• கமல் தமிழ் சினிமாவின் பரிசோதனை எலி! #62YearsOfKamalHaasan

  குழந்தை நட்சத்திரத்தில் ஆரம்பித்து உதவி இயக்குநர், மேடை அமைப்பு, நடன இயக்கம், பின்னணி பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் எனத் திரைத்துறையிலே பத்து அவதாரங்களை எடுத்தவர், கமல் ஹாசன். 1 min


  • கமல் தன்னைத் தானே பரிசோதித்துப் பார்க்கும் பரிசோதனை எலி. அதுக்கு 1996 – 2000 காலகட்டத்துல வந்த அவருடைய படங்களைச் சொல்லலாம். அவ்வை சண்முகி – பெண்வேடம் (ஹாலிவுட் மேக்கப்), ஹேராம் – லைவ் சவுண்ட், ஆளவந்தான் – மோஷன் கிராஃபிக்ஸ், அனிமேஷன் சீக்வென்ஸ்,  இந்தியன் – ப்ராஸ்தெட்டிக் மேக்கப், குணா -ஸ்டெடி கேமரா அறிமுகம் செய்யப்பட்டது,  குருதிப்புனல் – டால்பி சவுண்ட். 
  • டெக்னிக்கலா இப்படி ஒரு பக்கம் பரிசோதனை செய்து பார்ப்பது போல், ரைட்டிங்காகவும் பல சோதனை முயற்சிகளை செய்தவர் கமல். ஹேராம் – Religion and Partition, விருமாண்டி – Rashomon Effect, விஸ்வரூபம் –  உலக அரசியல், தசாவதாரம் – Butterfly effect, அன்பே சிவம் – Communism.

  • 1986 - லோகேஷ் கனகராஜ் பிறந்த வருடம் - கமல் நடித்த பழைய 'விக்ரம்' வெளியான வருடம், 1978 - விஜய் சேதுபதி பிறந்த வருடம் - 'சிகப்பு ரோஜாக்கள்', 'அவள் அப்படித்தான்' (ரஜினி, கமல்), 'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' (ரஜினி, கமல்), 'தப்பு தாளங்கள்', 1982 ஃபகத் ஃபாசில் பிறந்த வருடம் - 'சகலகலா வல்லவன்', 'வாழ்வே மாயம்', 'மூன்றாம் பிறை'.
  • 'பஞ்சதந்திரம்' செட்டிலேயே அந்தப் படத்துக்கான செகண்ட் பார்ட் கதையை எழுதிவிட்டார் கமல். 'ஆண்கள்லாம் எதுக்கு போயிருக்காங்கனு கண்டுபிடிக்கிற மனைவிகள் பழி வாங்குறதுக்காக கிளம்புறாங்கங்கிறது'தான் கதை. அது எதிர்பாராதவிதமாக 'மன்மதன் அம்பு' படத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
  • கமல்ஹாசன் இதுவரை வாங்கிய ஃபிலிம் ஃபேர் விருதுகளின் எண்ணிக்கை 19. கடைசியாக 2000-ல் வெளியான ‘ஹேராம்’ படத்திற்காக விருது பெற்றிருந்தார். அதன் பின்னர் விருதுக்குத் தகுதியான பல படங்கள் வந்திருந்தாலும் இவர் ஃபிலிம் ஃபேர் விருது வாங்கவே இல்லை. காரணம் 2000 சமயத்தில், ‘இனி எனக்கு விருது வேண்டாம். வளர்ந்து வரும் இளம் நடிகர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு விருது கொடுத்து ஊக்கப்படுதுங்கள்’ என்று ஒரு லெட்டரை ஃபிலிம் ஃபேருக்கு அனுப்பியுள்ளார் கமல்.

