மியூசிக்கில் யுவன், ரியல் லைஃபில் அஜித்… சிங்கர் கேகே வளர்ந்த கதை!

தமிழ்ல நமக்கு ரொம்பப் புடிச்ச பாடல்களோட லிஸ்ட்ல, ‘உயிரின் உயிரே, காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னைக் காணும் வரை, என் காதல் சரியா தவறா, லேலக்கு லேலக்கு லேலா, ஸ்ட்ராபெர்ரி கண்ணே, நினைத்து நினைத்துப் பார்த்தேன், காதல் வளர்த்தேன், நீயே நீயே, அப்படிப்போடு, பட்டாம்பூச்சி கூப்பிடும்போது’ – இந்தப் பட்டுலாம் தவறாம இருக்கும். ஆனால், இந்தப் பாட்டுலாம் பாடுனது யாருனு இவ்ளோ நாள் நமக்கு தெரியாது. ஆனால், இந்த மனுஷனா இவ்வளவுப் பாட்டும் பாடுனதுனு நமக்கு தெரியும்போது கொண்டாட அந்த பாடகர் இல்லை. ஆமாங்க, பாடகர் கேகே மறைவால இன்னைக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் வருத்தத்துல இருக்கு. அந்த மனுஷன் கடந்து வந்த பாதை, காதல் கதை எல்லாமே கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கானது. அதைதான் இங்க தெரிஞ்சுக்கப்போறோம்.

சிங்கர் கேகே
சிங்கர் கேகே

கிருஷ்ணகுமார் குன்னத் அதாங்க நம்ம கேகே மலையாளி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், பிறந்து, வளர்ந்ததுலாம் டெல்லி. டெல்லி யூனிவர்ஸிட்டிலதான் படிப்புலாம் முடிச்சிருக்காரு. அவங்க அம்மா நல்லாவே பாட்டுப் பாடுவாங்க. அதைக் கேட்டு வளர்ந்தவருதான், கேகே. கிளாஸுக்குலாம் போய் பாட்டுலாம் முறையா கேகே கத்துக்கல. ஆனால், எப்பவும் பாட்டுப் பாடிட்டே இருப்பாராம். பாடுறதை ரொம்பவே நேசிச்சாரு. பாடகர் கிஷோர் குமார்தான் அவரோட இன்ஸ்பிரேஷன். ஸ்கூல் படிக்கும்போதுதான் தனக்கு மியூசிக் மேல அதிக ஆர்வம் இருக்குனு உணர்ந்துருக்காரு. கேகே 2-வது படிக்கும்போது பழைய இந்தி ராஜா ராணி படத்துல வந்த ‘ஜப் அந்தேரா ஹோதா ஹை’ன்ற பாடலை ஸ்டேஜ்ல பாடியிருக்காரு. ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி அவரை பாராட்டினதும் ரொம்பவே சந்தோஷமாயிட்டாரு.

கேகே படிச்சு முடிச்சதும் மார்க்கெட்டிங் துறைக்கு வேலைக்கு போய்ருக்காரு. அவர் சேல்ஸ் மேனா வேலை பார்த்ததாக்கூட சொல்றாங்க. சினிமால பாடகரா அவர் சாதிச்சதை சொல்றதுக்கு முன்னாடி அவர் காதல் கதையை சொல்லியே ஆகணும். ஏன்னா, அவர் இன்டஸ்ட்ரீக்குள்ள வந்து ஜெயிக்கிறதுக்கு முக்கியமான காரணமா இருந்தது அவரோட மனைவிதான். கேகேவும் ஜோதியும் 6-வது படிக்கும்போதுல இருந்து லவ் பண்றாங்களாம். கேகே தன்னோட வாழ்க்கைல ஒரே ஒரு பெண்ணைதான் டேட் பண்ணியிருக்காரு. அதுவும் அவர் மனைவி ஜோதியை மட்டும்தான். 1991-ல ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ‘பியார் தீவானா ஹோதா ஹை’ன்ற பாடலை பாடிதான் ஜோதியை கேகே லவ் பண்ண வைச்சாராம். அவரோட கல்யாணத்தப்போ ‘தேரே மேரே சப்னே’ பாட்டு பாடியிருக்காரு. பாட்டு பாடுறதால அவங்க ரெண்டு பேருக்கும் இடையில நடந்த ஃபன்னியான கான்வெர்சேஷனையும் ஒரு இன்டர்வியூல சொல்லியிருப்பாரு.

ஒரு தடவை கேகே வீட்டுல பாட்டுப் பாடிட்டு இருக்கும்போது அவரோட மனைவி ஜோதி, “தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாதீங்க”னு சொல்லியிருக்காங்க. அதுக்கு கேகே, “நான் பாட மாட்டேனானு வெளியே எவ்வளவு பேர் காத்திருக்காங்கனு தெரியுமா? நிகழ்ச்சிக்குலாம் போகும்போது பெண்கள்லாம் என்மேல வந்து விழுவாங்க”னு சொல்லி ஜோதியை கடுப்பேத்தியிருக்காரு. இருந்தாலும் சில நேரங்கள்ல கேகேவை பாட சொல்லி ஜோதி கேப்பாங்களாம். பேசிக்கலி அவர் ரொம்பவே ஷையான ஆளு. அதனாலயே, அவரோட பசங்ககூட அவரை கலாய்ப்பாங்களாம். காலேஜ் டைம்ல அவர் இருந்த பேண்ட் எங்க போட்டிக்குப் போனாலும் பரிசு வாங்கிட்டு வந்துருவாங்களாம். அவ்வளவு பிரபலமான பேண்டா ஸ்டூடண்ட்ஸ் மத்தியில இருந்துருக்காரு.

கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணதுனாலதான் சேல்ஸ்மேன் வேலைக்கு கேகே போய்ருக்காரு. ஆனால், கல்யாணத்துக்கு அப்புறம் அந்த வேலை அவருக்கு செட் ஆகலை. மியூசிக் மேலதான் இண்ட்ரஸ்டா இருந்துருக்காரு. அப்போ, வேலையை விடலாம்னு முடிவு பண்ணியிருக்காரு. அந்த நாள்கள்ல அவரோட மனைவி ஜோதிதான் கேகேக்கு ரொம்பவே ஹெல்ப்ஃபுல்லா இருந்துருக்காங்க. உண்மையான காதல்னா இதுதான்ல! வீட்டுல கீபோர்டுலாம் வாங்கி வைச்சிட்டு ஜிங்கிள்ஸ்லாம் பாட ஆரம்பிச்சிருக்காரு. சம்பாதிக்க எதாவது பண்ணனும்னு ஹோட்டல்ஸ்ல நடக்குற நிகழ்ச்சிகள்ல பாடிருக்காரு. ஒரு கட்டத்துல அதுவும் சலிச்சுப் போய் மும்பைக்கு சான்ஸ் தேடி வந்திருக்காரு. அவர் மும்பைக்கு போக முக்கியமான காரணம் சிங்கர் ஹரிஹரன். Louis Banks, Ranjit Barot, Leslee Lewis போன்ற பிரபல மியூசிக் டைரக்டர்ஸ்கிட்டலாம் தான் பாடின கேஸட்டைக் கொடுத்து சான்ஸ் கேட்க ஆரம்பிச்சிருக்காரு. அதன்மூலமாதான் விளம்பரப்படங்கள்ல பாடுறதுக்கான வாய்ப்பு அவருக்கு கிடைச்சுது.

சுமார் 3,500 ஜிங்கிள்ஸ் பாடியிருக்காரு, கேகே. ஃபஸ்ட் ஜிங்கிள் பாடிட்டு வந்ததும் எவ்வளவு சம்பளம் வேணும்னு மியூசிக் டைரக்டர் Ranjit Barot கேட்ருக்காரு. அதுக்கு இவருக்கு எவ்வளவு கேக்கணும்னு தெரியலை. 5 விரலை மட்டும் காமிச்சிருக்காரு. ரூ.500 வேணும்னு விரலை காமிச்சிருக்காரு. ஆனால், ரூ.5000 செக் கொடுத்துருக்காங்க. அதைப் பார்த்து ரொம்பவே ஷாக் ஆகி சந்தோஷப்பட்டுருக்காரு. கேகேக்கு பெரிய பிரேக் கொடுத்தது, ஏ.ஆர்.ரஹ்மான்தான். காதல் தேசம் படத்துல கல்லூரி சாலை பாட்டு பெரும் வரவேற்பை பெற்றுக்கொடுத்துச்சு. இந்தில இவர் பாடுன தடப் தடப் கே இஸ் தில் சே பாட்டு அவரை மக்கள் முன்னாடி ஒரு சூப்பர் ஸ்டார் சிங்கரா பிரபலப்படுத்துச்சு. அந்தப் பாட்டு ரிலீஸ் ஆன ஒரே நைட்ல ஃபேமஸ் ஆயிட்டாரு. அதுக்கப்புறம் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம், கன்னடம்னு ஏகப்பட்ட மொழிகள்ல பாடல்கள் பாடியிருக்காரு. திரைப்படத்துல மட்டுமில்ல சின்னத்திரைலயும் இவர் பாடியிருக்காரு. நமக்குலாம் புடிச்ச ஷக்கலக்க பூம்பூம் பாட்டு இவர் பாடினதுதான்.

இசையமைப்பாளர்கள்ல யுவன் எப்படியோ, அதேமாதிரி சிங்கிங்ல கேகே அப்படினு சொல்லலாம். ஏன்னா, யுவன் நிறைய நல்லப் பாடல்களை கொடுத்தாலும் அவருக்கும் விருதுக்கும் ராசியே இல்லை. அதேமாதிரிதான். கேகே நிறைய நல்லப் பாடல்களை கொடுத்து பலரோட மனசை உருக வைச்சிருந்தாலும் அவருக்கு விருதுகள் பெருசா கிடைக்கவே இல்லை. அதை நினைச்சு அவர் கவலையும் பட்டதில்லை. அதேமாதிரி அதிகமா ரியல் லைஃப்ல எங்கயும் அவரைப் பார்க்க முடியாது. அதாவது அஜித் மாதிரி. அவரோட நிகழ்ச்சில மட்டும்தான் அவரை பார்க்க முடியும். ஒரு இசைக்கலைஞனோட மிகப்பெரிய ஆசை என்னவா இருக்கும், பாடிட்டு இருக்கும்போதே நான் இந்த உடலை விட்டு பிரியணும்ன்றதுதான். அப்படித்தான் கேகே தன்னோட இறுதி மூச்சு வரைக்கும் தன்னோட ரசிகர்களுக்காக பாடினாரு. அவரோட பாடல்கள் வழியா நம்மோட எப்பவும் இருப்பாரு.

கேகே பாடுன பாட்டா இதுனு நீங்க ஆச்சரியப்பட்ட தமிழ் பாட்டு எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: சிவாஜி, தர்பார் படங்கள் உருவாக காரணம் லிங்குசாமி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top