லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனுக்கு அப்புறம் வெறித்தனமான ஃபேன்னா அது மன்சூர் அலி கானுக்குதான். ஒரு மணிநேரம் இண்டர்வியூ கொடுத்தார்னா அதுல மன்சூர் அலிகானைக் குறிப்பிட்டு கண்டிப்பா ஒரு வார்த்தையாவது லோகேஷ் பேசிடுவாரு. அவர் எவ்வளவு பெரிய மன்சூர் அலிகான் ஃபேன்னுன்றதுக்கு ஒரு சின்ன எக்ஸாம்பிள்தான் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ பாட்டை கமல் ஃபைட்டுக்கு யூஸ் பண்ணது. கைதி படத்தோட ஒன்லைன் யோசிக்கும்போதே, இந்தக் கதைல மன்சூர் அலிகான் நடிச்சா எப்படி இருக்கும்ணுதான் லோகேஷ் யோசிச்சிருக்காரு. ஆனால், அது நடக்காமல் போச்சு. அதேமாதிரி விக்ரம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் கொடுத்த இண்டர்வியூனு நினைக்கிறேன். அதுல லோகேஷ் பேசும்போது, “மன்சூர் அலிகானோட ஆட்டிடியூட் எனக்கு ரொம்ப புடிக்கும். எனக்கு தெரிஞ்சு அப்படி ஒரு ஆட்டிடியூடோட இருக்குற ஆள எங்கயுமே பார்த்ததில்லை. ஒரு இண்டர்வியூல ஆங்கர் ஒண்ணு கேட்டுட்டு இருப்பாரு. இவர் செடியை புடுங்கி ஊதிட்டு இருப்பாரு. எப்படி இப்படி ஒருத்தரால இப்படி பண்ண முடியும்னு யோசிப்பேன். அவருக்குனு எதாவது எழுதணும்னு எப்பவும் தோணும்”னு சொல்லுவாரு.
மன்சூர் அலிகானைப் பத்தி லோகேஷ் பேசுனதுக்கு அப்புறம் அவரோட தக் லைஃப் மொமன்ட்ஸ் எல்லாமே சோஷியல் மீடியால செம வைரலா போய்ட்டு இருக்கு. சரி, வேற என்ன தக் லைஃப் மொமண்ட்ஸ்லாம் மன்சூர் அலிகான் பண்ணியிருக்காரு. அதைத்தான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
கடமான் பாறைனு மன்சூர் அலிகான் ஒரு படம் எடுத்தாரு. அதுல அவரோட மகன் அலிகான் துக்ளக்தான் ஹீரோவா நடிச்சிருந்தாரு. அந்தப் படத்தோட புரொமோஷனுக்காக டீமா பிரஸ் மீட் அட்டண்ட் பண்ணுவாங்க. “உங்க மகனை இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வைக்க காரணம் என்ன?”னு கேள்வி கேப்பாங்க. அவரோட திறமைகள் பத்தியும் கேப்பாங்க. அதுக்கு மன்சூர் அலிகான், “வேற ஒண்ணுக்கும் அவன் லாயக்கு இல்லை. சும்மா கிடந்தான். போடா அப்படியே போய் பொழச்சுக்கனு விட்டுட்டேன். யாராவது கூப்பிட்டா நடி. இல்லைனா என்னத்தையாவது பண்ணு போ”னு சொல்லுவாரு. சினிமா உலகத்துல எந்தவொரு அப்பாவும் தன்னோட மகனை படங்கள்ல அறிமுகப்படுத்தும்போது இப்படியான வார்த்தைகளை சொல்லி அறிமுகம் பண்ணதா வரலாறே கிடையாது. அங்கதான் தலைவன் மன்சூர் அலிகான் நிக்கிறாரு.
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசின விஷயம் ரொம்பவே சமீபத்துல சர்ச்சையாச்சு. இதுதொடர்பா மன்சூர் அலிகான்கிட்ட செய்தியாளர்கள் கேள்வி கேப்பாங்க. அதுக்கு மன்சூர் அலிகான், “அம்பேத்கரோட ஒப்பிட்டுருக்காங்களா? அது மாபெரும் தவறில்லையா? அம்பேத்கரின் கால் தூசிக்குக்கூட ஈடாகத மனிதரைப் பத்திலாம் அப்படி பேசாக்கூடாது. பக்கத்துல பேரரசு இதை மறுத்துப் பேசுவாரு. அவரு மிகப்பெரிய லிரிக்ஸ் ரைட்டர். இப்போ வந்த படங்களையெல்லாம் விட அப்போவே ங்கொம்மா, கம்மானு எழுதியிருக்காரு”னு சொல்லுவாரு. உடனே பேரரசு, “ங்கொம்மா இல்லைங்க. அம்மா”னு சொல்லுவாரு. அதுக்கு மன்சூர் அலிகான், “ஆமாங்க, கேக்கையில அப்படிதான கேட்டுச்சு”னு பாட்டுப்பாடி ஸ்டெப்லாம் போட்டு காமிப்பாரு. யோவ் யாருயா நீ?-னுதான் கேக்கத்தோணும்.
