வாட்ச்மேன் பையன் டு பாலிவுட் மியூசிக் டைரக்டர்… ஜஸ்டின் பிரபாகரனின் இன்ஸ்பைரிங் இசைப் பயணம்!

ஒரு படம் வெளியாகி அந்தப் படத்தோட பாட்டுலாம் செம ஹிட்டு. யாருடா இந்த மியூசிக் டைரக்டர்னு எல்லாரும் தேடிட்டு இருந்தப்போ, ஒரு மீடியா அந்த மியூசிக் டைரக்டரை தொடர்புகொண்டு பேட்டி கேட்ருக்காங்க. அவரும் ஸ்டுடியோக்கு வாங்கனு அட்ரெஸ்லாம் அனுப்பி வைச்சிருக்காரு. மீடியாக்காரங்க அவரோட ஸ்டூடியோக்கு போய் எல்லா பேட்டிக்கு எல்லாத்தையும் செட் பண்ணிட்டு… அந்த மியூசிக் டைரக்டர்கிட்டயே போய், ‘எல்லாம் ரெடி சார். மியூசிக் டைரக்டர் சார வர சொல்லுங்க’னு சொல்லியிருக்காங்க. அவரு முழிச்சிக்கிட்டே நான்தாங்க அந்த மியூசிக் டைரக்டர்னு சொல்லியிருக்காரு. அவரு வேற யாரும் இல்லை. பண்ணையாரும் பத்மினியும்ல தொடங்கி ராதே ஷ்யாம் வரைக்கும் ஹிட்டு கொடுத்த ஜஸ்டின் பிரபாகரன்தான். எப்படி இந்த சினிமா இன்டஸ்ட்ரிக்குள்ள ஜஸ்டின் வந்தாரு? துப்பாக்கி படத்துல அவர் வேலை பார்த்துருக்காராம் தெரியுமா? அவரை இன்னும் நாம அதிகமா கொண்டாடனும் ஏன்?  இதையெல்லாம் பற்றிதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

ஜஸ்டின் பிரபாகரன்
ஜஸ்டின் பிரபாகரன்

ஜஸ்டின் பிரபாகரனுக்கு தன்னோட சின்ன வயசுல இருந்தே மியூசிக் மேலதான் ஆர்வம். மியூசிக் டைரக்டர் ஆகணும்னு கனவுலாம் இல்லை. ஆனால், மியூசிக் சம்பந்தமா எதாவதுக்குள்ள இருந்துட்டே இருக்கணும்னு நினைச்சிட்டே இருப்பாரு. மிடில் கிளாஸ் ஃபேமிலிதான். அதனால, சின்ன வயசுல கீபோர்டு, கிட்டார்லாம் வாங்கிகொடுக்க முடியாத சிச்சுவேஷன்லதான் வளர்ந்திருக்காரு. அவரோட அப்பா ஒரு சர்ச்ல நைட் வாட்ச்மேனா வேலை பார்த்திருக்காரு. அதனால, நைட் அவர்கூடவே போய் இருக்கும்போது சர்ச்ல இருக்குற கீபோர்ட்ல பிராக்டிஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்காரு. ஸ்கூல் படிக்கும்போதுலாம் மியூசிக் மேல ஜஸ்டின் அப்படி பேஷனோட இருந்துருக்காரு. ஸ்கூல் முடிச்சதும் வீட்டுல உள்ளவங்க கட்டாயப்படுத்தி மதுரை அமெரிக்கன் காலேஜ் பி.எஸ்.சி சோலஜில சேர்த்துவிட்ருக்காங்க. கல்சுரல்ஸ்லலாம் கலந்துட்டு கலக்கிட்டு இருந்துருக்காரு. மாச சம்பளம் வாங்குற வேலைக்குப் போகணும்னுலா ஜஸ்டின் நினைக்கவே இல்லை. அப்பவும் மியூசிக்ல எதாவது பண்ணனும்னுதான் ஒரே குறிக்கோளோட இருந்துருக்காரு.

