சுரேஷ் பீட்டர்ஸ்… வழக்கம் போல ரஹ்மான் அன்னைக்கு நள்ளிரவுல அந்தப் பாட்டுக்கான கம்போஸிங்ல இருக்காரு… அப்போ இந்த பாட்டுக்கு ஒரு டிராக் பாடனுமேனு யோசிக்கும் போது, அங்க இருந்த அவருடைய நீண்ட நாள் நன்பரும் அவருடைய சவுண்ட் என்ஜினியருமான ஒருத்தரைக் கூப்பிட்டு டிராக் பாட சொல்லி இருக்காரு. அவரும், நான் பேசிக்கா ஒரு ட்ரம்மர்… எனக்கு பாடுறது செட்டாகுமான்னு கேக்க… ரஹ்மான் டிராக் பாட வச்சிருக்காரு. முடிச்சதைக் கேட்டுப் பார்த்த பிறகு ரஹ்மான் நீயே பாடுன்னு சொல்ல… ஒரு Accidental Singer அங்கே பிறக்கிறார். அந்தக் காலத்தில் தூர்தர்ஷனில் வாரந்தோறும் வெளியான ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியில் அந்தப் பாடல் தவறாமல் இடம்பெறும். அதாவது அது அந்தக் கால வைரல். மைக்கேல் ஜாக்ஸன் தமிழில் பாடுவது மாதிரியான ஒரு வித்தியாசமான குரல்… அந்தக் குரலில் இருந்த இளமையும் துள்ளலும் தமிழுக்குப் புதுசு.

தூர்தர்ஷன் ஒளியும் ஒலியும் காலத்தில் இருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வைரல் வரைக்குமே அந்த ஆக்சிடெண்டல் சிங்கர் பாடிய “சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே…” பாடல் ஹிட்தான். அந்தப் பாடலைப் பாடிய சுரேஷ் பீட்டர்ஸ். பாடகராக, இசையமைப்பாளராக புகழ்வெளிச்சத்தில் கோலோச்சிய சுரேஷ் பீட்டர்ஸ், ஏன் குறைவான பாடல்களே பாடினார், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்? எத்தனை வயதில் முதல் முதலில் அவர் மேடையேறி டிரம்ஸ் வாசிச்சிருப்பார்னு நெனைக்குறீங்க… வாவ்டானு சொல்ற மாதிரி இருக்கும்… யோசிச்சு வையுங்க, வீடியோ கடைசியில் பார்ப்போம்.
Also Read – ரஜினிக்கு தேவா.. அப்போ கமலுக்கு யாரு? – எந்த காம்போ பெஸ்ட்?
ரொம்ப சின்ன வயசுல இருந்தே இசையோட அவருக்கு அறிமுகம் இருந்திருக்கு, “பொதுவாவே எனக்கு சின்ன வயசுல இருந்தே தாளமும் ரிதமும் எனக்கு இயல்பா வந்தது” அப்படின்னு சொன்ன சுரேஷ் பீட்டர்ஸ் அவருடைய 15 வயசு வரைக்கும் மும்பையில் தான் வளந்திருக்காரு… அங்க ஆர்.டி.பர்மனோட இசை கேட்டு வளந்தவர் சென்னை வந்த பிறகு எம்.எஸ்.வி, இளையராஜா இசை கேட்க ஆரம்பிக்கிறார். பாலமுரளிகிருஷ்ணா, விக்கு விநாயகம் மாதிரியான கர்நாடக இசை ஜாம்பவான்களிடம் வாசிக்க ஆரம்பிச்சவர், கல்லூரியில் படிக்கும் சமயத்திலேயே விளம்பர படங்களுக்கு ஜிங்கிள்ஸ் அமைக்க ஆரம்பித்து அந்த ஏரியாலயும் கில்லியாக வலம் வந்திருக்கிறார். இதே சமயத்தில் தான் ரஹ்மானும் ஜிங்கிள்ஸ் வாசித்துக்கொண்டு இருந்தார். இரண்டு பேருக்கும் மியூச்சுவல் ஃபிரெண்டான பிரவின் மணி மூலமாக இரண்டு பேரும் அறிமுகமாகுறாங்க… Nemesis Avenue பேண்டில் இரண்டு பேருமே வாசிக்குறாங்க… இந்த சமயத்தில், மின்னல், ஓவியம், காத்திருப்பேன், எங்கிருந்தோ அப்படின்னு சில இண்டிபெண்டண்ட் மியூசிக் ஆல்பங்களை இசையமைக்கிறார்.

