லோகேஷ் கனகராஜ் ஒரு விழாவுல பேசும்போது, “நான் எழுதுற எல்லா கேரக்டருக்கும் ஒருத்தரை மனசுல வெச்சுதான் எழுதுவேன்.. அவரை வ்ச்சு யோசிக்கும்போது அந்த கேரக்டரை, காமெடி, சீரியஸ்னு எந்த டைமன்சன்ல வேணும்னாலும் டெவலப் பண்ணிப் பாக்கலாம்” அப்படின்னு அவர் ரொம்ப உயர்வா சொன்னது யாரைப் பத்தி தெரியுமா..? நடிகர் அருண் அலெக்சாண்டரைதான். அவர் இப்போ நம்மகூட இல்ல.. இவர் நடிச்சது வெறும் 10 படம்தான். ஆனா அவரைப் பத்தி லோகேஷ் கனகராஜ் இந்த அளவுக்கு சொல்றதுக்கு என்ன காரணம்.. அவரோட ஸ்பெசல் என்ன.. அவர் மாநகரம் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே கில்லி படத்துல வர்ற ஒரு ஐகானிக் சீன்ல நடிச்சிருக்கிறாரு அது என்ன சீன்ங்கிறது பத்தியெல்லாம் இப்போ நாம பாக்கப்போறோம்.

2017-ல மாநகரம் படத்தைத் தியேட்டர்ல பாத்துக்கிட்டிருந்தப்போ, குழந்தையை கடத்துற கும்பலோட தலைவனா அருண் அலெக்ஸாண்டர் டிஃப்ரண்டா செம்மயா வந்தாரு. அப்போ அவர் பேச ஆரம்பிக்கும்போது.. என்னடா அவெஞ்சர்ஸ் ‘தோர்’ கேரக்டருக்கு வாய்ஸ் கொடுக்குறவருதான் இவருக்கும் வாய்ஸ் கொடுத்திருக்காருபோலன்னு நினைச்சேன். ஆனா அப்புறம்தான் தெரிஞ்சுது தோர் கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்ததே இவர்தான்னு.. ஆமாங்க இவர் பேஸிக்கா ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். அந்தத் துறையிலயும் உச்சம் தொட்டவரு இவர்.
அருண் அலெக்சாண்டரோட அப்பா ஒரு சின்ன லெவல் ஃபிலிம் எடிட்டரா இருந்திருக்காரு. இதனாலேயே அருணோட சின்ன வயசுலேர்ந்து சினிமா மேலயும் குறிப்பா ஆக்டிங் மேலயும் அவருக்கு நிறைய ஆர்வம் வந்திருக்கு. ஆனாலும் சினிமா பக்கம் வராம பேங்கிங் சம்பந்தமா படிச்சு முடிச்ச இவருக்கும் லோகேஷ் கனகராஜ் மாதிரியே டெல்லியில உள்ள ஒரு பேங்க்ல வேலை கிடைச்சதும் அங்க போயிருக்காரு. ஆனா, அவருக்கு மனசெல்லாம் சினிமா மேலயே இருக்கவே அதுக்கப்புறம் சென்னைக்கு வந்து சினிமாவுல எப்படி நுழையுறதுன்னு யோசிச்சு.. சில படங்கள்ல நடிக்கவும் ட்ரை பண்ணியிருக்கிறாரு. அப்போ அப்படி அவருக்கு அட்மாஸ்பியர் ரோல்ஸ்தான் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. அப்படி அவர் ஸ்கிரின்ல முதன்முதலா வந்த படம், ‘கில்லி. அதுல பிரகாஷ்ராஜ் வர்ற ‘ஜெமினி கணேசன வரைஞ்சி வெச்சிருக்கான்பா’ சீன்ல அங்க 3,4 போலீஸ் இருப்பாங்கள்ல, அதுல ஒருத்தரா அருண் அலெக்ஸாண்டரும் நிப்பாரு.
