மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி

பெண் குழந்தைகள் கற்பதை இஸ்லாமியர் விரும்ப மாட்டார்களா… மதுரை கேந்திரிய வித்யாலயா சர்ச்சைக் கேள்வி!

பெண் குழந்தைகள் கல்வி கற்பதை இஸ்லாமியர்கள் விரும்ப மாட்டார்கள் என்கிறரீதியில் மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடந்தது?

மதுரை கேந்திரிய வித்யாலயா

மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. அந்த வகையில் மதுரை நரிமேட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான மாதாந்திர தேர்வு நடைபெற்றது. இதில், இஸ்லாமியப் பெண் குழந்தைகள் பற்றி கேட்கப்பட்டிருந்த கேள்விதான் சர்ச்சையாகியிருக்கிறது.

மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி
மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி

இஸ்லாமியர்கள் பற்றிய பொதுவான கருதுகோள் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டு, அதற்கு நான்கு விடைகள் ஆப்ஷனாகக் கொடுக்கப்படிருந்தன. அதில், ஒன்று பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அவர்கள் (இஸ்லாமியர்கள்) விரும்ப மாட்டார்கள் என்பது. முதல் பதிலாகக் கொடுக்கப்பட்டிருந்த அதுவே சரியான விடை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம்தான் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேள்வி
கேள்வி

பள்ளி ஆசிரியரின் விளக்கம்

இந்த கேள்வியைக் கேட்ட சமூக அறிவியல் ஆசிரியர் தேவ் ரத்தன் கொடுத்திருக்கும் விளக்கத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) சார்பில் தயாரிக்கப்பட்ட 6-ம் வகுப்புக் குடிமையியல் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், 18-ம் பக்கத்தில் இடம்பெற்றிருந்த தகவலை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கேள்வி தயாரிக்கப்பட்டிருந்தது. அதில்,சில இஸ்லாமியர்கள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை விரும்பவில்லை. அதனால், அவர்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. இஸ்லாமிய மக்களிடம் நிலவும் ஏழ்மையே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஏழ்மையால் பள்ளி செல்லும் குழந்தைகள் சில ஆண்டுகளில் இடைநிற்றலும் நிகழ்கிறது’.

NCERT புத்தகம்
NCERT புத்தகம்

இந்தத் தகவலின் அடிப்படையிலேயே அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அது ஒரு பொதுவான கருதுகோள் மட்டுமே. இந்தியாவில் இஸ்லாமியப் பெண் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து விவாதிக்கும் நோக்கில் அந்தப் பாடம் இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கருதுகோள் தவறாக இருக்கும்பட்சத்தில் அதனை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பாடம் குறித்து வகுப்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ஏழ்மையால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில், இஸ்லாமியப் பெண் குழந்தைகள் இருப்பதாக அந்தப் பாடத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், தவறான புரிதலால் ஆசிரியர் கேள்வி கேட்டிருப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Also Read – ‘எனது தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர்; நினைவிடத்தை மனதார வரவேற்கிறோம்!’ – ஓ.பி.எஸ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top