பொதுவாவே நூறு வார்த்தையில் கேள்வி கேட்டா, 5 வார்த்தையில் பதில் தர ரஹ்மான், ஒரு நாள் திடீர்னு “big thing is happening..” அப்படின்னு சுரேஷ் பீட்டர்ஸ் கிட்ட சொல்லி இருக்கார்… ரோஜா படத்தைப் பத்திதான் இப்படி சொல்லி இருக்கார். அந்த சமயத்தில் ரஹ்மானுடனே இனைந்து ஆடியோ என்ஜினியர், டிரம்மரா வாசிச்சிருக்கார் சுரேஷ் பீட்டர்ஸ். அப்படி ஜென்டில்மேன் படத்தின் போதுதான் சிக்கு புக்கு ரயிலே பாடவைக்கிறார். அதற்குப் பிறகு இன்னொரு ஆல்டைம் வைரல் ஹிட்டான ‘ஊர்வசி ஊர்வசி…’ பாடலும் பாடுறார். தமிழ் சினிமாவில் ராப் பாடல்களுக்கான அடித்தளமிட்ட பாடல்களில் ஒன்றான ‘பேட்ட ராப்’ பாடலையும் தன்னுடைய ஸ்டைலில் கலக்கி இருப்பார் சுரேஷ் பீட்டர்ஸ். அவர் குரலில் ஒரு பாட்டைக் கேட்டாலே “போதை ஏறிப்போய்… புத்தி மாறிப்போய்…” 90ஸ் கிட்ஸ் சுத்தின ஒரு காலமும் இருந்தது.
ரஹ்மான் மட்டுமில்லாமல், வித்யாசாகர், தேவா, சிற்பி, ஆதித்யன் அப்படி பல இசையமைப்பாளர்களோட இசையில் பாடினவர், அப்படியே கொஞ்ச நாள் காணாமல் போயிட்டார். அவருடைய இரண்டாவது இன்னிங்ஸிலும் ரஹ்மான், கோவிந்த் வசந்தானு பல இசையமைப்பாளர்களுக்கும் பாடி இருக்கார். பாடுவதிலிருந்து காணாமல் போன சமயத்தில் அவரே இசையமைப்பாளராவும் அறிமுகமாகிறார், தமிழில் கூலி படத்தின் இசையமைப்பாளர் அவர்தான். அதற்குப் பிறகு எக்கச்சக்கமான மலையாளப் படங்களுக்கு இசையமைக்கப் போனவர், தமிழில் பாடல்கள் பாடுறதையே குறைச்சுட்டார், ஒரு கட்டத்துல சுத்தமா அவர் பாடுறதையே நிறுத்திடுறார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு ரஹ்மான், வரலாறு படத்தில் இளமை ரீமிக்ஸ் வெர்ஷனிலும், சிவாஜி படத்தில் ‘ஸ்டைல்’ பாட்டிலும் சுரேஷைப் பாட வைக்கிறார். அதற்குப் பிறகு இன்னொரு பத்து வருடங்கள் பாடாமல் தலைமறைவானவரை, கோவிந்த் வசந்தா ‘தம்பி’ படத்தில் ஒரு பாடலில் பாடவைக்கிறார். எலக்ட்ரானிக் இசையைக் கற்பிக்கும் Purple Studio School ஒன்றை தற்போது நடத்தி வரும் சுரேஷ் பீட்டர்ஸின் குரலில் இன்னும் அந்த ஊர்வசி, சிக்குபுக்கு ரயில் ஓடிக்கொண்டே இருக்கிறது. நீங்க நம்பலைன்னா அவரோட யூ-டியுப் சேனல் போய்ப் பாருங்க.
முதல்ல கேட்டேன்ல, அவருடைய முதல் மேடை அனுபவம் எந்த வயசுல இருக்கும்னு. நான்கு வயசாகும் போது மேடையேறி டிரம்ஸில் ரிதமுக்கு ஏற்ற விதத்தில் தாளமிடுகிறார். “அப்பவே எனக்கு மியூசிக்தான் எல்லாம்னு தோண ஆரம்பிச்சுருச்சு” அப்படின்னு ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார். ஆமா, சுரேஷ் பீட்டர்ஸ் உங்க குரலும் அதேதான் சொல்லுது. ரொம்ப கம்மியான பாடல்களே பாடியிருந்தாலும் சுரேஷ் பீட்டர்ஸ் பாடுகளில் எதைக் கேட்கும் போது உங்களுக்கு “ஷாக்கடிக்குது சோனா…” ஃபீல் வந்துச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
Subscribe Tamilnadu Now Youtube channel for more entertaining videos
0 Comments