‘நம்ம வாழ்க்கை ஏதோ சும்மா ஒரு பணக்காரனோட வாழ்ந்துட்டு செத்தவனோட வாழ்க்கையா இருக்கக்கூடாது. ஒரு வாழ்க்கை வரலாறா வாழ்ந்துட்டு போயிடணும்’ இது மகான் படத்தில் வரும் காந்தி மகான் எனும் விக்ரமின் கோட்பாடு. ஆனால், தீர அலசிப் பார்த்தால் இது ‘Breaking Bad’ சீரிஸின் வால்டர் ஒயிட்டின் கோட்பாடும்கூட. சாமானியனாக இருக்கும் ஒருவனது வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறி ஒரு Identity-யாக மாறினார்கள் என்பதற்கு இருவருமே உதாரணம். யெஸ், மகான் படத்தின் காந்தி மகான் மற்றும் ‘Breaking Bad’ சீரிஸின் வால்டர் ஒயிட் கதாபாத்திரங்களுக்கு இடையே இருக்கும் 5 ஒற்றுமைகளைத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.
இருவருக்குமான முதல் முக்கிய ஒற்றுமை போதைப்பொருள். அதை இந்த இருவரும் அவரின் திறமையை வைத்து கண்டுபிடிப்பார்கள். மகான் சூரா சாராயம், வால்டர் அவருக்கான ஸ்டைலில் மெத்.

வருத்தப்படும் வாத்தியார்கள்
வழக்கத்திற்கும் கீழ் கோட்டில் இருக்கும் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள்தான் மகானும் வால்டரும். இன்னும் சொல்லப்போனால் இருவரும் ஸ்கூல் வாத்தியார்கள். கற்றுக்கொண்ட ஸ்டூடென்ட்ஸ் பைலட், போலீஸ், அரசியல்வாதி, போதை பொருள் விற்பவர்கள் என்று ஆனாலும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் இன்னும் வாத்தியார்களாகவே இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த வரிசையில் மகானும் வால்டரும் விதிவிலக்கல்ல. வாத்தியாராக இருக்கும் இருவரும் அவர்களுக்கான வாய்ப்பு வரும்போது மாபெரும் ஒரு தவறைச் செய்கிறார்கள். அதனால், அவர்களது வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போகிறது. மகான் அவரது வீட்டுக்குத் தெரியாமல் ஒரு நாள் சரக்கு அடிக்கிறார், வீட்டில் மாட்டிக்கொள்கிறார், அவரது மனைவி அவரை விட்டு விலகிப்போகிறார். தன்னை ஆரம்பத்தில் சேர்த்துக்கொண்ட alcohol-ஐ இறுகப் பற்றிக்கொள்கிறார். கடைசியில் அதையே தன்னுடைய தொழிலாக்கிக் கொள்கிறார். மறுபக்கம் வால்டர், தனக்குத் தெரிந்த கெமிஸ்ட்ரியை பொண்டாட்டியைவிடவும் காதலிக்கிறார். அதே கெமிஸ்ட்ரியை வைத்து பிசினஸ் துவங்குகிறார், பணம் பார்க்கிறார், ’I’m not in danger. I’m the danger’ என்று பொண்டாட்டியிடம் பன்ச் பேசுகிறார். கடைசியில் அவரது வாழ்க்கை கெட்டவனாக இருந்த, ஒரு நல்லவனைக் காப்பாற்றுவதோடு முடிகிறது. அந்த முடிவுரையில் இவரது குணாதிசயம் ஏறுக்கு மாறாக புரள்கிறது.
