உன்னி மேனன்

ஹை வோல்டேஜ் வைப்ஸ்.. உன்னி மேனன் பாடுன பாட்டா இதெல்லாம்?

மலையாளம் இன்டஸ்ட்ரீல பிரபலமான பாடகர் ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு ஒரு நாளைக்கு நைட் 11 மணி இருக்கும்போது ஃபோன் வருது, தமிழ்ல நான் ஒரு சின்ன படம் பண்ணப்போறேன். அந்தப் படத்துக்கு நீங்க வந்து பாடி கொடுக்க முடியுமானு அந்த மியூசிக் டைரக்டர் கேக்குறாரு. கண்டிப்பா வறேன்னு அந்த சிங்கர் சொன்னதும். அந்த மியூசிக் டைரக்டர், “நான் முதன்முதலா படம் பண்றேன். நீங்க பாடுற பாட்டு அவருக்கு புடிச்சிருந்தா, பாட்டு படத்துல வரும். இல்லைனா, வாய்ஸ் மாத்திடுவேன். என்னையும் மியூசிக்லாம் ஒரு வேளை புடிக்கலைனா மாத்திடுவாங்க”னு சொல்றாரு. ரெக்கார்டிங்குக்கு நைட்டு அந்த சிங்கர் ஸ்டுடியோ போய்ருக்காரு. அங்கப்போனால், மணிரத்னம், வைரமுத்து எல்லாரும் உட்கார்ந்துருக்காங்க. அந்தப் படம் வெளிய வந்து அந்த மியூசிக் டைரக்டர் நேஷனல் அவார்டே வாங்கிட்டாரு. கெஸ் பண்ணியிருப்பீங்கனு நினைக்கிறேன். ஆமா, அந்தப் படம் பெயர் ரோஜா. அந்த பாட்டு புது வெள்ளை மழை. அதை பாடியவர் உன்னி மேனன்.

உன்னி மேனன்
உன்னி மேனன்

ஒவ்வொரு தடவையும் அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் ரோஜா படம், ஏ.ஆர்.ரஹ்மான், க்யூட்டான அரவிந்த்சாமி, மதுபாலா, அழகான காஷ்மீர், அந்த பனி இதெல்லாம் கூடவே அந்த வாய்ஸும் அப்படி நம்ம மைண்ட்ல வந்து உட்காரு. ஜேசுதாசோட ஒண்ணு விட்ட தம்பி சாயல்ல ஒரு குரலைக் கொண்டிருந்தாலும் உன்னியின் குரலின் இனிமைக்கு ஒரு தனித்துவமும் அழகும் இருக்கு. அதென்னமோ கேரளாவிற்கும் பாட்டுத்திறமைக்கும் இயற்கையாவே பொருத்தம் அமைஞ்சுடுது. உன்னிமேனன் பிறந்தது குருவாயூர்ல. படிச்சதெல்லாம் பாலக்காட்டுல. உன்னிக்கு சின்ன வயசுல பெரிய பாடகன் ஆகணும்னுல்லாம் எந்தப் கனவும் இல்லை. ஸ்கூல் பிரேயர்ல பாடல்கள் பாடிட்டு இருப்பாரு. உன்னிக்குள் இருக்கிற சிறந்த பாடகனை முதல்ல கண்டுபிடிச்சது அவரோட ஸ்கூல்ல இருந்த ‘பெஞ்சமின்’ மாஸ்டர்தான். “தம்பி.. உனக்குள்ள நிச்சயம் திறமை இருக்கு. முன்னால வந்து பாடு” அப்பத்தான் ‘தனக்குள்ள ஒரு பாடகன் இருக்கான்’ற விஷயத்தையே உன்னியால உணர முடிஞ்சது. அதுக்கப்புறம் பாடலை கத்துக்க ஆரம்பிக்கிறாரு. ஸ்கூல், காலேஜ்னு எங்க பாட்டுப்போட்டிக்கு போனாலும் பரிசோட வர்றதுதான் உன்னியோட ஸ்டைல்.

