மதயானைக்கூட்டம் டு சுழல்… நடிகர் கதிரின் சினிமா பயணம்!

‘களிமண்ணை உருட்டிரலாம்’னு வெற்றிமாறன் அஸிஸ்டெண்ட் நடிகர் கதிர் வைச்சு ‘மதயானைக்கூட்டம்’ படம் எடுத்தாரு. அந்தப் படத்துக்கு அப்புறம் ‘விக்ரம் வேதா’ புள்ளியா, பரியேறும் பெருமாள் ‘பரியனா’, ‘பிகில்’ கதிரா, ‘சுழல்’ எஸ்.ஐ.சக்ரவர்த்தியா நம்ம மனசுல கதிர் பதிஞ்சுட்டாரு. களிமண்ணா வந்தவரு தரமான கலைஞனா இன்னைக்கும் தமிழ் சினிமால வலம் வராரு. அவரோட சினிமா பயணம் எப்படி இருந்துச்சு? அதைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

Kathir
Kathir

கதிர் தன்னோட நண்பர்களோட 2016-ல ஒருநாள் நைட்டு பேசிட்டு இருந்துருக்காரு. அப்போ, அந்த கேங்க்ல இருந்த ஒருத்தர், “மாரி செல்வராஜ்னு ஒரு டைரக்டர் இருக்காரு. செமயான ஸ்கிரிப்ட் ஒண்ணு வைச்சிருக்காரு” அப்டினு சொல்லிருக்காரு. உடனே, அடுத்தநாள் மாரி செல்வராஜ் நம்பர் வாங்கி ஃபோன் பண்ணி, “எனக்கு உங்கப் படத்துல நடிக்க விருப்பம் இருக்கு”னு சொல்லியிருக்காரு. அப்போ, கதிருக்கு அது என்ன கதைனுகூட தெரியாது. மாரி செல்வராஜ் அப்புறம் அந்தக் கதையை சொல்லியிருக்காரு. ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி வரைக்கும் 7 தடவை அந்த ஸ்கிரிப்டை கதிர் வாசிச்சாராம். அப்போவே, கதிரிக்கு மக்கள் அந்த படத்தை கொண்டாடுவாங்கனு தெரியுமாம். சரியான ஒரு மூவ் பண்ணிருக்கேன்னும் நினைச்சு கதிர் அப்போ சந்தோஷப்பட்ருக்காரு. உண்மையான மனிதர்களின் கதை, காதல் – நட்பு இடைல இருக்கும் உறவுக்கான அந்த விஷயங்கள் எல்லாமே கதிரை ரொம்பவே கவர்ந்துருக்கு. கதிர் நினைச்ச மாதிரி வணிக, விமர்சன ரீதியா தரமான வரவேற்பை பெற்றது.

இன்னைக்கு சினிமால ரொம்பவே யூனிக்கான கேரக்டர்களை, கதைகளை செலக்ட் பண்ணி நடிக்கிற நடிகர்கள்ல கதிரும் ஒருத்தர். ஆனால், சினிமாக்குள்ள அவர் வந்தது விபத்துனே சொல்லலாம். கதிர்க்கு சினிமால வரணும், நடிக்கணும் அப்டிலாம் ஆசை இல்லை. சின்ன வயசுல இருந்து ஸ்டேஜ்கூட ஏறுனது கிடையாதாம். ஆனால், அவங்க அப்பாக்கு சினிமா மேல மிகப்பெரிய காதல் இருந்துச்சு. அந்த ஆசைதான் கதிர் சினிமாவுக்கு வர்றதுக்கு முக்கியமான காரணம். நடிகர் விஜய்க்கு மேனேஜரா இருக்கக்கூடிய ஜெகதீஷ், கதிரோட சொந்தக்காரராம். ஆரம்பத்துல ஜி.வி.பிரகாஷ்கிட்ட வொர்க் பண்ணிட்டு இருந்துருக்காரு. கதிர் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும்போது ஜெகதீஷ் வந்து, “வெற்றிமாறன் சாரோட அஸிஸ்டெண்ட் படம் ஒண்ணு எடுக்கப்போறாரு. அதுக்கு புதிய முகம் ஒண்ணு வேணும்னு தேடுறாரு. நீ வேணா ஆடிஷன் போய்ட்டு வா”னு சொல்லியிருக்காரு. இவரும் ஆடிஷன் போய் கலந்துகிட்டு அவங்க சொல்றதை மட்டும் பண்ணியிருக்காரு. எனக்கு நடிப்பு, சினிமாலாம் எதுவும் தெரியாதுனு டைரக்டர்கிட்ட சொன்னதும், “களிமண்ணை உருட்டிக்கலாம்”னு ஒரேவார்த்தைல சொல்லிட்டு தாடி வளர்த்துட்டு வானு சொல்லி அனுப்பியிருக்காரு. அப்புறம் ஆக்டிங் வொர்க்‌ஷாப்லாம் கலந்துகிட்டு 5 மாசம் கழிச்சு ‘மதயானைக்கூட்டம்’ ஷூட்டிங் தொடங்கியிருக்கு.

