நமக்கெல்லாம் பாடகராக பரிச்சயமான தேவன் ஏகாம்பரம் இசையமைச்ச பலே பாண்டியா படத்துல, ‘ஹேப்பி’ங்கிற பாடலில் கிட்டத்தட்ட 20 பாடகர்களை பாட வெச்ச சம்பவம் பண்ணியிருப்பார். தேவனோட கரியரில் இந்த சம்பவம் மட்டுமில்லைங்க, இன்னும் பல தரமான சம்பவங்கள் எல்லாம் பண்ணியிருக்கார். அதையெல்லாம்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போறோம்.
சின்ன வயசுல இருந்தே தேவனுக்கு இசை மேல ரொம்பவே ஆர்வம் இருந்திருக்கு. எவ்வளவு ஆர்வம்னா, ஸ்கூலுக்குப் போற டைம் போக வீட்டில் இருக்கிற நேரத்தில் 4 மணி நேரத்துக்கு மேல கிடார் வாசிப்பாராம். கடுப்பான அவங்க அப்பா, அம்மா அவரோட கிடாரை பிடிங்கி பூஜை ரூம்ல வெச்சு பூடிடுவாங்களாம். அந்தளவுக்கு ஆர்வமா இருந்த தேவன், இன்ஜினீயரிங் படிப்புக்கு 2 வருஷத்துலேயே ப்ரேக் விட்டுட்டு மியூசிக் சைடுல வொர்க் பண்ண வந்திட்டார். தேவன் இசைத்துறைக்குள் பாடகராகணும்னு வரவேயில்லை. இசைக்கருவிகள் வாசிக்கவும்; கருவிகள் இல்லாமலே எப்படி இசையை உருவாக்குறதுனு ரொம்பவே அட்வான்ஸான ஒரு ஆளாகத்தான் சினிமாவுக்குள் வரார். பீட்பாக்ஸ்னு இப்போ ட்ரெண்ட்டாக இருக்குற விஷயத்தை 20 வருஷத்துக்கு முன்னாடியே பண்ணுனவர். இப்போதுமே இதை ரொம்ப வித்தியாசமா பன்ணிட்டு இருக்கார். அதேப்போல், பல பாடல்களில் மெயின் குரலாக இல்லாமல் அங்கு, அங்கு ஹம்மிங் கொடுப்பது; சின்ன சின்ன ராப் பண்றதுனு நிறைய பண்ணியிருக்கார்.
Also Read – எப்படித்தான் இப்படி படம் எடுக்குறாரோ.. அல்போன்ஸ் புத்திரன் மேஜிக்!
தேவனின் ஹிட் பாடல்கள்னு சொன்னா, காதலர் தினம் படத்துல ஓ மரியா; உனக்காக எல்லாம் உனக்காக படத்துல மோனலிசா; கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துல ஸ்மையாய்யா; பெண்ணின் மனதைத் தொட்டு படத்துல உதட்டுக்கும்; குஷி படத்துல மேக்கோரீனா; ப்ரெண்ட்ஸ் படத்துல மஞ்சள் பூசும்; மின்னலே படத்துல ஒரே ஞாபகம்; ஷாஜகான் படத்துல மே மாதம்; பூவெல்லாம் உன் வாசம் படத்துல யுக்தாமுகி; மஜ்னு படத்துல மெர்குரி மேலே; புன்னகைப்பூவே படத்துல வீனஸ் வீனஸ் பெண்ணே; தலைநகரம் படத்துல ஏதோ நினைக்கிறேன்; விடிவி படத்துல அன்பில் அவன்; என்னை அறிந்தால் படத்துல என்னை அறிந்தால்; பார்த்திபன் கனவு படத்துல தீராத தம்மு; ரன் படத்துல இச்சுதா இச்சுதா; புதியகீதை படத்துல வசீயகாரினு பல பாடல்களை சொல்லலாம்.
எப்படி சிங்கர் ஆகணும்னு நினைக்காதவர் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த முதல் வாய்ப்புனால பாடகரானாரோ அதே மாதிரி, கரு.பழனிப்பன் மூலமா நடிகராகவும் மாறுனார் தேவன். பெண்ணின் மனதைத் தொட்டு படத்துலேயும் பூவெல்லாம் உன் வாசம் படத்துலேயும் பாடல்கள் பாடும் போது, இயக்குநர் எழில்கிட்ட உதவி இயக்குநரா இருந்த கரு.பழனியப்பன், தேவனை வாட்ச் பண்ணியிருக்கார். இவர் பண்ற விஷயங்கள் எல்லாம் வித்தியாசமா இருக்கே; இவரை நடிக்க வைக்கலாம்னு அப்போவே முடிவு பண்ணுனவர், தான் இயக்கிய முதல் படமான பார்த்திபன் கனவு படத்துல நடிக்க வெச்சார். அதன் பிறகு, உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான்னு சில படங்களில் நடிச்சார்.
தேவனைப் பற்றி தகவல்கள் தேடும் போது ரொம்ப வித்தியாசமான இருந்தது அவரோட டப்பிங் அனுபவங்கள்தான். ஏன்னா, தேவன் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஆள்ங்கிறனால வெள்ளைக்காரர்களைப் போல் ஆங்கிலமும்; வெள்ளைக்காரர்கள் தமிழில் பேசினால் எப்படி பேசுவார்கள் என்றும் ரொம்பவே நல்லா பேசிக்காட்டுவாராம். அதை சினிமாக்களில் டப்பிங் மூலமும் பேச வைத்திருக்கிறார்கள். லிட்டில் ஜான் படத்தில் ஹீரோ கேரக்டருக்கு இவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏழாம் அறிவு படத்தின் வில்லன் கேரக்டரில் இருந்து அந்தப் படத்தில் வந்த எல்லா சைனீஸ் கேரக்டர்களுக்கும் இவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார். அது போக தூண்டில், விவேகம், டிக் டிக் டிக்னு பல படங்களில் வந்த ஃபாரினர்ஸுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.
தேவனின் திறமைகளை அதிகமாக எக்ஸ்ப்ளோர் பண்ணுனது சூப்பர் சிங்கர் மேடைதான். இசைக்கருவிகளே இல்லாமல் பாடகர்களில் குரல்களை வைத்தே இசையாக்கி, பாடவும் முடியும் என்பதை பல முறை அங்கு நிரூபித்திருக்கிறார். ஒரு முறை லதா மங்கேஷ்கர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்தப்போது அவரும் அவர் குழுவும் சேர்ந்து பண்ணின பர்ஃபாமென்ஸும், எஸ்.பி.பி வந்தப்போது பண்ணின பர்ஃபாமென்ஸும் சூப்பர் சிங்கர் ஆடியன்ஸ் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. அதேப்போல், தேவனின் ஃபன் சைடையும் சூப்பர் சிங்கரின் அதிகமாக பார்க்கலாம். குறிப்பாக, சமீபத்தில் நடந்த சூப்பர் சிங்கர் ஒன்பதாவது சீசனின் ஆடிஷனில் ஒரு போட்டியாளரிடம் அவர் பேசியதைப் பார்த்தாலே உங்களுக்கு புரியும். (வீடியோ க்ளிப்)
தேவன் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்பதை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.