`பில்லா’ அஜித்

`பில்லாவுக்கு முன் அஜித் தேர்வு செய்த ரஜினி படம்’ – பில்லா’ படம் பற்றிய 15 சுவாரஸ்யங்கள்! #15YearsofBilla

அஜித்குமார் நடித்த பில்லா படம் வெளியாகி இன்றுடன் (டிசம்பர் 14, 2007) 14 ஆண்டுகள் ஆகின்றன.

  • பில்லா படம் பற்றிய 14 சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம்.அஜித்குமார் 2001-ம் ஆண்டுக்குப் பின் தொடர் தோல்விகளைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் அது. 2006-ம் ஆண்டுவரை மொத்தமாக 13 படங்கள் வெளியாகின. அதில் 3 படங்கள் ஹிட், 10 படங்கள் ஃப்ளாப். இத்தனை ஃப்ளாப்கள் கொடுத்துவிட்டார், அதிலிருந்து மீளவே முடியாது எனத் திரைத்துறை வட்டாரத்தில் பேச்சுகள் கிளம்ப ஆரம்பித்தன. வெற்றிப்படம் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அஜித்குமார். அதற்காக இயக்குநர் விஷ்ணுவர்தன் கமிட்டானார். ரஜினி நடிப்பில் வெளியான பில்லாவை ரீமேக் செய்யும் பேச்சு எழுந்தது. அதை ரஜினியிடம் விஷ்ணுவர்தன் சொன்னவுடன் எந்தவித மறுப்பும் சொல்லாமல் அஜித்துக்காக ஓ.கே சொன்னார் ரஜினி. ரஜினியின் அனுமதிக்குப் பின்னர் பில்லா ஆரம்பம் ஆனது.
பில்லா `அஜித்’
பில்லா `அஜித்’
  • பில்லா முடிவானவுடன் சிங்கப்பூரில் முழு சினிமாவையும் படமாக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது படக்குழு. அங்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மலேசியாவைத் தேர்வு செய்தது படக்குழு.
  • திரைக்கதையை வடிவமைக்கும்போது பழைய தாக்கம் தெரியக் கூடாது என்பதில் முடிவு எடுக்கப்பட்டது. அதற்காகக் கேமரா, காஸ்ட்யூம், சண்டைக் காட்சிகள், பாடல்கள், பின்னணி இசை, வசனங்கள் ஒவ்வொன்றும் மாஸாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர், அஜித்தும், விஷ்ணுவர்தனும்.
பில்லா நயன்தாரா - நமீதா
பில்லா நயன்தாரா – நமீதா
  • ஒட்டுமொத்த சினிமாவும் கலர்ஃபுல்லாக இருந்த நேரத்தில் இந்தப் படமோ வேறு லைட்டிங்கிலும், க்ரேஸ்கேல், சீப்பியா டோன் கொடுத்து எடுக்கப்பட்டிருந்தது. இரண்டாவதாக வரும் அஜித்தின் சில காட்சிகளில் மட்டுமே கலர் விஷூவல் இருக்கும். டானாக வரும் அஜித் கதாபாத்திரம் இடம்பெறும் காட்சிகள் அனைத்திலுமே கறுப்பு, வெள்ளை, க்ரே போன்ற கலர்கள் மட்டுமே இருக்கும். அதுவே படத்தை வேறொரு பரிமாணத்தில் காட்டியது.
  • முதல் 40 நிமிடக் காட்சிகளில் அஜித் கேரக்டர் பேசும் வசனங்கள் குறைவுதான். ஆனால் தனியாகப் பிரித்துப் பார்த்தால் ஒவ்வொன்றும் பஞ்ச் ரகம். ராஜ் கண்ணன் எழுதிய வசனங்கள் அனைத்துமே அஜித்துக்காகவே செதுக்கப்பட்டதுபோல இருந்தன.
  • அடுத்ததாகப் படத்தின் காஸ்ட்யூம்… அஜித்தின் ஸ்டைலான தோற்றத்துக்கு ஏற்றக் காஸ்ட்யூம்கள் கொடுத்து அசத்தியிருந்தார், அனுவர்தன். அஜித்குமாரின் முந்தைய படங்களைத் தாண்டி பில்லாவின் காஸ்ட்யூம்கள் அவரை மேலும் அழகாக்கியது. அனுவர்தனுக்கு இதுதான் முதல் படமும் கூட. அஜித்குமாருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நடிகர்களுக்குமே காஸ்ட்யூம்க்காக மெனக்கெட்டிருந்தார் அனுவர்தன்.