Kathir
Kathir

பரியேறும் பெருமாள் படத்துல நடிக்க கதிர் வாய்ப்பு கேட்டதும் மாரி செல்வராஜ் ஏன் அவரை நடிக்க வைக்க அக்சப்ட் பண்ணிக்கிட்டார் தெரியுமா?… அதுக்கான பதில் கடைசியில இருக்கு..!

மதயானைக்கூட்டம் படத்துல கதிர் கேரக்டர் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும். எப்பவுமே புதுசா வர்றவங்க நடிச்சா, “என்ன நடிக்கிறதைப் பார்த்தா, முதல் படம் மாதிரியே தெரியலை”னு சொல்லுவாங்கள்ல! கதிர் அந்தப் படத்துல நடிக்கும்போதே இதேதான் எல்லாருக்குமே தோணியிருக்கும். ஆரம்பத்துல வர்ற கோண கொண்டக்காரி பாட்டுல இருந்து கிளைமாக்ஸ்ல வீட்டுக்குள்ள நடக்குற சண்டை வரைக்கும் ஒவ்வொரு ஃப்ரேம்லயும் கதிர் அவ்வளவு இயல்பா நடிச்சிருப்பாரு. இன்னைக்கும் நிறைய பேர் அந்தப் படத்தைப் பார்த்துட்டு விவாதிக்கிறதுலாம் பார்க்க முடியும். நீங்க மிஸ் பண்ணியிருந்தா பாருங்க. சரி, ஒரு படத்துல எப்படியோ வாய்ப்பு கிடைச்சு நடிச்சிட்டாரு. அடுத்து என்னன்ற கேள்வி இருக்கும்ல. கதிர்க்கு சினிமா சம்பந்தமா எந்த விஷயமும் பெருசா தெரியாதுன்றதால, எப்படி அடுத்த ஸ்கிரிப் செலக்ட் பண்றதுனு தெரியாம ரொம்பவே திணறியிருக்காருனு சொல்லலாம். அந்த சமயத்துல நிறைய ஸ்கிரிப் கேட்ருக்காரு. சினிமால கத்துக்க எப்பவும் ரெடியா இருக்கணும். அதுவே நம்மள அடுத்தக்கட்டத்துக்கு கூட்டிட்டுப் போகும்னு கதிர் சொல்லுவாரு. அந்த நம்பிக்கைதான் அவரை அடுத்த படத்துக்கு கூட்டிட்டு வந்துருக்குனு சொல்லலாம்.

Kathir
Kathir

காக்கா முட்டை மணிகண்டன் அடுத்த படம் பண்றாருனு ஜி.வி சொல்லி ரெஃபர் பண்ணியிருக்காரு. அப்போ தான் கிருமி படத்துக்கான கதையை சொல்லியிருக்காங்க. “ஏன் கதிர் படத்துக்கு வரணும்?”னு ஒரு கேள்வி இருக்குல. அதுக்கு சரியான பதிலை கதிர் கிரியேட் பண்ணனும்னு நினைச்சு யூனிக்கான ஸ்கிரிப்ட் செலக்ட் பண்ண தொடங்கியிருக்காரு. கிருமிலயும் தரமான பெர்ஃபாமென்ஸ் கொடுத்துருப்பாரு. அப்புறம் விக்ரம் வேதா படம். ஆக்சுவலா அந்தப் படத்துல அவர்தான் கதை நகர்றதுக்கு காயின். புள்ளின்ற கேரக்டர்ல கதிர் பண்ண விஷயங்கள் ரொம்பவே நல்லாருக்கும். அண்ணன் – தம்பி சென்டிமென்ட், காதல் அப்டினு கொஞ்சம் சீன்ல வந்தாலும் மனசுல நிக்கிறமாதிரி நடிச்சிருப்பாரு. இப்பவும் விக்ரம் வேதால புள்ளி கேரக்டருக்குனு தனி ஃபேன்பேஸ் இருக்கு. பரியேறும் பெருமாள் படத்துக்கு முன், பரியேறும் பெருமாள் படத்துக்கு பின்னு கதிர் வாழ்க்கையை பிரிக்கலாம். அந்தப் படத்துக்குள்ள கதிர் எப்படி வந்தாருனு முன்னாடியே சொன்னேன். மாரி செல்வராஜ் ஏன் அவரை செலக்ட் பண்ணாரு சொல்லும்போது செம இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு.

