* பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ படத்தில் மாறு கண் வேடத்தில் நடித்தார் விஷால். இந்தப் படத்திற்காக தன்னுடைய இயல்பான கண்களை மாற்றிவைத்து நடித்ததால் அதன் பின்விளைவுகள் இன்றுவரை விஷாலுக்கு இருந்துவருகிறது.
* நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல், ஆர்.கே.நகர் தேர்தல் என வரிசையாக தேர்தல்களில் நின்றுகொண்டிருந்த காலத்தில் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர் ஒருவரை தன் கூடவே வைத்திருந்தார் விஷால்.

* ஆர்யாவும் விஷாலும் ஜிகிரி தோஸ்துகள். உடற்பயிற்சி விஷயங்கள்தான் இருவருக்கிமிடையே நட்பை ஏற்படுத்திய முக்கிய காரணி.
* விஷாலுக்கு பெரும் திருப்புமுனையைத் தந்த ‘சண்டக்கோழி’ படத்தின் இயக்குநர் லிங்குசாமியும் விஷாலும் அதற்கு முன்பிருந்தே நண்பர்கள். அதாவது, விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தயாரித்த ‘மகாபிரபு’ படத்தில் லிங்குசாமி உதவி இயக்குநர். அப்போது விஷால் ஸ்கூல் மாணவர் அப்போதிருந்தே இருவருக்குமிடையே நட்பு இருந்திருக்கிறது.
* ஷூட்டிங் பிரேக் டைமில் எப்போதாவது புத்தகங்கள் படிப்பார். அப்படி படிக்கும்போது எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை படிப்பது அவரது வழக்கம்.
* விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணா. இவரும் ஹீரோவாக சில படங்களில் நடித்திருக்கிறார். ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த ‘பூப்பறிக்க வருகிறோம்’ படத்தின் ஹீரோ விக்ரம் கிருஷ்ணாதான்.

* ஆரம்பத்தில் விஷால் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பதால், மற்ற நடிகர்களைவிட அதிக அளவில் டைரக்சன் அறிவு இவருக்கு உண்டு. அதனாலேயே ‘துப்பறிவாளன்-2’ படத்திலிருந்து மிஷ்கின் விலகிவிட, தானே அந்தப் படத்தை டைரக்ட் செய்துவிடுவதென முடிவெடுத்தாராம்.
* கவுண்டமணியின் தீவிர ரசிகர் விஷால். சாதாரணமாக பேசும்போதே சரளமாக கவுண்டமணியின் கவுண்டர்களை கலந்து பேசி மற்றவர்களை சிரிக்கவைப்பது விஷாலின் வழக்கம்.
* சைக்கிளிங் மிகவும் பிடிக்கும் விஷாலுக்கு. ஷூட்டிங்குக்கு போகும்போது காரில் எந்நேரமும் அவருடைய சைக்கிளும் தயாராக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் சைக்கிளிலேயே ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார் விஷால்.

* தினமும் ஷூட்டிங் முடிந்ததும் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடுவார் விஷால்.
* ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ போன்ற படங்களின் இயக்குநர் திரு, விஷாலுக்கு மிகவும் நெருக்கமானவர். அவருக்கு படம் செய்வதென்றால் விஷால் கதைகூட கேட்காமல் ஓகே சொல்லிவிடுவார்.
* ‘பாண்டியநாடு’ படம் வரைக்கும் அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில்தான் நடித்து வந்தார் விஷால். அந்தப் படத்தின் ஷூட்டிங் பாதியில் இருக்கும்போது இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விக்ரம் கிருஷ்ணா விலகிவிட ஓவர்நைட்டில் விஷாலால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ நிறுவனம்.
Also Read – ரஜினியின் ரூட்டை மாற்றிய கே.பாலச்சந்தரின் முக்கியமான அட்வைஸ்!
0 Comments