மைம் கோபி

‘5 வருட காதல், போராடி திருமணம்..’ நடிகர் மைம் கோபி காதல் கதை!

மைம் கோபி ஸ்டோரி | குக் வித் கோமாளி மேடை குக்கிங்கைத் தாண்டி குக்குகளும் கோமாளிகளும், அவ்வப்போது தங்களது தனித்திறமைகளை காட்டி வருகின்றனர். அவர்களில் மைம்கோபி செய்யும் மைம்கள் சமூகவலைத்தளங்களில் அப்பப்போ வைரலும் ஆகுது. முக்கியமாக அவர் பண்றதை பார்க்குறப்போ அழுகையை தவிர்க்க முடியாது. ஆனா ஒரு படத்துல இவர் ஹீரோவை எதிர்த்ததுக்காக ரசிகர்கள் இவரை சுத்துப்போட்டு, அதுல இருந்து தப்பிச்சு வந்த வரலாறுகளுக்கு சொந்தக்காரர். இப்படி சினிமாவுல வில்லனா இருக்கிவருக்குப் பின்னால இருக்கிற கதையும் கொஞ்சம் சுவாரஸ்யமானது. 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அவர் குரு… Father of mime-ங்குற பட்டத்துக்கு சொந்தக்காரர், முதியோர் இல்லம் அமைத்து தொண்டு செய்பவர், கரடுமுரடான பாதைகளுக்கு மத்தியில் போராடி காதல் திருமணம், குடிப்பழக்கம் இல்லாத வில்லன் நடிகர், மைம்க்காக டாக்டர் பட்டம் பெற்றவர், ஸ்டுடியோ அமைத்து எல்லோருக்கும் நடிப்பு சொல்லித் தருபவர் உள்ளிட்ட பல பக்கங்கள் இருக்கு. அவர்தான் சினிமாவுல வில்லனா நடிச்சு கலக்கிட்டிருக்கார். இவரோட கதையைத்தான் டீட்டெய்லா இந்த வீடியோல பார்க்கப்போறோம். 

மைம் கோபி
மைம் கோபி

சினிமா கரியர்!

மைம் கோபிக்கு பள்ளிக்கூட காலத்துல இருந்தே மைம் மேல பிரியம். அதை தொடர்ச்சியா பண்ணிட்டு வந்தவர், கல்லூரியிலயும் மேடையேறி கலக்க ஆரம்பிச்சார். அதன் பின்னர் தான் இதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டு ஜி மைம் ஸ்டுடியோவை ஆரம்பிச்சார். இங்க மைம் தாண்டி நடிப்பும் சொல்லிக் கொடுக்கிறார். இந்த நேரத்துலதான் இயக்குநர் மாரிமுத்து உள்ள வந்து கண்ணும் கண்ணும் படத்துல நடிக்க வைக்கிறார். அந்த படத்துல கஷ்டப்பட்டு நடிச்சார். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகுது. அதுக்கப்புறம் வாயை மூடிபேசவும் கைகொடுக்குது. அது கொடுத்த அடையாளத்தோட, அடுத்து வந்த மெட்ராஸ் இன்னும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துச்சு. அவரைத் தேடிப்பிடிச்சு நடிக்க வைச்சவர், இயக்குநர் பா. ரஞ்சித். பின்னர் மாரியில் ‘பேர்டு ரவி’, கதகளியில் விஷால் அண்ணன், உறியடி, கபாலி, பைரவா, மரகத நாணயம், காவல்துறை உங்கள் நண்பன், வாரிசுனு பல படங்கள்ல நடிச்சார். அந்த லிஸ்ட்ல தெலுங்கு படங்களும் அதிகமா இருக்கு. அதுல புஷ்பா முதல் பாகத்துல கவனிக்க வைச்சார். இப்போ பிரசாந்த் நீல் இயக்கத்துல சலார் படத்துல நடிச்சு முடிச்சிருக்கார். சினிமாக்கு முன்னாலயே மைம் கோபி சரவணன் மீனாட்சி சீசன்1-ல மிர்ச்சி சரவணனுடன் சேர்ந்து நடிச்சிருந்தார்.

மைம் கோபி – அன்பானவன்!

இன்னைக்கும் இவருக்குக் கீழ நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடிப்பு பயிற்சியும், மைம் பயிற்சியும் கத்துக்கிட்டிருக்காங்க. Father of mime அப்படிங்குற ஒரு பட்டம், டாக்டர் பட்டம், விருதுகள்னு பல விருதுகள் அங்கீகாரங்கள் இவரைத் தேடி வந்திருக்கு. இவர் வலிய போய் எங்கயுமே வாய்ப்புகள் தேடுறது இல்ல..ஆனா வாய்ப்பு தேடி வந்தா ஒருகை பார்க்காம விடுறதும் இல்ல. சினிமா நடிகரா ஒருபக்கம் கலக்கினாலும், இவரின் இன்னொருபக்கம் ஆச்சரியமாக இருக்கிறது. ‘நாக்குங்குறது ஆயிரம் பாம்புகள மாதிரி வார்த்தைகளை பார்த்து விடணும்’, ‘நான் சாகுறப்போ என் காசைப் பார்க்காம 3 பேர் அழுதாகூட போதும்’னு படத்தோட கேரெக்டருக்கும், உருவத்துக்கும் சமபந்தமே இல்லாம பேசிட்டே இருப்பார். வில்லனா கேரெக்டர் பண்ணவர் நிஜமாவே வாழ்க்கையில அன்பு செலுத்துற மனுஷன். நலவாழ்வு மையம் வைச்சு நிறைய பேருக்கு வாழ்வு கொடுத்துகிட்டிருக்கார்.

