ஒரு சில பெயர்களிலே அதற்கான பிராண்ட் வேல்யூ இருக்கும். அப்படி ஒரு முக்கியமான ஒரு பெயர்தான் ஜாக் ஸ்பாரோ. ஸாரி கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்று சரியாக சொல்ல வேண்டும். இதுதான் அவருக்குப் பிடிக்கும். பொதுவாக டப்பிங் செய்த படங்களை பார்ப்பது பலருக்கும் பிடிக்காது. அந்தந்த regional லாங்குவேஜில் பார்த்தால்தான் அதனுடைய முழுமையாக அம்சத்தை உணர முடியும். ஆனால் ஹாலிவுட்டில் வெளியான சில படங்களின் டப்பிங் அதன் ஒரிஜினலை விட பிரமாதமாக இருக்கும். ஜாக்கி சான் படங்கள், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், 300 பருத்தி வீரர்கள், ஷெர்லாக் ஹோம்ஸ் இப்படி பல படங்களில் தமிழ் டப்பிங் பட்டையை கிளப்பியிருப்பார்கள். அதில் மிக மிக முக்கியமான படம்தான் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படம். கடலும் கடல் சார்ந்த இடமுமாக விஷுவல் அமைந்திருக்கும். நம்பகத்தன்மை ஆங்காங்கே மிஸ்ஸானலும் சிறப்பான மற்றம் தரமான விஷுவலோடு சேர்த்து நம் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரமும் நம்மை ஈர்த்திருக்கும். கடல் காதலன், கப்பல் காதலன் ஜாக் ஸ்பாரோவின் சக்சஸ் ஸ்டோரியைத்தான் 3 பாயின்டில் நறுக்கென்று பார்க்கப்போகிறோம்.

முரளிகுமார்
இந்த கதாபாத்திரத்தின் முதல் மூல முக்கிய காரணம் இந்த முரளிகுமார் என்கிற மனிதன்தான். தமிழ் இண்டஸ்ட்ரியில் இருக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட்களில் டாப் இடத்தில் இருப்பவர் இவர். பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பல்வேறு மாடுலேஷன்களில் இவர் குரல் கொடுத்திருக்கிறார். எந்தளவிற்கு என்றால் நாட்டாமை படத்தில் பொன்னம்பலத்திற்கு குரல் கொடுத்தவர் இவர்தான். தாய் கிழவி என்ற ஃபேமஸான வசனம் பேசியிருப்பார் நியாபகம் இருக்கிறதா. இந்த மனிதர்தான் நம்முடைய ஃபேவரைட் ஜாக் ஸ்பாரோவிற்கும் குரல் கொடுத்தவர். இது தவிர டிஸ்கவரியில் வரும் வாய்ஸும் இவருடையதுதான். ஜாக் ஸ்பாரோ என்கிற ஒருவர் என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் முரளிகுமாரும் தன்னுடைய டப்பிங்கில் செய்திருப்பார். ஜாக் ஸ்பாரோ முக்கால்வாசி நேரம் ஒயின் குடித்துக்கொண்டு எப்போதும் போதையில் இருப்பவர். கைகளை இரு பக்கமும் வைத்துக்கொண்டு தள்ளாடிக்கொண்டே பேசக்கூடியவர். தவிர அவருக்குள் ஒரு பெண்மை இருக்கும் ஒரு வித நளினத்தோடு எதையாவது செய்துகொண்டே இருப்பார். இப்படி ஜாக் ஸ்பாரோவை இன்ச் பை இன்ச் வாட்ச் செய்து அவரை மொத்தமாக உள்வாங்கி அந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருப்பார். முரளி குமார் என்கிற ஒரு நபர் இதற்கு குரல் கொடுக்கவில்லை என்றால் அந்த கதாபாத்திரம் நமக்கு பரிச்சயம் ஆகியிருக்க வாய்ப்பில்லை.

