அன்பே மடோனா… ‘பிரேமம்’ செலினுக்கு தமிழ் ரசிகனின் கடிதம்!

ரெட் வெல்வட் கேக் சாப்பிட்டு ஃபேமஸான மடோனா – வுக்கு உண்மையிலேயே என்ன பிடிக்கும் தெரியுமா? மடோனாவுக்கு நடிக்க வரணும்னு ஆசையே இல்லையாம். அப்போ அவங்க எய்ம் என்னவா இருந்துச்சு? தமிழ் செலிபிரிட்டி ஒருத்தர் ‘செம கேடிங்க இந்தப் பொண்ணு’னு அப்டினு மடோனாவைப் பார்த்து கலாய்ப்பாரு. அது யாரு தெரியுமா? மடோனாவை இம்ப்ரஸ் பண்ண என்ன குவாலிட்டிலாம் வேணும் தெரியுமா?

மடோனாவுக்கு இதயத்துல இருந்து ஆவி பறக்க எழுதுற இந்தக் கடிதத்துக்கு நடுவுல இந்த விஷயங்களையெல்லாம் மழைச் சாரல் மாதிரி ஷேர் பண்றேன். ‘கடிதம் எழுதுறியே கிரிஞ்சுடா நீ’னு நினைக்கிறவங்களுக்கான பதிலும் கடைசில சொல்றேன். சோ, மடோனா ரசிகர்களே ஒன்று கூடுங்கள். உங்கள் குரலாக ஒரு கடிதம் இதோ…

மடோனா
மடோனா

அன்பே மடோனா…

லவ் அட் ஃபஸ்ட் சைட்ல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா… இல்லைனாலும் பரவால்ல… உங்களைப் பார்க்கும் போதுலாம் ஒரு காதல் கடிதத்தை என்னோட விழிகள் போட்டுட்டே இருக்கும். பிரேமம் படம் பார்த்தப்ப எல்லாரும் மலர் டீச்சருக்கு அம்பு விட்டுட்டு இருந்தாங்க. ஆனால், அதையெல்லாம் தாண்டி உங்களுக்கு அம்புவிட்ட ஒரு கூட்டம் இருக்குல… அதுல நானும் ஒருத்தன்.

மடோனா
மடோனா

பிரேமம்க்கு அடுத்தப் படமே நீங்க தமிழ்ல நீங்க நடிக்கிறீங்கனு தெரிஞ்சதும் சந்தோஷத்துல கால் தரைல படாம திரிஞ்சேன்னா பார்த்துக்கோங்க. அப்போ, உங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் தேடும்போது கியூட்டான, ஹாட்டான, ஸ்மார்ட்டான பல விஷயங்கள் கிடைச்சுது. அதையெல்லாம் முதல்ல ரசிகர்களுக்கு சொல்லி அவங்களையும் மடோனா ஆர்மிக்கு இழுத்துட்டு வறேன். இருங்க. அதுவரை கடிதத்துக்கு கொஞ்சம் பாஸ் விடுவோம்…

சிங்கர் கனவு

சின்ன வயசுல இருந்தே நிறைய ஹாலிவுட் படம் பார்த்து வளர்ந்தவங்க, மடோனா. அவங்க அப்பா இந்திய படங்களே பார்க்க விடமாட்டாராம். ஆனால், இன்னைக்கு சவுத் இந்தியால உள்ள எல்லா இண்டஸ்ட்ரீலயும் செமயான ஃபேன் ஃபாலோயர்ஸ் மடோனாவுக்கு இருக்கு. மடோனாவுக்கு பெரிய பாடகி ஆகணும்னு ரொம்பவே ஆசை.

இன்னொன்னு என்னனா, பி.காம் படிக்கும்போது சிவில் சர்வீஸ் எழுதணும்னு வீட்டுல சொல்லியிருக்காங்க. அதுக்காகவும் படிச்சிருக்காங்க. ஆனால், அவங்க மைண்ட் எல்லாம் பாட்டு பாடுறதுலதான் இருந்துருக்கு. நண்பர்களோட சேர்ந்து ‘எவர்ஆஃப்டர்’னு மியூசிக் ட்ரூப் ஒண்ணும் வைச்சிருக்காங்க. சில படங்கள்ல பாடலும் பாடியிருக்காங்க.

மடோனா
மடோனா

மடோனா பாட்டுப் பாடி நீங்க கேக்கணுமே… ஐயோ, நெஞ்சைத் தொட்ருவாங்க. தன்னோட ஆறு வயசுல இருந்து மடோனா பாட ஆரம்பிச்சாங்கனு இண்டர்வியூக்கள்லலாம் சொல்லியிருக்காங்க. அப்புறம் ஸ்கூல், காலேஜ் காம்படிஷன்லயெல்லாம் போய் பாட ஆரம்பிச்சிருக்காங்க. கிளாஸிக்கல், வெஸ்டர்ன்னு ரெண்டுமே பாட்டுல கத்துக்கிட்டாங்க. அப்புறம் டி.வி ஷோக்கள்ல பாட ஆரம்பிச்சாங்க. அப்படியே சில ஷோக்கள்ல காம்பயரிங் பண்ணவும் தொடங்கினாங்க. லதா மங்கேஷ்கர், சித்ரா எல்லாம் மடோனாவுக்கு ரொம்ப புடிச்ச சிங்கர்ஸ்.

