிய அளவில் நடக்கூடிய ஒன்று. பூமியிலயே மிகவும் அரிதாக கிடைக்கிற உலோகங்கள்ல இதுவும் ஒன்று. வருஷத்துக்கே 3 டன்கள் மட்டும்தான் வெட்டி எடுக்குறாங்களாம். ஒரு கிலோ இரிடியத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் மேல மதிப்பு இருக்கு. பேனா முனைல இருந்து செயற்கைகோள் வரைக்கும் இந்த உலோகத்தை பயன்படுத்துறாங்க. கோயில் கலசத்துல இந்த இரிடியம் இருப்பதாக சொல்றாங்க. இல்லைனா, இடி மின்னல்லாம் தாக்கி அந்த கலசம் இரிடியமா மாறுறதாகவும் சொல்றாங்க. சக்தியுள்ள அந்த கலசத்தை வாங்கி வீட்டுல வைச்சா பல நன்மைகள் நடக்கும்னும் சதுரங்க வேட்டை படத்துல ஆசையை தூண்டி பணத்தைக் கறக்குற மாதிரி பண்றாங்க. இரிடியம் கும்பல் கோஸ்டிகளுக்கு பெரிய பெரிய வி.ஐ.பிக்கள்தான் டார்கெட். இன்னும் ஏமாந்துட்டுதான் இருக்காங்க. சாதாரண தகடை இது தான் இரிடியம்னு சொல்லி பல கோடிக்கு வித்துட்டுப் போய்டுறாங்க. சதுரங்க வேட்டைல இதைப் பத்தி அட்டகாசமா சொல்லியிருப்பாங்க. அதேமாதிரி மண்ணுள்ளிப் பாம்பு. மோசடி, ஸ்கேம்னுலாம் சொன்னாலே மண்ணுள்ளிப் பாம்புதான் நியாபகம் வரும். இதோட எடையை வைச்சு ஏகப்பட்ட சகதைகளை சொல்லுவாங்க. விஜய் தாக்கப்பட்டாரானுலாம் கதை விட்டு சதுரங்க வேட்ட்டைல கலக்கி எடுத்துருப்பாங்க.

Also Read – கேப்டன் பிரபாகரன் வெற்றிக்கு 5 காரணங்கள்!

உலக அளவுல நடக்குற எந்த மோசடியா இருந்தாலும் அதை ரெண்டா பிரிக்கலாம். ஒண்ணு, விஜய் படத்துல வர்ற மாதிரி ‘வாழ்க்கைல விடிவு காலம் பொறக்காதா?’னு நம்பி காசை போடுறவங்க. இன்னொன்னு, நிறைய பணம் இருக்கு. அதை இன்வெஸ்ட் பண்ணி, வேலை செய்யாமல், இன்னும் நிறைய சம்பாதிக்கணும் அப்டினு நினைக்கிறவங்க. யாரா இருந்தாலும், நேர்மையா சம்பாதிச்ச பணமா இருந்தா ஏமாறும்போது மனசு வலிக்கத்தான் செய்யும். அதுனால, கவனமா இருங்க மக்களே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top