கிறிஸ்டி மோகனன்

மெலினா to தி ரீடர்… எதையெல்லாம் நினைவூட்டுகிறார் ‘கிறிஸ்டி’ மாளவிகா?

டீன் ஏஜ் பையனுக்கும் ஒரு லேடிக்குமான ரிலேஷன்ஷிப்பை சொல்லும் படங்கள், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது கவனம் ஈர்த்திருக்கிறது மாளவிகா மோகனன் நடித்துள்ள மலையாள படமான ‘கிறிஸ்டி’. மோனிகா பெல்லூசி நடிச்ச ‘மெலினா’ தொடங்கி கேத் வின்ஸ்லெட் நடிச்ச ‘ரீடர்’ வரை எந்தெந்தப் படங்களை ‘கிறிஸ்டி’ நினைவூட்டுது என்பதையும், பேசிக்காக ‘மெலினா’ மாதிரியான கேரக்டருக்கு எந்த அளவுக்கு மாளவிகா மோகன் பொருந்திப் போறாரு என்பதையும்தான் இந்த வீடியோ ஸ்டோரில அனலைஸ் பண்ணப் போறோம்.

கிறிஸ்டி மாளவிகா
கிறிஸ்டி மாளவிகா

‘கிறிஸ்டி’ படத்தோட ட்ரெய்லர், காட்சிகள், சாங் வீடியோ தவிர்த்து படக் குழு சொன்ன விஷயங்களை வெச்சுப் பார்க்கும்போது, இந்தப் படத்தோட ஒன்லைனை ரொம்ப ஈஸியா ரிசீவ் பண்ண முடியுது. படிப்பு கவனம் செலுத்தாம ஜாலியா சுத்தித் திரியிற டீன் ஏஜ் ஸ்கூல் பையன் ராய். அவனை எப்படியாவது பாஸ் பண்ண வைக்கிறதுக்காக ‘கிறிஸ்டி’ மாளவிகா கிட்ட ட்யூஷன் அனுப்புறாங்க. கிறிஸ்டியின் அழகிலும் அப்ரோச்சிலும் ஈர்க்கப்படுகிறான் ராய். அது வெறும் ஈர்ப்பைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு நகருது. ஒரு கட்டத்துல தன் காதலைச் சொல்கிறான். பர்சனலா சில பிரச்சினைகளை சந்திச்சுட்டு வர்ற ‘கிறிஸ்டி’ மாளவிகா, அந்தக் காதலை எப்படி ரிசீவ் பண்றாங்க, அந்தப் பையனை எப்படி டீல் பண்றாங்க, அந்த ரிலேஷன்ஷிப் எப்படி நகருது, குறிப்பா அந்த ரிலேஷன்ஷிப்பை இந்த சொசைட்டி எப்படிப் பார்க்குது? – இப்படி பல விஷயங்களை ‘கிறிஸ்டி’ டீல் பண்றதை கவனிக்க முடிகிறது.

80ஸ், 90ஸ்ல வந்த இந்த டைப் படங்கள்ல பாய்ஸ் ரொம்ப தயங்கித் தயங்கிதான் தான் காதலிக்கிற மூத்த பெண்ணை அப்ரோஜ் பண்ணுவாங்க. ஆனால், ‘கிறிஸ்டி’ வர்ற டீன் பாய் மாத்யூ தாமஸ் டிபிக்கல் 2கே கிட்ஸ். ரொம்ப தைரியமா லவ்வை சொல்றது மட்டும் இல்லாம, கட்டிப் பிடிச்சு கிஸ் பண்ற அளவுக்கு போல்டான பையனா காட்டப்படுறார். இந்த சீனை பார்க்கும்போதே எயிட்டீஸ், நைன்ட்டீஸ் கிட்ஸ்களுக்கு காதுல புகை வரலாம்.

ரைட்டு, இப்போ இந்தப் படம் முதல்ல நினைவுபடுத்துற ‘மெலினா’வுக்குப் போவோம். மெலினா என்றால் மோனிகா பெல்லூசி. மோனிகா பெல்லூசி என்றாலே மெலினாதான்னு சொல்ற அளவுக்கு அந்தக் கேரக்டரோட இம்பாக்ட் ரொம்பவே அழுத்தமானது. 2000-ல வெளிவந்த அந்தப் படம், உலகம் முழுக்க பல ரசிகர்களை உலக சினிமா மீது நாட்டம் கொள்ள இழுத்த ஒரு கிளாசிக் படைப்புன்னே சொல்லலாம்.

