அனிருத்

அனிருத் – ரஜினி.. அனி – விஜய்.. அனி – தனுஷ்.. அனி- சிவா.. எந்த காம்போ பெஸ்ட்.. எது ஃபஸ்ட்?

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதினு முன்னணில இருக்குற எல்லா நடிகர்களுக்கும் மியூசிக் பண்ண, பண்ணிட்டு இருக்குற இசையமைப்பாளர்னா, அனிருத்தான். ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி வருவாருனு எந்த நேரத்துல ரஜினிகிட்ட தனுஷ் சொன்னாருனு தெரியல. அவரை மாதிரி ஒரே நேரத்துல எல்லா முன்னணி ஹீரோக்கும் எல்லா முன்னணி டைரக்டர்ஸ்கூடவும் சேர்ந்து தீ பிடிக்கிற மாதிரி ட்யூன் போட்டுட்டு இருக்காரு. அனிருத் காம்போனு சொன்னாலே டைரக்டர்ஸ தாண்டி அனிருத் – ரஜினி.. அனிருத் – விஜய்.. அனிருத் – தனுஷ்.. அனிருத் – சிவகார்த்திகேயன் காம்போ எப்பவும் ஸ்பெஷல். இவங்க சேர்ந்தா என்ன மேஜிக் நடக்குது? ஏன் ஸ்பெஷல்? எந்த காம்போ பெஸ்ட்?

அனிருத் – ரஜினி

ரஜினி
ரஜினி

வேதாளம், விவேகம், தானா சேர்ந்த கூட்டம்னு அனிருத் மியூசிக் பண்ண பல படங்கள் படுத்துக்கிடந்த நேரம், பேட்ட படத்துக்கு அனிருத் மியூசிக்னு அனௌன்ஸ்மென்ட் வருது. என்னது தலைவர் படத்துக்கு இவரா, ம்க்கும் என்ன பண்ணப்போறாரோனு சிலர்.. கார்த்திக் சுப்ராஜ் டைரக்‌ஷன், தலைவர் நடிக்கிறாரு, கண்டிப்பா கதை பட்டாசா இருக்கும், அனிருத் கொளுத்தி விட்ருவாருனு எதிர்பார்ப்புல சிலர்.. இப்படியான சூழல்லதான் மாஸ் மரணம் பாட்டு ரிலீஸ் ஆச்சு. சோஷியல் மீடியாவே பத்திக்கிச்சு. தியேட்டட்ல இந்தப் பாட்டு விஷுவல் எப்படி இருக்கும்னு நினைச்சே, வைப் பண்ணிட்டு இருந்தாங்க. இளமை திரும்புதேனு விண்டேஜ் ரஜினி வைப் பாட்டு, உல்லாலா உல்லாலானு வாழ்க்கையை எஞ்சாய் பண்ணுடானு சொல்ற பாட்டுனு ஒவ்வொரு பாட்டையும் பிச்சுட்டாரு. தீம் மட்டும் லிஸ்ட் எடுத்தாலே மதுர பேட்ட தீம்ல தொடங்கி பேட்ட பராக் தீம் வரைக்கும் குட்டி குட்டியா படம் முழுக்க ஏகப்பட்ட சர்பிரைஸ் வைச்சுருப்பாரு. அனிருத் தலைவர் ஃபேன் மேக்ஸ்னு கார்த்திக் சொன்னது எவ்வளவு உண்மைனு இந்தப் படத்துல தெரியும்.

