சரத்குமார்

சரத்குமாருக்கு ரஜினியே கொடுத்த கதை… `நாட்டாமை’ சரத்குமார் சம்பவங்கள்!

சரத்குமார் | சார், சரத் சார் ஒரு இளம் ஹீரோ படம் பண்றோம். அது த்ரில்லர் படம். நீங்க ஒரு போலீஸ் ரோல் பண்றீங்க. ஹீரோவுக்கு துணையா கதையை நகர்த்திட்டு போறீங்க. முடிவுல ஜெயிச்சிட உரித்தானவன்னு நீங்களும், இளம் ஹீரோவும் சேர்ந்து சைக்கோ வில்லனை போட்டு தள்றீங்க. வந்து நடிச்சுக் கொடுங்க சார்..ப்ளீஸ்’ இப்படித்தான் இன்னைக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சரத்குமாரை கூப்பிடுறாங்க. அவரும் வரிசையா வந்து படங்களை நடிச்சுக் கொடுக்கிறார்.

ஒரு காலத்துல எங்க நாட்டாமை எப்படி வாழ்ந்த மனுஷன் தெரியுமானு நினைக்கிறப்போ கொஞ்சம் மனசு வலிக்கிறதை தவிர்க்க முடியலை. பரவாயில்லை இப்போ அடுத்த ரவுண்டுக்கு அடாப்ட் ஆகிட்டார். வயசுக்கு ஏத்த கதாபாத்திரம், ஜோடி இல்லைனு என்ன சொன்னாலும் இறங்கி நடிச்சுக்கிட்டிருக்கார். இடையில ரஜினியையே வசூல்ல முந்தின ரெண்டு படங்கள்லாம் கொடுத்து அவரையே பின்னுக்கு தள்ளினவர். இப்படில்லாம் கூட பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகள் இருக்கும்னு தமிழ் சினிமாவுக்கு பாடமே எடுத்தவர், சரத்குமார். அப்படி என்ன சம்பவம்லாம் பண்ணியிருக்கார்னுதான் இந்த வீடியோல பார்க்க போறோம்.

தமிழ் சினிமாவுல நல்ல நடிகன்னா, ரஜினியும் இல்ல, கமலும் இல்ல, அது சரத்குமார்தான். ஏன்னா, இந்த இடத்துல சரத்குமார் நடிச்சிருக்கார்னு சொல்லவே முடியாதபடி கச்சிதமா பண்ணுவார். அவ்ளோ கச்சிதமான நடிகன்னா அது சரத்குமார்தான். இது இயக்குநர் ராஜகுமாரன் ஒரு பேட்டியில சரத்குமாரைப் பத்தி சொன்னது. அந்த விஷயத்தை யோசிச்சு பார்த்தா அட ஆமால்லனு தோணுது. இன்னைக்குத்தான் சரத்குமார் கேரக்டர் ஆர்டிஸ்ட்டா பண்றார்னு நிறையபேர் நினைக்கலாம். ஆனா, அவரோட ஆரம்பக் காலக்கட்டத்துல இருந்தே கேரக்டர் ரோல்கள்ல பண்ணிட்டுத்தான் இருக்கார். 2000-ல் மாயி, சமுத்திரம், தென்காசி பட்டணம், அரசு, கம்பீரம், ஏய், ஐயானு பல வெற்றிப் படங்கள்ல நடிச்சார். ஐயா படம்லாம் நான்ஸ்டாப்பா 100 நாட்களுக்கு மேல எல்லா தியேட்டர்கள்லேயும் ஓடின படம். அதே காலக்கட்டத்துலதான் பெண்னின் மனதைத் தொட்டு, உள்ளம் கொள்ளை போகுதே, ஜித்தன் மாதிரியான கேரக்டர் ரோல்களும் பண்ணார். அதுலயும் 2007-ம் வருஷம் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஒரு நடிகரா தன் இயல்புக்கு மீறி பலவீனமானகேரக்டர்ல பின்னியிருப்பார்.

2006-ல வெளியான ‘தலைமகன்’ ஒரு நடிகரா சரத்குமாரோட 100-வது படம். அதுவே ஒரு இயக்குநராக அவருடைய முதல் படமாகவும் அமைஞ்சது. தமிழ்ல தன்னோட 100வது படத்தை இயக்கின ஒரே நடிகன் சரத்குமார் மட்டும்தான். இயக்குநர் சேரன் திரைக்கதை எழுத அந்தப் படத்துல தன் பழைய அவதாரமான பத்திரிகையாளராக வாழ்ந்து பார்த்தார். இன்னைக்கு தமிழ்சினிமா நடிகர்கள்ல அதிகமான மொழிகள் பேசத் தெரிஞ்சவரும் சரத்குமார்தான். அடுத்தடுத்து குணச்சித்திர நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பினார் சரத். குணச்சித்திர நடிப்புலயே வெளுத்து வாங்கினது, திருநங்கையா நடிச்ச காஞ்சனா படம்தான். தமிழ் சினிமாவுல பெரிய நடிகர் ஒருத்தர் திருநங்கை கேதக்டர்ல குணச்சித்திர நடிப்புல வெளுத்து வாங்கினது அனேகமா இவரா மட்டும்தான் இருக்கும். அதுக்கு முன்னும் சரி, அவருக்கு பின்னும் சரி. இந்த தைரியமான முடிவை யாரும் எடுக்கவே முன்வரலை.