இப்படி தொடர்ந்து அட்மாஸ்பியர் ரோல்ஸா வந்துக்கிட்டிருந்தப்போதான் அவருக்கு டப்பிங் துறையில வாய்ப்புகள் வர ஆரம்பிக்குது. முதல்முதலா இவர்.. தாய் லேங்க்வேஜ்லேர்ந்து இங்கிலீஷூக்கு டிரான்ஸ்லேட் ஆன டோனி ஜா படமான ‘டாம் யூம் கூங்’ங்கிற படத்துல சின்ன சின்ன கேரக்டர்களுக்கு வாய்ஸ் பேசியிருக்க்கிறாரு. மெயின் ஸ்ட்ரீம் சினிமாவுல முதல் வாய்ப்பா ‘வாரணம் ஆயிரம்’ படத்துல ஒரு டாக்டர் ரோலுக்கு பேசுற வாய்ப்பு வருது. இப்படி தொடர்ந்து துண்டு துக்கடா ரோல்களுக்கு டப்பிங் பேசிக்கிட்டிருந்தவருக்கு 2009-ம் வருசம் முக்கியமான வருசமா இருந்திருக்கு. அந்த வருசம்தான் அவதார்-ஃபர்ஸ் பார்ட்டோட தமிழ் டப்ல ஹீரோவுக்கு வாய்ஸ் கொடுக்கிற வாய்ப்பும் அதே வருசம் வெளியான ‘2012’ படத்துல ஆப்பிரிக்க சயிண்டிஸ்ட் ரோல்லுக்கு வாய்ஸ் கொடுக்கிற வாய்ப்பும் இவருக்கு வரவே.. அந்த ரெண்டு வாய்ப்பையும் சரியா பயண்படுத்தின அருண்.. அந்த கேரக்டர்ஸுக்கு தரவேண்டிய நியாயமான எமோசன்ஸை தனது குரல் மூலமா அட்டகாசமா வெளிப்படுத்த.. அந்த வருசமே டப்பிங் துறையில ஒரு கவனம் ஈர்க்குற ஒரு நபரா இவர் மாறுறாரு.

நிறைய ஹாலிவுட் படங்களின் தமிழ் டப்பிங் வாய்ப்புகள் இவரைத் தேடி வர ஆரம்பிக்குது. வில் ஸ்மித் நடிச்ச பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ் மாதிரியான டிராமா படமாகட்டும் அவரே நடிச்ச எம்.ஐ-3 மாதிரியான ஆக்சன் காமெடி படத்துக்கும் ரெண்டு எக்ஸ்ட்ரீம் மூட் எடுத்து வாய்ஸ் கொடுத்திருப்பாரு அருண் அலெக்சாண்டர். அந்த டைம்லதான் அவருக்கு மிகப்பெருசா பேர் வாங்கித்தந்த அவெஞ்சர்ஸ் சீரிஸ் ‘தோர்’ கேரக்டருக்கு பேசுற வாய்ப்பு வருது. இன்னொருபக்கம் டிசி சூப்பர் ஹீரோவான அக்குவாமென் கேரக்டருக்கும் வாய்ஸ் கொடுத்திருப்பாரு. இதுல அக்குவாமென் தூத்துக்குடி ஸ்லாங்க்ல பேசுனதெல்லாம் வேற லெவல் சம்பவம். இப்படி ஹாலிவுட் படங்கள் ஒருபக்கம்னா இன்னொருபக்கம் நிறைய கார்ட்டூன் கேரக்டர்களுக்கும் இவர் வாய்ஸ் கொடுத்தாரு. குறிப்பா ஷின்சான் கார்ட்டூன்ல வர்ற ஷின் சானோட அப்பா கேரகடருக்கு வாய்ஸ் கொடுத்ததும் இவரேதான். ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் -பால் வாக்கர், it chapter – clown கேரக்டர்னு இப்படி நாம இ்து இவரோட குரல்தான்னு தெரியாமலேயே பல படங்கள்லயும் பல கார்ட்டூன்கள்லயும் இவரோட குரல்ல ரசிச்சுக்கிட்டிருந்தோம்.
இந்த நேரத்துல லோகேஷ் கனகராஜ் தன்னோட முதல் படமான ‘மாநகரம்’ ஆரம்பிக்கும்போது அவரோட கண்ல பட்டிருக்கிறாரு அருண் அலெக்ஸாண்டர். அவரோட திறமைகள் ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் துளி நெகட்டிவிட்டியும் இல்லாத அவரோட கேரக்டர் லோகேஷூக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. குறிப்பா தான் ஒரு பிஸி டப்பிங் ஆர்டிஸ்ட்.. இவன் யாரோ எந்த எக்ஸ்பிரீயன்ஸூம் இல்லாத ஒரு புதுப்பையன் அப்படின்னுலாம் நினைக்காம லோகேஷ் சொல்றதை அழகா உள்வாங்கி மெருகேத்தி அவர் நடிச்சுக்கொடுத்ததும் லோகேஷுக்கு அவர்மேல இன்னும் மரியாதையை கூட்டியிருக்கு.
