மனநிலை மல்லாக்க கிடக்குதா… `காக்கா கதை’ வைசாக் பாட்டுலாம் கேளுங்க!

“மனசு முழுக்க இருக்கும் வலிக்கு மாத்திரையே இல்லை. தேடிப்பார்த்து தெரப்பி போக தெம்பும் இங்க இல்லை. பாட்டும் சலிச்சது, படமும் சலிச்சது, பார்னும் சலிச்சது, பானமும் சலிச்சது, நேத்தும் சலிச்சது, நிலவும் சலிச்சது, காத்தும் சலிச்சது, காதலும் சலிச்சது” – இப்படி நம்ம மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருந்த சலிப்புகளை “பாட்டாவே பாடிட்டியா?”னு கேக்குற மாதிரி பாடுனவருதான், வைசாக். அதாங்க, காக்கா கதை கேட்டுருக்கேன்னு நிறைய பேர் வைப் பண்ணிட்டு இருக்காங்கள்ல. அதோட மியூசிக் டைரக்டர். இன்னைக்கு நிறைய பேருக்கு இவர் பாட்டுதான் தலைகோதி ஆறுதல் கொடுக்குது. குறிப்பா 2’கே கிட்ஸ்லாம் “வைசாக்… வைசாக்”னு ஃபயர் விட்டுட்டு இருக்காங்க.

வைசாக்
வைசாக்

நான் மேல சொன்ன வரிகள் எல்லாமே “என் ரேன்ட கொஞ்சம் கேளு” பாடலோட வரிகள்தான். இந்தப் பாட்டு உருவான விதமே செமயா இருக்கும். வாழ்க்கை மேல கொலை காண்டுல இருக்கும்போது இவர் இந்தப் பாட்டை பண்ணியிருப்பாருனு நமக்குலாம் தோணும். அதுல உண்மைகள் இருக்குறதுக்குக்கூட வாய்ப்புகள் இருக்கு. அவர்கிட்ட போய்ட்டு இந்தப் பாட்டு எப்படி உருவாச்சுனு கேட்டா, “ஒரு மலை மேல உட்கார்ந்து இருந்தோம். அப்போ, திடீர்னு ஞானம் தோணிச்சு”னு சொல்லுவாருனுதான் எதிர்பார்த்தேன். அதான், இல்ல. ரூம்ல இருக்கும்போது ஒருநாள் மியூசிக் போட்டுட்டு இருந்துருக்காரு. அப்போ, அதுக்கு லிரிக்ஸ் எழுத விக்னேஷ் அப்டின்றவர்ட்ட கேட்ருக்காரு. உடனே அவரு, “இப்போ லிரிக்ஸ் எழுத முடியாது”னு சொல்ல, வைசாக் ஏன்னு கேட்ருக்காரு. அதுக்கு விக்னேஷ் “மனநிலை மல்லாக்க கிடக்குது நண்பா”னு டைப் பண்ணி அனுப்பியிருக்காரு. இதுவே நல்லாருக்கேனு பாட்டா போட்டுட்டாரு. மொத்த பாட்டும் அவங்க மனநிலை பிரதிபலிப்புதான். சாட்லயே பாட்டு முடிஞ்சுது.

வைசாக்
வைசாக்

ரேன்ட் அப்டினா “புலம்புறது”னு அர்த்தம். இந்தப் பாட்டு இன்னைக்கு நிறைய பேரோட புலம்பல் ஆந்தமா மாறியிருக்கு. இந்தியால வைரல் 50ன்ற ஷாட் லிஸ்ட்ல 3-வது இடத்தைப் புடிச்சுது. இதுல மியூசிக் வாசிச்சது ஜூட் அப்டின்றவரு. லைன்லாம் கேட்டு அவரே செம வைப் ஆகிதான் மியூசிக் பண்ணியிருக்காரு.  ஒரு பாட்டு வெளியானதுல இருந்து இன்னைக்கும் வரைக்கும் சலிக்காமல் இருக்குதுனா, அது ரேன்ட் பாட்டுதான். தெரபிஸ்ட் நிறைய பேர் இவருக்கு மெசேஜ் பண்ணி பாராட்டியிருக்காங்க. 3,4 செஷன் போனாதான் சிலர் நார்மல் ஆவாங்க. அதை உங்கப் பாட்டு 3 நிமிஷத்துல பண்றது பெரிய விஷயம். புலம்பல நார்மலைஸ் பண்ணி விட்ருக்காங்க. யார் இவரு?னு தோணுதுல!

