எஸ்.பி.பி, யேசுதாஸ்க்கு அப்புறமா சவுத் இந்தியால சூப்பர் ஸ்டார் ரேஞ்ச்ல சிங்கரா கலக்கிட்டு இருக்குறது, சித் ஸ்ரீராம் தான். இன்னைக்கு சவுத் இந்தியால இருக்குற டாப் மியூசிக் டைரக்டர்ஸோட ஃபஸ்ட் சாய்ஸ் சித் ஸ்ரீராம்தான். ஒரு செலிபிரிட்டியா வலம் வர்ற… சித் ஸ்ரீராமோட உண்மையான பெயர் என்ன தெரியுமா? பொதுவா படங்கள்ல ஒரு பாட்டுல வாழ்க்கைல முன்னுக்கு வந்துருவாங்க. ஆனால், சித் ஸ்ரீராம் கதைல அவர் ஒரு மெயில்ல முன்னுக்கு வந்துட்டாருனு சொல்லலாம். அந்த மெயில் அனுப்பினது யாரு தெரியுமா? சித் ஸ்ரீராம்க்கு இன்னைக்கு பலரும் ஃபேன். ஆனால், அவர் எந்த சிங்கரோட ஃபேன் தெரியுமா?

சித் ஸ்ரீராம் தொட்ட பாட்டுலாம் இன்னைக்கு வரைக்கும் ஹிட்டுதான், இனிமேலும் ஹிட்டுதான். அப்படி என்ன மேஜிக் அவர்கிட்ட இருக்கு? சிங்கர் சித் ஸ்ரீராமை நல்லாவே தெரியும். அவர் மியூசிக் டைரக்டரா ஆன கதை தெரியுமா? அவர் பண்ண Weird விஷயம் ஒண்ணு இருக்கு… அதைக் கேட்டா என்னயா இப்படிலாம் பண்ணியிருக்கனு நினைப்பீங்க! அவரோட க்ரஷ்க்கு என்ன குவாலிட்டிலாம் இருக்கணும் தெரியுமா? சித் ஸ்ரீராம்க்கு ஹார்ட் பிரேக் ஆனா யார் பாட்டு கேப்பாரு? இதெல்லாம் தெரிஞ்சுக்க வீடியோவை ஃபுல்லா பாருங்க!
Born With Headphone
Born With சில்வர் ஸ்பூன்னு சொல்லுவாங்கள்ல. அதை அப்படியே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணி சித் ஸ்ரீராம் Born With ஹெட்ஃபோன்னு மாத்திடலாம். ஏன்னா, மனுஷன் 3 வயசுல இருந்தே பாட ஆரம்பிச்சிருக்காரு. அந்த வயசுல நாம சரஸ்வதி சபதம் படத்துல வர்ற சிவாஜி மாதிரி… ம்மா… ப்பானு முக்கி முக்கி சொல்லிட்டு இருந்துருப்போம். சித் ஸ்ரீராம் அமெரிக்க ரிட்டர்ன் சிங்கர்னுதான நமக்கு டக்னு நியாபகம் வரும். ஆனால், அவர் பிறந்தது சென்னை மயிலாப்பூர்லதான். அவரோட பெயர் சித்தார்த். அப்பா பெயரை சேர்த்து ஸ்டைலா சித் ஸ்ரீராம்னு வைச்சிருக்காரு. அப்புறமா அவங்க ஃபேமிலியா அமெரிக்கால போய் செட்டில் ஆயிட்டாங்க. சித் ஸ்ரீராமோட அம்மா லதா ஸ்ரீராம் கர்நாடக இசைப்பாடகி. அவங்க சித் ஸ்ரீராமோட 3 வயசுலயே பாட்டு கத்துக்கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க.