ஜஸ்டின் பிரபாகரன்
ஜஸ்டின் பிரபாகரன்

ஒருநாள் சிவப்பதிகாரம் படத்தோட கேமரா மேன் கோபியை சந்திச்சிருக்காரு. அவர்கிட்ட மியூசிக்ல இண்ட்ரஸ் இருக்குனு ஜஸ்டின் சொல்லியிருக்காரு. கோபி உடனே சவுண்ட் இஞ்சினீயரிங் படினு சொல்லி ஒரு பாதையை காமிச்சிருக்காரு. அந்த நேரத்துல சென்னையில ஒரு காலேஜ்ல சவுண்ட் இஞ்சினீயரிங் கோர்ஸ்க்கு அப்ளை பண்ணி சீட்டும் கிடைக்குது. அவர்கிட்ட கொஞ்சம் காசு இருக்கு. அந்தக் காசைக் கட்டினா சவுண்ட் இஞ்சினீயரிங் கோர்ஸ் கன்ஃபார்ம் ஆயிடும். ஆனால், அதே காசு இருந்தால்தான் பி.எஸ்.சி படிச்சதுக்கு டி.சியும் வாங்க முடியும். இந்த சூழல்ல அவர் சவுண்ட் இஞ்சினீயரிங் படிக்க காசு கட்டிடுறாரு. ஆனால், சவுண்ட் இஞ்சினீயரிங் படிக்க யுஜி டிசி கேட்ருக்காங்க. என்னப் பண்றதுனு தெரியாமல் முழிச்சுட்டு இருந்தப்போ, ஜஸ்டினுக்கு அவரோட நண்பர்கள் சேர்ந்து ஹெல்ப் பண்ணி டிசி வாங்கி கொடுத்துருக்காங்க.

ஜஸ்டின் பிரபாகரன்
ஜஸ்டின் பிரபாகரன்

சவுண்ட் இஞ்சினீயரிங் படிக்கும்போது வீட்டை தொந்தரவு பண்ணக்கூடாதுனு காலைல டெலிஃபோன் பூத்க்கு வேலைக்கு ஜஸ்டின் போய்ருக்காரு. அப்புறம் காலேஜ்… திரும்பவும் டெலிஃபோன் பூத் வேலை. இப்படியே போகும்போது சவுண்ட் இஞ்சினீயங்கைவிட கம்போஸிங்க்லதான் ஜஸ்டினுக்கு ஆர்வம் அதிகம். அதுக்கு பிராக்டிஸ் பண்ண அவர்கிட்ட கீபோர்ட்கூட இல்லை. ஒருநாள் அவர் காலேஜ் புரொஃபஸர் வீட்டுக்கு போய்ருக்காரு. அவர்கிட்ட இருந்த கீபோர்ட கேட்ருக்காரு. அவர் யோசிச்சு எல்லா நோட்ஸையும் வாசிச்சு காமிச்சு. எனக்கு நீ திருப்பி தரும்போது எல்லா நோட்ஸூம் வொர்க் ஆகணும்னு சொல்லியிருக்காரு. அதை வாங்கி வைச்சு மியூசிக்லாம் கம்போஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்காரு.

ஜஸ்டின் பிரபாகரன்
ஜஸ்டின் பிரபாகரன்

ஜஸ்டின் பிரபாகரன், படிச்சு முடிச்சு வெளிய வந்ததும் என்னப் பண்றதுனு தெரியாம நின்னுருக்காரு. ஒரு கட்டத்துல மியூசிக்லாம் நமக்கு சரிபட்டு வராதுனு மதுரைக்கே கிளம்பியிருக்காரு. மார்னிங் கிளம்பலாம்னு இருக்கும்போது ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்டுடியோல இருந்து இண்டர்வியூக்கு கால் பண்ணியிருக்காங்க. அப்படியே அவர்கிட்ட போய் ஜாயின் பண்ணியிருக்காரு. அங்கதான் மியூசிக் கம்போசிங் உட்பட பல விஷயங்களை கத்துக்கிட்டாரு. ஹாரிஸ் தெலுங்குல பண்ண ஆரஞ்சு படத்துல ஸ்டார்ட் பண்ணி இரண்டாம் உலகம் வரைக்கும் சுமார் மூன்றரை வருஷம் ஹாரிஸ்கிட்ட வொர்க் பண்ணியிருக்காரு. துப்பாக்கி படத்துல கூட இவர்தான் வொர்க் பண்ணியிருக்காரு. அப்போ, ஷார்ட் ஃபிலிம்ஸ்க்கு மியூசிக் போடவும் தொடங்கியிருக்காரு. நாளைய இயக்குநர் நிகழ்ச்சில பெஸ்ட் மியூசிக் டைரக்டர் அவார்டும் வாங்கியிருக்காரு. இதுவரை 100-க்கும் மேல ஷார்ட் ஃபிலிம்ஸ்க்கு மியூசிக் பண்ணியிருக்காரு.

