நான் சொல்லப்போற விஷயத்துல 5-வதா வர்ற ஃபேக்ட் இருந்தா.. யோசிக்கவே வேண்டாம். நீங்களும் சீமான் வேற இல்லை. ஒண்ணு தான். அப்படி என்னவா இருக்கும்? யோசிங்க.
ஏன்டா, நைட்டு தூங்க மாட்றனு கேட்டா.. நான்தான் பேட் மேன் அப்டின்ற விஷயத்தை எப்படி சொல்லுவேன்னு வாயை பொத்தி அழுற எல்லா பயலும் சீமான்தே. சத்திய தலைவனின் பிள்ளை சத்தியம் பேசணும்னு சீமான் அண்ணே விடுற கதைகள் இருக்கே. அதுக்கு டஃப் கொடுக்குற மாதிரி நம்ம கேங்க்லயும் ஒருத்தன் இருப்பான். ஸ்பைடர் மேன் படம் வந்த புதுசுல பொருட்காட்சிக்கு போய் ஸ்பைடர் மேன் பொம்மை வாங்கிட்டு நான்தான் ஸ்பைடர்மேன்னு சுத்திட்டு, சிலந்தி கடிச்சா ஸ்பைடர் மேன் ஆகலாம்னு நம்பிட்டு, பவர் ரேஞ்சர்ஸ் பார்த்ததும் நான் தான் ரெட் ரேஞ்சர்னு சொல்லிட்டு, ஷக்திமான் பார்த்து மாடில இருந்து குதிச்சு அடிபட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிட்டு இருக்குற எல்லா 90’ஸ் கிட்ஸும் சீமான் தான். நான் சொன்ன எல்லா கதைகளுக்கும் டஃப் கொடுக்குற கதைகளை கட்டி அளந்து விடுற சீமான் அண்ணனை நம்புற ஒவ்வொரு தம்பியும் சீமான்தான். சினிமா பையன்னு ஒருத்தர் இருக்காரு. அவர் கதைகள் இன்டர்வியூலாம் கேட்டா.. சீமான் அண்ணனுக்கே டஃப் கொடுப்பீங்க போலயேனு தோணும்.

பரோட்டா, பிரியாணினு தேடித்தேடி போய் சாப்பிட்டு தெம்பா வந்து நிக்கிற எல்லாரும் சீமான் அண்ணனானு கேட்டா.. அக்சப்ட் பண்ணிக்க முடியாது. அரைகிலோ கறி வாங்கிட்டு வந்து இட்லி மாவுக்கூட கறியை வைச்சு அதை அப்படியே சுட சுட எடுத்து புட்டு சாப்பிட்டா அவங்க சீமான். அந்த அளவுக்கு போகலைனாலும் பரவால்ல.. இட்லியை கறிக்கொழம்பு இருந்தா மட்டும்தான் சாப்பிடுவேன்னு சிலர் இருப்பாங்க. அவங்கலாம் கண்டிப்பா சீமான் தான். உடும்புக்கறி, மான் கறி, ஆமைக்கறி, காக்கா கறி, புறாக்கறி, வான்கோழி கறி, நாட்டுக் கோழி குழம்புனு தேடித்தேடி சாப்பிட்டீங்கனா கண்டிப்பா அண்ணன் செட்டுதான். முக்கியமான விஷயம் அண்ணன் இங்க சாப்பிட்டேன்னு சொன்னா தூக்கி உள்ள வைச்சுருவாங்கனு சேஃபா இலங்கைல சாப்பிட்டேன்னு சொல்லிட்டு சுத்துறாரு. நீங்களும் அதையே மெயிண்டேன் பண்ணிக்கோங்க. சீமான் அண்ணன் சொன்னதுல எல்லாமே ஓக்கே.. ஆனால், அங்க இவர் சாப்பிட சாப்பிடு சம்பலை 2 முறை தொட்டார், கறியை 3 முறை சாப்பிட்டார், சாம்பார் ஊற்றினார்னு அவர் போன கேங்க்ல ஒருத்தட் நோட் பண்ணாருனு சொன்னாருல. அதுலாம் கிரியேட்டிவிட்டியின் உச்சம்.