ரஜினியோட தர்பார் படத்துக்கும் அனிருத்தான் மியூசிக்னு சொன்னதும், எதிர்பார்ப்பு எகிறுச்சு.. ஏன்னா, பேட்ட சம்பவம் அப்படி. ரஜினி ஓப்பனிங் சாங்க்னு சொன்னாலே எஸ்.பி.பிதான் நியாபகம் வருவாரு. அந்த பாயிண்டை புடிச்சு ரெண்டு படத்துலயும் ஓப்பனிங் பாட்ட அவரை பாட வைச்சிருப்பாரு. அதுலயே என்னோட தலைவருக்கு நான்தான்டா பண்ணுவேன்னு அனிருத் கங்கனம் கட்டிட்டு சுத்துனது தெரியும். சும்மா கிழி பாட்டுல ரஜினி, ஐயோ, சூப்பர்.. தியேட்டர்ல இந்தப் பாட்டுக்கு கிழிதான்னு சொல்லுவாரு. தியேட்டர் அந்தப் பாட்டுக்கு ரசிகர்கள் ஸ்கிரீனை மட்டும்தான் கிழக்கல. அவ்வளவு வைப். ஆனால், தலைவா.. தலைவா.. தலைவானு போட்ட தீம்லதான் கொஞ்சம் டயர்ட் ஆகிட்டாங்க. ஜெயிலர்ல டைட்டில் தீம்லாம் கேட்கும்போதே அவ்வளவு கூஸ்பம்ப்ஸ் வந்துச்சு. கண்டிப்பா அனிருத் – ரஜினி காம்போல பெஸ்ட்டா அது இருக்கும்னு நம்புவோம். இந்தக் கூட்டணி ரிசல்ட் வர்றதுக்குள்ள ஞானவேல் – ரஜினி படத்துக்கும் அவர்தான் மியூசிக்னு சொல்லிட்டாங்க. அனிருத் எவ்வளவு பெரிய ஃபேனா இருந்தாலும், இந்த லிஸ்ட்ல ரஜினி – அனிருத் காம்போ பெஸ்ட்டானு கேட்டா.. இல்லை. 4 வது இடம்தான்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ஸ்க்ராட்ச்ல இருந்து தொடங்கி கரியரை ஒரேமாதிரி எடுத்துட்டு வந்தது அனிருத், சிவகார்த்திகேயன்தான். சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப மோசமான பாட்டு கொடுத்ததும் அனிதான். அவர் கரியர்ல பெஸ்ட் பாட்டு, பெஸ்ட் தீம் எல்லாமே கொடுத்ததும் அனிருத் தான். ஃபஸ்ட் ரெண்டு பேரும் சேர்ந்தது, எதிர் நீச்சல்ல. ஒரு ஹீரோ வள்ர்ந்து வர்றதுக்கு பாட்டோட பங்கு ரொம்ப முக்கியமானது. அதுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள், விஜய். அவருக்கடுத்து எல்லாப் படத்துலயும் ஒரு பாட்டாவது பெஸ்ட்டா அமையுறது சிவகார்த்திகேயனுக்குதான். எதிர் நீச்சல்ல, பூமி என்ன சுத்துதே பாட்டுலாம் சிவகார்த்திகேயனை வெல்கம் பண்ண பாட்டு. நிறைய பேரை ஈஸியா கனெக்ட் பண்ற பாட்டு. அடுத்து மான் கராத்தே.. படமா பார்த்தா செம மொக்கை. ஆனால், பாட்டுலாம் தனி ரகம். மாஞ்சா போட்டுதான், டார்லிங்கு டம்பக்கு, உன் விழிகளில், ஓப்பன் தி டாஸ்மாக்னு எல்லாமே வைப் ரகம். இந்தப் படம்லாம்தான், அனிருத் தனக்கான ஸ்டைலை ஃபிக்ஸ் பண்ணிட்டு வந்த படங்கள்னு சொல்லலாம். சிவகார்த்திகேயனுக்கு இந்தாங்க ப்ரோ வைச்சுக்கோங்க, உங்களுக்காகதான்னு ஒரு ஆல்பம் பண்ணி கொடுத்ததுனா.. காக்கி சட்டைதான். செம ஸ்வாக்கான மியூசிக். ஒவ்வொரு பாட்டும் அவ்வளவு ஸ்டைலிஷா இருக்கும். இந்த காம்போல மொக்கை ஆல்பம்னா ரெமோதான். நோ கமெண்ட்ஸ்.

