சக்தி நீட் அகாடமி

“நீட்ல 600 மார்க் ஈஸியா வாங்கலாம்” – `சக்தி நீட் அகாடமி’ இயக்குநர் அருணாசலம்!

நாடு முழுவதும் 15.44 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் 58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் 138 மதிப்பெண் என்பது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணாகும். மற்ற அனைத்து பிரிவினருக்கு 108 மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி திருச்சி மாவட்டம், அண்ணாமலைபுரத்தில் உள்ள சக்தி நீட் அகாடமியில் பயின்ற மாணவர்களில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களைக் கவுரவித்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

சக்தி நீட் பயிற்சி மைய இயக்குநர் அருணாசலம்
சக்தி நீட் பயிற்சி மைய இயக்குநர் அருணாசலம்

இந்நிகழ்வில் பேசிய சக்தி நீட் அகாடமியின் இயக்குநர் அருணாசலம், “600 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மாணவர்கள் நீட் தேர்விற்காக அகாடமி நோக்கி வருகிறார்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதுதான் சக்தி நீட் அகாடமியின் நோக்கம். மாணவர்கள் வாங்கும் குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் பாடங்களில் அதிக கவனம் செலுத்தினாலே 600 மதிப்பெண்களுக்கு மேல் வந்துவிடும். எல்லாவற்றையும் படிப்பதை விட எது முக்கியமான பகுதியோஅதில் அதிக கவனம் செலுத்தினால் நீட் தேர்வில் எளிதில் வெற்றிபெற்று விடலாம்.  

சக்தி நீட் அகாடமி

சக்தி நீட் அகாடமியில் ஓராண்டு பயின்றவர்களில், நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 23 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 44 பேரும், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மற்ற பாடங்களில் கவனம் செலுத்தும் அளவுக்கு இயற்பியல் வகுப்புகளில் பாடம் செலுத்தினாலே எளிமையாக 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துவிடலாம். ஆனால் அதை எளிமையாகப் புரியும்படி மாணவர்கள் படிக்க வேண்டும். அதற்கான வழியைத்தான் நாங்கள் சொல்லித் தருகிறோம். இங்கு வருவதற்கு முன்னர் இயற்பியல், வேதியியலில் 20, 30 மதிப்பெண்களை வாங்கிய மாணவர்கள் இப்போது 100 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியிருக்கிறார்கள். இதுவே அவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்களைக் கொண்டுவந்துவிடும்.

ஒரு சாதாரண டியூசன் எடுக்கும் மையமாக இருந்த இது இப்போது நீட் அகாடமியாக வளர்ந்து நிற்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. மிகவும் கஷ்டப்பட்டுப் படித்து இந்த நிலைக்கு வந்தவன் நான். கஷ்டப்படும் மக்களின் வலி தெரியும். அதனால்தான் என் அகாடமியில் படிக்கும் மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் நானே பேராசிரியராக மாறிப் பாடம் எடுத்து வருகிறேன். மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி சொல்லிக் கொடுத்தாலே அவர்களுக்கு விளங்கிவிடும். ஆனால், அதிகமான பெற்றோர் மாணவன் படிக்கவில்லை என்று சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் நன்றாகவே படிக்கிறார்கள், அவர்களுக்குப் புரியும்படி சொல்லிக்கொடுத்தால் நிச்சயமாக நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள்” என்றார்.

