விஜய் முதல் பிரதீப் வரை… நெகட்டிவிட்டியை எப்படி ஹேண்டில் பண்ணாங்க?

லவ் டுடே படத்தை பார்த்த எல்லாருமே, அதை கொண்டாடிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்சம் நாள்கூட ஆகலை. லவ் டிடே நடிகர், டைரக்டர் பிரதீப் ரங்கநாதனை களம் எட்டுல போட்டு பொளக்க ஆரம்பிச்சிட்டாங்க. நிறைய நெகட்டிவிட்டி பிரதீப்பை இப்போ சுத்திட்டு இருக்கு. மனுஷன் அதை எப்படி ஹேண்டில் பண்ணாருனு பார்த்தா, டீசண்டாவே இருக்கு. சரி, இதுக்கு முன்னாடி விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி எல்லாரும் நெகட்டிவிட்டியை எப்படி ஹேண்டில் பண்ணாங்க?

விஜய்
விஜய்

பிரதீப் ரங்கநாதனோட பழைய சோஷியல் மீடியா பதிவுகள் எல்லாத்தையும் தூசி தட்டி எடுத்து நெட்டிசன்ஸ் வைச்சு செய்துட்டு இருக்காங்க. யுவன் ஷங்கர் ராஜா வேஸ்ட், விஜய்யின் ஜில்லா படத்தோட டப்பிங் சுறா பார்ட் 2 மாதிரி இருந்துச்சுனு பிரதீப் போட்ட போஸ்ட்டை கிளறுனாங்க. இதை ஷேர் பண்ணி, பார்த்தீங்களா வாழ்க்கை ஒரு வட்டம் யாரையெல்லாம் கலாய்ச்சாரோ அவரோட படத்தோட டைட்டிலை வாங்கி அவருக்கு நன்றி கார்டு போட்ருக்கார்ய். யாரை கலாய்ச்சாரோ அவரே இவர் படத்துக்கு மாஸா மியூசிக் போட்டு பிச்சி உதறிட்டாருனு யுவனையும் விஜய்யையும் புகழ்ந்துட்டு இருந்தாங்க. பிரதீப் ரங்கநாதனை கலாய்ச்சதைலாம் சொல்ல முடியாது. அப்படி செய்தாங்க. ஆனால், மனுஷன் அதை மெச்சூரிட்டியாவே கொஞ்சம் ஹேண்டில் பண்ணிருக்காருனு சொல்லலாம். “நான் போட்ட பதிவுகளாக வலம் வரும் சில ஸ்கிரீன்ஷாட்லாம் உண்மைதான். ஆனால், கடுமையான வார்த்தைகள் இருக்குற பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்திருக்கேன். வளர்ந்து வரும்போதுதான் நிறைய விஷயங்களை கத்துக்குறோம். என்னுடைய தவறுகளை சரிசெய்ய முயற்சிக்கிறேன். ஒவ்வொரு நாளும் சிறந்த மனுதனாக மாற முயற்சி செய்கிறேன்”னு போஸ்ட் போட்ருந்தாரு. இருந்தாலும் விஜய், யுவன், நயன்தாரா ஃபேன்ஸ்லாம் வைச்சு செய்றாங்க. தவறு செய்றது மனித இயல்பு. அதான் ஒத்துக்கிட்டாரே, மன்னிச்சு விட்ருங்க. அவருக்கு ஆதரவாகவும் நிறைய பதிவுகள் சோஷியல் மீடியால டிரெண்ட் ஆகிட்டு வருது. அவங்களுக்கு தன்னோட சார்பில் நன்றியும் சொல்லியிருக்காரு.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

விஜய்யையும் பிரதீப் பயங்கரமா ஓட்டியிருக்காரு. ஆனால், விஜய்க்கு இந்த மாதிரியான விமர்சனங்கள் ஒண்ணும் புதுசு இல்லை. ஆரம்பகாலங்கள்ல அவர் பார்க்காத விமர்சனங்களே இல்லை. எல்லாருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சதுதான். இந்த மூஞ்சியையெல்லாம் காசு கொடுத்து பார்க்கணுமானு விமர்சனம் பண்ணதா சொல்லுவாங்க. அப்போ, அவர் ஃப்ரெண்ட்ஸ் மத்தியில கதறி அழுதுருக்காரு. அதுக்கப்புறம் அமைதியா இருந்து ஹார்ட் வொர்க் பண்ணி இன்னைக்கு மிகப்பெரிய ஸ்டாரா இருக்காரு. எவ்வளவு பெரிய விமர்சனங்கள் எதிர்ப்புகள் வந்தாலும், மனுஷன் அமைதியா இருப்பாரு. ஆடியோ லாஞ்ச்ல குட்டிக் கதை ஒண்ணு சொல்லி, நெகட்டிவிட்டிக்கு பஞ்ச் லைன் ஒண்ணு போட்டு போய்கிட்டே இருப்பாரு. “அவ்வளவு ஈஸியாலாம் நம்மள இந்த உலகத்துல வாழ விடமாட்டாங்க. வேற வழியே இல்லை. அதெல்லாம் தாண்டிதான் நம்ம முன்னாடி வந்தாகணும். எல்லாருக்கும் நம்மள புடிச்சுதுனா லைஃப் போர் அடிக்கும். புடிக்காமல் இருந்தாதான் லைஃப் கொஞ்சம் ஜாலியா போகும், நம்மள புடிக்காத சில பேர் நதில கல் எறியுற மாதிரி எறிவாங்க. நம்ம நம்ம கடமையை செமயா செய்துட்டு நதி மாதிரி போய்ட்டே இருக்கும். உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்கும்”னு கூஸ்பம்ப்ஸ் வர்ற அளவுக்கு பேசுவாரு. மாஸ்டர் ஷூட்டிங் அப்போ, மிகப்பெரிய அளவுல அவர் அலைக்கழிக்கப்பட்டார், ரெய்டு, அது இதுனு போட்டு ஒரு வழி பண்ணாங்க. எல்லாத்துக்கும் சிம்பிளா ஒரு செல்ஃபியைப் போட்டு பாஸிட்டிவிட்டியை பரப்புனாரு. அதுதான் தளபதி.

