கொரோனா வைரஸால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. பொழுதைப்போக்க மக்களும் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அப்படி இந்த லாக்டவுனில் மொபைலில் என்னென்ன கேம்கள் விளையாடலாம் என்று பரிந்துரைக்கிறோம். பப்ஜி பழைய பன்னீர் செல்வத்தை போல் மீண்டும் வரப்போகிறது. தடை விதித்த காரணத்தால் பப்ஜி என்ற பெயரோடு வராமல் பேட்டில்கிரவுண்ட் என்ற பெயரைக் கொண்டு வரவுள்ளது. பப்ஜி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். Mandatory கேமாக பரிந்துரையில் அதை முதலில் வைக்கிறோம். ஆனால், அதைத் தவிர்த்து வேறு என்னென்ன கேம்கள் விளையாடலாம் என்று பார்ப்போம்.
-
1 Carrom Pool : Board Game
இதை விளையாட இன்டர்நெட் அவசியம். ஆஃப்லைனில் ப்ராக்டிஸ் இருந்தாலும் ஆன்லைனில் மற்ற ப்ளேயர்களோடு விளையாடுவதில்தான் சுவாரஸ்யம் அதிகம் இருக்கும். பல கேமிங் வெப்சைட்கள் சிறப்பான ரேட்டிங் கொடுத்து ரிவ்யூ செய்துள்ளனர். ஸ்ட்ரைக்கர் ஸ்டைலில் ஆரம்பித்து காயின்களின் டிசைன் வரை அனைத்தையும் கவரும் விதத்தில் வடிவமைத்திருக்கின்றனர். நண்பர்களின் ID இருந்தால்அவர்களோடும் விளையாடலாம். திறமைக்கு பரிசு என்பது போல் நன்றாக விளையாடி பல்வேறு லெவல்களைக் கடந்தால் சூப்பரான பல ஸ்பெஷல் பவர் கொண்ட ஸ்ட்ரைக்கர் வாங்கி அதகளம் செய்யலாம். விரைவில் PRO ப்ளேயர் ஆகிவிடலாம்.
-
2 Asphalt 9 : Legends
ரேஸிங் ரக கேம் விரும்பிகளுக்கு இந்த கேம் சிறப்பான விருந்து. இந்த கேமை Lag இல்லாமல் விளையாடுவதற்கு மொபைலில் சில உயர்தர தொழில்நுட்ப வளர்ச்சிகள் தேவைப்படும். பல்வேறு வெர்ஷன்கள் இந்த அஸ்ஃபால்ட் கேமில் வந்திருக்கிறது. ஆனால், லெஜண்ட் வெர்ஷன்தான் சமீபத்தில் வெளிவந்த கேம். காசு கொடுத்து கேம் விளையாடும் சில மகாபிரபுக்கள் பல உயர்தர ரேஸிங் கார்களையும் Purchase செய்யலாம். இந்த கேமின் கிராஃபிக்ஸ் உங்களை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்லும். ரேஸிங் கேம் ரசிகர்களே இந்த கேம் உங்களுக்காக!
-
3 Call of Duty : Mobile
பப்ஜி BAN செய்யப்பட்டதை அடுத்து இந்த கேம்தான் பலரின் ஃபேவரைட்டாக இருந்தது. பப்ஜி ஸ்டைலிலேயே ஷூட்டிங், ஹைடிங் என ஜாலியாக இருக்கும். பப்ஜி அளவிற்கு இல்லையென்றாலும் பலர் இதை ஏற்றுக்கொண்டு விளையாடி வருகின்றனர். பப்ஜியில் இருக்கும் TDM என்ற கேம்ப்ளே இந்த கேமிலும் உண்டு. அதற்காக பல ரசிகர்களும் இருக்கின்றனர். FPS என்று சொல்லப்படும் Frame Per Second இதில் அதிகமாக இருந்ததால் இதன் கிரஃபாகிஸுக்காகவே இதை என்ஜாய் செய்தார்கள் ரசிகர்கள். மறுபடியும் பப்ஜி வரப்போவதால் இதைக் கழட்டி விட்டுடாதீங்க கேமர்ஸ்!
-
4 Clash of Clans
̀ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி நீ!' என்கிற நிலைதான் இந்த கேமிற்கு. பலரின் மொபைலில் சிம் இருக்கிறதோ இல்லையோ... இந்த Clash of clans இருக்கும். பப்ஜியின் வளர்ச்சியில் இந்த கேம் சரிந்துவிட்டது. இருந்தாலும் விடாமுயற்சியோடு பல்வேறு அப்டேட்கள் வந்துகொண்டேதான் இருந்தது. இந்த கேமுக்கான ரசிகர்களும் இதை இன்னும் விளையாடி வருவார்கள். ஓல்டு இஸ் கோல்டு என்கிற பலமொழிக்கு தகுந்தார்போல் பழைய COC ரசிகர்கள் இந்த கேமை தூசிதட்டி விளையாடினாலும் இந்த கேமிற்கு நாம் செய்யும் மரியாதை.
-
5 Gardenscapes
2012-ல் வெளியான Candy Crush கேமை சரித்தது இந்த கேம். 2016-ல் வெளியான இந்த கேமானது குறுகிய காலகட்டத்திற்குள் பல மில்லியன் டவுன்லோடுகளை அள்ளியது. கிட்டத்தட்ட Candy crush கேமின் அதே பாணிதான் இந்த கேமிற்கும். ஆனால் அதை கொஞ்சம் பட்டி பார்த்து சின்ன சின்ன மாற்றங்களோடு இதை வடிவமைத்துள்ளனர். ஒரு சராசரி கேரக்டரை கேமின் நாயகனாக வைத்து பழைய வீடாக இருக்கும் அவனது குடும்ப வீட்டை புதுப்பிப்பதுதான் கேம்ப்ளே. அதை Candy crush கேம்ப்ளேவோடு இணைத்து ஒரு கதையாகவே உருவாக்கியிருக்கிறார்கள். விளையாடுவதற்கும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
0 Comments