சக்தி நீட் அகாடமி
சக்தி நீட் அகாடமி

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி யுவஶ்ரீ பேசும்போது, “நான் தேர்ச்சி அடைவதற்குக் காரணம் என் அப்பாதான். இந்த மாதிரி ஒரு இன்ஸ்டிடியூட்ல சேர்த்துவிட்டதுக்கு நான் அப்பாவுக்கு முதல்ல நன்றி சொல்ல வேண்டும். அகாடமி இயக்குநர் அருணாச்சலம் எனக்கு இயற்பியல் பாடங்களைப் புரியும்படி சொல்லிக் கொடுத்தார். அதேபோல வேதியியல், விலங்கியல் பாடங்களும் புரியும்படி ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தனர். அதைவிட இவர்கள் வைக்கும் மாதிரி தேர்வுகள்தான் எனக்கு அதிகமாகக் கைகொடுத்தது. சக்தி நீட் அகாடமியில் சொல்லிக் கொடுப்பது மாதிரி நான் வேறு எங்கும் கேள்விப்பட்டதில்லை. என் நண்பர்கள் வட்டாரத்தில் இப்போது அதிகமானோ இந்த அகாடமியைப் பற்றிக் கேட்கிறார்கள். நான் கடந்த வருடமே இங்கே வந்திருந்தால் இந்நேரம் ஒரு மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பேன். அப்போது வாய்ப்பு போனதுக்காக இப்போது வருத்தப்படுகிறேன். அதை நிறைவேற்றிய என் ஆசிரியர்களும், இந்த அகாடமிக்கும் நன்றி” என்றார்

அடுத்துப் பேசிய மாணவர் சக்திவேல், “கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதித் தோற்றுப்போன மாணவன் நான். ஆனால் இந்த முறை வெற்றிபெற்றேன். மூன்றாவது முறை என் பெற்றோர்கிட்ட சொன்னப்போ அவர்கள் கொஞ்சம் யோசித்தனர். பிறகு என் தந்தை யூட்யூபில் வந்த சக்தி அகாடமி வீடியோவைப் பார்த்துவிட்டு என்னிடம் சொன்னார். நானும் அந்த வீடியோ பார்த்தேன். அதில் பேராசிரியர் அருணாசலம் சொல்லியிருந்த இயற்பியல் பாடம் எளியமுறையில் புரிந்தது. அதனால் இங்கேயே சேர்ந்துவிட்டேன். இந்த அகாடமியில் கடைசி வரை ஆன்லைனில் மட்டுமே பங்கேற்றேன். அந்த அளவுக்கு ஆசிரியர்கள் நன்றாகச் சொல்லிக் கொடுத்தனர். மாதிரித் தேர்வுகளும் நீட் தேர்வில் வெற்றிபெற உதவியாக இருந்தன” என்றார். மாணவர்களின் பெற்றோர்களும் சக்தி நீட் அகாடமிக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

சக்தி நீட் அகாடமி
சக்தி நீட் அகாடமி

நிகழ்வின் இறுதியாக சக்தி நீட் அகாடமியின் இயக்குநர் அருணாசலம் பேசும்போது, “நீட் தேர்வில் தோல்வி அடைவது ஏதோ குற்றச் செயல் அல்ல. தேர்வில் தோல்வியடைந்தால் மாணவர்கள் நன்றாகப் படிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல. மாணவர்கள் நன்றாகத்தான் படிக்கிறார்கள். அவர்களுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுத்தால் அவர்கள் நிச்சயமாக நீட் தேர்வில் வெற்றிபெறுவார்கள். இங்கே தேர்ச்சி அடைந்த பல மாணவர்கள் முதல் வருடம் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள்தான். அவர்களில் சிலர் 200 மதிப்பெண்களுக்குக் குறைவாக வாங்கியவர்கள். அவர்களை 600 மதிப்பெண்கள் எடுக்க வைத்திருக்கிறது சக்தி நீட் அகாடமி. பல லட்சம் வாங்கிக் கொண்டு இங்கு மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதில்லை. நானும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். அதனால் குறைவான கட்டணத்தில் மாணவர்களை மருத்துவராக்குவதே சக்தி நீட் அகாடமியின் லட்சியம்” என்றார்.

நடப்பு ஆண்டில் பயிற்சி வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. மாணவ, மாணவிகளுக்குத் தங்கும் விடுதி வசதியும் உண்டு. மேலும், விவரங்களுக்கு +91 93451 29898, +91 97912 77635 என்ற எண்களிலும், shakthineetacademy@gmail.com என்ற ஜி-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top