திருப்புகழ்ல அவங்க அம்மா ஸ்பெஷலிஸ்டாம். அதனால, தமிழ்ல என்ன டவுட் வந்தாலும் சித் ஸ்ரீராம் அவங்க அம்மாக்குதான் கால் பண்ணுவாராம். அவரோட பேஸ் அப்டினு பார்த்தா கர்னாடிக்தான். ஆனால், ஆர்& பி ஜானர் அவருக்கு ரொம்பவே புடிக்குமாம். அது இதுனு எல்லாத்துலயும் கலக்குவாரு. எல்லா இசையையும் கேட்டு அதோட நுணுக்கங்களை தெரிஞ்சுப்பாரு. ஸ்கூலிங் எல்லாம் அமெரிக்காலதான் பண்ணியிருக்காரு. அப்புறம் பெர்க்லி மியூசிக் காலேஜ்ல சேர்ந்து படிச்சு டிகிரி வாங்கியிருக்காரு. அப்பப்போ சென்னைக்கு மார்கழி இசை விழாலயெல்லாம் வந்து பாடுவாரு. தமிழை இவ்வளவு அழகா அதன் உணர்ச்சிகளோடு சித் உச்சரிக்கிறதுக்கு இதுதான் காரணம். ஆனால், மற்ற மொழிகள்ல பாடுறதுக்கு கொஞ்சம் திணறத்தான் செய்வாராம். சென்னைக்கும் இசைக்கும் சித் ஸ்ரீராமுக்குமான தொடர்பு ஆரம்புத்துல இவ்வளவாதான் இருந்துச்சு.
மெயிலில் வந்த சான்ஸ்
ஒரு கட்டத்துக்கு அப்புறமா ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து நிறைய ஆல்பம் சாங்க்ஸ்லாம் பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்காரு. தமிழ் பாட்டைக் கேக்குற, தமிழ்ல பாட்டைக் கத்துக்குற இல்லைனா இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை தெரிஞ்ச எல்லாருமே அவரோட இசைல ஒரு பாட்டாவது பாடிறனும்னுதான் நினைப்பாங்க. அப்படிதான் சித் ஸ்ரீராமும். ஆஸ்கர் மேடைல தமிழ்ல ரஹ்மான் பேசுனதைப் பார்த்துட்டு இன்ஸ்பைர் ஆகி, தன்னோட பெஸ்ட் பாட்டு ஒண்ணை அவருக்கு மெயில் பண்ணியிருக்காரு. நைஸ் வாய்ஸ்னு ரிப்ளை பண்ணியிருக்காரு. ஒருதடவை சென்னை வந்தப்ப நேர்ல போயும் மீட் பண்ணியிருக்காரு. சித் ஸ்ரீராம்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் எப்படினா… ஒரு ஹீரோ மாதிரி. ‘ரஹ்மான் சார் இல்லைனா, நான் இல்லை’னுதான் சொல்லுவாரு.

கார்ல போகும்போதும் அவங்க அம்மா டிவோஷனல் சாங்க்ஸ், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி சாங்க்ஸ், அது இல்லைனா ஏ.ஆர்.ரஹ்மான் சாங்ஸ்தான் போடுவாங்களாம். இப்படி இருக்கும்போது, ஒருநாள் ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட இருந்து மெயில் வந்துருக்கு. அன்னைக்கு நிச்சயமா தெரிஞ்சுருக்காது அந்த மெயில் தன்னோட தலையெழுத்தையே மாத்தப்போகுதுனு. அப்போ சித் வந்து அமெரிக்கால இருந்துருக்காரு. ஸ்கைப் வழியா ரேபிட் ஃபயர் மாதிரி டக்டக்னு நோட்ஸ்லாம் சொல்லிக்குடுத்து கரெக்டா டைரக்ட் செஞ்சு பாட்டை ரெக்கார்ட் பண்ணி வாங்கியிருக்காரு. சித் ஸ்ரீராமை பயங்கரமா ரஹ்மான் கலாய்ப்பாரு ஒரு மேடைலகூட சீர்காழி கோவிந்தராஜன்னு சித்தை கூப்பிடுவாரு.
தொட்ட பாட்டுலாம் ஹிட்டு
சித் ஸ்ரீராமோட ஃபஸ்ட் படம் மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணில அமைஞ்சுது. ‘கடல்’ அளவுக்கு அந்தப் பாட்டு செம ஹிட்டு. அடுத்து ஷங்கர் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணில வந்த ‘ஐ ’படத்துல பாடினாரு. அதுல ‘என்னோடு நீ இருந்தால்’ பாட்டு. அதுவும் செம ஹிட்டு. ரொம்ப நாள் அந்தப் பாட்டு நம்ம கூடவேதான் இருந்துச்சு. மூணாவது பாட்டு அனிருத் மியூசிக்ல ‘நானும் ரௌடிதான்’ படத்துல வந்த ‘என்னை மாற்றும் காதலே’ பாட்டு. ஃபஸ்ட் மூணு பால்லயும் சிக்ஸ் அடிச்சிட்டாரு. ஹை பிட்ச்லாம் சும்மா பிச்சுட்டு அடிக்கும் இவர் பாடுனா.
என்னய்யா, இதுவரை கேக்காத எதோ ஒரு மேஜிக், உயிரை ஐஸ்கிரீம் மாதிரி உருக வைக்கிற ஃபீல் இவர் குரல்ல இருக்கு. சில பாட்டுலாம் பாடி, அழு அழுனு நம்மள அழ வைச்சிடுறாரு. யார் இவருனு எல்லாரும் கவனிக்க ஆரம்பிச்சாங்க. அடுத்து என்னப் பண்ணப்போறாருனு மொத்த கோலிவுட்டும் உத்துப் பார்த்துட்டு இருந்துச்சு. அப்போ, திரும்பவும் ஏ.ஆர்.ரஹ்மான்கூட சேர்ந்தாரு. ஆனால், அந்த ‘மெய்நிகரா’ பாட்டு அவ்வளவு சிறப்பா வரவேற்பைப் பெறலை. சரி, இனி அவர் பாடுனாலும் போர் அடிச்சிரும். ஸ்பிரிச்சுவல் டோன்ல அவர் வாய்ஸ் இருக்குனு நினைக்கும்போது ஒரு பாட்டு கொடுத்தாரு பாருங்க… உச்சம் அதெல்லாம்.

