சத்யஜித்ரே

நேருவுக்கு சொன்ன நோ.. தாகூர் எழுதிய கவிதை.. ரியல் GOAT சத்யஜித் ரே!

1940-கள்ல இரண்டாம் உலகப்போர்ல கலந்துகிட்ட பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருத்தர் கொல்கத்தாவோட ஒரு வீதியில நடந்து போய்ட்டு இருக்காரு. அப்போ, பீத்தோவனோட சிம்பொனி மியூசிக் கேட்டிருக்கு. என்னடா இது.. இந்தியர்கள் வாழுற பகுதில இருந்து பீத்தோவன் இசை கேக்குதே, இவனுங்களுக்கு இன்னும் சுதந்திரமே குடுக்கலை, இவங்களுக்கு எப்படி பீத்தோவன் தெரியுதுன்னு ஷாக்காகி, அந்த இசை வந்த திசையில போறாரு. அப்போ, ஒரு வீடு ஓபன்ல இருக்கு. கிராமஃபோன்ல பீத்தோவனோட சிம்பொனி ஓடிட்டு இருக்கு. உள்ள ஆறு அடில ஒருத்தர் உக்காந்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டுட்டே சிம்பொனிய ரசிச்சிட்டு இருக்காரு. அதைப் பார்த்ததும் அந்த ராணுவ வீரருக்கு ஒரே ஷாக். உலகப்போர்னால உலகமே அழிஞ்சிருமோன்னு பயத்துல இருக்கோம். இந்தப் பக்கம் `வெள்ளையனே வெறியேறு’னு இந்தியாவுல போராட்டங்கள் பீதியா இருக்குன்னு யோசிச்சிட்டே வந்து.. அந்த வீட்டுக்குள்ள இருந்தவர்கிட்ட பீத்தோவன் தெரியுமான்னு கேட்க.. அந்த நபர் பீத்தோவன் இல்லாம சாப்பாடே இறங்காதுங்க.. அப்டின்னு சொல்றார்.. இதுதான் துவக்கம்.. பின்னாள்ல இந்த உலகமே இவர் வீட்டு வாசலுக்கு வரப்போறாங்க அப்டிங்கிறதுக்கு இந்த ஒரு விஷயம் சாம்பிள். பீத்தோவனை ரசிச்ச நபர் ‘இயக்குநர் சத்யஜித்ரே’.

இந்தியன் சினிமாவோட GOD FATHER அப்டின்னே அவரை சொல்லலாம். ஹாலிவுட் மார்ட்டின் ஸ்கார்ஸஸில தொடங்கி நம்ம ஊரு வெற்றிமாறன் வரைக்கும் நமக்குப் பிடிச்ச கிரியேட்டர்ஸூக்கு இன்ஸ்பரேஷன் சத்யஜித்ரே தான். Feature Film, Documentry அப்டின்னு 36 படைப்புகள், சிறுகதை எழுத்தாளர்னு இப்போ இருக்குற நவீன சினிமாவுக்கு ஃபவுண்டேஷன் போட்டவரு இவர்தான். இவர் லைஃப்ல தாகூருக்கும், நேருவுக்கும் ரொம்ப பெரிய கனெக்ட் இருக்கு. ரே பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய 5 விஷயங்கள்!

எக்ஸ்ட்ரீம் ரியலிஸம்


இவரோட முதல் படம் பதேர் பாஞ்சாலி. அவர் படம் பண்ணுறதுக்கு முன்னாடி வரைக்கும் ராஜா காலத்து கதை, ஸ்டூடியோவுக்குள்ள ஷூட் பண்ணுற படமா இருந்துச்சு. முதல்முறையா கேமராவை கிராமத்துக்குள்ள கொண்டுபோனவரு இவர். அதுவும், பதேர் பாஞ்சாலில ஒரு பாட்டி கையில சாப்பாட எடுத்து சாப்பிடுற சீன் இருக்கும். அப்படி ஒரு சீன் அதுக்கு முன்னாடி யாரும் சினிமாவுல காட்டுனது இல்லை. அதுவரை Ugly அப்டின்னு நினைச்சதை Real அப்டின்னு கொண்டு வந்தவர். எக்ஸ்ட்ரீம் ரியலிசம் அப்டினே சொல்லலாம். ஆனா, இந்த ஒரு சீனுக்காக ரிவ்யூவர்ஸே அந்தப் படத்தை கழுவி ஊத்துனாங்க. ஸ்கிரீனிங் டைம்ல படம் பார்க்கவே நிறைய பேர் வரலை. படத்தை பார்த்த ஒண்ணு ரெண்டு பேர் பார்த்துட்டு படம் சூப்பரா இருக்குடா. மிஸ் பண்னாதீங்கன்னு சொன்னதுக்கப்புறம் தான் பதேர் பாஞ்சாலி கவனத்தை ஈர்த்திருக்கும். அதுக்கப்புறம் 11 சர்வதேச விருதுகள் வாங்குச்சு.

