“ராமராஜன், வாடிவாசல் சூர்யாவுக்கே முன்னோடி!” | Ramarajan Unknown Facts

மதுரை மேலூரில் வசித்து வந்த ராமராஜன் தனது அப்பா ஒரு நாடக கலைஞர் என்பதால் சிறுவயதிலிருந்தே நிறைய நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார் அதன் தொடர்ச்சியாக அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் வந்தது. ஆனால் அப்பொழுது அதற்கான வாய்ப்புகள் இல்லாததால் மேலூரில் ஒரு திரையரங்கில் வேலை செய்து வந்தார். அங்கு போஸ்டர் ஒட்டும் வேலைக்கு சேர்ந்தவர் பின்னர் தியேட்டர் டிக்கெட் கலெக்டராகவும் ஆப்பரேட்டராகவும் கேசியராகவும் இருந்தார். அதில் சம்பாதித்த பணத்தை வைத்து சென்னைக்கு கிளம்பி வந்ததார் ராமராஜன்.

ராமராஜன்

இயக்குநராக ராமராஜன்

நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவுக்கு வந்தாலும் அவரால் அதற்காக வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அதனால், முதலில் இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். அவருடன் பல படங்களுக்கு உதவிய இயக்குநராக வேலை பார்த்தவர், ஒரு கட்டத்தில் தனியாக படம் இயக்கவும் ஆரம்பித்தார். சில படங்கள் இயக்கிய பிறகு இயக்குனர் பாரதிராஜா தயாரிப்பில் ஒரு படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பாரதிராஜாவின் சிபாரிசு மூலம் நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன்பிறகுதான் கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் கரகாட்டக்காரன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார்.

Also Read : நடிகை ஜெயலலிதா – 9 சுவாரஸ்யங்கள்!

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் படப்பிடிப்பில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்திருக்கிறது. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்காக ஒரு காளையை சூர்யா வளர்க்க வேண்டும் என இயக்குனர் சொல்லி தற்போது சூர்யா அதற்கான வேலைகளிலும் இருக்கிறார். ஏனென்றால் அந்த காளைவுடன் நன்றாக பழகினால்தான் படப்பிடிப்பில் அது ஒத்துழைக்கும். இந்த டெக்னிக்கை எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திலேயே ராமராஜன் செய்துவிட்டார். இந்தப் படத்தில் பசு மாட்டிடம் பால் கரப்பது போன்ற காட்சிகள் இருப்பதால் இதில் நடிப்பதற்கு முன்பிலிருந்தே அந்த மாடுகளிடம் நன்றாக பழக ஆரம்பித்து இருக்கிறார் ராமராஜன். படப்பிடிப்பு முடிந்த பிறகு மாடுகளை பார்க்க போவதில்லை என நினைத்து படப்பிடிப்பின் கடைசி நாளில் கண்ணீரும் சிந்தியிருக்கிறார் ராமராஜன்.

கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன்

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வாடிவாசல் டெக்னிக் என்றால் கரகாட்டக்காரன் படத்தில் ஜெய்பீம் டெக்னிக் என்று கூட சொல்லலாம். ஜெய்பீம் படத்தில் எப்படி இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத இருளர் சமூகத்தினரின் வாழ்க்கையை படமாக்கினார்களோ அதேபோல் கரகாட்டக்காரன் படத்தில் அதுவரை தமிழ் சினிமாவில் காட்டத் தவறிய கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையை படமாக்கினார். இரண்டாவது முறையாக கங்கை அமரனுடன் கூட்டணி சேர்ந்த ராமராஜன் அவரிடம் கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையை படமாக எடுக்கலாம் என ஐடியா கூறியிருக்கிறார். அவர் திரையரங்கில் வேலை பார்த்த சமயத்திலிருந்து பல படங்கள் பார்த்திருந்தாலும் கரகாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட எந்த படமும் அவர் பார்த்தது இல்லை. ஏதோ ஒரு படத்தில் ஜெய்சங்கர் கரகாட்டக்காரர் போன்ற வேடமணிந்திருந்த ஒரு போஸ்டரை மட்டும் பார்த்து இருக்கிறார். அதை மனதில் வைத்து கங்கை அமரனிடம் அவர்களின் வாழ்க்கையை படமாக்க சொல்லி அதன்பிறகு கங்கை அமரன் இந்த கதையை எழுதி படமாக்கியிருக்கிறார்.

அவர் காஸ்டியூம்கள் பற்றிய ஒரு அட்டகாசமான பின்னணி தகவல் தெரியுமா?

அவருடைய ஜாதகத்தைப் பார்த்து ராமராஜன் சொன்ன அத்தனையும் பலித்தது… அப்படி என்ன சொன்னார்?

விஜய்க்கும் இவருக்கும் ஒரு கனெக்‌ஷன் தெரியுமா?

ராமராஜன் பற்றிய இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

1 thought on ““ராமராஜன், வாடிவாசல் சூர்யாவுக்கே முன்னோடி!” | Ramarajan Unknown Facts”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top