விஜய் சேதுபதி

பெர்ஃபாமர் விஜய் சேதுபதி – மாஸான 5 படங்கள்!

கமர்ஷியல் ஹீரோவா பல படங்கள்ல விஜய் சேதுபதி நடிச்சிருந்தாலும், சில படங்கள்ல அவரோட பெர்ஃபாமன்ஸ் கிளாஸா, மாஸா இருந்துருக்கும். அவரோட கரியர்ல பெர்ஃபாமன்ஸ்ல மாஸ் காட்டுன 5 படங்களைப் பத்திதான் நாம இந்த வீடியோல பார்க்கப்போறோம். 

சூது கவ்வும் – தாஸ்

தென்மேற்குப் பருவக்காற்று படம் ஒரு அறிமுகம் கொடுத்திருந்தாலும், நம்ம விசேவுக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்தது பீட்சாதான். கரியரின் ஆரம்ப நாட்களில் ’சூது கவ்வும்’ தாஸ் மாதிரியான கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதே விசேவோட பெரிய ரிஸ்கான முடிவுதான்னு சொல்லலாம். காரணம், நரைமுடி, தாடியோட லேசான தொப்பையும் இருக்க அந்த ஹீரோவோட வயசு 40-க்கும் மேல இருக்கும்படியான ஸ்கிரீன்பிளே அது. அந்த கேரக்டர்ல மனுஷன் மிரட்டியிருப்பார். அந்தப் படத்துல காமெடி மட்டுமில்லீங்க எமோஷனல்லயும் நமக்கு அப்படியே கடத்தியிருப்பார். மகளைக் கடத்திட்டு, பேங்க் மேனேஜரோட ரூமுக்கே போய் 40 ஆயிரம் ரூபாய் வாங்கிட்டு, பட்ஜெட்ல துண்டு விழுகாதுலனு கேட்டுட்டு அப்டியே வெளில வந்து ஸ்டைலா கூலிங் கிளாஸ் போட்டுட்டு அவர் நடந்து போற சீனா இருந்தாலும் சரி, அசோக் செல்வன் கேங்கை வைச்சு ஆள் கடத்தல் நல்ல பிஸினஸ்னு கிளாஸ் எடுக்குற சீன்லயும் அவர் ரொம்ப சீரியஸாத்தான் நடிச்சிருப்பாரு. ஆனா, ஆடியன்ஸ் யாரும் அந்த சீனை சிரிக்காம கடந்துபோகவே முடியாது. அதுல அவர் சொல்ற நாலு பாயிண்ட் வேற லெவல்ல இருக்கும். அந்த பாயிண்ட்ஸ் உங்களுக்கு நியாபகம் இருக்கா… கரெக்டா தெரியும்னா, அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க… அதேமாதிரி, கற்பனை காதலியான ஷாலு இறந்துபோற சீன்ல, அந்த சோகத்தை நம்மளுக்கும் கடத்தி கண்ணீர் வர வைச்சிருப்பார். கதைதான் ஹீரோ இந்தப் படத்துல; ஆனா, அதையும் தாண்டி தாஸ் நம்ம மனசுல நிறைஞ்சிடுவார். அதான் விசேவோட மேஜிக். பிளான்கள் எல்லாம் சொதப்பினாலும், அதை ஜஸ்ட் லைக் தட்னு டீல் பண்ற விஜய் சேதுபதி, ஒரு லைஃப் லெசனையே இந்தப் படத்துல எடுத்திருப்பாரு. பெர்சனலா என்னோட ஃபேவரைட் இந்த தாஸ்தாங்க…