தாகூர் எழுதிய கவிதை


சத்யஜித்ரே ஓட தாத்தா ஓவியர். அப்பா ரைட்டர். ரவீந்திரநாத் தாகூர் நெருங்குன சொந்தம். அவரோட சாந்தி நிகேதன்லதான் படிக்கவும் செஞ்சாரு. அதுனாலயே கலை மேல ஆர்வம் அதிகமாகி, டைரக்‌ஷனை செலக்ட் பண்ணாரு. இவரு சின்ன வயசுல இருக்கும் போது, தாகூரை மீட் பண்ண போறாரு. அப்போ, ஒரு கவிதையை தாகூர் குடுக்குறார். அதுல, மலை, கடல்னு என்னென்னலாமோ பார்த்தேன். என் வீட்டுப் பின்னாடி இருக்குற சோளக்கதிர்ல இருக்குற பனித்துளியை ரசிக்காம விட்டுட்டேனேன்னு ரோ ஓட அப்பாவை புகழ்ந்து ஒரு கவிதைய தாகூர் இவர் கைல கொடுத்திருப்பார். தன்னோட வாழ்நாள் முழுக்க பொக்கிஷமா வச்சிருந்தாரு ரே. தாகூர் மேல இருக்குற அன்புல, ஒரு டாக்குமெண்ட்ரி பண்ணாரு ரே.

ரே-வின் தனித்திறமை


இந்தி நடிகர் ஓம்பூரி இவர் படத்துல கமிட் பண்ணுறார். ஷூட்டுக்காக ரேவை மீட் பண்ண போறாரு ஓம்பூரி. ஸ்டேஷன்ல பிக் அப் பண்ண ஆட்களை அனுப்புவார்ன்னு எதிர்பார்த்தா ரேவே வந்து நிப்பாரு. படத்தோட ஆர்டிஸ்டுல ஆரம்பிச்சு விளம்பரம் வரைக்கும் அவரே பண்ணனும்னு நினைக்கிறது ரே ஸ்டைல். அதுமட்டுமில்லாம, யாரைப் பார்த்தாலும் பிடிச்சுப் போச்சுன்னா.. உடனடிய அவரை வரைஞ்சிடுவாராம். இது அவரோட ஹேபிட். ஓம்பூரியை பார்த்ததும் வரையுறார். அப்பாவோட எழுத்து மட்டுமில்ல தாத்தாவோட ஓவியம் வரையுற திறமையும் அவருக்கு இருந்துச்சு.

பதேர்பாஞ்சாலி
படிச்சு முடிச்சிட்டு ஒரு லண்டன் பேஸ்டு விளம்பர கம்பெனில வேலை செய்யுறாரு ரே. அப்போ, புரோமோஷன்ல லண்டன் போகுறாரு. தனுஷ்கோடி வந்து அங்க இருந்து கப்பல்ல கொழும்பு போய் அங்க இருந்து தான் லண்டன் போறாரு ரே. அப்போ அவர் கைல ஒரு நாவல் ஸ்கெட்ச் பண்றதுக்கக கொடுக்கப்படுது அதுதான், பதேர் பாஞ்சாலி. கப்பல் டிராவல்லயே அதை ஸ்கெட்ச் பண்ணிடுறாரு. கையோட தன்னோட முதல் படத்தையும் முடிவு பண்ணிடுறாரு. அதே மாதிரி, ரே படங்கள்ள ரொம்ப முக்கியமான ஒரு படம் சாருலதா. தாகூரோட பர்சனல் சிறுகதைகள்ல ஒண்னு. அதை தான் படமா எடுத்திருப்பார். ரே படங்கள்ல கண்டிப்பா பாக்க வேண்டிய படம்னும் சொல்லலாம்.

நேருவுக்கு நோ

இரண்டு தடவை நேரு கவர்மெண்ட் இவர் கிட்ட வந்து நிக்கும். ஒண்ணு, இந்தோ – சீனோ வார் பத்தி ஒரு டாக்குமென்ட்ரி, இன்னொரு டைம்… நேரு பத்தி ஒரு டாக்குமென்ட்ரி எடுக்கணும். ஆனா… ஸ்ட்ரெயிட்டா நோ அப்டின்னு சொல்லிருப்பாரு. அதான் ரே ஓட தைரியம். ரேவுக்கு நிறைய ஆதரவு நேரு கொடுத்திருந்தாலும், அரசோட பொரபஹண்டாவுக்கு நான் படம் பண்ண மாட்டேன்னு சொல்லிடுவார்.

ரியல் GOAT


Forbes மேகசின் Greatest Director Of All Time அப்டின்னு ஒருலிஸ்ட் வெளியிட்டுச்சு. அதுல எட்டாவது ரேங்க் ரேவுக்கு கொடுக்கப்பட்டுச்சு. சத்யஜித்ரேவை ஃப்ரெஞ்ச் மக்கள் கொண்டாடுன அளவுக்கு யாருமே கொண்டாடலை. இந்தியா கூட ரேவை கொண்டாலை அப்டிங்கிறது தான் உண்மை. ஃபிரான்ஸோட உயரிய விருது ரேவுக்கு கொடுக்கப்பட்டுச்சு. அதுக்காக, அந்த நாட்டோட உயர் பதவில இருக்குறவங்க நேர்ல வந்து கொடுத்தாங்க. ஆனா, ரே கோமால இருக்கும் போதுதான் இந்தியாவுல பாரதரத்னா குடுத்தாங்க. சத்யஜித் ரே-வை இந்தியா கொண்டாட தவறிடுச்சு அப்டிங்கிறது தான் உண்மை. வேர்ல்டு கிளாசிக் பாக்குற சினிமா லவ்வர்ஸ்… ரே ஓட படங்களை கண்டிப்பா பார்க்கணும்.

Also Read – கலகலப்பு vs அயன்… டைமண்ட் சேசிங் சீன்ல எது பெஸ்ட்?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top