தமிழ் சினிமால ஒரு படம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல், அந்தப் படம் பெயர் சொன்னால் பாட்டும் தெரியாமல் இருக்குதுனா வேலைக்காரன்தான். ஆனால், பாட்டுலாம் நிஜமாவே நல்லாருக்கும். புதுசா சில விஷயங்களை ட்ரை பண்ணியிருப்பாரு. கிளைமாக்ஸ்ல எல்லார் வீட்டுலயும் லைட் போடுற சீன்ல வர்ற மியூசிக்கை கேட்டாலே புரட்சி செய்யலாம்னு தோண வைக்கிற கூஸ்பம்ப்ஸ் வரும். இறைவா பாட்டுல மெலடி இருக்கும்.. திடீர்னு ஹைபிச் போவாரு.. இப்படி போய்ட்டே இருக்கும். சிவகார்த்திகேயன் துவண்டு போய்ருந்த சமயத்துல தூக்கி விட்ட ரெண்டு படங்கள், டாக்டர்.. டான். ரெண்டுலயும் மியூசிக் சும்மா பட்டாஸ். டாக்டர் சோல் ஆஃப் டாக்டர் தீம்லாம் நிறைய பேரோட ரிங்டோன். அதேமாதிரி ப்ரைவேட் பார்ட்டி, ஜலபுலஜங்கு, செல்லம்மாலாம் கிளப்ஸ், பார்ட்டிலலாம் போட்டு வைப் பண்ணிட்டு இருக்காங்க. இப்படி சிபா கரியர்ல அனிருத்தும் அனிருத் கரியர்ல சிவாவும் முக்கியமான பங்கு வகிச்சிருக்காரு. எல்லாத்தையும் தாண்டி ரெண்டு பேருக்கும் இடைல இருக்குற பெர்சனல் பாண்டிங் வேறமாறி.. வேறமாறி..! இருந்தாலும் தனுஷ், விஜய் கம்பேர் பண்ணும்போது சிவகார்த்திகேயனுக்கு மூணாவது இடம்தான்.

தனுஷ்

தனுஷ்
தனுஷ்

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எப்பவும் எதிர்பார்க்குற கூட்டணி DNA காம்போதான். டி இல்லைனா, ஏ இல்லைனு அனிருத்தே சொல்லியிருக்காரு. ரெண்டு பேரும் சேரும்போது அப்படி என்னதான் மாயமோ, மந்திரமோ தெரியல.. அப்படியொரு மேஜிக் நடக்கும். ஆல்பத்துல ஒரு பாட்டாவது கொலவெறி, வாட் எ கருவாடு, தாய்க்கிழவினு எதாவது ஒரு வார்த்தையை வைச்சு அதை டிரெண்டாக்கியும் விட்டுட்றாங்க. திருச்சிற்றம்பலம் ஆடியோலாஞ்ச்ல அனிருத், “நான் அவர்கூட சேர்ந்து வொர்க் பண்ண எல்லா படத்துக்கும் ஒவ்வொரு பாட்டுக்கும் ரீரெக்கார்டிங்க்கும் எங்கூட வந்து இருப்பாரு. வேற நடிகர்கள் யாரும் இதுவரை வந்ததில்லை”னு சொல்லுவாரு. அதுனாலயே அந்த மேஜிக் நடக்குறதா இருக்கும். ரெண்டு பேரும் சேர்ந்து வெரைட்டியான அவ்வளவு பாடல்களை கொடுத்துருக்காங்க. காதல் ஆரம்பத்துக்கு இதழின் ஒரு ஓரம், விழுந்த பிறகு கண்ணழகா, தோல்விக்கு கொலவெறி, பிரிவுக்கு போ நீ போ, வாழ்க்கை போர்க அடிக்கிறதுக்கு ஏ இங்கப்பாரு, சிங்கிள் பசங்க வாழ்க்கைக்கு ஊதுங்கடா சங்கு, பார்ட்டிக்கு வாட் எ கருவாடு, அம்மாக்கு அம்மா அம்மா, மாஸ்க்கு மாரி தர லோக்கல் – வி.ஐ.பி தீம் சாங், ஸ்வேக்குக்கு மாரி ஸ்வாக், வாழ்க்கை தத்துவத்துக்கு தப்பாதான் தெரியும், கேர்ள் பெஸ்டிக்கு தாய்க்கிழவி, குழப்பமான ஃபீலிங்குக்கு மயக்கமா கலக்கமானு பல எமோஷன்ஸ்ல கலக்கியிருக்காங்க. இவங்க காம்போல தங்கமகன் தவிர மீதி எல்லாமே பெஸ்ட் ஆல்பம்தான். தங்க மகன் மட்டும்தான் சுமாரா இருக்கும். நிறைய பேரால கண்டிப்பா ஏத்துக்க முடியாது இருந்தாலும் சொல்றேன்.. இந்த காம்போக்கு ரெண்டாவது இடம்தான்.

Also Read – அட்லீயால மட்டுமே இதெல்லாம் முடியும்.. நிஜமாவே மாஸ்யா நீங்க!