விக்ரம் வேதா – வேதா 

உண்மையில் தன்னை விட பல வயது மூத்தவரான மாதவனை விட சீனியராக, தாதா வேதாவாக விசே நடிச்ச… இல்ல இல்ல மிரட்டுன படம்னே விக்ரம் வேதாவைச் சொல்லலாம். தமிழ் சினிமா பலநூறு முறை பார்த்த ஆடு-புலி ஆட்டம் டைப் ஒன்லைன்தான்னாலும் புஷ்கர் – காயத்ரியோட ட்ரீட்மெண்டும் விசேவோட நடிப்பும் படத்தை வேறலெவல்லுக் கொண்டுபோச்சுனே சொல்லலாம். `ஒரு கதை சொல்டா சார்’னு விஜய் சேதுபதி ஸ்கீரின்ல சொல்ற இடத்துல எல்லாம் கைதட்டல்களால் தியேட்டர்கள் அதிர்ந்தன. அதுவும் வேதாவோட இன்ட்ரோ சீன் மாஸா இருக்கும். போலீஸ் சல்லடைபோட்டு தேடிட்டு இருக்க பெரிய ரவுடியான வேதா, வடையை சாப்பிட்டபடி நேர போலீஸ் ஸ்டேஷனுக்கே போய் சரண்டர் ஆகுற சீன், புரோட்டா சாப்டுறதுக்கும் ரூல்ஸ் இருக்குனு சொல்லி மாதவனுக்கு சொல்லிக்கொடுக்குற சீன், ஒவ்வொரு முறையும் மாதவன்கிட்ட ஒரு கதை சொல்லட்டா சார்னு தன்னோட ஃபிளாஷ் பேக்கை சொல்றதுனு மனுஷன் டயலாக் மாடுலேஷன்ல மட்டுமில்ல, ஒரு பெர்ஃபாமராவும் மிரட்டியிருப்பாருனே சொல்லலாம். விசேவோட கரியர்ல முக்கியமான படமா விக்ரம் வேதா ரெக்கார்டு ஆயிருச்சு.  

Also Read : நடிகர், ரசிகர், ஜென்டில்மேன்… விஜய் சேதுபதியை உங்களுக்கு எப்படிப் பிடிக்கும்?

96  – ராமச்சந்திரன் ராம் கிருஷ்ணமூர்த்தி

தமிழ் சினிமாவில் பதின்பருவ பள்ளிக் காதலை மிக அழகாகச் சொன்ன படங்களில் முக்கியமான இடம் பிடித்த படம் இது. ஒரு பெரும் பிரிவுக்குப் பிறகு தனது மனதுக்குப் பிடித்த பெண்ணைப் பார்க்கப்போகிறோம் என்ற நிலையில், அந்த ரீயூனியனில் கையில் பலூனோடும் பதட்டத்தோடும் காத்திருக்கும் ராம் முதல் பார்வையிலேயே நம்மைக் கவர்ந்து விடுவார். இந்தப் படத்துல ராம்-ஜானு கேரக்டர்கள், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலை வார்த்தைகள்ல சொல்லிக்க மாட்டாங்க. ஆனா, அவங்க ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்ளோ அன்பு வைச்சிருக்காங்கன்றது நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். பெரும்பாலான காதல் படங்கள் கடத்த மறந்துடுற தருணம் இது. ஆனா, 96ல இது ரொம்ப அழகா கடத்தப்பட்டிருக்கும். 22 வருஷ பிரிவுக்குப் பின்னாடி தன்னோட ஜானுவைப் பார்க்கப் போறோம்னு காத்திட்டிருக்க ராம், அவளைப் பார்த்த உடனே மயங்கி விழறது, ஸ்கூல் டேஸ்ல பலமுறை கேட்டும் பாடாத `யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ பாடலை ரியூனியனில் ஜானு பாடும்போது ராமோட பரவசம் ஒரு மெல்லிய நீரோடை போல இனிமையானது. ஜானுவைப் பார்க்கும்போது இதயம் படபடப்பது, கால்கள் தரையிலே இல்லாமல் பறப்பது என அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் ஒவ்வொன்றும், ரசிகர்களுக்குத் தங்கள் முதல் காதலை நினைவுபடுத்துச்சுனே சொல்லலாம். தமிழ் சினிமா காதலர்களில் 96 ராம் ஒரு பெருங்காதலனாக நிலைத்துவிடுவதுதான் விசேவின் வெற்றி. 