  • வில்லியம் ஓங்-ன் (William Ong) சண்டைக்காட்சிகள் இதற்கு முன்னர் தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத ஒன்றாக இருந்தது. இடைவேளைக்குப் பின்பு Aero bridge-ல் நடைபெறும் சண்டைக்காட்சி ஒன்றே அதற்குச் சாட்சி.
  • இன்டர்வெல் பிளாக்கில் நேரத்தில் அஜித் பேசும் `ஐ அம் பேக்’ வசனம், படத்துக்கு மட்டுமல்ல அவரது தோல்விகளைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கான பதிலடியாகவும் இருந்தது.
பில்லா அஜித் - நயன்தாரா
பில்லா அஜித் – நயன்தாரா
  • படம் ‘பர்ஃபெக்ட்’ என்றவுடன் இசைக்கு முடிவு செய்யப்பட்டவர், யுவன்சங்கர் ராஜா. லவ்வர் பாய் அஜித் என்ற காலகட்டத்திலிருந்து ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய தீனாவில் யுவனின் பங்கும் இருந்தது. அதேபோலத் தீனாவுக்குப் பின் மீண்டும் அஜித்துடன் இணைந்தார், யுவன் சங்கர் ராஜா.
  • விஷணுவர்தனின் இயக்கத்தில் அஜித் நடந்துவரும் ஒவ்வொரு சீனும், நிரவ் ஷா ஒளிப்பதிவுக்கு ஏற்றார்போலப் பின்னணி இசையில் மிரட்டியிருப்பார் யுவன். அத்தனைக் காட்சிகளும் பக்கா மாஸாகவே இருந்தது. இன்றளவும் பில்லா தீம் மியூசிக் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
  • அஜித்குமார் தவிர நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம், ரகுமான் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும், படத்துக்குக் கச்சிதமாகப் பொருத்தினர். மலேசியாவில் செம்ம கிளாஸாக படமாக்கப்பட்ட பில்லா, அஜித் ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தியேட்டர்களில் பில்லா படத்தில் அஜித் தோன்றும் மாஸ் ஓப்பனிங் சீனைப் பார்த்து, ஆராவாரம் செய்த ரசிகர்களின் விசில் சத்தம் தியேட்ட்டரைப் பிளந்தது.
  • `ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் சினிமா’ என்று வாயைப் பிளந்தது கோலிவுட் வட்டாரம். அந்தச் சினிமா அஜித் ரசிகர்களை மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களையும் கட்டிப்போட்டது. பில்லா சினிமாவில் மட்டும் அஜித் டானாகவில்லை. அந்தப் படத்துக்குப் பின்னர் தமிழ் சினிமாவின் முக்கிய டான் ஆனார், அஜித்குமார்.
பில்லா அஜித் - நயன்தாரா
பில்லா அஜித் – நயன்தாரா
  • வசனம், பின்னணி இசை, பாடல்கள், சண்டைக்காட்சி, உருவாக்கப்பட்ட விதம் என அனைத்திலும் மாஸ் காட்டிய பில்லா வசூலிலும் புதிய உச்சம் தொட்டது.
  • முந்தைய 6 வருடங்களில் தொடர் தோல்விகளைக் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு யாரும் அசைக்க முடியாத வெற்றியைக் கொடுத்தது பில்லா. அதன் பின்னர் இனி அஜித் அவ்வளவுதான் என யாருமே பேசமுடியாத படியான வெற்றியாக அது இருந்தது. அஜித்தின் திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
  • ரஜினி நடித்த படம் எதையாவது ரீமேக் செய்ய வேண்டும் என்று அஜித் ஆசைப்பட்டாராம். முதலில் அவர் தேர்ந்தெடுத்த படம் தீ. அதன் பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் அதை ஓரம்கட்டிவிட்டு `பில்லா’ படத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

Also Read – `விஜய்யின் மாநாடு…’ – ‘துப்பாக்கி’ டைமில் ஹிண்ட் கொடுத்திருந்த எஸ்.ஏ.சி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top