மெட்ராஸ் போயிட்டிருந்த பஸ்ல, நல்லா தூங்கிட்டிருந்தார், ஆந்தகுடி இளையராஜா. நடுவுல சாப்பாட்டுக்கு நிப்பாட்டுன எடத்துல, இவர் பாட்டைப் போட்டிருந்தாங்க. அவர் பாட்டு ஒன்னு காதுல விழுந்துச்சு. துள்ளிக்குதிச்சு எழந்திருச்சார். அட நம்ம பாட்டு பாடுதுனு போட்டிருந்தாங்க. அந்த பாட்டு கேசட்டுகளும் ஓரமா அடுக்கி வச்சிருந்தாங்க. அதைப் பார்த்து ஆச்சர்யமானார். பரவாயில்லயே நம்ம பாட்டு எல்லா இடத்துலயும் ஒலிக்குதுனு மனசு சந்தோஷப்பட்டார். ஆனா, அது கொஞ்ச நேரம்கூடா நீடிக்கலை. அந்த கேசட் கவர்ல வேற ஒருத்தர் பாடினதா போட்டிருந்தது. அடப்பாவிகளா இது என் பாட்டுடானு கடைக்காரன்கிட்ட சண்டை போட்டார், ஆந்தகுடி இளையராஜா. கடைக்காரரோ, டேய் மிட்நைட்ல வந்து சண்டைக்கு வராத, அடிவாங்கி சாகப்போற ஓடினு சொல்லிருக்கார். யோவ் நான் சொல்றது உண்மைப்பா, எனக்கு நீ காசு தரலைனாலும் பரவாயில்ல, என் பாட்டுன்னு ஒத்துக்கிட்டா போதும்னு சொல்ல, கடைக்காரர் நம்பவே இல்லை. உடனே பஸ்ல வச்சிருந்த சிடியை எடுத்துக்கிட்டு வந்து காட்டியிருக்கார். அதுக்கப்புறம்தான் கடைக்காரர் அமைதியாகி மன்னிப்பு கேட்டிருக்காரு. ஆனா, அப்பவும் இளையராஜா என் பாட்டை போடுறதால உங்களுக்கு சந்தோஷம்னா நான் எதுவும் கேட்க மாட்டேன் அண்ணே. என்ன பாட்டுன்னு ஒத்துக்கிட்டீங்கள்ள அதுவே போதும்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டார். நம்ம பேர் அதுல இல்லயேனு நினைச்சு அழாத குறையா கெஞ்சிட்டு இருக்கார். இப்படித்தான் சென்னைக்கு அவரோட முதல் பயணமே இருந்தது. இப்படிஆரம்பிச்சவர் இன்னைக்கு சினிமாக்கள்ல குணச்சித்திர நடிகரா வலம்வர ஆரம்பிச்சிருக்கார். ஆனா, இத்தனை உயரத்துக்கு வளர அவர்பட்ட கஷ்டங்கள் ஏராளம். அதைத்தான் இந்த் வீடியோவுல பார்க்கப்போறோம்.

ஆரம்பம்!
சிவகங்கை மாவட்டம், ஆந்தகுடிதான் சொந்த ஊரு. சின்ன வயசுல, பாட்டுப் புத்தகங்களை வாங்கி, அந்தப் பாட்டுகளை சத்தம்அதிகமா ஏத்தி பாட ஆரம்பிச்சார். ஊர்ல திருவிழா, கல்யாணம்னு எந்த வீட்டுல ரேடியோ செட் கட்டினாலும், இவர் போய் மைக்கைப் பிடிச்சுப் பாடிருவார். ராத்திரியில வீட்டுத் திண்ணையில உக்காந்து இவர் பாடினா, கைதட்ட ஊர்சனம் மொத்தமும் கூடிடும். பதினோராம் வகுப்புப் படிக்கும்போது, இவரோட அப்பா, ஒருத்தர்கிட்ட கெஞ்சி, ஊர்ல நடந்த கூத்துல மேடையில பாடுறதுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். அதுதான்இவர் பாடுன மொத மேடை. அப்புறம், பல இசைக்குழுக்கள்ல சேர்ந்து பாடியிருக்கார். இதுதவிர, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துல பிபிஇ படிச்சிருக்கார்.
திரை அறிமுகம்!
ஒரு சேனல்ல காமெடி நிகழ்ச்சி ஆடிஷனுக்காகப் போனார், ஆந்தக்குடி இளையராஜா. அங்க வடிவேல் கணேஷ்னு காமெடியன் அறிமுகம் கிடைச்சது. அவர்தான், வெளுத்துக் கட்டுனு ஒரு படத்துக்கு ஆடிஷன் நடக்குது. அங்க போனு சொல்லி அனுப்பி வச்சிருக்கார். அங்க போனா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவர்கிட்ட நடிச்சதோட பாடியும் காட்டியிருக்கார். இதைப்பார்த்து எஸ்.ஏ.சந்திரசேகர் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுப் போய் சேர்த்துக்கிட்டார். வெளுத்துக்கட்டு படத்துக்குப் பின்னால விழாபடத்துல ஜேம்ஸ் வசந்தன் இசையில ‘மதுர எனும் மாநகரமாம்’னு ஒரு பாட்டைப் பாடி அசத்துறார். அடுத்தடுத்து ஶ்ரீகாந்த் தேவா இசையில ரெண்டு பாட்டு, டி.இமான் இசையில ஜிகிரி தோஸ்துனு பாடல்களைப் பாடி, பபூன் படத்துல குணச்சித்திர வேடமும் பண்ணி வெளுத்துக்கட்டிகிட்டிருக்கார்.

