ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் `சார்பட்டா பரம்பரை’. பா.இரஞ்சித் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருந்தார். குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. பா.ரஞ்சித்தின் படங்களில் பெண்களின் கேரக்டர்கள் கெத்தாக இருக்கும். அந்த வகையில் துஷாரா விஜயனின் கேரக்டரும் கெத்தாகவும் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் விதமாகவும் இருந்தது. துஷாரா விஜயன் மாரியம்மா கேரக்டரில் அசத்தியிருப்பார். சார்பட்டா பரம்பரை வெளிவந்ததை அடுத்து இளைஞர்கள் மனதிலும் துஷாரா நீங்கா இடம் பிடித்தார். மாரியம்மாவைப் போன்ற மனைவி கிடைக்க மாட்டார்களா என இளைஞர்கள் ஏங்கி வருகின்றனர். டேய் நில்றா… என ஆர்யாவை அதட்டும் காட்சிகள்… திருமணம் முடிந்த பின்னர் வரும் டான்ஸ்… படகில் ஆர்யாவைக் கொஞ்சும் காட்சிகள் என எல்லா எமோஷன்களிலும் பின்னியிருப்பார். துஷாரா விஜயனின் கியூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. துஷாரா விஜயன் ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ளார். மாடலிங், குறும்படங்களில் நடித்து வந்த துஷாரா தற்போது பெரிய திரையிலும் கலக்குகிறார். வாழ்த்துக்கள் துஷாரா!
`அழகே அழகே அழகின் அழகே நீயடி!’ – துஷாரா விஜயனின் கலர்ஃபுல் ஆல்பம்
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கதாநாயகி துஷாரா விஜயனின் கலர்ஃபுல் புகைப்படங்கள்!2 min

0 Comments