எல்லாருக்குமே இன்ஸ்பிரேஷன் கண்டிப்பா இருக்கும். அப்படிப்பார்த்தா உன்னி மேனனை பாட்டுல அதிகம் இன்ஸ்பைர் பண்ணது முகம்மது ரஃபி, கிஷோர் குமார், எஸ்.பி.பி, ஜேசுதாஸ். அப்போ கேஸட்லாம் கூட கிடையாதாம். ரேடியோல டியூன் பண்ணி இவங்க பாட்டுலாம் கேட்டு மனுஷன் வைப் பண்ணிட்டு இருந்துருக்காரு. இப்படியே போகும்போது, சினிமால பாட்டுப் பாடுறதுக்கான வாய்ப்பு அவருக்கு கிடைச்சிருக்கு. 81-ல் பி.ஏ. சிதம்பரநாத்ன்ற இசையமைப்பாளர்தான் இவரை அறிமுகப்படுத்தினார். ‘அமுதும் தேனும்’ன்ற பாடலைத்தான் முதன் முதலில் உன்னி பாடினார். ஆனால், அந்தப் படம் ரிலீஸ் ஆகலை. இருந்தாலும் அந்த வாய்ஸ்ல என்னமோ இருக்குனு தெரிஞ்சுகிட்ட மியூசிக் டைரக்டர்ஸ் மலையாளத்துல உன்னிக்கு வாய்ப்புகளை அதிகமா கொடுத்தாங்கனே சொல்லலாம். முதல்ல டிராக் பாடிட்டு இருந்த உன்னியோட திறமையைக் கண்டு கொண்ட ஜேசுதாஸ், மெயினா பாட வைக்கிற அளவுக்கு உன்னியின் குரலில் ஒரு ஸ்பெஷாலிட்டி இருந்தது. மலையாளத்தில் ஷியாமின் இசையில் ஏராளமான பாடல்களைப் பாடினார் உன்னி.

ஷ்யாம், இளையராஜா ரெண்டு பேர்கிட்டயும் காமனா வேலை பார்த்த ஒருத்தர் இருந்துருக்காரு. அவர் மூலமா இளையராஜா உன்னியை கூப்பிட்ருக்காரு. அவர் வாழ்க்கைல நடந்த மேஜிக் மொமன்ட்னே அதை சொல்லலாம். கை, கால்லாம் நடுங்கிக்கிட்டே போன உன்னிக்கு ‘வாய்ஸ் டெஸ்ட்’ கூட எடுக்காம உடனே பாட வாய்ப்பு தந்தார் ராஜா. அதுதான் ‘ஒரு கைதியின் டைரி’ படத்துல வரும் அற்புதமான பாடலான ‘பொன்மானே.. கோபம் ஏனோ..’ கமலோட படம், பாரதிராஜா டைரக்ஷன்னு பல பிளஸ் பாயிண்ட்கள் இருந்துச்சு. உடனே தமிழ்ல நிறைய வாய்ப்பு கொட்டியிருக்கணுமா இல்லையா? ம்ஹூம், அது மட்டும் நடக்கலை. ராஜாவோட இசையில் ஏறத்தாழ பதினைந்து பாடல்களைப் பாடினாலும், நிறைய பாடல்கள் வெளிவரவே இல்லை. இருந்தாலும், மலையாளத்துல உன்னியோட பயணம் தொடர்ந்து போயிட்டு இருந்தது. அந்த சமயத்துல 91-ல் இன்னொரு மேஜிக் நடந்துச்சு. அதுதான் ரோஜா படத்துக்கான வாய்ப்பு. அப்புறம் ரஹ்மான் இசையில் இவர் பாடுன எல்லாப் பாட்டும் தாறுமாறு ஹிட்டு. எல்லா எமோஷன்லயும் மனுஷன் ரஹ்மான் மியூசிக்ல பாட்டு பாடியிருக்காரு.

உன்னி மேனன்
உன்னி மேனன்

காதல்ல விழுந்தவங்களுக்கு புது வெள்ளை மழை பாட்டுனா, காதலை நினைச்சு ஏங்கிட்டு இருக்குற பலருக்காகவும் பூங்காற்றிலே பாடியிருக்காரு. அவ்வளவு வலி அந்த குரல்ல, வரிகள்ல தெரியும். கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா? நெஞ்சு நனைகின்றதானு உன்னி மேனன் பாடும்போது, இதயம் அழுற வலி நம்ம காதலிக்கு கேக்கும். அப்படி இருக்கும். ஏ.ஆர் மியூசிக்ல பாடுன பாட்டுல உன்னி மேனன் ஃபேவரைட் பாட்டும் இதுதான். அதேமாதிரி கண்ணுக்கு மை அழகு, வீரபாண்டு கோட்டையிலே, போறாளே பொன்னுத்தாயி, மெல்லிசையேம் காதல் கடிதம் தீட்டவேனு ஒவ்வொரு பாட்டையும் மியூசிக்ல ரஹ்மான் அழகான சிலையா செதுக்குனா, அதுக்கு உன்னி மேனன் வாய்ஸ்ல உயிர் கொடுத்து பெண்ணாக்கி நம்மை காதலிக்க வைச்சிடுவாரு. பூங்காற்றிலே தவிர நதியே நதியே பாட்டு இன்னொரு ஸ்பெஷல் பாட்டுனு சொல்லலாம். ஊ லலல்லா பாட்டும் ஸ்பெஷல்தான். இந்த ஒவ்வொரு பாட்டைப் பத்தியும் ஒரு மணி நேரம் பேசலாம் அவ்வளவு விஷயங்கள் இருக்கு.