இன்னைக்கு இந்த இடத்தை அடைய இவர் எடுத்துக்கிட்டது சுமார் 10 வருஷங்களுக்கும் மேல. தனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் கெட்டியா பிடிச்சுக்கிட்டு வந்தவங்க மத்தியில, ஒவ்வொரு வாய்ப்பையும் இவரே உருவாக்கினார்னுதான் சொல்லணும். விழா படத்துக்குப் பின்னால இவருக்கு பெரிசா வாய்ப்புகள் ஏதும் வராதப்போ ஆல்பம் போடலாம்னு அந்த படத்தோட இணை இயக்குநர் ராஜா குருசாமி ஐடியா சொல்லியிருக்கார். இது இளையராஜாவுக்கு பிடிச்சுப்போக அப்படித்தான் ஆரம்பிச்சது வாடி என் கருத்த புள்ள ஆல்பம். தாறுமாறு ஹிட். முதல் ஆல்பம் கொடுத்த நம்பிக்கையோட அடுத்தடுத்து ஆல்பம் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார். இவரே வரிகள் எழுதுவார், இசையமைப்பார், பாடுவார்னு பல வேலைகளை செய்திருக்கிறார். இப்படி ஆரம்பிச்சவர் குழுவுல இன்னைக்கு 25 பேர் சேர்ந்திருக்காங்க.
இந்த பாட்டை பாடுறேன்னு சொன்னப்போ ஊர்லயும், நண்பர்களும் எல்லோரும் சூப்பர்யா யார் அந்த ஆல்பத்தோட ஹீரோனு கேட்க, தயங்கிட்டே ‘நாந்தாங்க’னு சொல்ல, எல்லோரும் சிரிச்சு சொன்ன பதில் ‘இதெல்லாம் ஒரு முகமா?’ன்னு கேட்டாங்க. ஆனா, இளையராஜா செம காண்பிடண்ட்ல இருந்தாரு. பாட்டு தயாரிப்பு முடிஞ்சு ரிலீஸ் ஆச்சு. அதிரிபுதிரி ஹிட் ஆச்சு. இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கும் அதுதான் அவரோட சேனல்ல அதிகபட்ச வ்யூஸ். சுமார் 1 கோடியே 70 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.
Also Read – காதல் முதல் கல்யாணம் வரை – ரியல் லைஃப் ‘சீரியல் ஜோடிகள்’
டி.வி டூ சினிமா!
அதுக்கப்புறம் கே.பி.ஒய் நிகழ்ச்சியில கலந்துக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. அதுலயும் கலந்துக்கிட்டு தன்னோட தடத்தை அழுத்தமாவே பதிச்சார். காமெடியில பாட்டைக் கொண்டுவந்து வடிவேலுவோட மேனரிசத்தைக் கொண்டுவந்து மிரட்டினார். ஒவ்வொரு பாட்டுக்கும், காமெடிக்கும் கைதட்டல் அதிர்ந்தது. அதுல எல்லோரும் சொன்னது ஒண்ணுதான்.. “உனக்கு பலமான எதிர்காலம் இருக்கு. நீ பண்றது யுனிக்கா இருக்கு. சமூக அக்கறையும் இருக்கு”. அதன் பின்னர் சினிமா பாடல், நடிப்பு என பயணம் செய்கிறார். சமீபத்தில் வெளியான பபூன் படத்தில் இவர் பேசின காலைல பேப்பர்ல போட்டோ வந்துரும், ஆனா மத்தியானமே மறந்துருவாங்க. வா ஊருக்கு போலாம்னு பேசியிருப்பார். டிரெயிலர்ல வைக்கிற அளவுக்கு காமெடியான சீனா மாறிச்சு. படத்தைப் பார்த்த எல்லோரும் ஹீரோ வைபவ்க்கு அடுத்தபடியா கொண்டாடுனது இளையராஜாவைத்தான். அந்த அளவுக்கு குணச்சித்திர கேரெக்டரில் வெளுத்து வாங்கினார். இதற்குப் பின்னால பல படங்கள் வரிசை கட்டி நிற்கிறது, ஆந்தக்குடி இளையராஜாவுக்கு…
எனக்கு இவர் பாட்டுல ஜிகிரி தோஸ்த்து பாட்டுத்தான் ரொம்ப புடிக்கும். உங்களுக்கு எந்த பாட்டு பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.
I’m not sure where you are getting your information, buut good topic.
I needs to spend some time learning more or understanding more.
Thanks for excellent informafion I was looking for this information for my mission. https://w4i9o.Mssg.me/
Hey there just wanted to give you a quick heads up and let
you know a few of thee images aren’t loading correctly.
I’m not sure why but I think its a linking issue. I’ve tried it in two different browsers and botth show thhe
ssame outcome. https://www.makemyjobs.in/companies/tonebet-casino/