மணி சர்மா தெலுங்கில் மட்டுமல்ல; தமிழிலும் சம்பவக்காரர்தான்!

சமீபமா இன்ஸ்டாகிராமை ஓப்பன் பண்ணுனாலே அஞ்சலியும் நிதினும் ஆடுன பாட்டோட ரீல்ஸ்தான் கண்ணுல படுது. அந்தப் பாட்டுக்கும் மணி சர்மாவுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. அது என்னானு இந்த வீடியோவோட கடைசியில சொல்றேன். அதுக்கு முன்னாடி மணிசர்மா தமிழ் சினிமாவுக்கு கொடுத்த ஹிட் லிஸ்ட்டைப் பற்றி பார்ப்போம்.

மணி சர்மா தமிழை விட தெலுங்குலதான் ரொம்பவே ஃபேமஸ். தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகுதான் தமிழில் முதல் படமான நரசிம்மா படத்துக்கு இசையமைச்சார். மணிசர்மா தெலுங்குல நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்திருந்ததால, தமிழிலும் பெரும்பாலும் அந்தப் பாடல்களைத்தான் ரீமேக் பண்ணியிருந்தார். தமிழில் இசையமைத்த முதல் படத்தில் ரீமேக் பாடல்கள் எதுவும் இல்லாமல் ஆல்பத்தை மேக் செய்த மணிசர்மா, லாலா நந்தலாலா என ஹிட் பாடலையும் கொடுத்தார்.  அதன் பிறகு இசையமைத்த ஷாஜகான், ஏழுமலை, யூத் படங்களுக்கு தெலுங்கில் அவர் இசையமைத்து ஹிட்டான 

அண்ணய்யா, குஷி, ஆடி, சிரு நவ்வுடோ, நர்சிம்ஹா நாயுடு படங்களின் பாடல்களை எல்லாம் ரீமேக் செய்திருப்பார். ஷாஜகான் படத்தோட சரக்கு வச்சிருக்கேன்; யூத் படத்தோட அடி இன் இன்ச் பாடல்களை அண்ணய்யா படத்தில் இருந்தும், ஷாஜகான் படத்தின் காதல் ஒரு தனிக்கட்சி, அச்சச்சோ புன்னகை; யூத் படத்தின் சகியே சகியே பாடல்களை குஷி படத்தில் இருந்தும் ரீமேக் செய்யப்பட்ட பாடல்களில் தமிழிலும் செம ஹிட்டாது. அதேப்போல் ஹாஜகான் படத்தில் மெல்லினமே மெல்லினமே, மின்னலைப் பிடித்து; யூத் படத்தில் சக்கரை நிலவே, ஆள்தோட்ட பூபதி என தமிழுக்காக புதிதாக போடப்பட்ட பாடல்களும் வைரல் ஹிட்டானது.

ஷாஜகான், யூத் படங்களுக்குப் பிறகு விஜய் – மணி சர்மா கூட்டணி மேல் ஒரு பெரிய எதிர்பார்ப்பு வந்துவிட்டது. அதன் பிறகு தினா இசையில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்துக்கு கண்ணும் கண்ணும்தான் பாடலை மட்டும் மணி சர்மா அவரது குடும்பா ஷங்கர் படத்தில் இருந்து ரீமேக் செய்து கொடுத்திருப்பார். அதன் பிறகு போக்கிரி படத்தில் இவர்கள் இணையும் போது தெலுங்கு போக்கிரியில் இருந்த டோலு டோலு, என் செல்லப்பேரு ஆப்பிள் பாடல்களை மட்டும் ரீமேக் செய்துவிட்டு மற்ற பாடல்களை எல்லாம் பிரஷ்ஷாக இசையமைத்திருப்பார். ஆடுங்கடா என்னை சுத்தி, வசந்தமுல்லை, மாம்பழமாம் மாம்பழம், நீ முத்தம் ஒன்று கொடுத்தால் என ஒட்டுமொத்த ஆல்பத்தையுமே ஹிட் பாடல்களால் நிரப்பியிருப்பார். அடுத்ததாக இதே கூட்டணியில் உருவான சுறா படத்தில் 6 பாடல்களையும் ரீமேக் செய்திருந்தாலும், ஒரு ஆல்பமாக கம்ப்ளீட் பேக்கேஜாக இருக்கும்.

Mani sharma
Mani sharma

விஜய் – மணிசர்மா கூட்டணியைப் போல் தனுஷ் – மணிசர்மா கூட்டணியில் வந்த படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களில் பாடல்கள் பலவும் அவரது தெலுங்கு பாடல்களின் ரீமேக் என்றாலும் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவையில்லாமல் அரசு படத்தின் மல்லிகை மல்லிகை பந்தலே, அலாவுதீன் படத்தில் உக்கு உக்கு உகாடா, மலைக்கோட்டை படத்தில் ஏ ஆத்தா, காதல்னா சும்மா இல்லை படத்தில் என்னமோ செய்தாய் நீ, தோரணை படத்தில் வா செல்லம் என மற்ற, மற்ற படங்களிலும் நாம் அடிக்கடி முணுமுணுக்கிற பாடல்களை கொடுத்திருக்கிறார்.

இப்போ நான் வீடியோவோட ஆரம்பத்தில் சொன்ன விஷயத்துக்கு வரேன். மச்சேர்லா நியோஜகவர்கம் படத்துல நிதினும் அஞ்சலியும் ஆடுன ரா ரா ரெட்டி பாட்டோட கடைசி பிட் மட்டும் செம வைரல் ஆச்சு. இந்தப் படத்துக்கு இசையமைச்ச மகதீஸ்வரா சாகர், மணி சர்மாவோட பையன்தான். நம்மை ஆடவைக்க மணி சர்மா வீட்டில் இருந்து இன்னொரு ராக்ஸ்டார் வந்துட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top