சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI), Clean Energy மற்றும் சைபர் பாதுகாப்பு (Cyber Security) ஆகிய துறைகளில் கல்வி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான புதிய திறவுகோலாக இந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள `Sathyabama Centre for Advanced Studies’ அரங்குக்கு நியூ மெக்ஸிகோ மாகாண ஆளுநர் முனைவர் மிச்செல் லூஜன் கிரிஷம் (Dr.Michelle Lujan Grisham) அவர்களை சத்யபாமா பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் மரிய பெர்னதெத் தமிழரசி, அருள் செல்வன், மரிய கேத்தரின் ஜெயப்பிரியா ஆகியோருடன் பல்கலைக்கழக பேராசிரியர்களும் வரவேற்றனர்.
அதன்பின்னர், நியூ மெக்ஸிகோ மாகாண குழுவினருக்கு இந்திய கலாசார பாரம்பரிய அடிப்படையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த நிகழ்வில் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் நியூ மெக்ஸிகோ மாகாண ஆளுநர் முனைவர் மிச்செல் லூஜன் கிரிஷம் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
செயற்கை நுண்ணறிவு (AI), Clean Energy மற்றும் சைபர் பாதுகாப்பு (Cyber Security) ஆகிய துறைகளில் கல்வி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சத்யபாமா பல்கலைக்கழகம் நியூ மெக்ஸிகோ மாகாணத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன்மூலம், சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் நியூ மெக்ஸிகோ சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்த நிகழ்வில் நியூ மெக்ஸிகோ மாகாண ஆளுநர் மாளிகை அதிகாரிகளோடு சென்னையிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி கிரிஸ் ஹாட்ஜஸ் மற்றும் சத்யபாமா பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
Also Read – `கடல் ஆராய்ச்சிக்கான ஆகச்சிறந்த ஆய்வுக்கூடம்’ – சத்யபாமாவுக்குக் கிடைத்த பாராட்டு!