தமிழ் சினிமால இன்னைக்கு எடுத்துப்பார்த்தாலும் அதிக வசூல் பண்ண டாப் 10 படங்கள்ல டாப் டென்ல 4 படங்கள் இவரோடதா இருக்கும். அதுல ரெண்டு படங்கள் சொல்லணும்னா நாட்டாமை, சூர்யவம்சம் படங்களை தாரளமா சொல்லலாம். இது ரெண்டுமே சரத்குமாருக்கு எஒப்போவுமே எவெர்கிரீன் ஹிட்டுகள்தான். அதுலயும் சூர்யவம்சம் படத்தை பத்தி சொல்லியே ஆகணும். ஏன் அதை மக்கள் திரும்ப திரும்ப வந்து தியேட்டர்ல பார்த்தாங்கனு இன்னைக்கு வரைக்கும் யாருக்கும் அது தெரியவே இல்லை. இயக்குநர் விக்ரமனே இது ஏன் ஓடுதுன்னே தெரியாம ஓடப்போகுதுனு தயாரிப்பாளர்கிட்ட சவால் விட்ட சம்பவம் எல்லாம் நடந்திருக்கு. இந்தப்படம் ரிலீஸ் ஆனப்போ நாட்டாமை வச்சிருந்த ரெக்கார்டுகளை 3 வாரத்துல தூக்கி சாப்பிட்டு புது ரெக்கார்டுகளை படைச்சது. மக்கள் டிராக்டர்ல வந்து பார்த்து அவங்களோட ஆதரவை கொடுத்தாங்க. நாட்டாமை மாதிரியே இதுலயும் டபுள் ஆக்ட். அப்பா-மகனா வெளுத்து வாங்கியிருந்தார். அதுவும் சரத்குமார் மைக்ல பேசுற போட்டோவும், க்ளைமேக்ஸ்ல ராதிகா பேசுற டயலாக்னு இன்னைக்கு வரைக்கும் மீம்டெம்ப்ளேட்டா சுத்துற அளவுக்கு அந்தபடம் பேமஸ். அடுத்ததா பாக்ஸ் ஆபீஸ்ல கலக்கின படங்கள்னு எடுத்துக்கிட்டா மூவேந்தர், நட்புக்காக, பாட்டாளி, மாயி, தென்காசி பட்டணம், அரசு, ஐயானு வரிசைப்படுத்திக்கிட்டே போலாம்.

Also Read – `நடிப்பு அரக்கன்’ எஸ்.ஜே.சூர்யா – தமிழ் சினிமாவுக்கு ஏன் முக்கியம்?

ரஜினி சரத்குமார்கிட்ட ஒரு கதை சொல்லி படம் பண்ண டிரை பண்ணார். சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் இணைந்து நடிக்கும் படம்னு சொல்லிதான் கதையே சொல்ல ஆரம்பிச்சிருக்கார் ரஜினி. படத்துல ரெண்டு பேருமே போலிஸ் ஆஃபிஸர்ஸ். அதுக்கு சுரேஷ் கிருஷ்ணாதான் இயக்குநர்னு கூட ஃபிக்ஸ் ஆகியிருக்கு. ஆனா கால சூழலால அது பண்ண முடியாம போயிடுச்சு. ரஜினியே கூப்பிட்டு படம் பண்ற அளவுக்கு உட்சத்துல இருந்தார் சரத்குமார்.

ஒரு நடிகராக சரத்குமார் தன்னை காலத்துக்கேற்ப மாறியவர். தமிழ் சினிமாவுல காவல்துறை அதிகாரியாக நடிக்க மிகப் பொருத்தமான தெரிவாக இன்னைக்கும் சரத்குமாரே இருக்கார். ஆனால் அதுக்காக இதுல மட்டும்தான் நான் நடிப்பேன்னு அடம்பிடிக்காம உடலமைப்பு தேவையே இல்லாத படங்களான நட்புக்காக, சமுத்திரம், ஐயானு பல படங்கள்ல நடிச்சு வெற்றி பெற்றவர். அதேபோல இளமையான காலக்கட்டத்துல முதியவர் கெட்டப் போட என்னைக்குமே தயங்கினதே இல்லை. ஐயா படத்துல நடிச்சிருந்த பெரியவர் கதாபாத்திரமே அதுக்கு சாட்சி. தமிழ் சினிமாவுல அதிகமான டபுள் ஆக்ட் படங்கள் பண்ண லிஸ்ட்ல இவருக்குத்தான் முதல் இடமும் கூட.

ஒரு நடிகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி நடிகர் சங்கத்தை கடன்களிலிருந்து மீட்டதில் விஜய்காந்துக்கு நிகரா எல்லா வேலைகளையும் பார்த்தது, சரத்குமார்தான். அதேபோல எம்.பி-யாக இருக்கும்போது நடிகர் சங்க இடத்துக்காக எல்லா வேலைகளையும் சரத்குமார் செய்தார். ஆனால் இதைப் பத்தி பின்னாட்கள்ல பெரிசா சரத் கவலைப்பட்டதே இல்லை. அதேபோல நடிகனா உச்சத்துல இருக்குபோது அரசியலுக்கு வர்றது சாதாரண விஷயம் இல்லை. சூர்த்யவம்சம் ஹிட்டாகி ரஜினிகூட கம்பேர் பண்ணி பேசுற அளவுக்கு உயர்ந்தார், சரத். அந்தநேரம்தான் எந்த தமிழ் சினிமா ஹீரோவும் எடுக்காத அரசியல் அப்படிங்குற அஸ்திரத்தை கையில எடுத்தார். அதனாலயே சரத்குமார் இழந்த வாய்ப்புகள்லாம் ஏராளம். இப்போ போர்த்தொழில் மறுபடியும் சரத்குமாரை லைம் லைட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கு. இப்போ சசிக்குமார் கூட நா நா, இயக்குநர் விக்ரமன் மகன் கூட ஹிட் லிஸ்ட்னு பல படங்கள் கைவசம் இருக்கு.

சரத்குமாரோட எந்தபடம் உங்க ஃபேவரெட்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top