அஜித்
அஜித்

அஜித்தும் விஜய் மாதிரிதான் தன்னோட விமர்சனங்களுக்கு பயங்கரமான பதிலடிலாம் கொடுக்க மாட்டாரு. அமைதியா அதை கடந்து போய்டுவாரு. இன்னைக்கு அவர் ஏன் இன்டர்வியூ கொடுக்க மாட்றாரு, எந்தவித நிகழ்ச்சிக்கும் வரமாட்டாருனு பார்த்தா விமர்சனங்கள்ல இருந்து தள்ளி நிக்கிறதுக்காகதான். கோபிநாத் கொடுத்த நேர்காணல்ல அஜித் சொன்னதா ஒரு விஷயம் சொல்லுவாரு. “ஆரம்பத்துல எனக்கு தமிழ் சரியா வராது. அப்போ, தமிழ் நடிகர் தமிழ் தப்பா பேசுறாருனு சொன்னாங்க. சரி, இங்கிலீஷ்ல பேசலாம்னு இங்கிலீஷ்ல பேச தொடங்கினேன். அதுக்கு, இங்கிலீஷ்ல பேசுறாருனு விமர்சனம் பண்ணாங்க. நம்ம பேசுனா இப்படி சொல்றாங்க, இல்லைனா அப்படி சொல்றாங்க. பேசாம இருந்தேன். என்ன பேசக்கூட மாட்றாருனு சொன்னாங்க. இயல்பா ஒருவார்த்தை சொன்னா, அதை வைச்சு பயங்கராமா விமர்சனம் பண்ண ஆரம்பிச்சாங்க. அதான் அமைதியாயிட்டேன்”னு கோபிநாத்கிட்ட அஜித் சொல்லியிருக்காரு. இப்பவும் அவரைப் பத்தி மிகப்பெரிய அளவில் விமர்சனம் பண்ணாலும் எதுவும் ரிப்ளை பண்ண மாட்டாரு. ஈஸியா அதைக் கடந்து போய்டுவாரு. எல்லாத்தையும் ஒரேமாதிரி ட்ரீட் பண்ணுவாரு. பெரும்பாலான செலிபிரிட்டிகள் அமைதியாக இருந்துதான் தங்களோட நெகட்டிவிட்டியை ஹேண்டில் பண்ணியிருக்காங்க.