வைசாக்
வைசாக்

சென்னை மேல செம கிரேஸ், வைசாக்குக்கு. அதனால, ஈரோடுல இருந்து சென்னை வந்து படிக்கணும் ஆசை. ஆடியோ இஞ்சினீயரிங் படிக்கணும்னு வீட்டுல சொல்லியிருக்காரு. ஸ்கூல் டைம்லயே நல்லாவே பாடுவாரு. அதை கேள்குலேட் பண்ணிதான் இந்த முடிவு எடுத்துருக்காரு. ஆனால், விஸ்காம்தான் சேர்ந்து படிச்சாரு. 2016-ல இன்டிபென்டன்ட் மியூசிக் ஆல்பம் பண்ண தொடங்கிட்டாரு. ஆனால், ஃபினான்ஷியலா ரொம்ப கஷ்டப்பட்ருக்காரு. அப்போ. லைவ் ஷோஸ் பண்ணலாம்னு ஆரம்பிச்சிருக்காங்க. 2019ல இருந்து 2020 வரை பண்ணாங்க. நல்லா போகும்போது கொரோனா. வேற வழியில்லாமல் ஊருக்கே போய்ட்டாங்க. அதுக்கப்புறம், ஒரு மீம் பேஜ் இவரை கான்டாக்ட் பண்ணி ஒரு சாங் பண்ணலாம்னு சொல்லியிருக்காங்க. அப்போதான், மயிராண்டி பாட்டு பண்ணாங்க. லிஃப்ட்ல கண்ணாடி உடைஞ்சு இருக்குறதைப் பார்த்துட்டு டீக்கடைக்கு நடந்து போகும்போது இந்த லிரிக்ஸ்லாம் யோசிச்சுட்டுப் போய்ருக்காரு.

வைசாக்
வைசாக்

காக்கா கதைல “பளபளக்குது கண்ணாடி, பல சேதாரம் ஆனது எம்பாடி, கிரிஞ்சா சுத்தினிருந்தே முன்னாடி இப்போ மெட்டூரு ஆன மயிராண்டி” – இதையே அவங்க லைஃபா சொல்லலாம். அவங்க அவ்வளவு நாள் கஷ்டப்பட்டதுக்கு பலன்தான் அந்த டிரெண்டுனு சொல்லலாம். இந்தப் பாட்டுக்கு வீடியோ ஷூட் பண்ண அவங்க்கிட்ட பட்ஜெட் இல்லை. உடனே, ஸ்பாட்டிஃபை உட்பட பல மியூசிக் பிளாட்ஃபார்ம்ல ரிலீஸ் பண்ணி விட்ருக்காங்க. செமயா ரீச் ஆயிருக்கு. நிறைய சோஷியல் மீடியா பேஜஸ் இந்தப் பாட்டை எடுத்து எடிட் பண்ணி போட்ருக்காங்க. ஜே.கே தமிழ் போட்டதும் இவங்களுக்கு மிகப்பெரிய பிளஸ்ஸா இருந்துருக்கு. ஆரம்பத்துல மயிராண்டினு இருந்த பாட்டு லேபிளான ஒரு பிராண்டுக்குப் போகும்போது காக்கா கதையா மாறியிருக்கு. திங்க் மியூசிக்ல வந்ததும் ஸ்டெப்போட சேர்த்து அந்தப் பாட்டு செம வைரல்.