ஜானி டெப் என்கிற நடிப்பு அரக்கன்
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமான ஃபேவரைட் கதாபாத்திரத்தில் கேப்டன் ஜாக் ஸ்பாரோதான் அவருக்கே உரித்தான அந்த பிரத்யேக பாடி லாங்குவேஜில் கெத்தாக கப்பலின் முனையில் நின்றுகொண்டிருப்பார். அந்தளவிற்கு அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார். காலம் கடந்தும் ஒரு கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நிற்க வைக்க செய்வது சவாலான விஷயம். அப்படியான ஒரு கதாபாத்திரத்தைத்தான் இந்தப் படத்தில் உருவாக்கியிருப்பார்கள். சடை சடையாக முடி, தாடி ஒரு இடம் விடாமல் ஊசி பாசி மணி, தங்க பல், அவருரைய பைரேட் தொப்பி, ட்ரெஸ் என பார்த்து பார்த்து அந்த கதாபாத்திரத்திற்கான லுக்கை தயார் செய்திருப்பார்கள். அளவெடுத்து செய்யப்பட்ட அந்த காஸ்டியூமைப்போலவே ஜானி டெப்பும் அதற்கு பொருந்திப் போயிருப்பார். சில பஞ்சாயத்துகள் அவர் மீது வெளியே போய்க்கொண்டிருந்தாலும் மனிதராக வெளியில் நாம் பல நிகழ்வுகளில் பார்த்திருப்போம். புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஜாக் ஸ்பாரோ கெட்டப்பிலே போய் பார்த்துவிட்டு என்டர்டெயின் செய்துவிட்டு வந்தார். பட ப்ரோமஷனுக்காக டிஸ்னி லேண்டில் சிலை போல நின்று மக்களை ஜாலி ப்ராங் செய்தார்.

வசனங்கள் :
கட்டக் கடைசியாக படத்தில் அதிகம் ஈர்க்கும் விஷயம் வசனங்கள். ஆங்கிலத்தில் இந்தப் பட சீரியஸை மொத்தமாக பார்த்திருந்தாலும் தமிழில்தான் பல முறை பார்க்கத் தூண்டும். முன்பே சொன்னது போல் தமிழ் டயலாக் ஒர்க்அவுட் ஆகும் வெகு சில படங்களில் இதுவும் ஒன்று. வில்லியம் டர்னரும் ஜாக் ஸ்பாரோவும் தண்ணிக்கு அடியில் செம ப்ரில்லியன்ட்டாக நடந்து தப்பி போவார்கள். அப்போது வில் ஜாக்கிடம், நீ புத்திசாலியா இல்ல முட்டாளா என்று கேட்பதற்கு, பார்க்கறதுக்கு முட்டாள் மாதிரி இருந்துட்டு புத்திசாலித்தனமான காரியங்களை செய்யறவன். செமல. படத்தின் முக்கியமான கேரக்டர் பர்போஸா. அவர் ஜாக்கிடம் நீ எப்ப என்ன பண்ணுவனு புரிஞ்சிக்க முடியலையே. அதற்கு ஜாக், நான் எப்ப என்ன பண்ணுவேன்னு எனக்கே புரியலையே உனக்கு எப்படி புரியும் என்று சொல்லிவிட்டு. ஆனா ஒண்ணு… நம்ம என்ன பண்றோமோ அதுக்கான பலன்தான் நமக்கு வந்து சேரும் எனச் சொல்வார். இப்படி படம் முழுவதுமே சொல்லிக்கொண்டே போகலாம்.
நம் கேப்டன் ஜாக் ஸ்பாரோவிடம் உங்களுக்கு பிடிச்ச குணாதிசயத்தை கீழே கமெண்ட்டில சொல்லுங்க.
Also Read – ஜலபுலஜங்கு… இதெல்லாம் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் கல்லூரி படங்கள் பங்கு!
0 Comments