கெட்டப் ரொம்ப முக்கியம்
பொதுவாக தனித்துவமான ஒரு profession-ஐ தேர்ந்தெடுத்த பிறகு கெட்டப் ரொம்பவே முக்கியம். அப்படித்தான் பார்த்தவுடன் ஒரு எழுத்தாளரையும், ஐடி வேலை செய்யும் ஒரு dude-ஐயும் நம்மால் எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிறது. குறுந்தாடி வைத்து, ஷர்ட்டை டக்கின் செய்தால் அவர் டியூட், முகம் நிறைய தாடி வைத்துக்கொண்டு தூங்காத முகத்தை கொண்டவரானால் அவர் கிரியேட்டர். நூறில் 90 சதவீதம் இதுதான் சாத்தியக்கூறுகள். அப்படித்தான் மகானும், வால்டரும் தங்களது அடையாளத்தை காலத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் பார்த்தவுடன் பழுத்த பழம் என்று சொல்லும் அளவுக்கு மகான் இருக்கிறார். குடும்பமே காந்தியவாதிகளான குடும்பம் என்பதால் கதர் சட்டை. அதுவும் சூர்யவம்சம் ஸ்டைலில் தன்னுடைய உடலளவுக்கு பத்தாத சட்டை, வகிடெடுத்த ஹேர் ஸ்டைல், காந்தி கண்ணாடி… மனைவி விட்டுச் சென்ற பிறகு ஆள் முழுக்க swag ஆக மாறுகிறார். இந்தப் பக்கம் வால்டர். கேன்சர் பேஷன்ட் என்பதால் முடியை இழந்தாலும் கூட, ஒருகட்டத்தில் அந்த பிசினஸுக்கே உரித்தான குறுந்தாடி, crown ஸ்டைலில் அமைந்துள்ள fedora hat என ஆளே வில்லத்தனமாக மாறிவிடுவார். செய்யும் தொழிலுக்கு உடையும், முக அமைப்பும் எவ்வளவு முக்கியம் என்பது இருவரைப் பார்த்தாலே தெரியும். இருவரும் ஆரம்பத்தில் இருந்த அதே முக அமைப்பை வைத்து தொழில் செய்தால் யோசித்துப் பாருங்கள்!

டிப்பிங் பாயின்ட்
ஒவ்வொரு தனிமனிதனுக்கு டிப்பிங் பாயின்ட்டானது மிக மிக முக்கியம். இன்னும் எளிமையாக சொல்லப்போனால் இதை transformation என்று சொல்லலாம். என்னதான் புத்திக்கூர்மையில் இருவருமே ஜித்தாக இருந்தாலும், தன்னை நிரூபிக்க இருவருக்குமே ஒரு சமயம் கிடைத்தது. சாரயக்கடை சத்தியவானுக்கு மகான் ஒரு கட்டத்தில் காப்பாற்ற வந்த கர்த்தராகத் தெரிவார். மகான், சத்தியவான், ராக்கி ஆகிய மூவரும் சரக்கு போதையில் எதிரி கும்பலிடம் மாட்டிக்கொள்வார்கள். அப்போது, ’எனக்கு எந்த போதையும் பத்தாதுடா’ எனச் சொல்லி மொத்த கும்பலையும் சூறையாடுவார். அப்போது காந்தி மகான் சாரயக்கடை சத்தியவானுக்கு கர்த்தராகத் தெரிவார். இது மகானுடைய டிப்பிங் பாயின்ட். அடுத்தது வால்டர் ஜெஸ்ஸியை டூகோ அடித்து துவம்சம் செய்ததையடுத்து வால்டரே டூகோவின் இடத்துக்குப் போவார். எதிரிக் கூட்டம் வால்டரை இளக்காரமாய் பார்க்க, ‘This is not meth’ என்று சொல்லி மொத்த இடத்தையும் வெடிக்கச் செய்வார். பார்ட்னர் ஜெஸ்ஸிக்கு ஏற்பட்ட பாதிப்புகளோட சேர்த்து தனக்கு சேர வேண்டிய பணத்தையும் வாங்கிக் கொண்டு கெத்தாக நடந்து வருவார். இது வால்டருக்கான டிப்பிங் பாயின்ட். இப்படி தன்னை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், அதை மிஸ் செய்யவே கூடாது.
