உலக அளவில் மிகப்பெரிய ஃபேன் பேஸைக் கொண்டுள்ள பி.டி.எஸ் குழுவின் லீடராகவும் அந்தக் குழுவின் ராப்பராகவும் அறியப்படுபவர், ஆர்.எம். இவரின் உண்மையான பெயர், கிம் நாம் ஜூன். இவரைப் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…
- பி.டி.எஸ் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆர்.எம்தான்.
- பிக் ஹிட் என்டர்டெயின்மென்டில் சேருவதற்கு முன்பு ஆர்.எம் அன்டர்கிரவுன்ட் ராப்பராக இருந்தார். அப்போது அவரின் பெயர் ரன்ஞ் ரான்டா என்று அறியப்பட்டது.
- 2007-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே பாடல்களை ஆர்.எம் எழுதத் தொடங்கினார். அவற்றை ஆன்லைன் ஹிப் ஹாப் தளங்களில் பகிர்வார்.
- ஆர்.எம்-ஐ சந்தித்த பிறகுதான் பிக் ஹிட் என்டர்டெயின்மென்டின் சி.இ.ஓ பேங் சி ஹியூகின் பி.டி.எஸ் குழுவை உருவாக்க முடிவு செய்தார்.
- குழந்தையாக இருக்கும்போது ஆர்.எம் அப்பார்ட்மெண்டின் பாதுகாப்பு காவலராக விரும்பினாராம்.
- ஆர்.எம் 181 சென்டிமீட்டர் உயரம் உடையவர். பி.டி.எஸ் குழுவின் மிக உயரமான உறுப்பினர் இவர்தான்.
- ஆர்.எம் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல.
- ஆர்.எம்மின் ஐ.க்யூ லெவல் மிகவும் அதிகம். அவரது ஐ.க்யூ லெவல் 148.
- `நோ மோர் ட்ரீம்’ என்ற பாடலை ஆர்.எம் எழுதினார். ஏனெனில், அவர் பள்ளியில் படிக்கும்போது அவருக்கு எந்த கனவுகளும் இல்லை.
- ஆர்.எம் `The god of destruction’ என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில், தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை சீக்கிரம் உடைத்துவிடுவாராம்.
- ஆர்.எம்மின் ஃபேவரைட் நம்பர் 1.
- கடல் உணவுகளை ஆர்.எம் விரும்பமாட்டார். அதுமட்டுமல்ல சிகரெட்டும் அவருக்கு பிடிக்காது.
- எல்.ஜி.பி.டி உரிமைகளுக்கு ஆதரவாக தனது கருத்துகளை வெளிப்படுத்தக்கூடியவர்.
- ஆர்.எம்மின் செல்ல நாயின் பெயரும் ஆர்.எம் தான். ஆம்! ராப் மான்.
- கருப்பு, ஊதா மற்றும் பிங்க் ஆகிய நிறங்கள் ஆர்.எம்மின் ஃபேவரைட். அடிக்கடி அவரது ஃபேவரைட் நிறத்தை மாற்றவும் செய்வார்.
- பி.டி.எஸ் குழுவில் ஆர்.எம் சேரவில்லை என்றால் அவர் ஒரு எழுத்தாளராகவோ அல்லது கவிஞராகவோ ஆகியிருப்பார் என்று ஆர்.எம் கூறியுள்ளார்.
- டைரி எழுதும் பழக்கம் உடையவர் ஆர்.எம். அப்போதுதான் முன்னாடி உள்ள நாள்களை ஒப்பிட்டு புதிய வழியில் வாழ்க்கையை திட்டமிட முடியும் என்று நம்புகிறார்.
- ஒரு வேளை பெண்ணாக பிறந்திருந்தால் பி.டி.எஸ் குழுவின் மற்றொரு உறுப்பினரான ஜே-ஹோப் உடன் டேட் செய்ய விரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.
- தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உடையவர் ஆர்.எம்.
- ஆர்.எம், சன் ரைஸை விட சன் செட்டை அதிகம் விரும்பக்கூடியவர்.
- தன்னுடைய பெயரை மாற்ற விரும்பினால் `ரியான் மான்ஸ்டர்’ என்று மாற்றுவாராம்.
Also Read : `உலகையே கலக்கும் பி.டி.எஸ் இசைக்குழு!’ – யார் சாமி இவங்க?