பாபா பாஸ்கர் - தனுஷ்

சினிமாவைத் தாண்டி தனுஷூக்கும் பாபா பாஸ்கருக்குமிடையே இருக்கும் ரிலேஷன்ஷிப்!

`டங்காமாரி’, ‘வாட் எ கருவாடு’, ‘ரகிட ரகிட’  போன்ற தனுஷின் பவர்ஃபுல் குத்துக்களுக்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குநர் பாபா பாஸ்கர். தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ முதல் சமீபத்தில் வெளிவந்த ‘ஜெகமே தந்திரம்’ வரை அவரது பெரும்பாலான படங்களில் தவறாமல் இடம் பெற்றிருக்கும் ஒரே  டெக்னீஷியன் பெயர் என்றால் அது பாபா பாஸ்கர்தான். தொழில்முறை உறவைத்தாண்டி தனுஷுக்கும் பாபா பாஸ்கருக்குமிடையே வெறொரு தொடர்பும் இருக்கிறது எது என்ன  தெரியுமா..?

பாபா பாஸ்கர்
பாபா பாஸ்கர்

சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை, ஏன் திரையுலகிலேயே பல பேர், தனுஷால் நடன இயக்குநரானவர் என்பதால்தான் இருவருக்குமிடையே நெருக்கம் இருந்துவருகிறது என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுமட்டுமே உண்மை இல்லை. இருவரும் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள். எட்டாம் வகுப்பு வரை தனுஷும் பாஸ்கரும் ஒன்றாக படித்தவர்கள். அப்போதிருந்தே இருவருக்குமிடையே ஆழமான நட்பு உருவாகியிருக்கிறது. அதன்பிறகு தனுஷ் இளம் வயதிலேயே ஹீரோவாகிவிட, பாபா பாஸ்கரோ நடனத் துறையைத் தேர்ந்தெடுத்து பல முன்னணி நடன இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி தொழில் கற்றுவந்தார்.

பாபா பாஸ்கர் - தனுஷ்
பாபா பாஸ்கர் – தனுஷ்

நடன உதவியாளராக இருந்த பாபா பாஸ்கரை முதன்முதலாக நடன இயக்குநராக அறிமுகப்படுத்தியதே தனுஷ்தான்.  2006-ஆம் ஆண்டு வெளியான தனுஷுன்‘திருவிளையாடல் ஆரம்பம்’ தான் பாபா பாஸ்கர் நடன இயக்குநராக அறிமுகமான முதல் படம். அதைத்தொடர்ந்து ‘பொல்லாதவன்’, ‘படிக்காதவன்’ ‘குட்டி’, ‘மாப்பிள்ளை’, ‘உத்தமபுத்திரன்’ என தொடர்ந்து பணியாற்றிவந்த இந்தக் கூட்டணி, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்ற ‘வாட் எ கருவாடு’ என்ற படம்மூலம் ரசிகர்களை வெகுவாக கவரத்தொடங்கியது. குறிப்பாக அந்தப் பாடலிலேயே பாஸ்கர் ஒரிடத்தில் தோன்றியதும் கவனத்தை ஈர்த்தது. அதைத்தொடர்ந்து வெளியான எல்லாப் படங்களிலுமே பாபா பாஸ்கர் குறைந்தது ஒரு பாடலாவது நடனம் அமைத்துவருகிறார்.

நடனம் அமைப்பது என்றில்லாமல், தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்திலும் சமீபத்தில் வெளியான ‘ஜெகமே தந்திரம்’படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி தனுஷுடன் நடித்திருப்பார். அந்த அளவுக்கு தனுஷ் தன் பள்ளிகால நண்பன் மீது நட்பு வைத்திருக்கிறார். அவர்களது பால்யகால நட்பைப் பற்றி தனுஷ் ‘கொடி’ பட இசை வெளியீட்டு விழாவில் சிலாகித்துப் பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read – `விஜய் கேட்டும் விட்டுக்கொடுக்காத அஜித்!’ – இயக்குநர் ராஜகுமாரன் Exclusive Interview

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top