  • 'தேவர்மகன்' கமலின் சினிமா பாதையில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்கே மிக முக்கியமான படம். அதில் நாசரின் மீசையை மோல்டு செய்து தயார்படுத்தியவர் கமல்தான். க்ளைமாக்ஸ் காட்சியில் கழுத்தை வெட்டும் காட்சிக்காக நாசரின் வாயில் ஒரு பந்தை வைத்து லேசாக பல் தெரிவது போல் வைத்துக்கொண்டு நாசரின் கட்டை மீசையை வடிவமைத்தார் கமல்.
  • 'தேவர்மகன்' படத்தின் கதை வெறும் 7 நாள்களில் எழுதி முடித்தார் கமல். படத்தின் கடைசி சில பக்கங்களை எழுதி முடிக்கும் சமயம் கமலின் நெருங்கிய நண்பரான அம்ஜித் கான் இறந்த செய்தி கமலை வந்தடைகிறது. அவரது இறுதி அஞ்சலிக்கு சென்று விமானத்தில் இறுக்கத்துடன் இருந்த கமல், 'தேவர்மகன்' படத்தின் கடைசி கட்ட ஸ்க்ரிப்ட்டை எழுதும்போது அழுதுகொண்டே எழுதியிருக்கிறார். இறந்த நண்பர் அம்ஜித் கானை நினைத்து கண்ணீர் வடித்துக்கொண்டே கதை எழுதிய கமல், ̀̀ஆத்தி நான் கொடுத்த பால் எல்லாம் ரத்தமா ஓடுதே என்கிற அந்த முக்கியமான வசனத்தை எழுதியிருக்கிறார்.
  • 'மகளிர் மட்டும்' சமயத்தில் பொன்னியின் செல்வன் படத்தை கமல் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார்.  அந்த சமயம் கமலை சந்தித்த ரோஹினி, 'பூங்குழலி கதாபாத்திரத்தில் நான்தான் நடிப்பேன்' என்று சொல்லியிருந்தார். எதிர்பாராத சில காரணங்களால் பொன்னியின் செல்வனை கமலால் எடுக்க முடியவில்லை. அதன் பின்னர் கமல் கதை எழுதிய 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்தார் ரோஹினி. அவர் நடித்த பாப்பம்மா கதாபாத்திரத்தின் நிஜ பாப்பம்மாதான் கமலின் முதல் கேர்ள் ஃப்ரெண்ட். கமல் எல்டாம்ஸ் ரோடில் இருந்தபோது கழிப்பறை சுத்தம் செய்யும் பாப்பம்மாதான் கமலின் நெரங்கிய தோழி. என்ன ஒன்று கமலைவிட 45 வருடங்கள் மூத்தவர் அந்த பாப்பம்மா. 'களத்தூர் கண்ணம்மா' ஷூட்டிங் முடித்து பிறகு பாப்பம்மாவுடன்தான் கமல் விளையாடுவாராம்.

  • 'அன்பே சிவம்' படத்தில் கமலின் கெட்டப்-க்கு பின்னாடி ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அந்த வடுமுகத்தானின் முக்கிய அம்சங்களாக கருத்தப்படுவது மூன்று விஷயங்கள். ஒன்று அவரது அந்த வடு, இரண்டு அவருடைய கண்ணாடி, மூன்று அவரது உடைந்த தாடை. அந்த வடுவை உருவாக்கியவர் ஹாலிவுட் கலைஞரான Michael Westmore என்பவர்தான். அவர்தான் 'இந்தியன்', 'தசாவதாரம்' படத்திற்கும் ஒப்பனை செய்தவர். இவரிடம் சிச்சுவேஷனை சொல்லி, 'எனக்கு சிம்பிளான மேக்கப், நானே போட்டுக்குற மாதிரி வேணும்' எனச் சொல்லி  வாங்கியிருக்கிறார் கமல். உடைந்த தாடை, பற்கள் மற்றும் முகத்தின் குறுக்கே இருந்த வடு. கடைசியாக கண்னாடி. கமல் அணிந்திருந்த கண்ணாடியின் பவர் +10. சாதரணமாக அந்தக் கண்ணாடியை அணிந்துவிட முடியாது. பார்வை சுத்தமாக தெரியாது. அதை அணிந்துகொண்டேதான் கமல் அவருடைய வசனங்களைப் படிப்பார். இதைப் பார்த்த மாதவன், ''எப்படி சார் +10 பவர் கண்ணாடி போடுறீங்க. போடுறது மட்டுமில்லாம அதைப் போட்டே சீன் பேப்பர் படிக்கிறீங்க என்கூட நடிக்கிறீங்க, அது கண்ணா Gun-அ''னு கேட்டிருக்கிறார். ''அது ஒண்ணுமில்லை சின்ன மேட்டர்தான். ப்ளஸ் 10 படத்துக்கு வேணும். அதை சரிகட்ட மைனஸ் 10 லென்ஸை கண்ணுல மாட்டிக்கிட்டேன். அவ்ளோதான்'' என்று மாதவனிடம் சொல்லியிருக்கிறார் கமல்.
  • கடவுள் இல்லேன்னு சொல்லலை. இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன் என்ற வசனம் கமலுக்கு மிகவும் நெருக்கமான ஒரு வசனம். அவர் நாத்திகவாதி என்பது இங்கு பலருக்கும் தெரியும். ஆனால், படம் என்ற கலைக்கு அவசியப்படுவதால் ரங்கராஜ நம்பியாகவும் நடிப்பார். ஆனால், குட்டி கமல் 2 மணி நேரம் கூட இடைவிடாமல் வடமொழியில் இருக்கும் மந்திரத்தை மனப்பாடம் செய்து பாடுவதில் வல்லவர். இவரின் ஞாபக சக்திக்கும் அப்போது அது பயிற்சியாக அமைந்திருக்கிறது. அந்த மந்திரத்தை இன்னும் ஞாபகம் வைத்து சொல்வார் கமல்.