ரஹ்மான்கூட சேர்ந்து அடுத்து இவர் கொடுத்த அந்தப் பாட்டு இருக்குல… அதை கேக்கும்போது… ரீசண்டா வைப் மீம்லா டிரெண்ட் ஆச்சுல அதுல வர்ற மாதிரி ஏதோ ஒரு கேலக்ஸில பறக்குற மாதிரி இருந்துச்சு. அதாங்க, தள்ளிப் போகாதே பாட்டு. மனுஷனை ஸ்டார் சிங்கர்னு உச்சில கொண்டு வந்து நிறுத்துனது இந்தப் பாட்டுதான். அதுக்கடுத்து சொல்லவா வேணும்? கண்ணான கண்ணே, குரும்பா, அம்மா, மறுவார்த்தை, உன்னை நினைச்சு எல்லாப் பாட்டும் வரிசையா ஹிட்டு. எல்லா இண்டஸ்ட்ரீல இருக்குற மெயின் மியூசிக் டைரக்டர் மியூசிக்லையும் பாடிட்டாரு. இப்படி தொட்டதெல்லாம் ஹிட் ஆகுறதுக்கு ஒரே ஒரு மேஜிக்தான் காரணம், அது சித் ஸ்ரீராமோட குரல். மனுஷனுக்கு கானா பாட்டு பாடணும்னு ஆசை இருக்கு. அதுக்கு தலைவன் தேவாதான் மனசு வைக்கணும்.
மியூசிக் டைரக்டர் சித்
சித் ஸ்ரீராம் பிளே பேக் சிங்கர் ஆவார்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கலையாம். ஏன்னா, ஸ்டார்ட்டிங்ல அவர் கம்போஸராதான் தன்னோட பயணத்தை ஆரம்பிச்சிருக்காரு. சில ஆல்பம் பாட்டுக்குலாம் மியூசிக் பண்ணிட்டு இருந்துருக்காரு. ஆனால், ரஹ்மான்கூட வொர்க் பண்ணனும்னு ஒரு பெரிய கோல் வைச்சிருக்காரு. அது கிடைச்சதும் சிங்கிங்க்கு மனுஷன் ஓடி வந்துருக்காரு. ஒரு கட்டத்துல புதுசா எதாவது பண்ணனும்னு தோணியிருக்கு. அப்போ, வானம் கொட்டட்டும் படத்தோட டைரக்டர் மியூசிக்குக்காக இவரை அப்ரோச் பண்ணியிருக்காங்க.
சித் ஸ்ரீராமும் ஓகே சொல்லிட்டாரு. எனக்கு அந்த ஆல்பத்துல ரொம்ப புடிச்சப் பாட்டு ‘கண்ணு தங்கம் ராசாத்தி’ பாட்டுதான். உருகியிருப்பாரு மனுஷன். லிரிக்ஸூம் ரொம்ப பியூட்டிஃபுல்லா இருக்கும். ஆனால், ஃபன்னான ஒரு விஷயம் என்ன தெரியுமா? சித்துக்கு பல்லவி, சரணம் அப்டினுலாம் சொன்னா என்னனு கேப்பாராம். ஒண்ணுமே புரியாதாம். பாட்டுக்குனு ஒரு ஸ்ட்ரக்சர் இருக்கும்ல அதை வைச்சுதான் மனுஷன் மேட்ச் பண்ணியிருக்காரு. படம் முழுக்க அவர் குரல்தான் இருக்கும். ஆனால், அதுவும் நல்லாதான் இருக்கும்.