சில பல துண்டுக் காட்சிகளுக்காக – அதாங்க பிட்டு – ‘மெலினா’வை நாடியவர்கள் கூட மெலினாவின் பேரழகில் மெய் மறந்து, அப்புறம் படத்தோட கன்டென்ட்ல மூழ்கிப் போய், அந்தப் படம் சொன்ன விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது பார்வையை மேன்மையானதா மாத்திக்கிட்டதும் நடந்தது.

மெலினா

இத்தாலியின் சிசிலி நகரம். அது, இரண்டாம் உலகப் போர்க் காலக்கட்டம். டீன் ஏஜ் பசங்க முதல் எப்போது வேண்டுமானலும் டிக்கெட் வாங்கக் கூடிய கிழவர்கள் வரை ஒட்டுமொத்தமாக ஏக்கத்துடன் மெய்சிலிர்க்க வைக்கும் பேரழகிதான் மெலினா. கணவன் போருக்குச் சென்றதால் தனிமையில் வாழ்கிறாள். ஒரு பக்கம் காமக் கழுகுகள் மொய்க்கின்றன. இன்னொரு பக்கம், அந்த ஊர் பெண்கள் இவள் மீது கொண்ட பொறாமையால் கக்கும் வன்மங்கள். போரில் கணவர் இறந்துவிட்டதாக செய்தி வர, இதான் சான்ஸ்னு அவளை சின்னாபின்னமாக்குகிறது அந்த ஊர். பேரவமானத்தைச் சந்திக்கும் பேரழகியின் வாழ்க்கை சீரழிகிறது. சில காலம் கழித்து, அவள் கணவன் ஊர் திரும்புகிறான். ஊரே அவனிடம் மெலினா பற்றி மோசமாக கதையளக்க, அவனிடம் ஒரு கடிதம் கிடைக்கிறது. அதன்மூலம் மெலினாவுக்கு மீண்டும் ஒரு நிம்மதியான வாழ்க்கை வசமாகிறது.

அந்தக் கடிதத்தை எழுதியது யார்?

யெஸ்… மெலினாவின் அழகில் மயங்கி, அவளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அவளையே சுற்றி வந்த சிறுவன் ரெனாட்டோதான் அது.

இந்தப் படத்தை டீ-கோட் செய்ய பல விஷயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி, டீன் ஏஜுக்குள் நுழையும் ஒரு சிறுவன் தன் ஊரின் பேரழகி மீது ஈர்ப்புக் கொண்டு, அவளை நெருங்குவதற்கான அத்தனை முயற்சிகளும் செய்கிறான். ஒருகட்டத்தில் அவள் சீரழிக்கப்படுவதையும், அவள் படும் துயரங்களையும் நேரில் காணும் சாட்சியாகவே மாறுவதுடன், அவளை எப்படியாவது மீட்க வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறான். அழகை எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதை அந்தச் சிறுவன் ரெனாட்டோ வழியே கற்றுக்கொள்ளலாம்.

ரொம்ப டீப்பா போயிட்டேனோ… காலத்தால் அழியாத இந்த மெலினா படத்தையும் ‘கிறிஸ்டி’ நினைவுபடுத்தாம இல்லை. குறிப்பாக, ‘கிறிஸ்டி’ மாளவிகாவை அந்தப் பையன் தூர இருந்து ரசிக்கிற காட்சியெல்லாம் அப்படியே மெலினாவை கண்முன் காட்டுது. மெலினா அளவுக்கு ஈர்க்கும் அம்சங்கள் மாளவிகாவிடம் இருக்கான்னு நீங்க கேட்கலாம். அதைப் பத்தி கடைசில பேசுவோம்.

உண்மையில், ஒரு அழகான லேடி மேல ஒரு டீன் ஏஜ் பையன் ஈர்க்கப்படுவது, அதுக்குப் பின்னாடி இருக்கிற உளவியலை ரொம்ப அற்புதமான பதிவு பண்ண படம்னா, 1988-ல் வெளிவந்த போலந்து படமான ‘A Short Film About Love’ என்ற படத்தைதான் குறிப்பிடணும்.

