Non stop, Hostage, Pelham 123… Beast-க்கு முன் பார்க்க வேண்டிய 5 படங்கள்!

என்ன நண்பா அண்ட் நண்பீஸ்… பீஸ்ட் பார்க்க ரெடியாகிட்டீங்களா. அனைவரும் எதிர்பார்த்ததுபோல் பீஸ்ட் படம் வெளியாக இருக்கிறது. படத்தின் டீஸரும் பட்டையை கிளப்பியது. டீஸரைப் பார்த்ததில் இருந்தே படத்தின் கதையை நம்மால் கணிக்க முடிந்துவிட்டது. படத்தின் கதையை செல்வா சாரே சொல்லிவிட்டார். சரி நீ என்ன டா சொல்லப்போறன்னுதானே நினைக்கிறீங்க. பீஸ்ட் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சில படங்களைப் பற்றி பார்க்கப் போறோம். 

Non Stop : 

ஹாலிவுட்டின் மிக முக்கியமான ஒரு தலக்கட்டு. அது என்னவோ இவர் நடித்த நிறைய படங்கள் underrated லிஸ்ட்டுக்குள்ளே போய்விடுகிறது. இவரது படத்தை பார்க்க விரும்புபவர்கள் Taken பட சீரிஸில் இருந்து ஆரம்பிக்கலாம். மொத்தம் 3 பாகங்கள் வெளியானது. 3-ம் பாகம் வேற லெவல். இவருக்கும் நம்ம விஜய்க்கும் ஒரு மிகப்பெரிய கனெக்ட் உள்ளது. துப்பாக்கி படத்தில் வில்லனுக்கு விஜய்க்கும் ஒரு கான்வர்சேஷன் இடம்பெறுவது போலவே இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும். அந்த டயலாக் இதோ… Hijack, மக்களை காப்பாற்றுவது kind of படத்தில் நம்முடைய லியான் நீசனும் நடித்திருக்கிறார். நான் ஸ்டாப் படத்தில் இவர் பயணிக்கும் ஃப்ளைட் ஹைஜேக் செய்யப்படும். ஆரம்பத்தில் விளையாட்டுத்தனாமக நகரும் கதை அடுத்தடுத்து விறுவிறுவென நகரும். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஒரு பயணி இறப்பார் என்ற மிரட்டலையடுத்து படத்தின் விறுவிறுப்பு டேக் ஆஃப் ஆகிவிடும். கடைசியில் எப்படி அந்த ஃப்ளைட் லேண்ட் ஆனது என்பதே கதை. ஏகப்பட்ட மாஸ் காட்சிகள் இந்த படத்திலும் இடம்பெற்றிருக்கும். இந்த படத்தின் ஹீரோ லியாம் நீசனுக்கும் விஜய்யின் முந்தைய படமான மாஸ்டருக்குமே ஒரு குட்டி கனெக்ட் உள்ளது. இருவருமே Alcoholic. இந்தப் படத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. அந்த ஃப்ளைட்டில் பயணிகளோடு பயணியாக நாமும் அங்கு ஏதோ மூலையில் உட்கார்ந்திருக்கும் ஓர் உணர்வைக் கொடுக்கும். ஸோ, மிஸ் பண்ணிடாதீங்க. 

Hostage : 

நமக்கு மிகவும் பிடித்த அடுத்த பெரிய ஹீரோ ப்ரூஸ் வில்லிஸ். 1980-களில் இருந்து ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் இவர் நடித்திருக்கிறார். எனக்கு என்னைப் போன்ற பலருக்கும் இவர் நடிப்பில் மிக மிக பிடித்த படம் ரெட். இதிலே ரெண்டு பாகங்கள் உள்ளது. இந்தப் படத்திற்கும் பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடித்த சிங்கம் படத்திற்குமே ஒரு ஒற்றுமை இருக்கும். பாக்கு போட்டு விளம்பரம் எல்லாம் கூட நடிப்பாரே அதே அஜய் தேவ்கன்தான். ரெட் படத்தில் செம மாஸ் அண்ட் க்ளாஸான ஒரு கார் ஆக்‌ஷன் சீன் இருக்கும். ரோலிங்கில் கார் போய்க்கொண்டிருக்கும்போதே ப்ரூஸ் அப்படியே நேக்காக இறங்குவார். அதே டெய்லர் அதே வாடகை என்பதுபோல் சிங்கம் படத்திலும் ஒரு காட்சி இருக்கும். சரி அது இருக்கட்டும். அவர் நடிப்பில் வெளியான ஹாஸ்டேஜ் படமும் சிறந்த ஹைஜேக் படம்தான். இந்தப் படத்தில் ஒரு வீடு ஹைஜேக் செய்யப்படும். இந்தப் படத்தில் ப்ரூஸ் வில்லிஸ் ஹைஜேக் பண்ணியவர்களிடம் உரையாடும் மற்றும் சரி செய்யும் நிபுணர். இதனால் தன்னுடைய குடும்பத்திலேயே சில இழப்புகளைச் சந்திப்பார். அதேபோல் இன்னொரு குடும்பமும் மாட்டிக்கொள்ள அப்போது இவர் என்ன செய்கிறார் என்பதை படுசுவாரசியமாக சொல்லும் படமே ஹாஸ்டேஜ். குறைந்த ஆட்கள், நிறைய த்ரிலை எக்ஸ்பீரியன்ஸ் செய்ய கட்டாயம் இந்த படத்தை பார்க்கலாம். 

