சாதியத்தை உடைக்கும் பிடிவாதக்காரன் – விஷ்ணு விஷாலின் கதை!

2009-ல் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் முக்கியமான ஒன்று. யதார்த்தத்தையும் கிராமத்து வாழ்வியலையும் கபடி விளையாட்டுடன் கலந்து தரமான திரைப்படைப்பாக மிளிர்ந்தது. அந்தப் படத்தில் எளிமையும் அப்பாவித்தனமும் மிக்க கிராமத்து இளைஞனாக முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் விஷ்ணு விஷால். இப்போது லால்சலாமில் ரஜினியுடன் கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தில் நடிக்கிறார். இதை அவரே கனவிலும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார். நடிகரா விஷ்ணு விஷால் கடந்துவந்த பாதை கொஞ்சம் கடினமானது. அவரோட சினிமா பயணத்தைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

Vishnu Vishal
Vishnu Vishal

விஷ்ணு விஷால்… தமிழ் சினிமாவில் சத்தமே இல்லாமல் சாதனை செய்து வரும் நடிகர். சென்னை சேப்பாக்கத்துல கிரிக்கெட் மேட்ச் நடக்குது. நண்பரும், விஷ்ணு விஷாலும் சேர்ந்து மேட்ச் பார்க்கப்போறாங்க. மேட்ச் வேடிக்கைப் பார்க்கிறப்போ கிரவுண்ட்ல இருந்த ஒரு கிரிக்கெட் வீரர் சிக்ஸ் அடிக்கிறார். அவர் பெயர் ராபின் உத்தப்பா. அதைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்ய, விஷ்ணு விஷால் கண்ல கண்ணீர் வருது. மனசுக்குள் அழ ஆரம்பிக்கிறார். ராபின் உத்தப்பா விஷ்ணு விஷாலோட ஜூனியர். அப்போ உத்தப்பா இருந்த இடத்துல விஷ்ணு விஷால் இருந்திருக்க வேண்டியவர். 10 வருஷம் கிரிக்கெட்டுக்கு பயிற்சி எடுத்து சில சூழல்களால கலந்துக்க முடியாம போயிடுச்சு. இதையெல்லாம் நினைச்சுத்தான் அழுதார், விஷ்ணு விஷால். அடுத்ததா ஸ்டேடியத்துல கூட்டம் ஆர்ப்பரிச்சு கத்துது. யார்னு பார்த்தா ரஜினி கிரிக்கெட் பார்க்க வந்திருக்கார். இப்போ விஷ்ணுவுக்கு விரக்தி அதிகமாகுது, எழுந்து வீட்டுக்கு வந்துட்டார். அதுக்குக் காரணம் 5 வருஷமா நடிக்க டிரை பண்ணி அதுவும் வீணா போயிடுச்சு. இப்படி உத்தப்பாவுக்கும், ரஜினிக்கும் இடையில் நின்னு மனசு வருத்தப்பட்ட விஷ்ணுதான் இப்போ கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்போற லால்சலாம்ல ரஜினிகூடவே நடிக்கிறார். இதை அவரே கனவிலும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் நடிகராக விஷ்ணு விஷால் கடந்துவந்த பாதை கொஞ்சம் கடினமானது. அவரோட சினிமா பயணத்தைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

சாதியத்தை உடைக்கும் கதை தேர்வு!

2009-ல் ‘வெண்ணிலா கபடி குழு’ படம் வெளியாகுது. மொத்த படமும் ப்ரெஷ்ஷான முகங்கள். எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாங்க. அந்த படத்தோட இயக்குநர் சுசீந்திரன், காமெடியன் புரோட்டா சூரி, ஹீரோ விஷ்ணு விஷால்னு அதுல இருந்து மூணுபேர் வெளில தெரிஞ்சாங்க. அது விளையாட்டை மையமா வச்சு, கிராமத்தோட வாழ்வியலை கலந்து தரமா இருந்தது. ஆனா, அதுக்குள்ள சாதியம் ஊறிக்கிடக்குதுங்குற லேயரையும் சேர்த்து இயக்கியிருந்தார், சுசீந்திரன். சுசீந்திரன் என்ன நினைத்தாரோ அதை அப்படியே செய்து கொடுத்தார், விஷ்ணு விஷால். முதல்படம் கதாநாயகன் வாய்ப்பு. இயக்குநர் எதை கேட்டாலும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்னு கூட வச்சுக்குவோம்.

