ஆன்டி இன்டியன்… பாடகர் அறிவு செய்த தரமான சம்பவங்கள்!

பா.ரஞ்சித் பட்டறைல இருந்து வர்றவங்க எல்லாருமே கவனிக்கக்கூடிய ஆர்டிஸ்டாதான் இருப்பாங்க. அரசியல் புரிதலோட கலையை அணுகி கலக்குவாங்க. அந்த கேங்ல உள்ள முக்கியமான ஒருத்தர், பாடலாசிரியர், பாடகர் அறிவு. இளம் வயசுலயே ரஜினி, விஜய், அஜித், தனுஷ்-னு பல பெரிய நடிகர்களோட படங்களுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான பாடல்களை கொடுத்துருக்காரு. அந்தப் பாடல்கள் எல்லாமே செம எனர்ஜியா இருக்கும், கெத்தா இருக்கும், சில பாடல்கள் அந்த நடிகர்களோட அடையாளமாவே மாறியிருக்கு. அதே நேரத்துல சமூக பிரச்னைகளை பேசக்கூடிய நிறைய பாடல்களையும் கொடுத்துருக்காரு. காஸ்ட்லஸ் கலெக்டிவ் டீம் அறிமுகமானப்போ, பா.ரஞ்சித் “அறிவோட வரிகள்லாம் பயங்கரமா இருக்கு”னு ஸ்டேஜ்ல சொன்னது இன்னும் நியாபகம் இருக்கு. இப்போ, அவரோட வரிகள் இன்னும் அதிக பவர்ஃபுல்லா, அதிகாரத்தை கேள்வி கேக்குற ஆயுதமா மாறியிருக்கு. அறிவோட பயணத்தையும் பாடல்களையும் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

Singer Arivu
Singer Arivu

அறிவரசு, அதாங்க நம்ம அறிவோட முழுப்பெயர். அரக்கோணத்தை சேர்ந்த இவர் வழக்கம்போல நம்மள்ல பலர் மாதிரி இஞ்சினீயரிங் ஸ்டுடண்ட்தான். அப்புறம் எம்.பி.ஏ-வும் படிச்சிருக்காரு. சின்ன வயசுல இருந்தே நிறைய புத்தகங்கள் படிக்கிறது, கவிதைகள் எழுதுறதுனு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்ல ரொம்பவே ஆக்டிவா அறிவு இருந்துருக்காரு. சமூகத்தை சார்ந்து, சமூக அக்கறையுடன் சின்ன வயசுல இருந்தே நிறைய கவிதைகளை எழுதியிருக்காரு. சின்ன வயசுல இருந்து எழுதுன கவிதைகளை தொகுத்து ‘குனிந்து வரவேற்கும் குடிசைகள்’னு காலேஜ் படிக்கும்போது ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்ருக்காரு, அறிவு. அவரோட கவிதைகள் சினிமா திரைல காமிக்கிற விஷயங்கள்ல இருந்து முரணா இருக்கும். அதேபோல, ஒரு ஏக்கமும் அவரோட கவிதைகள்ல அதிகமா இருக்கும். காலேஜ் படிக்கும்போது அங்க இருந்த ஒரு மியூசிக் பேண்ட்ல அறிவு இருந்துருக்காரு. அப்போதான் பாட்டு எழுதுற ஆர்வமும் அறிவுக்கு வந்துருக்கு. பேண்ட்ல ராப் பாடல்களை பாட ஆரம்பிச்சிருக்காரு.

Singer Arivu
Singer Arivu

தமிழ் சினிமால நிறைய பேர் சொல்லுவாங்கள்ல, சின்ன வயசுல இருந்து நான் சினிமா பார்த்து வளர்ந்தேன். அப்டினு, ஆனால், அறிவு அப்படிலாம் இல்லை. ரொம்பவே ரேரா சினிமா பார்க்குற ஆளு. காலேஜ் ஃபைனல் இயர் அறிவு படிக்கும்போது அட்டக்கத்தி படம் வந்துச்சு. அந்தப் படம் அறிவுக்கு ரொம்பவே புடிச்சு போச்சு. அட்டக்கத்தில வந்த கால மயில் குயிலே பாட்டு ரொம்பவே அறிவை பாதிச்சுது. அதனால, பா.ரஞ்சித்தோட பல இண்டர்வியூக்களை தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சிருக்காரு. ரஞ்சித்தோட பல உரையாடல்கள் அவருக்கு ரொம்பவே புடிச்சிருக்கு. குறிப்பா, “கலை வழியாக மக்களுக்காக பேசலாம்”னு பா.ரஞ்சித் சொன்னதை அழுத்தமா தன்னோட மனசுல பதிச்சுக்கிட்டாரு. தொடர்ந்து தான் எழுதுற கவிதைகள்ல அதை கொண்டுவந்துட்டும் இருந்தாரு. போட்டிகளுக்குலாம் போகும்போது கிடைக்கிற காசை வைச்சு பாட்டை ரெக்கார்ட் பண்ணி இன்டிபென்டன்ட் ஆல்பம் வெளியிட ஆரம்பிச்சிருக்காரு. காலேஜ் முடிச்சு அறிவு வேலை தேடுற நேரத்துல இண்டிபென்டன்ட் ஆல்பம் பாடல்கள் நிறைய பண்ண தொடங்கியிருக்காரு.