ஜஸ்டின் பிரபாகரன்
ஜஸ்டின் பிரபாகரன்

பண்ணையாரும் பத்மினியும் கேமராமேன் கோகுல் பினாயும் ஜஸ்டினும் கிளாஸ்மேட்ஸ். அவர் மூலமா அருண்குமார் ஜஸ்டினுக்கு பழக்கம். ஷார்ட் ஃபிலிம்ஸ்லாம் சேர்ந்து பண்ணியிருக்காங்க. அப்போ, ஒரு பெரிய படம் பண்ணலாம்னு முடிவு பண்ணதும் அதே டீம் சேர்ந்து வொர்க் பண்ணாங்க. அதுதான் ‘பண்ணையாரும் பத்மினியும்’. பண்ணையாரும் பத்மினியும் ஒரு அழகான கவிதை மாதிரி படம். அந்தப் படத்துல காருக்கு தீம் மியூசிக் போட்டு அசத்தியிருப்பாரு. அதேமாதிரி ‘உனக்காக பொறந்தேனே’ பாட்டு இன்னைக்கும் பலபேருக்கு ஃபேவரைட். மியூசிக்கலாவே அந்தப் படம் செமயா இருக்கும். அந்தப் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே விஜய் சேதுபதி, ஜஸ்டினைக் கூப்பிட்டு ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை குடுத்துட்டாரு. அதுலயும் பாட்டுலாம் செமயா இருக்கும். தீராதே ஆசைகள், பயணங்கள் தொடருதே எல்லாம் பெஸ்ட்.

ஜஸ்டின் பிரபாகரன்
ஜஸ்டின் பிரபாகரன்

விஜய் சேதுபதி, ஜஸ்டினுக்கு ஒரு மெண்டர் மாதிரி. தன்னோட லுக்கால கொஞ்சம் வித்தியாசமா பார்க்கப்பட்டவர் ஜஸ்டின். அதையெல்லாம் உடைக்க விஜய் சேதுபதிதான் ஹெல்ப் பண்ணியிருக்காரு. ஒருநாள் கூத்து படத்துல வர்ற ‘அடியே அழகே’ இன்னைக்கும் ஃப்ரெஷ்ஷா இருக்கும். இதெல்லாம் ஜஸ்டினோட பக்கா மேஜிக். ராஜா மந்திரி, உள்குத்து, காலக்கூத்து, ஒருநல்ல நாள் பார்த்து சொல்றேன், தொண்டன் – இப்படி பல படங்கள் ஜஸ்டின் மியூசிக் போட்ருந்தாலும் எதுவும் பெருசா பெயர் வாங்கிக்கொடுக்கல. அடுத்து மான்ஸ்டர்னு ஒரு படம் பண்ணாரு. அதுல எலிக்கு தீம் போட்ருப்பாரு. அந்தப் படம் அவருக்கு செமயா பேரு வாங்கிக்கொடுத்துச்சு. ஆனால், அவருக்கு செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வைச்சது ‘டியர் காம்ரேட்’தான். படத்துல வந்த எல்லாப் பாட்டும் ஹிட்டு. தெலுங்கு ஆடியன்ஸ் மத்திலயும் ஜஸ்டின் ஃபேமஸ் ஆனாரு.

ஜஸ்டின் பிரபாகரன்
ஜஸ்டின் பிரபாகரன்

மெலடிதான் நல்லா போடுவாருனு நினைக்கும்போது நாடோடிகள் 2 படத்துல மிரட்டலா, மாஸா ஒரு தீம் போட்டுருப்பாரு. நம்ம ஜஸ்டினா இதுனு தோணும். பாவக்கதைகள்ல ‘தங்கமே தங்கமே’ பாட்டும் நம்ம ஜஸ்டின் போட்டதுதான். அப்படியே கட் பண்ணா… பாலிவுட்ல கரண் ஜோகர் எடுத்த ‘மீனாட்சி சுந்தரேஷ்வர் படத்துல மியூசிக் போட்டு பாலிவுட்லயும் தன்னோட கால்தடத்தைப் பதிச்சாரு. ராதே ஷ்யாம் படம் மூலமா இந்திய அளவுல ஒரு வெளிச்சம் அவர் மேல விழுந்துச்சு. இன்னும் அவரோட பாடல்கள் நம்மளோட பிளே லிஸ்ட்ல இருக்கு, எதார்ச்சையா அவர் பாட்டு பிளே ஆனால், அங்க நின்னு அந்தப் பாட்டைக் கேட்க தோணும். அப்படிப்பட்ட மனுஷனுக்கு இன்னும் பெருசா விருதுகள் எதுவுமே கிடைக்கலை. இதை அவர்கிட்ட கேட்டா, “ எனக்கு விருதுகள் மேல நம்பிக்கை இல்லை. ஒரு டேக்ஸில போய்கிட்டு இருக்கோம். டிரைவர் என்னோட பாட்டைப் போட்ருக்காரு, அதை அவரு மாத்தாம இருந்தால் அதுதான் எனக்கு விருது”னு சொல்லுவாரு. செமல்ல… இப்படிப்பட்ட மனுஷனை மக்கள் இன்னும் கொண்டானும்!

ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களில் உங்களோட ஃபேவரைட் பாட்டு எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: டெஸ்ட் கிரிக்கெட்டில் Underrated Wicket Keeper batter தோனி… ஏன்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top