அடுத்ததா ஜீவா படம் இன்னும் ஒருபடி மேலேபோய் தமிழக கிரிக்கெட் தேர்வுக் குழுவில் நிலவும் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பிச்சு. தமிழ் சினிமாவில் இந்த விஷயத்தை இதுமாதிரியாக நேரடியாக பொட்டுல அடிச்ச மாதிரி சொன்ன சினிமா அநேகமா இதுவாத்தான் இருக்கும். விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட அந்த படத்தை இயக்கினது இயக்குநர் சுசீந்திரன். ஹீரோ விஷ்ணு விஷால். இந்தக்காலக்கட்டத்தில் விஷ்ணு விஷால் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். ஆனால் கதையில் இருந்த அழுத்தம், ரியல் கிரிக்கெட்டரான அவருக்கு நடந்த சம்பவம் என எல்லாமே சேர்ந்துகொள்ள முழுமையான கிரிக்கெட் வீரராகவே நடித்திருந்தார்.

சாதியத்துக்கு எதிராக நடிக்கிறார் விஷ்ணு விஷால் என்ற பேச்சு எழ ஆரம்பித்தது. இதற்கு கவலைப்படாமல் மூன்றாவது முறையாக மறுபடியும் சுசீந்திரனுடன் கூட்டணி அமைத்தார், விஷ்ணு விஷால். அந்த படம் மாவீரன் கிட்டு. ரெண்டு முறையும் கொஞ்சம் சாஃப்ட்டாக பேசப்பட்ட விஷயத்தை, நேரடியாக பேசினார். அதுதான் களம், அதுதான் பிரச்னை என முழுக்க முழுக்க சாதியம் ஊறிப்போன சமூகத்தின் முகத்திரையை கிழித்தார், சுசீந்திரன். மாவீரன் கிட்டுவாகவே வாழ்ந்திருந்தார், விஷ்ணு விஷால். இந்த மூன்று படங்களும் கதை தேர்வு செய்தது விஷால். தான் நடிக்க வந்து 6 வருடங்களுக்குள் சாதிய பிரச்னைகளை பேசும் மூன்று படங்களில் நடித்திருந்தார், விஷ்ணு விஷால். இந்த மூன்று படங்களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியை பின்புலமாக கொண்ட இளைஞன் அறிவைக் கொண்டு போராடுவானே தவிர, ஆயுதம் ஏந்தி போராடியிருக்க மாட்டான். முக்கியமாக ஹீரோ ரவுடியாக இருக்க மாட்டான். கதை தேர்விலும் கூட கவனம் செலுத்தியது சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி. வேறு ஒரு ஹீரோவாக இருந்தால், நிச்சயமாக மாவீரன் கிட்டுவில் நடித்திருப்பாரா என்பது சந்தேகம்தான். அதற்கு முன்பு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் மூலமா பாக்ஸ் ஆபீஸை அடிச்சு நொறுக்கினவர், அடுத்ததா பண்ணின படம்தான் மாவீரன் கிட்டு. இன்னைக்கு முன்னணியில இருக்கிற ஒரு ஹீரோ சென்னைக்கு பழைய பேர் கொண்ட ஒரு படத்துல சாதியத்தை உடைக்கிற மாதிரி நடிச்சிட்டு, அந்த இமேஜை துடைக்க உடனடியா அடுத்த சாதியத்தை தூக்கி பிடிக்கிற கொம்பத்தனமான சினிமாவை நடிசார், ரெண்டுமே ஒரே காலக்கட்டம். அப்போ விஷ்ணு விஷால் பண்ணினதை கம்பேர் பண்ணி பார்த்தா சாதாரணமானது இல்ல. இதுக்கு ஒரு அசாத்தியமான நம்பிக்கையும், தைரியமான கதை தேர்வும் இருக்கணும்.

விஷ்ணு விஷாலின் ப்ளஸ்!

Vishnu Vishal
Vishnu Vishal

படத்துக்குப் படம் கதைக்களம், ஜானர், கேரெக்டர் என வித்தியாசம் காண்பிப்பதோடு அவை தரமான படைப்புகளாகவும் ரசிகர்களை ஏதாவது ஒரு வகையில் திருப்திப்படுத்தணும். இதுதான் விஷ்ணுவிஷாலின் கொள்கை. அதற்கான மெனெக்கெடலை நாம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர். கமர்சியல் சினிமாக்களை கொடுத்துக்கிட்டே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்ய முடியும்னு இன்னைக்கும் நம்புறவர். மாறுபட்ட கதையம்சங்கள்தான் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும். ஒரே மாதிரியாக நடிச்சா போரடிச்சிடும். எந்த கேரெக்டருக்கும் அதற்கு ஏற்ற மாதிரி உருமாறிடுறதும் விஷ்ணுவோட ஸ்பெஷல்னும் சொல்லலாம். இதுக்கு நீர்ப்பறவையும், முண்டாசுப்பட்டியும், ராட்சசனும் சரியான உதாரணம். இது மூணுலயுமே விஷ்ணுவிஷாலே வித்தியாசமாகத்தான் இருப்பார். அதேபோல ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டுவதும் இவருக்கு ப்ளஸ்.