ஆனா, அந்தப் படத்தை 2002-ல ‘ஏக் ச்சோட்டி சே லவ் ஸ்டோரி’ Ek Chhotisi Love Story-ன்ற பேருல இந்தியில் மனிஷா கொய்ராலா நடிப்பில் கொத்து பரோட்டா போட்டதெல்லாம் மறக்கப்பட்ட நீலச் சரித்திரம்.

Also Read – பாலைவனத்துல மழை பார்த்துருக்கீங்களா… மலையாள படங்களின் ஃபீல்குட் சீன்கள்!

Krzysztof Kieślowski என்ற லெஜண்டரி ஃபிலிம் மேக்கரோட படம் இது. ஒரு அபார்ட்மென்ட். பாட்டி வீட்ல வசிக்கும் டீன் ஏஜ் பையன். ஒவ்வொரு இரவிலும் டெலஸ்கோப் வழியா பர்ட்டிகுலர் வீட்டு ஜன்னலை பார்க்கிறான். அங்கதான் அவனோட தேவதை இருக்காங்க. அங்க நடக்குற எல்லாத்தையும்… அதாவது எல்லாத்தையும் டெலஸ்கோப் வழியா பார்த்துட்டே அவளோட உறவாடுறான். அவளோட நெருங்குறதுக்கு பால் போடுற பையனா மாறுறான். ஒரு கட்டத்துல அவள் மீதான ஈர்ப்பும் எமோஷனல் அட்டாச்மென்ட்டும் எக்ஸ்ட்ரீமா போவுது. அது என்ன எப்படின்றதை சைக்கலாஜிக்கலா அந்தப் படம் சிறப்பா டீல் பண்ணியிருக்கும்.

அங்கிருந்து அப்படியே ஜம்ப் பண்ணினா, 2008-ல் கேத் வின்ஸ்லெட் நடிச்ச ‘தி ரீடர்’ (The Reader). இந்தப் படத்தோட சாய்ல்தான் ‘கிறிஸ்டி’ல அதிகமா இருக்கு. வீட்ல படிக்கிறது, சைக்கிள்ல ஜாலியா சுத்துறது, நெருக்கமா பேசிக்கிறது எல்லாமே இந்தப் படத்தை நினைவுபடுத்துது.

The Reader
The Reader

‘மெலினா’வை போல இன்னொரு காவியம்தான் ‘தி ரீடர்’. தனக்காக இலக்கியம் வாசிக்கும் பையனுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் வாரி வழங்குகிறாள் அந்தப் பேரன்புக்காரி ஹென்னா. நாஜிக்கள் காலத்தில் நிகழ்ந்த குற்றம் ஒன்றுக்காக சிறையில் அடைக்கப்படுகிறார். இந்தப் பின்னணியில் இருவரது பாசப் பிணைப்பை சொல்லும் அந்தப் படம் தரும் அனுபவம் அட்டகாசமானது.

சரி, தமிழ்ல இப்படியான படங்கள் இல்லையான்னு கேட்டா… இருக்கு. இந்த சப்ஜெக்ட் எல்லாம் கத்தி மேல நடக்குற மாதிரி. கொஞ்சம் பிசகினாலும் அது வேற கிரேடு மூவியா ஆகிடும்.

இந்த மாதிரி உறவுகளை மையமா வைச்சு எடுக்கப்படாவிட்டாலும், பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ மிக முக்கியமான படம். டீன் ஏஜ் காலத்துல மறக்க முடியாத நினைவுகளின் பொக்கிஷத் தொகுப்புதான் இந்தப் படத்தோட மையம். படத்துல இந்து டீச்சரான ஷோபாவின் என்ட்ரியும், அதுக்கு அப்புறம் அந்த டீன் ஏஜ் பசங்களின் லைஃப்ல நடக்கும் மாற்றங்களை ஒட்டி படம் நகரும். அது ஒரு அற்புதமான நாஸ்டால்ஜி.

ரீசன்ட்டான்னு பார்த்தா, ‘றெக்க’ படத்துல வர்ற மாலா டீச்சர் போர்ஷனை சொல்லாம். அந்தக் குட்டி விஜய் சேதுபதிக்கு வர்ற க்ரஷ். பின்னாளில் மாலாக்காவுக்கு மீட்பரா மாறுவதுன்னு அது ஒரு க்யூட் எபிசோடுதான்.

