ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமே கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கான டிரிபியூட் மாதிரிதான் இருந்தது. தியேட்டரோட பெயர்ல இருந்து காஸ்ட்யூம், ப்ராப்பர்டினு எங்கெங்கும் ஈஸ்ட்வுட்தான். ஹைலைட்டே அவரையே ஒரு சீன்ல கொண்டு வந்து அதகளம் பண்ணிட்டாரு கார்த்திக் சுப்புராஜ். யார் இந்த கிளிண்ட் ஈஸ்ட்வுட்? தமிழ்நாட்டுல அவரோட தாக்கம் எந்தளவுக்கு இருந்திருக்கு? நம்ம ஊர் ஹீரோக்கள் யாரெல்லாம் ஈஸ்ட்வுட்டை பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்காங்க.

ஜிகர்தண்டா படத்துக்கும் அவரோட வாழ்க்கைக்கும் நிறைய கனெக்சன் இருக்கு. 1930 கலிபோர்னியாவுல பிறந்தவர் கிளின்ட் ஈஸ்ட்வுட். வேற வேற வேலைகள் பார்த்துட்டு அமெரிக்கன் ஆர்மில வேலை செஞ்சிட்டு இருந்தாரு. Art Chooses You -னு ஜிகிர்தண்டால சொல்ற மாதிரிதான் இவரையும் சினிமா தேர்ந்தெடுத்தது. ஆர்மில வேலை பார்க்குறவங்களுக்கு சினிமா போட்டுக்காமிக்குற பொறுப்பு அவருக்கு கொடுக்கப்படுது. அப்படித்தான் சினிமாக்கள் மேல அவருக்கு ஆர்வம் வருது. அதே மாதிரி அங்க நடந்த ஷூட்டிங்லாம் பார்த்துட்டு நாமளும் நடிகராகணும்னு முடிவு பண்றாரு. ஆர்மில இருந்து வந்து சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பிக்குறாரு. மிலிட்டரிக்காரனுக்கு நடிப்பெல்லாம் வராதுனு எல்லாரும் ரிஜெக்ட் பண்றாங்க. நடிகராகனும்னா ஆக்டிங் கோர்ஸ் எடுக்கணும்னு சொல்றாங்க. ஜிகர்தண்டால பாபி சிம்ஹா மாதிரி ஆக்டிங் கோர்ஸ் எடுக்குறாரு. அப்பறம் சின்ன சின்ன கேரக்டர்ஸ், டிவி ஷோஸ் கிடைக்குது. நடிகரா களமிறங்குறாரு கிளின்ட் ஈஸ்ட்வுட்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்ல கிளிண்ட் ஈஸ்ட்வுட் ரெஃபரன்ஸை செம்ம ஃபன்னா வச்சிருப்பாங்க. அது என்னனு தெரிஞ்சவங்க கமெண்ட்ல சொல்லுங்க. தெரியலைனா ஒரு 2 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. சின்ன சின்ன ரோல்ல நடிச்சப்பறம் அவரை உலகம் முழுக்க பாப்புலர் ஆக்குற மாதிரியான ஒரு வாய்ப்பு வருது. இத்தாலி மொழியில இயக்குநர் செர்ஜியோ லியோன் இயக்கத்துல A Fistful of Dollars படம் வெளியாகுது. அந்தப் படத்துல கௌபாயா வந்த ஈஸ்ட்வுட்டோட நடிப்புக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் குவியுறாங்க. 1966-ல வந்த அந்தப் படம்தான் அதுக்கப்பறம் உலகம் முழுக்க பல கௌபாய் படங்களுக்கான ரெஃபரன்ஸ்னு சொல்லலாம்.
Also Read – மர்லின் மன்றோவும் தபூ சங்கரின் கவிதைகளும் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும்?
ரஜினிகாந்த் சிகரெட் பிடிக்கிற ஸ்டைல்ல ஆரம்பிச்சு லியோல விஜய் மாஸா துப்பாக்கி சுத்துறது வரைக்கும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் செட் பண்ணிவச்ச ஃபார்முலாவுலதான் உலகம் முழுக்க பல மாஸ் ஹீரோக்கள் உருவானாங்க. டைரக்டர் செர்ஜியோ லியோன் எடுத்த A fistful of dollars, For a few dollars more, The Good the bad and the ugly இந்த மூணு படங்களை டாலர் டைரலஜினு உலக சினிமா ஆர்வலர்கள் கொண்டாடுவாங்க. ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்ல ராகவா லாரன்ஸ் வச்சிருக்கிற கிளிடீஸ் டாக்கீஸ் தியேட்டர்ல அவர் ரிப்பீட் மோடுல போடுற படங்கள்கூட இதுதான். பிறகு தானே படங்கள் டைரக்ட் பண்ணவும் ஆரம்பிச்சாரு கிளிண்ட் ஈஸ்ட்வுட். Unforgiven ல ஆரம்பிச்சு இவரோட பல படங்கள் கல்ட் கிளாசிக்க நின்னது. 1955-ல ஆரம்பிச்ச அவரோட சினிமா பயணம் கிட்டத்தட்ட 70 வருசமா தொடர்ந்துகிட்டு இருக்கு. ஈஸ்ட்வுட்டுக்கு இப்போ 93 வயசு. இன்னமும் இந்த தாத்தா டஃப் கொடுத்திட்டு இருக்காரு. ரெண்டு வருசத்துக்கு முன்னால இவர் இயக்கி நடிச்ச கிரை மாச்சோ படம் ரிலீஸ் ஆனது. இதோ அடுத்து Juror Number 2 படத்தை டைரக்ட் பண்ணிட்டு இருக்காரு. உலகம் முழுக்க பிரபலமான நடிகர்னு இவரைக் கொண்டாடுறாங்க.

தமிழ் இயக்குநர்களுக்கும் இவர் ஃபேவரிட். பொதுவா ஒரு டைரக்டரைப் பிடிக்கும்னா நம்ம இயக்குநர்கள் அவங்க ஷாட்ஸ்ல இருந்து இன்ஸ்பயர் ஆகி நிறைய இங்க டிரை பண்ணுவாங்க. ஆனா கார்த்திக் சுப்புராஜ் இன்னும் ஒரு படி மேல போய் அந்த டைரக்டரையே தன்னோட படத்துல நடிக்க வச்சிருக்காரு. ஒரு சீன்ல ஈஸ்ட்வுட் மதுரைல ஷூட்டிங் எடுக்குற மாதிரியும் லாரன்ஸை சந்திச்சு அவருக்கு கேமரா பரிசளிக்குற மாதிரியும் காட்சிகள் வச்சிருக்காரு. சிஜி மூலமா அந்த பழைய க்ளின்ட் ஈஸ்ட்வுட்டை திரும்ப காமிச்சி அசத்திருக்காங்க. தமிழ்ல வந்த கௌபாய் படமான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துல கிழக்குக் கட்டைனு ஒரு கேரக்டர் வரும். அந்த கிழக்குக்கட்டைங்குறது ஈஸ்ட்வுட் பெயரோட தமிழாக்கம்தான்.
0 Comments