Also Read – குறிச்சு வைச்சுக்கோங்க… நம்பிக்கை தரும் ஸ்டார் கிட்ஸ்!

எளிமையான பையன், அவனுக்கு வாய்க்கிற வாழ்க்கை, அந்த வாழ்க்கை அவனுக்கு கத்துக்கொடுக்குற விஷயங்கள், கோபங்கள், இதையெல்லாம் இமிடேட் பண்ற, பரியேறும் பெருமாள் கதை நடக்குற மண் சார்ந்த பையன் மாரி செல்வராஜ்க்கு தேவையா இருந்துச்சு. அதுக்கு கதிர் ரொம்பவே சரியா இருப்பாருனு அவரை செலக்ட் பண்ணியிருக்காரு. “கதிரை நான் முழுமையான நடிகராகவே பார்க்கல. இதுதான் நடிப்புன்ற இடத்தை கதிர் இன்னும் கண்டு பிடிக்கல. அப்படியான ஆள்கள்கிட்ட ரொம்ப ஈஸியா நடிப்பை வாங்கிடலாம். ஒரு நடிகன்கிட்ட பெர்ஃபாமென்ஸ் சார்ந்து விஷயங்களை வாங்கிடலாம். உடல் உழைப்பை வாங்குறது கஷ்டம். ஆனால், கதிர் அதை பண்ணாரு. அன்னைக்கு நம்பி உழைப்பை போட்டாரு. அதுக்கான பலனைதான் கதிர் இன்னைக்கு அனுபவிக்கிறாரு”னு சொல்லுவாரு. பரியேறும் பெருமாள்ல அப்பாவை கூட்டிட்டு வர கூச்சப்படுறது, ஜோக்கிட்ட காதலா – நட்பானு தெரியாத ஒரு உறவுல இருந்து பேசுறது, கறுப்பி கூட பழகுறது, ஜோ வீட்டுல அசிங்கப்படுற சீன், கார்ல கண்ணாடியை உடைச்சிட்டு முன்னாடி ஏறு நின்னு பேசுற சீன், கிளைமாக்ஸ்ல பேசுறதுனு ஒவ்வொன்னும் குறிப்பிட்டு பேசும்படியாதான் இருக்கும்.

விஜய்யோட மிகப்பெரிய ஃபேன், கதிர். பரியேறும் பெருமாள் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டியிருக்காரு. அப்படியிருக்கும்போதுதான் பிகில் படத்துல விஜய்க்கு ஃப்ரெண்டாவே நடிக்கிற வாய்ப்பு கிடைக்குது. அந்த படத்தையும் கத்துக்குறதுக்கான எக்ஸ்ப்ளோர் பண்றதுக்கான தளமா எடுத்துருப்பாரு. அந்தப் படத்துக்கு அப்புறம் விஜய் ஃபேன்ஸ் நிறைய பேருக்கு கதிர் ஃபேவரைட்டான ஆளா மாறிட்டாருனே சொல்லலாம். ஃபுட்பால் மேல அவ்வளவு ஆசைபோல, அடுத்தடுத்து ரெண்டு படம் ஃபுட்பால் பிளேயராவே நடிச்சி கலக்குனாரு. அப்புறம் அவர் கரியர்ல இன்னொரு முக்கியமான சம்பவம் சுழல் வெப் சீரீஸ். சப் இன்ஸ்பெக்டர் ரோல்ல வந்து செம மாஸ் பண்ணியிருப்பாரு. கதையாவே ரொம்ப சிக்கலான, அதேநேரம் ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான சீரீஸா இருந்துச்சு. அதுல தன்னோட ரோல கரெக்டா பண்ணியிருப்பாரு. இப்போ, மலையாளத்துல செம ஹிட்டான இஷ்க் படத்தோட தமிழ் ரீமேக்ல நடிச்சிட்டு இருக்காரு. அந்தப் படத்தை பார்க்குறதுக்கு செம வெயிட்டிங்ல இருக்கோம்.

Kathir
Kathir

ஒரு ஹீரோ எப்போ நமக்கு ரொம்ப க்ளோஸ் ஆவாருனா, அந்த முகம் நடிகனா நம்ம கண்ணுக்கு தெரியாம, பக்கத்து வீட்டுல இருக்குற பையனா கண்ணுக்கு தெரியும்போது, நம்ம வாழ்க்கையை ரெப்ரசண்ட் பண்ற, சமூகத்தை ரெப்ரசன்ட் பண்ற கதைகளை செலக்ட் பண்ணி நடிக்கும்போதும்தான். அப்படிப்பார்த்தா, கதிர் நமக்கு அவ்வளவு க்ளோஸ். கதிரோட படங்கள்ல உங்களோட ஃபேவரைட் என்ன? கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top