விக்ரம்

இந்த ஹீரோக்களுக்கெல்லாம் விக்ரம் டப்பிங் பேசியிருக்கிறாரா..?

அற்புதக் கலைஞன் ‘சீயான்’ விக்ரம் தற்போதிருக்கும் புகழ் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பு சில வருடங்கள் அஜித், பிரபுதேவா தொடங்கி வினீத் வரைக்கும் பல ஹீரோக்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். அவ்வாறு அவர் குரல் கொடுத்த படங்களையும் அவரது குரலைப் பெற்ற நடிகர்களையும் பார்க்கலாம்.

அஜித்

ஆசை அஜித்
ஆசை அஜித்

தமிழைத் தாய்மொழியாக கொண்டிராத அஜித்துக்கு ஆரம்பகாலத்தில் அவ்வளவாக தமிழ் உச்சரிப்பு வராது. அதனால் அவரது முதல் படமான அமராவதி’ படத்திலும் அடுத்து வந்த பாசமலர்கள்’படத்திலும் விக்ரம்தான் அஜித்துக்கு குரல் கொடுத்திருப்பார். அதன்பிறகு `ஆசை’ போன்ற படங்களில் நடிகர் சுரேஷின் குரலைப் பயன்படுத்தி வந்த அஜித் அதன்பிறகு சொந்தமாகவே டப்பிங் பேசத்தொடங்கினார்.

அப்பாஸ்

அப்பாஸ்
அப்பாஸ்

வட இந்தியரான அப்பாஸ் `காதல் தேசம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானபோது அவருக்கு குரல் கொடுத்தது விக்ரம்தான். இன்னும் சொல்லப்போனால் விக்ரம் குரல் தந்ததிலேயே மிகப் பொருத்தமாக இருந்தது அப்பாஸுக்குதான். அதனாலேயே தொடர்ந்து அப்பாஸின் ‘வி.ஐ.பி’, ‘பூச்சூடவா’, ‘ஆசைத்தம்பி’, ‘ஜாலி’, ‘இனி எல்லாம் சுகமே’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்றப் படங்களில் எல்லாம் விக்ரம்தான் குரல் கொடுத்தார். இதில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட சமயத்திலெல்லாம் விக்ரமின் ‘சேது’, ‘தில்’ போன்ற படங்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருந்தாலும் அந்தப் படத்தில் அப்பாஸுக்கு குரல் கொடுத்திருந்தார் விக்ரம்.

பிரபுதேவா

பிரபுதேவா
பிரபுதேவா

டான்ஸராக இருந்து ஹீரோவாக ஆன பிரபு தேவாவுக்கு ஆரம்பகாலத்தில் நடிக்க வந்த அளவுக்கு குரலில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி டப்பிங் பேச வரவில்லை. இதனாலேயே அவரது ‘காதலன்’, ‘ராசய்யா’, ‘மின்சார கனவு’ போன்ற படங்களில் விக்ரம்தான் குரல் கொடுத்திருப்பார். இதில் ‘மின்சார கனவு’ படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பிரபுதேவாவே சொந்தமாக டப்பிங் பேசியிருந்தாலும் ஒருசில காட்சிகளில் அவரது குரலால் முழுமையாக உணர்வைக் கடத்தமுடியவில்லையென உணர்ந்த படக்குழு, அந்தக் காட்சிகளுக்கு மட்டும் விக்ரமின் குரலைப் பயன்படுத்தியிருப்பார்கள். அவ்வாறு கடற்கரையில் கஜோலிடம் பிரபுதேவா பேசும் காட்சி உள்ளிட்ட மூன்று காட்சிகளுக்கு மட்டும் விக்ரமின் குரல் இடம்பெற்றிருக்கும். படத்தின் ஃப்ளோவில் இதுவொரு பெரிய விஷயமாகவே தெரியாது.

வினித்

மலையாள தேசத்திலிருந்து வந்த வினீதிக்கு ஆரம்பத்தில் அவரது ‘ஜாதி மல்லி’, ‘புதிய முகம்’, ஆகியப் படங்களுக்கு டப்பிங் பேசியது விக்ரம்தான்.

பென் கிங்க்ஸ்லி

பென் கிங்ஸ்லி
பென் கிங்ஸ்லி

உலகப் புகழ்பெற்ற காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமான `காந்தி’ திரைப்படத்தில் நடித்த பென் கிங்க்ஸ்லிக்கு அதன் தமிழ் பதிப்பில் குரல் கொடுத்தது விக்ரம்தான். படத்தில் காந்திக்கு இளவயதில் இருந்து முதுமைப் பருவம் வரைக்கும் நடைபெறும் உடலியல் மாற்றங்களை பென் கிங்க்ஸ்லி தன் நடிப்பால் வெளிப்படுத்தியதுபோல, விக்ரம் தன் குரலால் அதற்கு மெருகூட்டியிருப்பார்.

Also Read – `ரஜினி, கமல், விஜய்; களைகட்டிய 2005 தமிழ்ப் புத்தாண்டு’ – ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top