  • ப்ராஸ்தெட்டிக் மேக்கப் போட்டுக்கொண்டு வயதான தோற்றத்தில் நடித்த கமலை நமக்கு 'இந்தியன்' ஆகத்தான் தெரியும். ஆனால், 1978-ல் வெளியான 'வயனாடன் தம்பன்' எனும் மலையாளப் படத்தில் 100 வயது முதியவராக நடித்திருப்பார். பகல் நேரத்தில் இளைய வயது கமலாக பெண்களை வசியப்படுத்தி இரவு ஆனதும் 100 வயது முதியவராக மாறி அந்தப் பெண்களை எல்லாம் கொல்வார். அது ஏன் என்பதுதான் அந்தப் படத்தின் ஒன்லைன்.
  • கமல் - கிரேஸி காம்போவானது எவர்க்ரீன் டீம். ஆனால், அவர்களையே ஆட்டிப்பார்த்தவர் நாகேஷ். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ராஜாவை தேடிக்கொண்டிருக்கும் சமயம் அப்பு கமலை கொண்டு வந்து நாகேஷிடம் காட்டுவார்கள். அப்போது ''பாக்கி எங்க யா'' என்று ஒரு டயலாக் டைமிங்கில் அடித்திருப்பார். முதலில் அப்படி சொல்லவும் என்ன டயலாக் போடுவது என்று அவருக்குத் தெரியாமல், பின் அதை 'இவ்ளோதான்யா கெடச்சது' என்று எழுதிப் பேசினார்கள். இதுபோன்ற காட்சிகளை ஈடு செய்வதற்கே கமல் - கிரேஸி அதிகமான உழைப்பைக் கொட்டுவார்கள்.
  • கமலுக்கு நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள்தான் அதிக இன்ஸ்பிரேஷன். ஸ்பாட்டில் இவர் நடிப்பையும், வசனத்தையும் Improvise செய்வார் என்பது பலருக்கும் தெரியும். அப்படி 'அன்பே சிவம்' படத்தில் சுனாமியைப் பற்றி சொல்லியதோடு, தனது அப்பா போட்டோ எடுக்க சென்றபோது 'பெரிய அலை ஒண்ணு தூக்கிட்டு போயிடுச்சு' என்று சொல்வார். கமலின் நண்பரது மகன் ஒரு படம் எடுத்திருக்கிறார் அப்போது பெரிய அலையுடன் புகைப்படம் எடுக்கச் சொன்னபோது அலை அவரை இழுத்துச் சென்று அவர் உயிரிழந்துவிட்டார். அந்த பாதிப்பில்தான் 'அன்பே சிவம்' படத்தில் வசனமாக பேசியிருப்பார் கமல்.

  • ''படத்தின் நாயகன் என்பவன் அறத்தை நிலை நாட்டும் நல்லவனாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. படம் குடியைப் பற்றி எடுக்கப்பட்டால் படத்தின் நாயகன் குடிகாரனாகத்தான் இருக்க வேண்டும். குடியைப் பற்றி அவன்தான் சொல்வான். அதே போல் என் படத்தின் வில்லன்கள் எனக்குப் பிடிக்காதவர்கள் கிடையாது, எனக்குள் பிடிக்காதவர்கள். எனக்கே என்னைப் பத்தி பிடிக்காத விஷயங்களை வெச்சுதான் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை எழுதுவேன்.'' இதுதான் கமலின் ஹீரோ - வில்லன் ஃபார்முலா.


  Like it? Share with your friends!

  438

  What's Your Reaction?

  lol lol
  8
  lol
  love love
  4
  love
  omg omg
  36
  omg
  hate hate
  4
  hate
  Dharmik

  Dharmik

  0 Comments

  Leave a Reply

 • Choose A Format
  Personality quiz
  Series of questions that intends to reveal something about the personality
  Trivia quiz
  Series of questions with right and wrong answers that intends to check knowledge
  Poll
  Voting to make decisions or determine opinions
  Story
  Formatted Text with Embeds and Visuals
  List
  The Classic Internet Listicles
  Countdown
  The Classic Internet Countdowns
  Open List
  Submit your own item and vote up for the best submission
  Ranked List
  Upvote or downvote to decide the best list item
  Meme
  Upload your own images to make custom memes
  Video
  Youtube and Vimeo Embeds
  Audio
  Soundcloud or Mixcloud Embeds
  Image
  Photo or GIF
  Gif
  GIF format
  இந்தியாவில் இருக்கும் ‘7 Lakefront Stay’ ஸ்பாட்ஸ்! புகழ்பெற்ற இந்த நடனக் கலைகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்ததுனு தெரியுமா? காஷ்மீரில் மிஸ் பண்ணக் கூடாத ‘Tourist Spots’ மகரஜோதி நேரம் ஐயப்ப சுவாமிகள் கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்! 2022-ல் ஹிட் அடித்த டாப் 15 ‘தமிழ் சீரியல்கள்’