எஸ்.பி.பி - ரஜினி

எஸ்.பி.பிக்குப் பிறகு எந்த குரல் ரஜினிக்குப் பொருந்தும்..?

முக்கண்ணன் முத்தாக தந்த பாட்டைப் படிச்சேன்.. பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் படிச்சேன்’ என ரஜினியின் அந்தித்தோம்’ பாடலில் ஒரு வரி வரும். இவ்வாறு ரஜினி, தன் பாடல்களாலேயே பலகோடி நெஞ்சங்களை நிறைத்ததில் எஸ்.பி.பி-க்குத்தான் பெரும் பங்குண்டு. அவ்வளவு ஏன் இந்த வரி இடம்பெற்றிருக்கும் ‘அந்தித்தோம்’ பாடலைப் பாடியதே எஸ்.பி.பிதானே. இவ்வாறு கம்ப்யூட்டராலயே கணக்கிட முடியாத வகையில் ரஜினிக்கு ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிற எஸ்.பி.பியின் கடைசி பாடலாக ரஜினியின் படம்தான் அமைந்ததும் சாதாரண நிகழ்வல்ல.

இந்நிலையில் ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்தடுத்தப் படங்களுக்கு ரஜினியின் ஓப்பனிங் பாடல்களை வேறு எந்தெந்த பாடகர்கள் பாடினால் சிறப்புபெறும் என ஒரு அலசல்.

ஷங்கர் மகாதேவன்

ஷங்கர் மகாதேவன்
ஷங்கர் மகாதேவன்

விஜய், அஜித் தலைமுறையின் ஓப்பனிங் பாடல்களின் கிங் என ஷங்கர் மகாதேவனைக் குறிப்பிடலாம். பொதுவாகவே எஸ்.பி.பியைப் போலவே ஹீரோக்களின் மேனரிசங்களுக்கேற்ப பாடல்களைப் பாடுவதில் ஷங்கர் மகாதேவனும் ஜித்துதான். ஏற்கெனவே ரஜினியின் ‘பாபா’ படத்தின் அறிமுகப் பாடலான ‘டிப்பு டிப்பு’ பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு. சமீபத்தில் வெளிவந்த ‘காலா’ படத்தில்கூட ‘வாடி என் தங்க சில’பாடலிலும் ஷங்கர் மகாதேவனின் குரல் ரஜினிக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது.

மனோ

மனோ
மனோ

கிட்டத்தட்ட எஸ்.பி.பியின் சாயலையே தன் குரலில் கொண்டவர் மனோ. எஸ்.பி.பிக்கு சற்றும் குறைவில்லாத திறமைக்கும் சொந்தக்காரர். ஏற்கெனவே ‘பாண்டியனா கொக்கா கொக்கா’, ‘உழைப்பாளி இல்லாத நாடுதான்’, ‘மலையாளக் கரையோரம்’ போன்ற ஏராளமான ரஜினியின் அறிமுகப் பாடல்களைப் பாடியும் இருக்கிறார். சமீப காலத்தில் ‘லிங்கா’ படத்தில் மனோ பாடிய ‘மோனா மோனா’ பாடலும் ரஜினிக்கு அவ்வளவு கச்சிதமாக இருந்தது. அவரையே அடுத்துவரும் ரஜினி படங்களில் எஸ்.பி.பிக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.

கார்த்திக்

கார்த்திக்
கார்த்திக்


‘பாபா’ பட ஆல்பம் வந்தபோது ரஜினி ரசிகர்கள் சற்றே ஆச்சர்யப்பட்டுப்போனார்கள். காரணம் இளம் பாடகர் கார்த்திக்குக்கு ரஜினி பட பாடல்.. அதுவும் ஒரே படத்தில் இரண்டு மாஸ் பாடல்கள் என்றுதான். அப்போதே ஏ.ஆர்.ரஹ்மான் ரஜினியின் அடுத்த தலைமுறை குரலாக கார்த்திக்கை நிறுவ அவர் எடுத்த முயற்சிதான் ‘சக்தி கொடு’, ‘மாயா..மாயா’ என்ற இரண்டு மாஸ் பாடல்களை அவரது குரலில் அமைத்தது. ஆனால் படம் தோல்விபெறவே இந்த மாற்றம் ரசிகர்களாலும் திரைத்துறையினராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இனிவரும் ரஜினியின் படங்களில் இந்த மேஜிக்கை மீண்டும் பயன்படுத்திப் பார்க்கலாமே.

அனந்து

அனந்து
அனந்து

சந்தோஷ் நாராயணின் ஆஸ்தான பாடகர் அனந்து. ஏற்கெனவே ‘புலி உறுமுது’ போன்ற சில பாடல்களை பாடியிருக்கும் அனந்து சந்தோஷ் நாராயணுடன் இணைந்ததற்குப் பிறகு வெளிச்சம் பெற்றார். ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு இவர் பாடிய ‘மாயநதி’ பாடல் அனைவரையும் கவர்ந்தது. இயல்பிலேயே இவரது குரலில் இருக்கும் அடர்த்தி ரஜினிக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.

எஸ்.பி.பி.சரண்

எஸ்.பி.பி.சரண்
எஸ்.பி.பி.சரண்

எஸ்.பி.பியின் ஒரே மகன். தனக்கென தனித்துவமான குரல் வளமும் பாடும் திறமையும் கொண்டிருந்தாலும், அச்சு அசல் தன் தந்தை எஸ்.பி.பியைப் போலவே பாடுவதிலும் வல்லவர் சரண். எந்த அளவுக்கு என்றால் இவர் தன் தந்தையுடன் இணைந்து பாடிய ‘ஆடுகளம்’ பட ‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி’ பாடலில் எது தந்தையின் குரல் எது மகனின் குரல் என எந்தக் கொம்பனாலும் உறுதியாக சொல்லிடமுடியாது. அப்படிப்பட்டவரை எஸ்.பி.பிக்கு மாற்றாக ரஜினியின் படங்களில் பயன்படுத்துவதில் தவறில்லை.
இவர்களில் எந்த குரல் ரஜினிக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கமெண்டில் சொல்லுங்கள்.

Also Read – விஜய் – வித்யாசாகர் கூட்டணி கலக்கிய 7 படங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top