பிரேமம் வாய்ப்பு

மடோனா ரொம்பவே இண்ட்ரோவெட்ர் ஆன ஆளு. அதுனால, அவங்களுக்கே தெரிஞ்சுடுச்சு இந்த காம்பயரிங்லாம் நமக்கு செட் ஆகாது அப்படினு. அப்போதான் பிரேமம் படத்துல நடிக்கிறதுக்கான சான்ஸ் மடோனாவுக்கு வந்துருக்கு. முதல்ல அனுபமா கேரக்டர்ல அவங்க நடிக்க இருந்ததாவும் அப்புறம் செலின் கேரக்டர்க்கு செலக்ட் ஆனதாகவும் சொல்றாங்க. மடோனாவுக்கு அந்த செலின் கேரக்டர்கூட நிஜமாவே ஒரு கனெக்ட் இருந்துதாம். இதையும் அவங்களே சொல்லியிருக்காங்க.

மடோனா
மடோனா

பிரேமம் படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் ஃபேமஸான விஷயங்கள்ல ரெட் வெல்வட் கேக்கும் ஒண்ணு. மடோனா ரசிகர்கள் அதை டேஸ்ட் பண்ணியே ஆகணும்னு கடைக்கடையே அந்த கேக்கைத் தேடி அலைஞ்சாங்கனு சொல்லலாம். ஒரு வருத்தமான விஷயம் என்னனா. மடோனாவுக்கு நிஜத்துல ரெட் வெல்வட் கேக் புடிக்காதாம். வொயிட் ஃப்ளேவர்ஸ்தான் அவங்களுக்கு புடிக்குமாம். இனி எண்ட ஃபேவரைடும், வொயிட் ஃப்ளேவர் ஆனு. எட்றா வண்டிய… விட்றா கேக் கடைக்குனு இப்பவே கிளம்பிறாதீங்க. வீடியோ முடிஞ்சதும் போங்க.

யாழினி… பூந்தென்றல்… மலர்..!

தமிழ்ல மடோனா நடிச்ச நிறைய கேரக்டர்ஸ் ரொம்பவே நல்லா பேசப்பட்டுச்சு. குறிப்பா காதலும் கடந்து போகும் படத்துல யாழினி கேரக்டர். காதலும் கடந்துபோகும் படமே ஒரு கவித்துவமான படம். அதுல இந்த யாழினி கேரக்டர் ஒரு அழகான கவிதைனே சொல்லலாம். வீட்டை விட்டு பெஷனைத் தேடி ஓடி வர்றதுல இருந்து பெட்ரோல் பங்க்ல மீட் பண்றது வரைக்கும், ஒவ்வொரு சீனும் அழகோ அழகுதான். அந்தப் படத்தோட இண்டர்வியூ ஒண்ணுலதான் விஜய் சேதுபதி, ‘இந்தப் பொண்ணு செம கேடிங்க. செமயா கேரட்ரை ஹேண்டில் பண்ணும்’ அப்டினு கலாய்க்கிற டோன்ல பாராட்டியிருப்பாரு.

மடோனா
மடோனா

“நான் ஆசைப்படறது ஒண்ணே ஒண்ணுதான். நான் எப்படி இருக்கேன், எப்படி வாழ்ந்தேன்னு காட்டணும். இந்த உலகத்துலயே நீ தான் அதைப் பார்த்து சந்தோஷப்படுவேன்னு நினைக்கிறேன்”னு மடோனா சொல்லும்போதுலாம் கண்ணுல அவ்வளவு காதல் இருக்கும். அந்தப் படத்துல மடோனாவுக்கு ரெக்கை மட்டும் இருந்தா தேவதைதான். அதேமாதிரி, கவண் படத்துல ஹீரோவுக்கு கான்ஃபிடண்ட் கொடுக்குற ரோல்லயும் செமயா பண்ணியிருப்பாங்க.

அப்படியே கட் பண்ணா… பா.பாண்டி படத்துல வில்லேஜ் கேர்ள். ரெட்டை ஜடை… சிரிப்பு இதெல்லாம் பார்த்தா அப்படியே கடந்த காலத்து லவ் ஃபீலிங்க்கு கூட்டிட்டுப் போயிடும். மாடர் கேர்ள் மடோனாவா இருந்தாலும் சரி… திருவிழால சுத்துற வில்லேஜ் கேர்ள் மடோனாவா இருந்தாலும் சரி அப்படி செட் ஆகும்.