என்ன சொன்னாலும் பாட்டுனு வந்துட்டா சித் ஸ்ரீராம்க்கு இந்த மூணு விஷயம்தான் முக்கியம். ஒண்ணு, கர்நாடிக் மியூசிக், ரெண்டாவது ஆல்பம் சாங்க்ஸ் பாடுறது. மூணாவது பிளேபேக் சிங்கிங். வெஸ்டர்ன் மியூசிக்ல மெயின்ஸ்ட்ரீம்ல நம்ம நாட்டுல இருந்து யாரும் பெருசா ஜொலிக்கல. அதனால, அந்த வெஸ்டர்ன்ல நாம கண்டிப்பா ஜொலிக்கணும்னு ஒரு குறிக்கோளோட மனுஷன் வாழ்ந்துட்டு இருக்காரு. இவரோட இங்கிலீஷ் பாட்டுலயும் ஒரு தமிழ் டச் இருக்குற மாதிரி இருக்கும்.
Weird Thing About Him And About Crush
சித் ஸ்ரீராம் ரொம்பவே வால்த்தனம் உள்ளவருதான். படிக்கிற ஃபஸ்ட் பெஞ்ச் டைப்லாம் இல்லை. அவர் பண்ணதுலயே ரொம்ப வியர்டனா விஷயம் என்னனா… அமெரிக்கால அவங்க வீட்டு பக்கத்துல ஒரு கோயில் இருந்துருக்கு. அங்க ஃபங்ஷன்லாம் நடக்கும்போது போவாராம். போய்ட்டு கோயில்ல காணிக்கை போடுவாங்கல்ல அந்தக் காசை தூக்கிட்டு வந்துருவாராம். ஆனால், அது ரொம்ப சின்ன வயசுல பண்ணாறாம்.

சித் ஸ்ரீராமை இம்ப்ரஸ் பண்ணனும்னா உங்களுக்கு சிங்கிங் தெரிஞ்சா போதும். அவருக்கும் நிறைய ஸ்கூல் டே, காலேஜ் டேஸ்லலாம் க்ரஷ் இருந்துருக்காங்க. ஆனால், வீக்லி ஒன்ஸ் க்ரஷ் மாறுவாங்களாம். எப்போ கல்யாணம்னு கேட்டாலும் மனுஷன் தெரியாதுனு போய்டுவாரு.
சித் ஸ்ரீராமின் ஃபேவரைட் சிங்கர்ஸ்
சித் ஸ்ரீராமோட ஃபேவரைட் சிங்கர் ஹரிஹரன். அவர் பாடுன கவர் சாங்க்ஸ்லாம் எடுத்துப் பார்த்தா அதிகமா ஹரிஹரன் பாடுன பாட்டுலாம்தான் இருக்கும். அப்புறம் ரஹ்மானோட சிங்கிங்கும் அவருக்கு ரொம்பவே புடிக்கும். எதாவது ஹார்ட் பிரேக் ஆன மொமண்ட் வந்துச்சுனா, அவர் கேக்குற பாட்டு ரஹ்மான் பாட்டுதான். ரோஜா படத்துல வர்ற பாட்டு, பாம்பே படத்துல வர்ற பாட்டு, உயிரே, ராசாத்தி, கண்டுகொண்டே கண்டுகொண்டேன், வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டுலாம் அவருக்கு ரொம்பவே புடிக்கும்.

‘மாடர்ன் பாகவதர்’னு சித் ஸ்ரீராமை சொல்லுவாங்க. அவரு உள்ளத்தில் நல்ல உள்ளம் பாட்டோட கவர் வெர்ஷன் ஒண்ணு பாடியிருப்பாரு. ரொம்பவே இழுத்துக் கொண்டுபோய்ருப்பாரு. அதையெல்லாம் நெட்டிசன்கள் வைச்சு செஞ்சிருக்காங்க. இந்த மாதிரி மட்டும் பண்ணாமல், சிங்கிங்ல கொஞ்சம் வெரைட்டி காட்டுனா மனுஷன் இன்னும் பெரிய இடத்துக்குப் போவாரு. அப்டியே ஆல்பம்ல கான்சென்ட்ரேட் பண்ணா அதுலயும் ஒரு கலக்கு கலக்குவாரு சித் ஸ்ரீராம் பாட்டுல உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: கார்த்திக் – கவுண்டமணியின் காமெடி மேஜிக்!





I am extremely impressed along with your writing abilities and also with the structure on your blog. Is that this a paid theme or did you customize it your self? Anyway stay up the excellent high quality writing, it is uncommon to peer a nice weblog like this one today!
What’s up to all, it’s actually a nice for me to ppay a visit
this web page, iit consists of priceless Information. https://w4i9o.mssg.me/
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp