`Unsung’ ஹாரிஸ் ஜெயராஜ் – 12 சுவாரஸ்யங்கள்!

தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது பல பாடல்கள் 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பிளே லிஸ்டுகளை எப்போதும் ஆக்கிரமித்திருக்கும்.

அப்படியான ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிய 12 சுவாரஸ்யத் தகவல்களைத்தான் இப்போது தெரிஞ்சுக்கப்போறோம்!

  • 12 வயதிலேயே இசைக் கலைஞராகத் தனது பணியை ஆரம்பித்தார் ஹாரிஸ் ஜெயராஜ். ரஹ்மான், யுவன், கார்த்திக் ராஜா என பல இசையமைப்பாளர்களிடம் இசைக்கருவிகள் வாசித்திருக்கிறார்.
  • ஹாரிஸ் ஜெயராஜின் முதல் சம்பளம் 200 ரூபாய். இந்த சம்பளத்தோடுதான் `மின்னலே’ படத்துக்கு முன்பே 600 படங்களில் வேலை பார்த்திருக்கிறார்.
  • ஆளவந்தான் படம் மூலம் இசையமைப்பாளராக இவரை அறிமுகம் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் தாணு விரும்பினார். ஆனால், அப்போதே மின்னலே பட வேலைகளை ஆரம்பித்து விட்டார் ஹாரிஸ்.
  • ஹாரிஸ் பயங்கரமான Foodie. வித்தியாசமான, நல்ல உணவுகளைத் தேடித்தேடி சாப்பிடக்கூடியவர்.
  • சென்னையில் இவர் வைத்திருக்கும் ஸ்டுடியோ ஹெச், இந்தியாவிலேயே மிக முக்கியமான ஒரு ஸ்டுடியோவாகப் பார்க்கப்படுகிறது. உலகின் தலைசிறந்த அம்சங்களோடு இந்த ஸ்டுடியோ அமைக்கப்பட்டிருக்கிறது.
  • சமீபமாக திரையரங்குகள் வாங்குவதில் நாட்டம் காட்டி வருகிறார் ஹாரிஸ். சென்னையில் சில திரையரங்குகளை விலைபேசி வருகிறார்.
  • கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் போது ரசிகர்கள் மட்டும் கொண்டாடும் படியான பாடல்களாக இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்வாராம். அதனால்தான், மாஸ் ஹீரோக்களுக்கு பல மெலடி பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.
  • விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஹாரிஸ் இசையமைத்த மூங்கில் காடுகளே பாடல்தான் இன்றும் விக்ரமின் காலர் ட்யூனாம்.
  • பயங்கரமான காமெடி சென்ஸ் கொண்டவர் ஹாரிஸ் ஜெயராஜ். கவுன்ட்டர்ஸ் அடிச்சு கலாய்கிறதும் அவருக்கு கைவந்த கலை. ஆனால், தனக்கு நெருக்கமானர்களிடம் பேசும் போதும் மட்டும்தான் அந்த மோடுல இருப்பாராம்.
  • வொர்க்ல ரொம்பவே சின்சியர். கல்யாணத்துக்கு அடுத்த நாளே வேலைக்கு போயிருக்கார்னா பார்த்துக்கோங்க. ரஹ்மான் மாதிரி இவருக்கும் லேட் நைட் வொர்க் பண்றதுதான் பிடிக்குமாம். 
  • கடவுள் பக்தி ரொம்பவே ஜாஸ்தி. நாம பண்ற எல்லாத்தையும் கடவுள் பார்த்துட்டே இருக்கார்னு ரொம்ப நம்புற ஆள்.
  • தன்னோட ரோல் மாடலாக உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மரைத்தான் நினைப்பாராம். 

Also Read –

ஏ.ஆர். ரஹ்மான் ஒரு அதிரடிக்காரன்… 9 சம்பவங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top