வைசாக்
வைசாக்

வைசாக் பாட்டுல வர்ற பெரும்பாலான லிரிக்ஸ், நம்மள சுத்தி இருக்குற நண்பர்கள் பேசுற வார்த்தைகளா தான் இருக்கும். இதையெல்லாம் கேட்டுட்டுதான் நம்ம, 2’கே கிட்ஸ்லாம் வைப் ஆகி, ‘ என்ன சாமி நம்ம பாஷை பேசுதுன்னு’ அவர் மியூசிக்கூட கனெக்ட் ஆக ஆரம்பிச்சிட்டாங்க. இந்த 90’ஸ் கிட்ஸ் எப்படி இந்த பாட்டோட கனெக்ட் ஆனாங்கனு, மூளையை கசக்கி பிழிஞ்சு யோசிச்சுப் பார்த்தா வேற ஒண்ணும் இல்லை, அந்த சோகம்தான் காரணம். இந்தப் பாட்டுல தன்னந்தனியா வைபா சுத்தினிரு, பாரத்தைப் போடு ஏசப்பா வரிகள் எல்லாம் நிறைய போஸ்ட்டோட கேப்ஷனா இருக்கும். ஸ்டேட்டஸ்ல இருக்கும். இந்தப் பாட்டு மட்டுமில்ல சென்னையைப் பத்தி மெட்ராஸேன ஆல்பம் ஒண்ணு போட்டிருக்காரு. வைசாக் போடுற பாட்டுலாம் யோ யோனு சுத்துற யங் ஏஜ் மக்களுக்கு மட்டும்தான் கனெக்ட் ஆகும்னு நினைப்போம். அவரும் அப்படி கனெக்ட் ஆகணும்னுதான் பண்ணுவாரு. ஆனால், 70 வயது ஜோடிகளுக்காக “காங்கல”னு ஒரு பாட்டு பாடிருப்பாரு.

வைசாக்
வைசாக்

எல்லா ஜெரஷன்களுக்குமான ஏக்கத்தையும் சோகத்தையும் பிழிஞ்சு வெளிய எடுத்து “ரிலாக்ஸா இருடா என் மியூசிக் உன் கூட இருக்கும்”னு உரையாடல்ல சொல்லாமல் இசையால சொல்ற ஆள்தான் வைசாக். ரேன்ட கேளு, வைப் பண்ணு, மானங்கெட்ட மயிராண்டி, உருட்டு, நக்கு, ஓலா ஓட்டிருக்கேன்னு இந்த ஜெனரேஷன் சுட்டீஸ்கள் பேசுற பல வார்த்தைகளுக்கான வெப்பன் சப்ளையே வைசாகோட பாட்டுகள் தான். எப்படிங்க இந்த வார்த்தைலாம்னு கேட்டா… ‘சில்லா உடு’னு இன்னொரு வார்த்தையை நமக்குக் கத்துகொடுத்துட்டு சிரிப்பாரு.

வைசாக்
வைசாக்

பத்தாவது படிக்கும் போதுல இருந்து சில பாடல்களை உருவாக்கிட்டு அதை யாருக்கும் போட்டு காட்டாம ஒளிச்சு வச்சிருக்காரு. 12வது முடிக்கும் போது நடந்த farewell விழால “மீண்டும் வா” அப்படினு வைசாகோட ஒரு பாட்டை மேடையேறிப் பாடி இருக்காரு. பல பேருக்கு புடிச்சிருக்கு. அப்போதான் ஹிப் ஹாப் ஆதியோட வாடி புள்ள வாடி பாட்டு கேக்கும் போதுதான் Independent music-னு ஒரு ஏரியா இருக்கு அந்த ஏரியால இறங்கி விளையாடுவோம்னு வைசாக் முடிவெடுத்திருக்காரு. அவர்தான் வைசாகோட இன்ஸ்பிரேஷனாம். ஹிப் ஹாப் ஆதிகூட சேர்ந்து சமீபத்துல “சின்னப்பையன்”னு ஆல்பம் ஒண்ணு பண்னியிருக்காரு. “ஊருக்கு நாலு பேரு குறை சொல்ல 100 பேரு, யாரென்ன சொன்னாலும் நீ காதை மூடி ஓடு ஓடு”னு மோட்டிவேஷனா பாடியிருக்காரு. இதுக்கப்புறம் நான் சொல்ற பாட்டுலாம் நீங்க கேட்ருக்குறதுக்கு வாய்ப்பில்லை. லிஸ்ட் கொஞ்சம் சொல்றேன். முதல் வேலையா போய் கேளுங்க. வைசாக் மேல அப்படி ஒரு லவ் உங்களுக்கு வரும்.