சூர்யா
சூர்யா

சூர்யாவுக்கு வந்த விமர்சனங்களும் சாதாரணமானது இல்லை. ரஜினியே சொல்லுவாரு, என்ன இந்தப் பையனுக்கு நடிப்பே வரலை. எப்படி சினிமால சர்வைவ் ஆகப்போறான் அப்டினு. நேருக்கு நேர்ல இருந்து ஃப்ரெண்ட்ஸ் படம் வரைக்குமே நடிப்புல, ஃபைட்ல, டான்ஸ்லனு எல்லாத்துலயும் தடுமாற்றம் தெரியும். ஆனால், நந்தா படம் மூலமா வேற ஒரு டைமன்ஷன்ல வந்து, எனக்கு நடிக்கும் தெரியும்னு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தாரு. பிதாமகன், பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், அயன், சூரரைப் போற்று, ஜெய்பீம்னு இன்னைக்கு தேசிய விருது வாங்குற நடிகனா மாறி சும்மா மாஸ் பெர்ஃபாமென்ஸ் கொடுத்துட்டு இருக்காரு. தானா சேர்ந்த கூட்டம் படம் வந்த சமயத்துல சூர்யாவோட உயரத்தை கிண்டல் பண்ணி டெலிவிஷன்ல பேசுனாங்க. அதுக்கு சூர்யா, “எவ்வளவு உயரம்னு முக்கியம் இல்லை. எவ்வளவு உயர்ரோம்ன்றதுதான் முக்கியம்”னு நச்னு ரிப்ளை கொடுத்துருப்பாரு. செம சம்பவம் அதெல்லாம். தமிழ் சினிமால சமீபத்துல அதிகமா விமர்சிக்கப்பட்ட பெரிய நடிகர்னா சிவகார்த்திகேயன்தான். சினிமாவையே அழிக்க பார்க்குறாருன்ற ரேஞ்ச்ல சிலர் வீடியோலாம் போட்ருந்தாங்க. வழக்கம் போல சிவகார்த்திகேயன் இதுக்குலாம் முன்னாடியே பதில் சொல்லியிருக்காரு. ஆரம்ப காலத்துல இருந்தே அவருக்கு விமர்சனங்கள் எல்லாம் சாதாரணமானதுதான். நல்லாதான சின்னத்திரைல பண்றாரு? அப்புறம் எதுக்கு படம்லாம் நடிக்க போனாருனு பயங்கரமா எழுதுனாங்க. ஆனால், எல்லாத்தையும் பொறுத்துட்டு இன்னைக்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ள நடிகரா சிவகார்த்திகேயன் இருக்காரு. எந்த விமர்சனத்தை எடுத்துக்கணும், எதை எடுக்க கூடாதுனு தெளிவோட சிவா இருக்காருனே சொல்லலாம்.

Also Read: காதல் மன்மதன்.. மிக்சர் மன்னன்.. பிக்பாஸ் கதிரவன் பண்றது சரியா?

சிவகார்த்திகேயன் படத்துக்கு படம் ஆக்டிங் ஸ்கில், டான்ஸிங் ஸ்கில், ஃபைட்டிங் ஸ்கில்னு எல்லாத்தையும் மெருகேத்திட்டேதான் போறாரு. அருண் விஜய் இப்போலாம் யார் மாஸ் காமிக்கிறதுனே தெரியாம போச்சு அப்டினு சிவகார்த்திகேயனை கலாய்க்கிற மாதிரி ட்வீட் போட்ருந்தாரு. அப்புறம், நான் அதைப் போடலைனு விலகிட்டாரு. அதுக்கு சிவா, என்ன பார்ட்னர் செம காண்ட்ல இருக்கீங்க போலனு படத்துலயே ஃபன்னியா ரிப்ளை கொடுத்துருப்பாரு. பிரின்ஸ் படம் சரியா போகாததால இன்னைக்கு அவரை வைச்சு செய்யலாம். ஆனால், மாவீரன் மூலம் செமயான கம்பேக் மனுஷன் கொடுக்கதான் போறாரு. “ஆரம்பத்துல கோவத்துல கடுப்புலாம் ஆவேன். இப்போ, சிரிச்சிட்டு போய்டுவேன்”னும் இன்டர்வியூக்கள்ள சொல்லுவாரு. விஜய் சேதுபதி சினிமாவுக்கு ட்ரை பண்ணும்போதே, உன் மூஞ்சுக்கு அதெல்லாம் செட் ஆகாது. எதுக்கு அதுலாம் ட்ரை பண்றனுதான் விமர்சனம் பண்ணியிருக்காங்க. அந்த விமர்சனத்தை ஏத்துக்கிட்டுதான் இன்னைக்கு சவுத் இந்தியால முக்கியமான நடிகரா இருக்காரு. அவரோட படங்கள் எல்லாமே செமயா போனதும். என்ன எல்லா படத்துலயும் விஜய் சேதுபதிதான் தெரியுறாரு, கேரக்டர் தெரியலைனு விமர்சனம் பண்ணாங்க, அவெஞ்சர்ஸ்ல டப்பிங் பேசும்போது எதுக்கு இவருக்கு தெரியாத வேலைனு விமர்சனம் பண்ணாங்க. அந்த விமர்சனங்களையெல்லாம் விஜய் சேதுபதி நிராகரிக்கலை. மாறாக அதுல இருந்து பாடத்தை கத்துக்கிட்டு தன்னை திருத்திக்க முயற்சி பண்றேன்னுதான் எல்லா இன்டர்வியூக்கள்லயும் சொல்லியிருப்பாரு.

எல்லா நடிகர்களுமே நெகட்டிவிட்டியை சந்திப்பாங்க. அதை ஃபேஸ் பண்ணாமல் இருக்கவே முடியாது. ஆனால், அதை எப்படி ஹேண்டில் பண்றாங்கன்றதுலதான் அவங்களோட அடுத்தக்கட்ட வளர்ச்சி இருக்கு. அதுல இருந்து நிறைய விஷயங்களையும் மத்தவங்க கத்துக்கலாம். எல்லாத்தையும் தாண்டி உங்களுக்கும் ஒண்ணு சொல்லணும்னா, இக்னோர் நெகட்டிவிட்டி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top