பேக் டு கடிதம்…

எல்லா பசங்களோட வாழ்க்கைலயும் தேவதைகள் கண்டிப்பா இருப்பாங்க. பிரேமம், காதலும் கடந்து போகும் படங்களுக்கு அப்புறமா அந்த லிஸ்ட்ல நீங்களும் சேர்ந்துட்டீங்க. ஏற்கெனவே சொன்னேன்ல, நீங்க நடிச்ச படங்கள்ல உங்களுக்கு றெக்கை மட்டும் இருந்தா உண்மையிலேயே நீங்க தேவதைதான். அது என்னோட கனவுகள்ல எப்பவும் நடக்குற உண்மை.

“திருவிழா ஒண்ணு முன்ன காட்சிதான் கொடுக்கிறதே. எத்தனைப் பிறவி தவமோ கண்ணு முன்ன நடக்கிறதே” இந்த வரிகள் எல்லாம் உங்களுக்காகவே எழுதப்பட்டதுனு உங்களுக்கு தெரியுமா? பார்த்திபன் ஸ்டைல்ல, அவரோட வரிகள்லயே இதை கேக்கணும்னா “பூவுக்கு பூப்பதைத் தவிர வேறென்ன தெரியும்? அதன் பெயர் பூ என்றாவது தெரியுமா?” இந்தக் கேள்வியை உங்களை நேர்ல பார்த்தா கண்டிப்பா கேப்பேன்.

நீங்க பாடுறதை ஒவ்வொரு முறையும் கேக்கும்போதும் மனசுக்குள்ள வானம் கொட்டும். அதுவும் ‘ஈ பகல் அறியாதே, விருதே’ பாட்டுலாம் இன்னும் என்னை மெஸ்மரைஸ் பண்ணிக்கிட்டே இருக்கு. பாட்டுல இவ்வளவு பேஷனோட இருக்குற நீங்க ஏன் நிறைய பாடல்கள் பாடாம இருக்கீங்க. தைரியமா களத்துல இறங்குங்க. அதை மில்லியன் வியூஸ்க்கு கொண்டு போய் ஹிட் கொடுக்க வேண்டியது மடோனா ஆர்மியின் வேலை.

யாழினி மாதிரி பல கேரக்டர்களையும் நீங்க தமிழ் சினிமாவுக்கு கொடுக்கணும். அது வெறும் கேரக்டர் இல்லை. அதுல நீங்க பேசுற வசனங்கள் எல்லாம் ஆயிரம் ஆயிரம் பசங்களோட நிஜ வாழ்க்கைல கேக்குற அசரீரி. எதிர்த்த வீட்டுல இப்படி ஒரு பொண்ணு வந்துராதானு ஏங்க வைக்கிற ஒரு ஏக்கம். அதை அழகா பண்ண நீங்க, இன்னும் சொல்லும்படியான, மடோனா ஃபேன்னு நாங்க பெருமைபடும்படியான நிறைய கேரக்டர்களைத் தரணும்.

Madonna Sebastian becomes the latest victim of cyber crime! Premam actress'  social media accounts hacked! | India.com
மடோனா

உலகத்துல அதிகமாக ஃபேன்ஸ் இருக்குற இரு ஆள்கள்ல அமெரிக்கன் சிங்கர் மடோனாவும் ஒரு ஆள். அதே மாதிரி நீங்க இந்தியாவின் மடோனாவா மாறனும் அப்டின்றதுதான் இந்த கடைக்கோடி ரசிகனின் நிரந்தர ஆசை.

சரி, அவங்கள கரெக்ட் பண்ண ஐடியா சொல்றேன்னு சொன்னியே சொல்றானு கேக்குறீங்க… கேக்குது!

ரொம்ப சிம்பிள்ங்க… அமைதியான ஆளா, ஃபன் லவ்விங் பெர்சனா, ஹேப்பியான ஆளா இருந்தா போதும். மடோனா உங்களுக்கு ஓகே சொல்லிடுவாங்க.

என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் தேடித்தேடி தேர்ந்தெடுத்து பூ மாதிரி கோர்த்து எழுதுன கடிதத்தில் இருந்து வர்ற வார்த்தைகள் இருக்குல அதுக்கு உயிரைத் தொடுறதுக்கான பவர் இருக்கு. நீங்களே நினைச்சுப் பாருங்க… வழக்கத்துக்கு மாறா உங்களுக்கு பிடிச்சவங்க கிட்ட இருந்து ஒரு கடிதம் வந்தா எவ்வளவு சந்தோஷம் இருக்கும்? அந்த உணர்வைக் கடிதம் மட்டும்தான் தரும். அப்படி இருக்கும்போது நமக்கு புடிச்ச மடோனாவுக்கு கடிதம் எழுதுறதுதான சரியா இருக்கும்? அதனாலதான்!

Also Read: மலையாள பர்னிச்சர்களை உடைத்த ரீமேக்குகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top