மாஸ்டர் – பவானி 

லவ்வர் பாயா மட்டுமில்லீங்க அப்படியே ஆப்போசிட்டா ஒரு மிரட்டல் வில்லனாவும் என்னால ஸ்கோர் பண்ண முடியும்னு பவானியா விசே நிரூபிச்ச படம் மாஸ்டர். விஜய் மாதிரியா ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஈக்குவலா சிறப்பான சம்பவம் பண்ணிருப்பாரு. விக்ரம் வேதா படத்துல ஒரு கதை சொல்லட்டா சார்னா, இதுல உனக்கு ஒரு நிமிஷம் டைம் தர்றேன் டயலாக்ல தெறிக்க விட்டிருப்பாரு. லாரி ஓனர்ஸ் அசோசியேஷன் தலைவர் பதவிக்காக சத்தமில்லாம செய்ற வில்லத்தனம், கழுத்துல பேனாவோட விஜய் மிரட்டுறப்ப கொடுக்குற ரியாக்‌ஷன், கிளைமேக்ஸ் ஃபைட்ல அடிவாங்குற சீன்ல நாம ரெண்டு பேரும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாமானு கேக்குற சீன்னு… சின்ன சின்ன இடங்கள்ல கூட தன்னோட ரியாக்‌ஷன்களால ரகளை பண்ணிருப்பாரு பவானி. சின்ன வயசுல இருந்தே கொடுமைகள் அனுபவிச்ச பவானி, ஒரு கட்டத்துல மத்தவங்கள கஷ்டப்படுத்தும்போது, Calm-ஆ அதை வேடிக்கை பார்த்து, அதுல ஒருவகையான இன்பம் அடையுற ஆள். பொளக்கட்டும் பறை பறை பாட்டு முடிஞ்ச உடனே கூட்டத்துக்குள்ள புகுந்து கண்டமேனிக்கு அடிக்கத் தொடங்கிடுவார் பவானி. இப்படி மாஸ்டர் படத்தோட முக்கியமான தூணா பவானி கேரக்டர் இருக்கும். அந்த கேரக்டரில் அசால்டா மிரட்டியிருப்பார் விசே.

    

சூப்பர் டீலக்ஸ் – ஷில்பா (மாணிக்கம்)

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்துல வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்துல ஷில்பான்ற திருநங்கை கேரக்டர்ல நடிச்சிருப்பாரு விசே. வீட்டைவிட்டு காணாம போன புருஷன் மாணிக்கம், ஏழரை வருஷத்துக்கு அப்புறம் ஷில்பாவா திரும்பி வருவாரு. ஒரு திருநங்கையை அப்பானு கூப்டுற மகன். ஸ்கூலுக்குப் போறப்ப உள்ளயே விடாத செக்யூரிட்டி, சின்ன பசங்களோட கிண்டல், கேலி பண்ணும்போது அவர் முகத்துல காட்டுற எக்ஸ்பிரஷன்கள் திருநங்கைகளோட வலியைப் பார்வையாளர்களுக்குக் கடத்தும். மனசு உடைஞ்சு போய் வாசலுக்குக் கிட்ட உட்கார்ந்திருக்கப்ப, பூ விற்கும் பெண் கேட்கும் கேள்விக்கு வெறிச்ச பார்வையோட அவர் சொல்லும் பதில் சமூகத்தை நோக்கிக் கேட்கும் கேள்வி. ஷில்பா கேரக்டர்ல தனது நடை, உடை, பாவனை என எல்லாத்தையும் மாத்தி ஒரு பெண்மையோட நளினத்தோட நடிப்புல மிரட்டியிருப்பாரு விசே.

இந்த 5 படங்கள்தான்னு இல்லை; இன்னும் சில படங்கள்லயும் விசே நடிப்புல பின்னி பெடலெடுத்திருப்பார். அந்தவகையில் ஸ்பெஷல் மென்ஷனா சொல்லணும்னா, ’பீட்சா’ மைக்கேல் கார்த்திகேயன், `நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ சி.பிரேம்குமார், `சீதக்காதி’ அய்யா ஆதிமூலம், ஆரஞ்சு மிட்டாய் ‘கைலாசம்’  ’செக்கச்சிவந்த வானம்’ ரசூல் இப்ராஹிம் போன்ற கேரக்டர்களைச் சொல்லலாம். ஒரு பெர்ஃபாமரா நம்ம மக்கள் செல்வன் விசே மிரட்டுனதுல உங்களோட ஃபெர்சனல் ஃபேவரைட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top