mammootty

மம்மூட்டியின் ஒன்… ஒன் டைம் பார்க்கலாமா?! #OneReview

மம்மூட்டி நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. அரசியல்வாதியாக அவரது பெஸ்ட் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

தன்னுடைய முதலமைச்சர் பதவியை வைத்து ஹீரோ, ஒற்றை ஆளாக ஒட்டுமொத்த நாட்டையும் சீர்செய்ய முற்படுவதே `ஒன்’ படத்தின் ஒன்லைன்.

ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டால் தன் மீது ஏற்படும் களங்கத்தை சாதுர்யமாக சரி செய்கிறார் முதலமைச்சர் கடக்கல் சந்திரன் (மம்மூட்டி). பின் தன் மீது களங்கம் ஏற்படக் காரணமாக இருந்த சனலை வைத்தே (மேத்யூ தாமஸ்) அரசியல் ரீதியான சில மேஜர் மாற்றங்களைக் கொண்டு வர முற்படுகிறார். அது என்னென்ன என்பதுதான் படம். `மக்களோட மக்களா நின்னு போராடுறவன்தான் சிறந்த தலைவன்’ என்கிற கோட்பாட்டிற்கு இணங்க செயல்பட்டு வரும் இவரை எதிர்த்து கட்சிக்குள் இருப்பவர்களே செயல்படத் தொடங்குகிறார்கள். எல்லாவற்றையும் சமாளித்து சரிகட்டி கேரளாவை சீர் செய்கிறாரா என்பதே கதை.

mammootty
  • மம்மூட்டி கதாபாத்திரத்தை தவிர இயக்குநர் வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை. திரை முழுக்க மம்மூட்டி மட்டும் நிறைந்திருக்கிறார். சில இடங்களில் அது ஒர்க்அவுட் ஆகியிருந்தாலும், பல இடங்களில் அலுப்பும் சலிப்பும்!
  • மம்மூட்டியின் கதாபாத்திரத்தை பூஸ்ட் செய்வது கோபி சுந்தரின் பின்னணி இசை. ஸ்லோ மோஷன் எஃபெக்ட்டில், க்ளோஸ் அப் கேமரா ஷாட் இதோடு சேர்த்து பின்னணி இசை என மொத்தமாக பார்க்கும்போது சில இடங்களில் சிலிர்ப்பு ஏற்படுகிறது.
  • படத்தின் மையக்கதையில் ஒரு பிடியே இல்லாத உணர்வை வெகு விரைவில் ஏற்படுத்துகிறது. `இவருடைய ஐடியாலஜிதான் என்ன’ என்கிற சந்தேகம், பொலிட்டிக்கலாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள், திரைக்கதை தொய்வு எனப் பல மைனஸ்கள் அப்பட்டமாகத் தெரிகிறது.
mammootty
  • மம்மூட்டியின் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. அரசியல்வாதியாக அவரது பெஸ்ட் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இருப்பினும் இவருக்கு சொல்லப்பட்ட பைபோலர் நோய் ஒருகட்டத்தில் எங்கு சென்றது என்பது இயக்குநருக்கே வெளிச்சம். ஹீரோவைப் போல் வில்லனின் ரோலுக்கும், உடன் பயணிக்கும் ஜார்ஜ் கதாபாத்திரத்திற்கும் கொஞ்சமேனும் நியாயம் சேர்த்திருக்கலாம்.
  • சொல்ல வரும் கருத்தை சுறுக்கென்று சொல்லி நறுக்கென்று முடித்திருந்தாலும் படம் வேற லெவலில் இருந்திருக்கும். காரணம், அதற்கான ஸ்பேஸ் படத்தில் நிறையவே இருந்தது. தேவையில்லாத ஸ்லோ மோஷன்கள், மாஸ் மொமென்ட்கள் போன்ற விஷயங்கள் முகம் சுளிக்க வைக்கிறது.

க்ளிஷேலாம் ஓகே… நான் மம்மூக்கா ஃபேன். அவரோட மாஸ் நடிப்புக்காக பார்ப்பேன்’னு சொல்றவங்களுக்குஒன்’ ஓ.கே!

Also Read – மினியேச்சர் ஹெல்மெட் முதல் இன்டீரியர் டிசைன் வரை.. அஜித் பற்றிய 11 சுவாரஸ்யங்கள் #HBDAjith

[saswp-reviews-form]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top