வைசாக்
வைசாக்

ஒரு நாள் நண்பர்கள் மொட்டை மாடில உட்கார்ந்து பேசிட்டு இருந்துருக்காங்க. கூட இருந்த ஒருத்தர் சரக்கடிச்சுட்டு இருந்துருக்காரு. திடீர்னு அழ ஆரம்பிச்சிருக்காரு. உடனே, இவங்களுக்கு புரிஞ்சிடுச்சு. அவருக்கு லவ் ஃபெயிலியர்னு. அவரு எதாவது பாடுங்கனு சொல்லியிருக்காரு. இளையராஜா பாட்டு  பாடலாம்னு நினைச்சிருக்காங்க. அவர் நான் சொல்ற சிச்சுவேஷனுக்கு பாடுங்கனு சொல்லிருக்காரு. உடனே, இவங்க போட்ட பாட்டுதான் “நீ மட்டும்தான்”. “நீ மட்டும்தான் குடியிருக்க கண்ணுக்குள்ளாற, திசை மறந்த கிளிபோல தவிச்சேன் உன்னால”னு வரிகள் வரும். மேஜிக்யா… மேஜிக்! ‘நக்கு’னு சொல்லிட்டு ஒரு பாட்டு பண்ணிருப்பாரு. “கடலுக்குள்ள மீனா ஆக ஆசை, நடந்துக்கிட்ட தூங்கனூம்னு ஆசை, பறவைக்கிட்ட பாடணூம்னு ஆசை, தவளைக்கிட பேசணும்னு ஆசை, ஆசையத்தான் கணக்கு போட்டு பார்க்குறேன், அடக்க நினைக்க துடிக்கிறதும் ஆசை தானுங்க, ஆசையில்ல மனுஷன் இங்க யாரு காமிங்க. கவலை கிடக்கு கண்டுக்காம ஜாலி பண்ணிடு”னு பாட்டுப் போகும். ப்பா, செமயா இருக்கும்.

Also Read: பொன்னியின் செல்வன் கதை நாயகர்கள் – `ஆழ்வார்க்கடியான் நம்பி’

டைட்டிலால நிறைய பிரச்னை அவருக்கு வருதாம். அதனால, இப்போ மனுஷன் டீசன்டா டைட்டில் வைக்கிறாரு. பெரும்பாலும் வாழ்க்கை, டிப்ரஷன்னுதான் பாட்டுப் போடுவாரு. இப்போ, நிறைய காதல் பாடல்கள் எல்லாம் போடுறாராம்.

வைசாக்
வைசாக்

சினிமாக்குலாம் போவீங்களா?னு வைசாக் கிட்ட கேட்டா “நாம அவ்ளோ வளரலங்க. ஆல்பம் பாட்டு இனி தொடர்ந்து வரும்”னு சொல்லுவாரு. அதுபோதும் ஒவ்வொரு பாட்டுக்கும் நாங்க வெயிட்டிங். ஸ்பாட்டிஃபைல இவரோட பிளே லிஸ்ட் இருக்கு கேட்டுட்டு வந்து உங்க ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top