மனைவி டாக்டர்.. காதல் திருமணம்!

மைம் கோபி
மைம் கோபி

மைம் கோபி மனைவி ஒரு டாக்டர். MD Community medicine படித்திருக்கிறார். அவர் அமெரிக்காவில் படித்தவர். அந்த நேரம் கோபி NGO பணிகள் அதிகம் செய்த காலம் அது. இவர் செய்வதைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி கோபியை, மருத்துவர் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார். அது கோபிக்கும் பிடித்துப்போக இருவரும் வீட்டில் சொல்ல, கோபி வீட்டில் உத்தரவு கிடைக்கிறது. ஆனால் இவர் மனைவி வீட்டில் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதனால் போராடி 5 வருடங்கள் காத்திருந்து மணமகள் வீட்ல சம்மதம் வாங்கி திருமணம் செய்திருக்கிறார். இன்றைக்கு கோபி ஷூட்டிங் போன நேரத்தில் அவரது தொண்டு பணிகளை கவனிப்பவரும் மனைவிதான்.

தனித்துவம்!

மைம் கோபியின் தனித்துவமே அவரது முகம்தான். முகத்தில் ரியாக்‌ஷனுடன் அவர் காட்டும் உடல்மொழி திரைக்கு புது மொழியைக் கொடுக்கும்னே சொல்லலாம். அப்படித்தான் மெட்ராஸ் அடைக்கலம் கேரெக்டர் இருந்தது. எல்லா செவுரும் உங்க செவுருதான்னு பேசுறப்போ அதுல மிரட்டல் கலந்திருந்தது. அதேபோல கபாலியில ரஜினிக்கு ஆப்போனண்டாவும், மாரியில தனுஷ்க்கு ஆப்போனண்டாவும் சரியா விளையாடியிருப்பார். வா மாரினு இவர் தனுஷை கூப்பிடுறப்போ அந்த முகத்துல சீரியஸும், டயலாக்ல எகத்தாளமும் கலந்திருக்கும். இப்படி நடிப்பதெல்லாம் மைம் கோபிக்கு அத்துப்படி. சினிமாவுக்கு வந்த புதுசுல மைம் மாதிரியே சினிமாவை டிரை பண்ணியிருக்கார். ஆனா, அதனால நிறைய இயக்குநர்கள் இவரைத் திட்டியிருக்காங்க. அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா சினிமாவை வேற மாதிரி டிரை பண்ண ஆரம்பிச்சார். அதுக்கப்புறமாத்தான் தெரியுது, அந்த நடிப்பு வேற, சினிமா நடிப்பு வேறனு. அதனால சினிமாநுட்பங்களைக் கத்துக்கிட்டு தன்னோட நடிப்பை மெருகேத்திக்கிட்டார். அப்புறமாத்தான் சினிமா கரியரில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார்.

Also Read – விஜய் – விக்ரம் மீட்டிங்..ரஜினியுடன் ஷுட்டிங்… ‘ஜெய்பீம்’ ஞானவேல் ஆச்சரியப் பயணம்

கோபி எனும் மைம் கலைஞன்!

இவர் நடிப்புக்காக எங்கேயும் பயிற்சி பெறுவது இல்லை. மனிதர்கள்கிட்ட பார்த்து பழகினதைத்தான் உள்வாங்கி நடிக்கிறார். உண்மையில் குடிப்பழக்கம் இல்லாதவர், திரையில் 24 மணிநேரமும் குடிகாரனாக நடிக்க சொன்னாலும் அச்சுப்பிசகாமல் நடிப்பவர். எப்படிங்க இவ்ளோ தத்ரூபமா நடிக்கிறீங்கனு கேட்டா, ‘நான் ஒரு பொம்மை…களிமண் ..என்னை எப்படியாக இயக்குநர் நடிக்க சொல்கிறாரோ அப்படியாக என்னால் மாற முடியும்’ என்று சொல்கிறார். இதுபோக மைம்மிலிருந்து சில ரியாக்‌ஷன்களை எடுத்து நடிப்பாக மாற்றுவதிலும் கில்லாடி. இதை குக் வித் கோமாளி இந்த சீசனிலும் தொடர்ந்து வருகிறார். இவரது மைம்மை பார்த்தால் நிச்சயம் அவர் நடிப்பை பார்த்து கண்கலங்கும். அந்த அளவுக்கு மைம்மால் நம்மைக் கட்டிப்போடுவதில் கில்லாடி. அதேபோல எந்தப்படத்தில் நடித்தாலும் அந்த கேரக்டரில் நம்மை கவனிக்க வைப்பது, நடிகராக மைம் கோபியின் இன்னொரு ஸ்பெஷல்னே சொல்லலாம். 

எனக்கு இவர் நடிப்புல ரொம்ப பிடிச்ச படம் மாரி பேர்டு ரவி கேரெக்டர்தான். உங்களுக்கு எந்தப்படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top