பாண்டிராஜ் படங்கள்ல வர்ற குடும்பம்தான் ரொம்பவே பெருசுனு ரொம்ப நாளா நீங்க நினைச்சுட்டு இருந்தீங்கனா. அதுதான் தப்பு. சீமான் குடும்பம் கேள்விப்பட்ருக்கீங்களா? தமிழ்நாடு, இலங்கைனு பூரா மக்களையும் முறை சொல்லிதான் கூப்பிடுவாரு. கேட்டா குடி பெருமைன்னுவாரு. குடிக்கிறதுல என்னங்க பெருமைனு கேக்கணும். சித்தப்பா சீமான்கிட்ட அதெல்லாம் கேட்க முடியாது. இலங்கைல போர் நடந்தப்போ அண்ணன் இவரைக் கூப்பிட்டு சோறுபோட்டு, நான்தான் இதெல்லாத்துக்கும் டைரக்ஷன்னு சொல்லியிருக்காரு. அண்ணி, மனைவி கறி இட்லிலாம் சமைச்சு போட்ருக்காங்க. பாரதி ராஜா இவருக்கு அப்பா, சிவாஜி இவருக்கு ஐயா, ஜெயலலிதா அம்மையார், அப்பா மணிவண்ணன் இப்படி இந்த லிஸ்ட்ட போட்டுட்டு போய்கிட்டே இருக்கலாம். ஸ்கூல்லலாம் ஃப்ரண்ட்ஸ சில நேரங்கள்ல பெரியப்பா, சித்தப்பா, மாமா, மச்சான்னு எதாவது உறவு பெயரை சொல்லி கூப்பிடுவோம். இல்லைனா அப்பா பெயரை சொல்லி, சிவசாமி மொவனேனு இப்படிலாம் சொல்லி திரிவோம். அந்த கேங்க்ல நீங்களும் ஒரு ஆளா இருந்தா, டவுட்டே வேணாம் நீங்க கண்டிப்பா சீமானாதான் இருப்பீங்க.
Also Read – `என்ன வேணாலும் பண்ணுங்க பாஸ்… இதைப் பண்ணாதீங்க ப்ளீஸ்’ – ஹீரோக்களின் கெட்-அப் ரோஸ்ட்!
கத்தி பேசுனா உண்மைனு நம்புறது சீமான்தான். நம்ம கேங்க்லயும் ஒருத்தன் தொட்டதுக்கெல்லாம் கத்திட்டு ஷார்ட் டெம்பரா சுத்திட்டு இருப்பான். அவனைக் கூப்பிட்டு நீ யாருக்கு ஓட்டுப் போடுவன்னு கேட்டா சீமான்னு சொல்லுவான். ஒருவேளை அவன் எட்டாவதோட படிக்கிறதை நிறுத்தியிருக்ககூட வாய்ப்பிருக்கு. அதேமாதிரி, வட்ட வட்ட பாறையில, உன் உதட்டோட சிவப்பேனு கிராமத்து காவியமான பாடல்கள் நிறைய இருக்கு. அதை முணு முணுப்பாரு. நீங்களும் அடிக்கடி அந்த மாதிரி பாட்டை பாடுனா, சீமான்தான். எள்ளு வய பூக்கலையே பாட்டுக்கூட அவரோட பாட்டுதான். கடைசி பாய்ண்ட் என்னனா, உங்க கேங்க்ல பிளேபாய்னு ஒருத்தர் இருப்பாரு. ஏன் அந்த பிளேபாய் நீங்களாகூட இருக்கலாம். அப்படி சாட் ஓப்பன் பண்ணாலே நிறைய பொம்பளை புள்ளைங்க இருந்தாங்கனா.. அவங்க கண்டிப்பா சீமான்தான். என்னடே, கேஸ் வாங்க ரெடியாடே!
அண்ணனை மாதிரி உங்க கேங்க்ல இருக்குற ஆளை மறக்காமல் கமெண்ட்ல டேக் பண்ணிவிடுங்க. வீரமே ஜெயம்!
0 Comments