ஒருநாள் பா.ரஞ்சித் வேலூர்க்கு வராருனு அறிவு கேள்விபடுறாரு. டிரெயின்ல போகும்போது நீலம் பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த உதயான்றவரை மீட் பண்றாரு. ட்ரெயின்ல அவரு அயோத்திதாச பண்டிதர் புத்தகத்த படிச்சிட்டு போய்ருக்காரு. அதைப் பார்த்து அறிவு எனக்கும் அவரைத் தெரியும்னு பேச ஆரம்பிச்சிருக்காரு. அப்போ, பா.ரஞ்சித்தை மீட் பண்ணதான் நானும் போறேன்னு ரெண்டு பேரும் பேசிட்டே போய்ருக்காங்க. வேலூர்ல பா.ரஞ்சிக்கிட்ட, உதயா அறிவை நேரடியா கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்தியிருக்காரு. சரியா, ஒரு மாசம் கழிச்சு உதயா அறிவுக்கு ஃபோன் பண்ணி ‘காஸ்ட்லஸ் கலெக்டிவ்னு ஒரு மியூசிக் பேண்ட் ஆரம்பிக்கிறோம். ஆடிஷன் வாங்க’னு கூப்பிட்ருக்காரு. அறிவும் போய் அதுல கலந்துக்குறாரு. அந்த ஆடிஷன்ல அறிவு எழுதின ‘ஆண்ட்ராய்ட் யுகத்து அம்பேத்கர் பேரர்கள்’ன்ற கவிதையை பாடியிருக்காரு. அதைக் கேட்டதும் அறிவை செலக்ட் பண்றாங்க. ரொம்ப பொலிட்டிகலா எழுறனு கலாய்ச்சவங்கலாம் அப்புறம் அறிவை வியந்து பாராட்டுறாங்கனு சொல்லலாம். அறிவோட வாழ்க்கையை மொத்தமா மாத்தின மொமண்ட் அதுதான்.

Arivu - Pa.Ranjith
Arivu – Pa.Ranjith

காஸ்ட்லஸ் கலெக்டிவ்ல கிட்டத்தட்ட 10 பாட்டு எழுதியிருக்காரு. எல்லாப் பாட்டுமே தரமா இருக்கும். அப்புறம் காலா படத்துல நிலத்தைப் பத்தி பாட்டு எழுத பா.ரஞ்சித் அறிவை கூப்பிட்ருக்காரு. கிட்டத்தட்ட 10 நாள் உட்கார்ந்து யோசிச்சு அந்தப் பாட்டை அறிவு எழுதுனாராம். ரொம்ப பவர்ஃபுல்லா ஒவ்வொரு வார்த்தையும் இருக்கும். ஒரு இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்டோட முக்கியமான அம்சமே சமூகத்துல இப்போ நடக்குற விஷயங்களை பேசுறதுதான். அப்படி அறிவு எழுதின ‘சண்டை செய்வோம், கள்ளமௌனி, ஆண்டி இண்டியன், ஸ்னோலின், ஆசிபா, மாட்டுக்கறி, ஸ்டெர்லைட்’ பாடல்கள் எல்லாமே அப்படி இருக்கும். ஒவ்வொரு பாட்டும் அதிகாரத்தை வைச்சு மக்களை ஒடுக்குறதுக்கு எதிரா ஒலிக்கிற குரல்தான். கேள்வி கேக்குற அதே நேரத்துல நமக்குள்ளயும் ஒரு தைரியத்தை அந்த வரிகள் கொடுக்கும். அப்புறம் பட்டாஸ் படத்துல ‘மொவனே என்னை மோதிட வாடா’, ஜிப்ஸில ‘தீவிர வியாதி’, சூரரைப் போற்றுல ‘மாறா தீம்’, மாஸ்டர்ல ‘வாத்தி ரெய்டு’ இப்படி அறிவு பண்ண சம்பவங்களோட லிஸ்ட சொல்லிட்டே போகலாம்.

Singer Arivu
Singer Arivu

‘எஞ்சாய் எஞ்சாமி’ அறிவோட கரியர்ல ரொம்பவே முக்கியமான ஒரு பாட்டு இதுதான். இதனால நிறைய சர்ச்சைகளும் சமீபத்துல வந்துச்சு. இந்தப் பாட்டுல அறிவு சொல்ல வர்ற விஷயம் அவ்வளவு முக்கியமானது. நம்ம முன்னோர்களோட கஷ்டங்களையும் நிலத்தையும் பத்தி இந்தப் பாடல்கள்ல அறிவு சொல்லியிருப்பாரு. சின்ன குழந்தை வரைக்கும் இன்னைக்கு இந்தப் பாடல்களை பாடிட்டு இருக்காங்க. அதேபோல, இந்தியாவோட ராப் ‘ஒப்பாரி’ பாடல்கள்தான்னு அறிவு சொல்லுவாரு. இந்தப் பாட்டுலயும் ஒப்பாரியை கொண்டு வந்துருப்பாரு. அறிவோட முக்கியமான எய்ம்ல ஒண்ணு ரொம்ப ஸ்வீட்டா அம்பேத்கரை இன்னைக்கு இருக்குற குழந்தைங்ககிட்ட கொண்டு போய் சேர்க்கணும்ன்றதுதான். சமூகத்தை சார்ந்து தன்னோட கனவுகளை கொண்டுருக்கக்கூடிய ஆர்டிஸ்ட் கிடைக்கிறதுலாம் இந்த சமூகத்துக்கு முக்கியமான விஷயம்.

அறிவோட பாடல்கள்ல உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top