அனிருத் – விஜய்

வித்யாசாகர்கிட்ட, சார்.. படத்துல விஜய்தான் ஹீரோனு சொன்னா.. என்ன மாதிரி இறங்கி 4,5 டிரம்ஸ்லாம் உடைச்சு பிரிச்சு விடுவாரோ.. அந்த வைப்ல இப்போ இருக்குறது அனிருத் தான். விஜய்னு சொன்னா எங்க இருந்துதான் பாட்டுலாம் போடுவாருனு தெரியல. இதுவரைக்கும் விஜய்க்கு மூணு படத்துக்கு அனி மியூசிக் போட்ருக்காரு, ஒரு பாட்டுகூட ஆவரேஜா இருக்கும்னு சொல்ல முடியாது. அனிருத்தோட கரியரை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டுப் போனது விஜய் படம்தான். அந்தப் பாசத்தாலயோ என்னவோ, மனுஷன் சம்பவங்களா பண்ணிட்டு இருக்காரு. கத்தி படத்துல மோஷன் போஸ்டர்ல தொடங்கி சின்ன சின்ன இடம் வரைக்கும் அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா மியூசிக் பண்ணியிருக்காரு. அனிருத்தோட டாப் 5 பி.ஜி.எம்ல கத்தி தீமுக்கு எப்பவும் ஸ்பெஷல் இடம் உண்டு. செல்ஃபி புள்ள, நீ யாரோ, பக்கம் வந்துலாம் எல்லாரும் கேட்ட பாட்டுதான்.. பாலம்னு ஒரு பாட்டு இருக்கும். செமயா இருக்கும். அடுத்து ரொம்ப நாள் இணையவே இல்லை. ஆனால், மாஸ்டர்ல சேர்ந்து மாஸ் பண்ணிட்டாங்க. ஓப்பனிங்க்ல லிரிக்ஸ் இல்லாமல் வாத்தி கம்மிங்னு வெறும் மியூசிக்க வைச்சு வைப் பண்ண வைச்சதுலாம் செம.

விஜய்
விஜய்

கொரோனா வந்து பலரும் டல்லா இருந்த நேரத்துல குட்டி ஸ்டோரி ரிலீஸ் பண்ணாங்க, புது ஐடியா, டோன் எல்லாமே சேர்ந்து அந்தப் பாட்டுக்கு நம்மள அடிமை ஆக்கிடுச்சு. வாத்தி ரெய்டு, பொளக்கட்டும் பற பற, போனா போகட்டும், அந்த கண்ண பார்த்தாக்கனு ஒரு பாட்டுக்கூட போர் அடிக்க வைக்காது. குறிப்பா, மாஸ்டர் தி பிளாஸ்டர்லாம் ரிங்டோன் ரகம். அடுத்து பீஸ்ட்.. படம் புடிக்கல. நல்லால்லனு ஆயிரம் சொல்லலாம். ஆனால், அரபிக்குத்து 500 மில்லியனைத்தாண்டி வேர்ல்டு ஹிட்டு. இதுக்கு முன்னாடி வைரல் ஆன கொலவெறிகூட இவ்வளவு வியூஸ் வரலை. அந்தப் பாட்டுக்காவே தியேட்டருக்கு போனவங்கலாம் இருக்காங்க. எக்ஸாம்பிள்க்கு நம்ம ப்ளூ சட்டை மாறன். அதுக்காவே போய்ருக்காப்டி. அப்புறம் பீஸ்ட் மோட் திரை தீப்பிடிக்கும், வெடி வெடிக்கும்னு எல்லாரையும் முணுமுணுக்க வைச்சுட்டாரு. அஜித் ஃபேன்ஸ்லாம் இந்த மாதிரி எங்க தலைக்கு ஒரு பாட்டு போட்டு குடுறா அனிருத்தேனு கத்திட்டு இருக்காங்கனா சும்மாவா? கடைசியா லியோ பாட்டு எடுத்துப்போம், அவ்வளவு ஸ்டைலிஷ்னஸ் இருந்துச்சு. கடைசில லியோ, லியோ, லியோனு வரும்போதுலாம் சில்லறைதான். இப்படி இந்த காம்போ ஒரு பாட்டுலகூட நம்மள ஏமாத்தல, அதுனால ஃபஸ்ட் பிளேஸ்.

உங்களோட ஃபேவரைட் காம்போ எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top