முதல் அட்டெம்ப்ட்!

  தமிழின் முதல் சயின்பிக்‌ஷனான இன்று நேற்று நாளை, முதல் பீரியட் காமெடி டிராமாவான முண்டாசுப்பட்டி, சாதியத்தை எதிர்க்கும் கிரிக்கெட் வீரராக ஜீவானு முடிஞ்ச அளவுக்கு யாரும் தொடாத கதையை முதல்முதலா நம்பி இறங்கிடுவார்,  விஷ்ணு. குறிப்பா சொல்லணும்னா கதை தேர்வு பண்றதுல எப்பவுமே விஷ்ணு விஷால் எப்பவுமே மெச்சூரிட்டியான நடிகர்தான். இல்லைனா குள்ள நரிக்கூட்டத்துல ஜாலியா திரிஞ்ச கேரெக்டர், அடுத்ததா நீர்ப்பறவையில ரொம்ப சீரியசா பண்ணி உச்சம் தொட்டிருப்பார். இது பார்க்க சாதாரணமான தெரியலாம். ஆனா ஒரு ஹீரோகிட்ட போய் “சார் படத்துல நீங்க மொடா குடிகாரன்”னு ஒரு டைரக்டர் சொல்லுறப்போ, அதை ஏத்துக்குறதுக்கு ஒரு பக்குவம் தேவைப்படும். அதேபோல முதல் அறிமுகப்படத்துல இறந்துபோறது மாதிரியான கேரெக்டரை ஏத்துக்கிறதுக்கும் ஒரு பக்குவம் தேவைப்படும். மாரிமுத்து, அருளப்பசாமி, கோபி, கிட்டுனு நடிப்புக்கு ஒதுக்குனாலும், கமர்சியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டாகுஸ்தினு கதைகளை செலக்ட் பண்ணி வெரைட்டி கேரக்டர் பண்ணக் கூடிய ஆள்தான்.  

பாக்ஸ் ஆபீஸை மிரட்டிய ராட்சசன்!

    2018-ம் வருஷம் பாக்ஸ் ஆபிசில் மிரட்டிய டாப் 10 படங்களில் 8-வது இடத்தை ராட்சசன் பிடித்திருந்தது. 2.0, சர்க்கார், காலா, செக்கச் சிவந்த வானம், தானா சேர்ந்த கூட்டம், கடைக்குட்டி சிங்கம், இரும்புத்திரைக்குப் அடுத்தபடியாக இருந்தது விஷ்ணு விஷால்தான். இவருக்கு அடுத்துதான் வடசென்னையும், 96-ம் இருந்தது. இதில் டாப் ஹீரோக்கள் தாண்டி முக்கியமான இடத்தை பிடித்தனர், விஷ்ணு விஷாலும், இயக்குநர் ராம்குமாரும். இதன் பின்னர்தான் இருவருக்குமே சரிவு ஆரம்பித்தது. கொஞ்சகாலம் இருவருமே சினிமாவில் இல்லாமல் போனார்கள்.

கட்டா குஸ்தி கொடுத்த பூஸ்ட்!

கடைசியாக சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்துக்கு பின்னால் சொந்த வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களால், கொஞ்சம் திரைத்துறையில் இருந்து சில வருடங்களாக ஒதுங்கினார். இடையே படங்கள் ரிலீஸ் ஆனாலும் எதுவுமே பெரிதாக கைகொடுக்கவில்லை. இடையே எப்.ஐ.ஆர் படம் மட்டும் கொஞ்சம் கவனிக்க வைத்தாலும் விஷ்ணுவிஷாலின் முந்தைய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு எப்.ஐ.ஆருக்கு இல்லை. படம் பெரிய அளவுல ஓடுதோ, இல்லையோ இப்போ கட்டா குஸ்திக்கு கிடைத்திருக்கும் அட்டேன்ஷன் நிச்சயமாக விஷ்ணு விஷாலுக்கு ஒரு பூஸ்டர்தான். 

Vishnu Vishal
Vishnu Vishal

எனக்கு இவரோட படங்கள்ல பிடிச்சது முண்டாசுப்பட்டியும், ராட்சசனும்தான். உங்களுக்கு என்ன படம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top