ஓகே… இந்த இடத்துல ஒரு கேள்வி எழலாம். குட்டிப் பையனுக்கு பெரிய பொண்ணுங்க மேல ஈர்ப்பு வர்ற மாதிரி, குட்டிப் பொண்ணுங்களுக்கு பெரியவங்க மேல ஈர்ப்பு வராதா? அதைப் பத்தி நிறைய பதிவுகள் இல்லையேன்னு கேட்கலாம். பசங்க விஷயம்ன்றது கத்தி மேல நடக்குறதுன்னா, இது கத்தி மேல தலைகீழா நடக்குற அளவுக்கு டேஞ்சரானது. ஆனா, அதையும் சில படைப்பாளிகள் ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ணியிருக்காங்க.

2015-ல் வெளிவந்த அமெரிக்கன் மூவி ‘லேம்ப்’ (Lamb). அதுல குட்டிப் பாப்பாவுக்கும் மிட் ஏஜ்ல இருக்குற ஸ்ட்ரேஞ்சருக்கும் இடையிலான உறவு, டிராவலங்தான் படமே. ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ணப்பட்டிருக்கும் அந்தப் படத்துல, இருவருக்கும் இடையிலான பெயரிட முடியாத அந்த உறவை பரிசுத்தமா பதிவு பண்ணியிருப்பாங்க.

மூடர்கூடம்

அந்த மாதிரி பப்பி லவ்வை தமிழ்லயும் ஒருத்தர் ரொம்ப க்ளவரா பதிவு பண்ணியிருக்கார். அவர்தான் ‘மூடர் கூடம்’ நவீன். மூடர் கூடம் படத்துல ஒரு குட்டிப் பொண்ணுக்கு நவீன் மேல க்ரஷ் வரும். அது டிப்பிக்கல் பப்பி லவ். எந்த விதத்துலயும் நெருடல் ஏற்படாத வகையில் அது பதிவு பண்ணப்பட்டிருக்கும்.

சரி, பேக் டூ ‘கிறிஸ்டி’ மாளவிகா. சின்னப் பையன் – பெரிய பொண்ணு இடையிலான உறவைச் சொல்லும் படங்களில் ஹைலைட்டான விஷயமே அந்தப் பெண் கதாபாத்திரத்தின் வசீகரம்தான். அந்த வசீகரம், அந்தப் பெண் மீது ஈர்ப்புகொள்ளும் அந்தச் சிறுவனுக்கு எந்த மாதிரியான தாக்கத்தைக் கொடுக்குதோ, அதே தாக்கம் ஆடியன்ஸுக்கும் இருக்கணும். அது கிறிஸ்டி மாளவிகா மீது அதிகமாவே இருக்குறதை கவனிக்க முடிகிறது.

ஆக்ச்சுவல்லி, கிறிஸ்டி கதாபாத்திரத்துக்கு மாளவிகா தேர்ந்தெடுக்கப்பட்டதுக்குப் பின்னாடி, ஒரு ரிசர்ச்சே இருக்க வாய்ப்பு இருக்கு. இப்போ இருக்கிற 2கே கிட்ஸ்களின் குடியிருந்த கோயில்னா அது இன்ஸ்டா தான்றது சொல்லிதான் தெரிய வேண்டியது இல்லை. அங்க, டீன் பசங்களை வெர்ச்சுவலா ரொம்பவே அட்ராக்ட் பண்ற ஹீரோயின் யாருன்னு தேடும்போது, வேற சாய்ஸே இல்லாம மாளவிகா மோகனன் வந்திருக்கலாம். மாளவிகாவும் தன்னோட பெஸ்டை கொடுத்திருக்காங்கன்றதுக்கு ட்ரெய்லரும் வீடியோ சாங்குமே சான்று.

ஆக, மண்ணுக்கேத்த மெலினாவா மாளவிகா எதிர்பார்க்கலாம்!

ம்… மெலினா தொடங்கி கிறிஸ்டி வரைக்கும் உங்களை ரொம்பவே அட்ராக்ட் பண்ண, உங்களோட டீன் ஏஜ் கால நினைவுகளை மீட்குற நிழல் கேரக்டர்கள், நிஜ கேரக்டர்கள் பத்தி கமெண்ட்ஸ்ல ஷேர் பண்ணலாமே!   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top