The Taking of Pelham 123 :

லியாம் நீசன், ப்ரூஸ் வில்லிஸ் வரிசையில் மற்றுமொரு முரட்டுத்தனமான நடிகர் டென்சல் வாஷிங்டன். முன்னே சொன்னதுபோல இந்தப் படத்தின் ஹீரோவான டென்சல் வாஷிங்டனை வைத்தும் சில உவமைகளை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். டென்சலின் முக்கியமான படங்களில் ஒன்று The Equalizer. அதில் வில்லன் கும்பலுடன் பேரம் பேசி இவர் போடும் சண்டை அல்டி டூ தி கோராக இருக்கும். அப்படியே டைம் டிராவல் செய்து அரண்மனை படத்தின் 2-ம் பாகத்திற்கு வந்தால் சுந்தர் சி அதே ஸ்டைலில் சண்டை போட தயாராவார். மேல கீழன்னு நீங்களே பாருங்க. அந்தப் படத்தின் ஹீரோ நடித்த படம்தான் The Taking of Pelham 123. படத்தின் கதைப்படி ஹீரோ டென்சல் மெட்ரோவில் ஊழியராகப் பணிபுரிந்து வருவார். அப்படி ஒரு நாள் இவர் சர்வீஸ் செய்யும் Pelham 123 ரூட் மெட்ரோவை சில கும்பல் ஹைஜேக் செய்துவிடும். குறிப்பிட்ட காசைக் கொடுத்தால்தான் ஹாஸ்டேஜ்களை விடுவிப்பேன் என்று சொல்லும். அவர்களுடன் போனில் பேசுபவர்தான் நம் டென்சல். என்னவெல்லாம் பேசினார். அந்த chaos சிச்சுவேஷனை இவர் எப்படி ஹேண்டில் செய்தார் என்பதுதான் கதை. தடதட ரயில் நம் ஹார்ட் பீட்டும் எகிறும் வகையறா ஸ்க்ரீன்ப்ளே. 

பயணம்

அது என்னவோ நம் ஊர் பக்கம் ஹைஜேக் என்றாலே தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்தான் ஹைஜேக் செய்வார்கள் என்றாகிவிட்டது. இதுதான் பயணம் படத்துடைய கதையும். ஆனால், மனித உணர்வுகளை இவர்கள் டீல் செய்த விதம் சிறப்பாக ஒர்க் ஆனது. அப்படி பரபரப்பான இடத்திலும்கூட காமெடிகள் அரங்கேறும் என்பதைக் காட்டிய படமும் இது. இன்னும் சில வீட்டில் பயணம் படம் டிவியில் போட்டால் நகத்தை கடித்துக்கொண்டே இந்தப் படத்தை பார்க்கும் குடும்பத்தார்களை நாம் பார்க்கலாம். முதலில் சொன்ன நான் ஸ்டாப் படத்தின் ஹைஜேக்கும் ஃப்ளைட்டில்தான் நடக்கும், இந்த படமும் ஃப்ளைட்டில்தான் நடக்கும். ஆனால், இரு படங்களின் அணுகுமுறையும் வேறு. போர் அடிச்சா சும்மா பாருங்க நண்பர்களே.

கூர்கா

அவ்வை சண்முகி படத்தில் வருவதுபோல் ‘இந்த வரிசையில பாண்டி’ என்றுதானே நினைக்கிறீர்கள். பயணம் படத்தைக்கூட மன்னிப்பேன் இதை நான் மன்னிக்க மாட்டேன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. மால் ஹைஜேக் ஸ்டோரி லைன் என்று சொன்னதுமே கண்ணை மூடிக்கொண்டு கூர்கா படம்தான் முதலில் நினைவுக்கு வந்தது. மால் ஹைஜேக், நாயின் ஹீரோயிஸம், உள்ளுக்குள்ளே காமெடி இதையெல்லாம் கரெக்ட்டான மீட்டரில் ஒர்க் ஆகியிருந்தால் இந்நேரம் பீஸ்ட் எனும் டைட்டில் வேறு கதை படமாக வந்திருக்குமோ என்னவோ. எனிவே இந்தப் படத்தை இது வரை பார்க்காதவர்கள் இனிமேலும் பார்க்க வேண்டாம். ஸோ எல்லாம் இல்ல… சும்மா சொன்னேன்.

மேல் கூறிய படங்கள் மட்டும்தான் ஹைஜேக் படமா என்றால் இல்லை. ஏகப்பட்ட ஹைஜேக் படங்கள் பல்வேறு மொழிகளில் வந்திருக்கிறது. கேப்டன் ஃபிலிப்ஸ், Passenger 57, Neerja, Air Force one என படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த பரபரப்புக்கு பழகிக்கொள்ள மேலே சொன்ன மூன்று படங்களை பார்த்தால் பீஸ்ட் படத்தோடு நம்மால் ஈஸியாக இணைந்துவிடலாம். தியேட்டர்ல சந்திப்போம்!

Also Read – பார்வதி ஏன் `அவுட் ஆஃப் தி சிலபஸ்’ நடிகை தெரியுமா? – அவர் செய்த 4 தரமான சம்பவங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top