நீல நிற கண்கள், என்றும் இளமைத் தோற்றம், அசாத்தியமான நடிப்பு என கலக்கும் சிலியன் மர்பிக்கு இன்று பிறந்தநாள். `டிஸ்கோ பிக்ஸ்’ என்ற நாடகத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை சிலியன் தொடங்கினார். 2002-ம் ஆண்டு வெளியான `28 டேஸ் லேட்டர்’ திரைப்படம் சிலியனுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து `பேட்மேன் பிகின்ஸ்’, `தி டார்க் நைட்’, `ரெட் ஐ’ போன்ற திரைப்படங்களில் நடித்து பரவலாக கவனம் பெற்றார். பின்னர், கிறிஸ்டோபர் நோலனின் இன்சப்ஷன், டன்கிர்க் போன்ற பிரபல படங்களிலும் நடித்தார். தற்போது பீக்கி பிளைண்டர்ஸ் சீரிஸ் மூலம் சினிமா ரசிகர்கள் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…
Also Read : ஃபேக் நியூஸ்களிலிருந்து ஒதுங்கியிருக்க என்ன செய்யலாம் – 4 ஐடியாக்கள்!
-
1 இசைக்கலைஞன்..
சிலியன் அடிப்படையில் ஒரு இசைக்கலைஞர் ஆவார். தன்னுடைய பத்து வயது முதல் பாடல்களை எழுதவும் இசையமைக்கவும் தொடங்கினார். தனது சகோதரருடன் இணைந்து `தி சன் ஆஃப் மிஸ்டர் கிரீன்ஜென்ஸ்’ இசைக்குழுவில் கிட்டார் வாசிக்கும் நபராக இருந்தார். அவரது பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு இசைத்துறை சரியான தேர்வாக இருக்கும் என நம்பவில்லை.
-
2 சட்டக் கல்லூரி மாணவர்..
சிலியன் மர்பி 1996-ம் ஆண்டு கார்க்கில் உள்ள யூனிவர்சிட்டி கல்லூரியில் சட்டம் படிக்க தொடங்கினார். முதல் ஆண்டு தேர்வுகள் அனைத்திலும் தோல்வியுற்றார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்து பின் வாங்கினார். கீர்னன் என்பவர் இயக்கிய `எ கிளாக்வொர்க் ஆரஞ்சு’ மேடை நாடகத்தை பார்த்த பின்னர் அவரது ஆர்வம் முழுவதும் நடிப்பில் மூழ்கியது. இதனைத் தொடந்து கல்லூரியின் நாடகக்குழுவின் இணைந்து செயல்பட தொடங்கினார்.
-
3 ஆர்டினரி லைஃப் மீது பிரியம் கொண்டவர்..
பிரபலமாக சிலியன் மர்பி இருந்தபோதிலும் பிரபலங்களுக்கே உண்டான அசாதாரண வாழ்க்கையை அவர் எப்போதும் விரும்புவதில்லை. பெரும்பாலும் நேர்காணல்களைத் தவிர்த்து தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய எந்த தகவலையும் வெளியிட மறுத்து வருகிறார். வெளியாக இருக்கும் திரைப்படங்களுக்கு தேவைப்படும் புரொமோஷன்களுக்கான நேர்காணல்களை மட்டுமே கொடுக்க முயற்சி செய்து வருகிறார். செக்யூரிட்டிகள் இல்லாமல்தான் பயணம் செய்கிறார். தான் இருக்கும் இடத்தில் எந்தவித சலசலப்பையும் உருவாக்க அவர் விரும்புவதில்லை.
-
4 அசாதாரணமான நடிகன்
சிலியன் மர்பி தனது கதாபாத்திரங்களை தீவிரமாக எடுத்துக்கொள்பவர். படப்பிடிப்புக்கு பிறகும் அவரது கதாபாத்திரத்தில் இருந்து அவரை பிரிப்பது கடினமான விஷயம். குறிப்பாக டாமி ஷெல்பியின் கதாபாத்திரம். டாமி ஷெல்பியின் வாழ்க்கை முறை மிகவும் ஆபத்தான ஒன்று. இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டாமி கேரக்டராக நடித்த பின்னர் வீட்டில் மனைவியுடன் கூட சாதரணமாக அவரால் நடந்துகொள்ள முடியவில்லை. 15 வருடங்களுக்கும் மேலாக சிலியன் மர்பி வெஜிட்டேரியன் பிரியராக இருந்து வந்தார்.ஆனால், பீக்கி பிளைண்டர்ஸ் கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டதால் உணவில் இறைச்சியை சேர்த்துக்கொண்டு நான் வெஜ்ஜாக மாறியுள்ளார்.
-
5 சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்..
நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட சீரீஸ்களில் பீக்கி பிளைண்டர்ஸூம் ஒன்று. இந்த சீரீஸில் நடித்ததைத் தொடர்ந்து சிலியனின் பெயரை மில்லியன் கணக்கான இளைஞர்கள் சோஷியல் மீடியாக்களில் தேடுவது உண்டு. ஆனால், அவர்களுக்கு கிடைப்பது எல்லாம் வெறும் ஏமாற்றம் மட்டும்தான். ஏனெனில், சிலியன் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்துவது இல்லை. இது பிரபலங்களின் வாழ்க்கை முறையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதையும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெளியில் தெரிவிக்க விருப்பமில்லை என்பதையும் காட்டுவதாக குறிப்பிடுகின்றனர். ஆனால், பீக்கி பிளைண்டர்ஸ் தொடர்பான சமூக வலைதளங்களில் இவரது புகைப்படங்கள் அதிக விருப்பங்களைப் பெறுகின்றன.
-
6 அன்பான அப்பா..
சிலியன் மர்பிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் மீது அதிக அன்பு உடையவர். அவரது குழந்தைகள் தனது தந்தையின் தொழிலைப் பற்றி அதிகளவில் தெரியாதவர்கள். தங்களுடைய தந்தை ஒரு நடிகர் என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால், அவரது கதாபாத்திரங்கள் டார்க்காவும் ஆபத்தானதாகவும் இருப்பதால் அவருடைய படங்களை குழந்தைகள் பார்க்க அனுமதிப்பதில்லை. வீட்டுக்கு வெளியே திரையில் தோன்றும் தங்களது அப்பாவைப் பற்றி தெரிந்துகொள்ள அவர்களுக்கு இன்னும் வயது இருக்கிறது.
-
7 உதவியாளர்களே கிடையாது..
பிரபலங்களாக இருக்கும் பெரும்பாலான அப்பாக்களிடம் இருந்து சிலியன் அதிகளவில் வேறுபடுகிறார். அவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதை அதிகளவில் விரும்புகிறார். வீட்டில் உள்ள அடிப்படையான வேலைகளையும் தானே செய்கிறார். குடும்ப வாழ்க்கையில் அதிக நேரத்தை செலவழிப்பதில் பெருமிதம் கொள்கிறார். எந்த நோக்கங்களுக்காகவும் உதவியாளர்களையோ அல்லது நிர்வாகக்குழுவையோ அவர் வைத்துக்கொள்ளவில்லை.
0 Comments