மன்சூர் அலிகான்கிட்ட ஒரு பிரஸ்மீட்ல மூத்த நடிகர்கள் எல்லாம் இப்போ பொதுசேவைக்கு வறாங்க. அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்கனு கேள்வி கேப்பாங்க. அதுக்கு இவரு, “என்ன மூத்த நடிகர் மூத்திரம் போன நடிகர்னு. எல்லாம் ஆண்டு முடிச்ச பிறகு என்னத்தப்போட்டு ஆட்சிப் பண்ணப்போறீங்க?”னு கேட்டு தக் லைஃப் ஒண்ணைப் போடுவாரு. தொடர்ந்து அந்த பிரஸ் மீட்ல பேசும்போது, “தமிழ்நாட்டை மேல கொண்டு வரணுங்க. உதாரணத்துக்கு ரஜினிசாரை சொல்றேன். அவர்கூட நடிச்சிருக்கேன். நல்ல மனுஷன் அவரு” அப்டினு நல்லதா பேசும்போது ஃபோன் வரும். “எந்த ஃபோன்ப்பா அடிக்குது? என் ஃபோன்தான் அடிக்குது. டேய், இதை எடுத்துட்டுப் போ”னு சொல்லி இன்னொரு டயலாக் சொல்லுவாரு. அதை நாம சொன்னா தப்பா இருக்கும். சரியான தக் லைஃபா இருக்கும். உடனே, “எங்க விட்டேன்”னு மன்சூர் அலிகான் கேப்பாரு. அதுக்கு செய்தியாளர்கள்ல ஒருத்தர், “ரஜினிகாந்த் சார்”னு சொல்லுவாரு. அதுக்கு இவரு, “அதுலயே இரு நீ”னு ஒரு தக் லைஃப் போட்டு மொமண்ட கிரியேட் பண்ணுவாரு. சரியான சம்பவமா இருக்கும்.
நாம் தமிழர் கட்சில மன்சூர் அலிகான் இருக்கும்போது, வேட்பாளரா அறிவிக்கப்பட்டாரு. அப்போ, ஓட்டு கேட்டு பிரசாரத்துக்கு போகும்போது ஒரு சேனலுக்கு இண்டர்வியூ கொடுப்பாரு. அந்த நிருபர், “என்ன வாய்க்கு வந்ததுலாம் பேசுறீங்க?”னு ஒரு கேப்பாரு. அந்த சீன்ல மன்சூர் அலிகான் சின்ன வெங்காயம் குவிச்சு வைச்சதுக்கு முன்னாடி உட்கார்ந்திருப்பாரு. கேள்விக்கு பதில் சொல்லும்போது, “நான் என்ன வாய்ல வந்ததைப் பேசினேன்னு நீங்க இப்போ சொல்லணும். சொல்லியே ஆகணும். இல்லைனா, சாயங்காலம் வரைக்கும் வெங்காயத்தை புடைச்சிட்டே இருப்பேன்”னு சொல்லுவாரு. இந்த தக் லைஃபே இவருக்காகதான் கண்டுபிடிச்சிருப்பாங்கபோலனு அதெல்லாம் பார்த்தா தோணும். அடுத்துவக்காய் எடுத்து சாப்பிட்டுட்டு பிரசாரம் பண்ண போய்டுவாரு. அந்த ஆங்கர், “நீங்க பாவக்காய் சாப்பிடுறதுக்கும், பிரசாரத்துக்கும் என்ன சம்பந்தம்?”னு கேப்பாரு. அதுக்கு மன்சூர் அலிகான், “ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும். இயற்கை விவசாயத்தை வளர்த்த மாதிரியும் இருக்கும். பாவக்காய் சாப்பிட்டா சுகரும் இறங்கும்”னு சாப்பிட்டு காமிப்பாரு. அதெல்லாம் பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்கும்.
மன்சூர் அலிகான் இப்படி தக் லைஃப் பண்ண சம்பவங்களை சொல்லிட்டே போகலாம். ஒரு இண்டர்வியூல, “மன்சூர் அலிகான் ரொம்ப அசிங்கமா வாய்க்கு வந்ததுலாம் பேசுறாரு. அதுனாலதான் அவர்மேல வழக்குலாம் வருதுனு சொல்றாங்க”னு கேப்பாரு. அதுக்கு இவரு, “நான் என்ன ஏ படத்துலயா நடிக்கிறேன்”னு தக் லைஃப் போடுவாரு. அதேமாதிரி பிரஸ் மீட், ஆடியோ லாஞ்ச், அரசியல் மீட்னு என்ன சான்ஸ் கிடைச்சாலும் ஒரு தக்லைஃப் கண்டிப்பா போட்ருவாரு. உலகத்துலயே அந்த மனுஷன் மாதிரி தக் லைஃப் போடுறவரையும், ஆட்டிடியூட் உள்ளவரையும் பார்க்கவே முடியாது. மன்சூர் அலிகான்லாம் வேறலெவல்.
மன்சூர் அலிகானை உங்களுக்கு புடிக்குமா? புடிக்கும்னா ஏன் புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read – சாப்ட்வேர் என்ஜினீயர் டு நடிகர்… ‘நாடோடிகள்’ நமோ நாராயணின் கதை!