நெருங்கியவர்களுக்கே விரோதியாவது!
குறுக்கு வழியில் பண மழையில் நனையும் ஒவ்வொரு பிக் ஷாட்டுக்கும் ஏற்படும் ஒரு பிரச்னைதான் இது. மகானுக்கும் வால்டருக்கும் இதுதான் நடந்தது. ஒருவேளை காந்தி மகான் அடித்த சரக்குக்காக அவரது மனைவி நாச்சி, ’சரி பரவால்ல இந்த ஒரு தடவை உங்களை மன்னிச்சுடுறேன்’ என சொல்லி மன்னித்திருந்தால் படம் அரை மணி நேரத்துக்குள் முடிந்திருக்கும். வால்டரின் மனைவி ஸ்கைலர், ‘அடடா இவ்வளோ சம்பாதிச்சிட்டீங்களா.. இதை சாகுற வரை அனுபவிக்கலாம்’ என்று சொல்லியிருந்தால் வால்டரும் அவரது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்திருப்பார். ஆனால், இவை இரண்டுக்குமே வாய்ப்புகள் ஜீரோ. இதனால்தான், தன்னுடைய துணைவிகளே தனக்கு எதிராக மாறிப்போனார்கள். மகானும், வால்டரும் செய்யும் தொழிலுக்குப் பொதுவான விஷயம் போதைப்பொருள். மகான் alcohol செய்தார், வால்டர் meth செய்தார். ஆனால், லாப மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. இதனால் இருவருக்குமே நண்பர்களாக இருந்தவர் எதிரிகளாக மாறிப்போனார்கள். தனது நெருங்கிய நண்பனான சாராயக்கடை சத்தியவானே தனக்கு எதிராக மாறி மகானைக் கொல்ல ஆயத்தமானார். வால்டருக்கு அவர் மெத் செய்து கொடுத்த gus என்பவரே அவருக்கு எதிராகத் திரும்பினார். மகானுக்கு தன்னுடைய மகன் தாதா, வால்டருக்கு தன்னுடைய பார்ட்னர் ஜெஸ்ஸி. ஆனால், இருவருக்குமான எமோஷன் ஒன்றுதான். இப்படி தனக்கு நெருங்கியவர்களே தங்களுக்கு எதிராக மாறிப்போன சோகக்கதைதான் இருவரின் வாழ்க்கையிலும் நிகழ்ந்தது.

Both are extremist
சொல்லப்போனா இவங்க ரெண்டு பேரும் செஞ்ச விஷயங்களை எதுக்காக பண்ணாங்கன்னு யோசிச்சா நல்லவங்களாவும் தெரியும், ஆனா அதை எப்படி பண்ணாங்கனு யோசிச்சா கெட்டவங்களாவும் தெரியும். ரெண்டும் பேரும் நிறைய தப்பும் பண்ணிருக்காங்க; நல்லதும் பண்ணிருக்காங்க. ஆக மொத்தம் ரெண்டு பேருமே extremistதான். கடைசில ஆட்டோக்காரனுக்கு 2 லட்சம், பூரண மதுவிலக்கை அமல்படுத்தப் போராடுற என்.ஜி.ஓவுக்கு சொத்தை எழுதி வெச்ச மகான். இந்தப் பக்கம் தன்னோட திறமை திருடப்பட்டதுக்கு அப்புறம் சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மாணிக்கத்தில் இருந்து பாட்ஷாவா மாறி ஊரையே அரட்டிவிடும் அளவுக்கு மெத் செய்த, அதுவும் தன்னுடைய குடும்பத்துக்காக மட்டுமே வேறு பாதையை தேர்ந்தெடுத்த வால்டர்… இருவருமே எக்ஸ்ட்ரீமிஸ்ட்தான்.
Also Read – பிரபலங்களின் ஃபேவரைட் – பால்மெய்ன் பாரிஸ் டீ-ஷர்ட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்?
0 Comments