ரஹ்மான் மியூசிக்ல மட்டுமில்ல அவருக்கு பிறகு வந்து இங்க கலக்கிட்டு இருந்த நிறைய பேரோட மியூசிக்ல பல சம்பவங்களை உன்னி மேனன் பண்ணியிருக்காரு. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் நிறைய அற்புதமான மெலடிகளைப் பாடியிருக்கார். ‘பெண்ணே.. நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்’, ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ பாட்டுலாம் அப்படி இருக்கும். அதுலயே ரெண்டு வெர்ஷன் இருக்கும். ரெண்டுமே அட்டகாசம்தான். ‘மைனாவே. மைனாவே’ மாதிரி பாட்டுலாம் இனிமேல் கிடைக்குமா? வித்யாசாகர் இசைல ரொம்ப கம்மியாதான் பாடியிருக்காரு. ஆனால், எல்லாமே அவர் கரியர் கிராஃபை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டுப் போச்சுனுதான் சொல்லணும். செம பெப்பியா ‘கண்ணாலே.. மிய்யா.. மிய்யா..’ பாட்டு பாடியிருப்பாரு. சிற்பி இசையில் பாடிய ‘எங்கே அந்த வெண்ணிலா’ செம ஹிட். உலகம் பூராவும் உன்னிக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்த பாட்டு இது. தேவா, யுவன் ஷங்கர் ராஜா, இமான், மணி ஷர்மானு எல்லா மியூசிக் டைரக்டர்ஸ் இசையிலயும் மனுஷன் அருமையான பல பாடல்களை பாடி நம்மளை உருக வைச்சிருக்காரு. விஜய்க்காக உன்னி பாடியது ஒரே ஒரு பாடல்தான். ‘ஷாஜகான்’ படத்துல வரும்.. ‘மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து..’ன்ற பாடல். மணிஷர்மாவோட இசைல கேட்கவே அவ்வளவு அற்புதமா இருக்கும்.

Also Read – தமிழ் சினிமாவில் வசீகரித்த லவ் புரபோசல் சீன்கள்!

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துல ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே’னு பாடல் ஒண்ணு பாடியிருப்பாரு. அதைக் கேட்டா அழுகை வரும், ஆனால், அது தொண்டையை அடைச்சுட்டு நிக்கிற மாதிரி உணர்வை தரும். அம்மா பத்தி வந்த பாடல்கள்ல இந்த பாட்டு பெஸ்ட் பாட்டுனே சொல்லலாம். அடுத்து ஹாரிஸ் மியூசிக்ல இவர் பாடுன பாட்டுக்கு இன்னைக்கு இருக்குற கிட்ஸ்கூட பயங்கரமா வைப் பண்ணிட்டு இருக்காங்க. கமல் நடிச்ச வேட்டையாடு விளையாடு படத்துல பார்த்த முதல்நாளேனு பாட்டு வரும்ல உன்னி மேனன் பாடுனது தான். ப்பா, ஒவ்வொரு வரியும் பியூர் வைப்ஸுக்கான வரிகள்தான். தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பாடியிருக்கிறார் உன்னி மேனன். இதுவரை அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை சுமார் நான்காயிரத்திற்கும் மேல இருக்கும். இது தவிர ஏராளமான இசை ஆல்பங்களையும் உருவாக்கியிருக்கிறார். ரஹ்மான் ஒருதடவை சொல்லுவாரு, உன்னி மேன மாதிர்யான சிங்கர்ஸ் கிடைச்சது என்னோட லக்கினு. எவ்வளவு உண்மைனு அவரோட பாடல்களைக் கேட்டா தெரியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top