மாநகரம் பாத்துட்டு நெல்சன் தன்னோட கோலமாவு கோகிலா படத்துல பாபி ரோல்ல நடிக்கவைக்கிறாரு. இந்த தடவையும் நெகட்டிவ் ரோல்தான்.. ஆனா காமெடி கலந்த நெகட்டிவ் ரோல். அதையும் அசால்டா தட்டி தூக்கியிருப்பாரு அருண் அலெக்ஸாண்டர். இந்த ரெண்டு படம் மூலமா இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இவருக்கு தேடி வர ஆரம்பிக்குது அதுல முக்கியமானது பிகில். பிகில் ஸ்பாட்டுக்கு இவர் போனதும் இவரைப் பாத்ததுமே கிட்ட வந்த விஜய், ‘கைதில்ல உங்கள பாத்தேண்ணா.. பிச்சுட்டீங்க’ என வாழ்த்தியிருக்கிறார்னா பாத்துக்கோங்க.

தொடர்ந்து இவர் டாக்டர், ஜடா, டாப்லெஸ் வெப்சீரிஸ்னு பயங்கர பிஸியாக அப்போ லோகேஷ் கனகராஜ் தன்னோட மாஸ்டர் படத்துல ஒரு மிகப்பெரிய ரோலுக்காக கூப்பிட்டப்போ டாக்டர் பட ஷூட்டிங்கும் இதுவும் க்ளாஸ் ஆகுற மாதிரி இருந்திருக்கு. இதைப் புரிஞ்சுக்கிட்ட லோகேஷூம் ‘சரிண்ணா.. அடுத்த ப்ராஜெக்ட்ல பாத்துக்கலாம்’ என சொல்லி அனுப்பியிருக்கிறார். திரும்ப சில மாதங்கள் கழித்து கூப்பிட்ட லோகேஷ், ‘அலெக்ஸ்ணா.. ஒரு சின்ன ரோல். நீங்க பண்ணா நல்லாயிருக்கும்’ என சொல்லி, மாஸ்டரில் விஜய் சேதுபதியின் எதிரிகளில் ஒருவராக வரும் ரோலில் நடிக்க வைத்திருப்பார் லோகேஷ் கனகராஜ். அந்த அளவுக்கு தன்னோட படங்கள்ல எப்படியாச்சும் அவர் இருந்துடனும்னு நினைச்சிருக்காரு லோகேஷ் கனகராஜ். ஆனா அவருக்கு தெரிஞ்சிருக்காது அவர் அடுத்து பண்ணப்போற விக்ரம் படம் ஆரம்பிக்கும்போது அருண் அலெக்ஸாண்டர் உயிரோடவே இருக்கமாட்டார்னு.

2020 டிசம்பர்ல ஒரு நாள் இவர் எக்ஸைசர்ஸ் பண்ணிக்கிட்டிருந்தப்போ கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு இறந்துபோனாரு. அப்போ அவருடைய வயசு 47. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். டாக்டர், டிக்கிலோனா இந்த ரெண்டு படங்களுமே அவர் இறந்ததுக்கப்புறம்தான் திரைக்கு வந்துச்சு. ஒரு தேர்ந்த டப்பிங் கலைஞரான இவருக்கு வேற ஒருத்தர் டப்பிங் கொடுக்குற நிலைமை வரும்னு யாருமே நினைக்கல. அந்த ரெண்டு படத்துலயும் அவரோட ஒரிஜினல் குரலை நீங்க கேட்க முடியாது.
Also Read – லோகேஷ் – ரஜினி காம்போ… லோகேஷ் முன் இருக்கும் 5 கேள்விகள்!
அருண் அலெக்ஸாண்டரோட குடும்பத்தினர் அளவுக்கு அவரோட இழப்புல ரொம்ப பாதிக்கப்பட்டாரு லோகேஷ் கனகராஜ். அவரோட இறுதி நிகழ்ச்சியில கலந்துகொண்ட லோகேஷால, அங்க பத்து செகண்ட்கூட அவரால நிக்க முடியல. டக்குன்னு அந்த இடத்தைவிட்டு கிளம்பியிருக்காரு. அருண் அலெக்ஸாண்டரைப் பத்தி தன் நண்பர்கள்ட்ட பேசும்போதெல்லாம் லோகேஷ், “அருண்ணான்னு சொன்னா அவரோட சிரிப்பு சத்தம்தான் முதல்ல என் மைண்ட்ல கேட்கும். அது எப்போதும் எனக்கு கேட்கணும். அவர் இன்னமும் ஏதோ ஒரு ஊர்ல எங்கயோ இருக்காருன்னுதான் நினைச்சுக்கிட்டிருக்கேன்”னு சொல்லி ஃபீல் பண்றதுண்டு.
ரொம்பவும் குறுகிய காலத்துல இப்படி மனசுல நிக்கிற மாதிரியான கேரக்டர்கள்ல நடிச்ச அருண் அலெக்ஸாண்டரை உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும்.. அவர் நடிச்சதுல உங்களோட ஃபேவரைட் ரோல் எதுன்னு கமெண்ட்ல சொல்லுங்க
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?